Wednesday, 17 July 2019
மாட்டிறைச்சி உண்பவர்களாக சொல்லப்பட்டவர்கள் தமிழர்களா?
தமிழர்கள் மாட்டிறைச்சி உண்டார்களா??
இலக்கியத்தில் மாட்டிறைச்சி உண்பவர்களாக சொல்லப்பட்டவர்கள் தமிழர்களா??
அகநானூறு -129.
தன்னுடன் தலைவியை அழைத்துச் செல்லத் தலைவன் ஒப்புக்கொண்டுள்ளான் என்னும் செய்தியைத் தோழி தலைவிக்குத் தெரிவிக்கிறாள்.
1
“நான் உயிரோடு இல்லாமல் போய்விட்டால்தானே, நீ ஏதாவது நினைக்கவேண்டும், நான்தான் இருக்கிறேனே” என்று நள்ளிரவில் நடுங்கும்படி கூறியவர் உன்னை மறந்து எப்படி வாழ்வார்?
2
பெருங்காற்று ஆட்டுவதால் வானளாவிய மூங்கிலிலிருந்து உதிர்ந்த நெல்லைப் பார்த்த ஆண்மான் தன் பெண்மானை உண்ண அழைக்கும் கானம் அது. அங்குக் கல்லுப் பாறையின் ஓரமாக இருந்தது ஒரு கூரைக் குடிசை. அதில் வாழும் பெண் பானையில் வைத்துத் தான் வளர்த்த கொழுத்த இலை கொண்ட பருத்திச் செடியின் வயிறு தள்ளிய இளங்காயை தன் வளர்ப்பு மானுக்கு ஊட்டுவாள். நெற்றாகி (போகில்) வெடித்த வெள்ளைப் பஞ்சைப் பறித்துத் தன் மடியில் சேகரிப்பாள்.
3
இப்படிப்பட்ட சிற்றூர் மக்கள் மழவர். பிறர் தலையில் கைவைக்கும்படி அவர்கள் போரிடுவர். கொழுப்பை உண்பர். காலில் செருப்பு அணிந்திருப்பர். சுனையில் நீராடுவர். “இவர்கள் வாழும் சுரத்தில் இவளை அழைத்துக்கொண்டு கடந்து செல்லுதல் எனக்கு அரிய செயல் அன்று” என்று தன் உள்ளக் கிடக்கையை வாயால் அவர் தெரிவிக்கிறார்.
தலைவி – அழகிய சிலவாகிய நீண்ட அழகான கூந்தலை உடையவள். தேன் மணக்கும் கூந்தலை உடையவள். தோள் நிறைய அணிகலன்களைப் பூண்டவள். குவளைமலர் போன்ற கண்ணை உடையவள்.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை – பாலை
1
''உள்ளல் வேண்டும் ஒழிந்த பின்'' என
நள்ளென் கங்குல் நடுங்கு துணை ஆயவர்
நின் மறந்து உறைதல் யாவது? ''புல் மறைந்து
2
அலங்கல் வான் கழை உதிர்நெல் நோக்கி,
கலை பிணை விளிக்கும் கானத்து ஆங்கண், 5
கல் சேர்பு இருந்த கதுவாய்க் குரம்பைத்
தாழிமுதற் கலித்த கோழிலைப் பருத்திப்
பொதி வயிற்று இளங் காய் பேடை ஊட்டி,
போகில் பிளந்திட்ட பொங்கல் வெண் காழ்
நல்கூர் பெண்டிர் அல்கற் கூட்டும் 10
3
கலங்குமுனைச் சீறூர் கை தலைவைப்ப,
கொழுப்பா தின்ற கூர்ம் படை மழவர்,
செருப்புடை அடியர், தெண் சுனை மண்டும்
அருஞ் சுரம் அரிய அல்ல; வார் கோல்
திருந்து இழைப் பணைத் தோள், தேன் நாறு கதுப்பின், 15
குவளை உண்கண், இவளொடு செலற்கு'' என
நெஞ்சு வாய் அவிழ்ந்தனர் காதலர்
அம் சில் ஓதி ஆயிழை! நமக்கே.
அகநானூறு - 309
1
மழவர் ஆனிரை (பசு-மந்தை) கவர்ந்து வருவர். வாள், வில் கொண்டு போரிட்டு எதிர்ப்போரை வென்று கவர்ந்துகொண்டு வருவர். பசுக்களை வேப்ப மரத்தடிக் கடவுள் முன் நிறுத்தி வழிபடுவர். வெற்றியைப் பாறைமீது அமர்ந்து விருந்துண்டு கொண்டாடுவர். விருந்தில் தெய்வத்துக்கு இரத்தக் காவுக் கொடுக்கப்பட்ட காளை மாட்டின் இறைச்சி இருக்கும்.
அங்கே, வலிமையான அடிமரம் கொண்ட இலவ-மரத்தில் யானை தன் உடம்பை உரசிக்கொள்ளும். அப்போது உடைந்திருக்கும் இலவம்பூ நெற்றுகள் மழையோடு விழும் பனிக்கட்டி போல் விழும்.
இப்படிப்பட்ட நீண்ட காடாயிற்றே என்று எண்ணாமல் அந்த வழியில் அவர் செல்கிறார்.
2
அரசன் வானவன் பெருங் குதிரைப்படையை நடத்தி நன்கு போரிட்டு வெற்றி கண்டவன். அவன் சிறந்த வள்ளலாகவும் விளங்கினான். யாழிசையில் வல்ல கோடியர் அவனை நாடிச் செல்வது போல, நாமும் அவர் செல்லும் வழியில் உடன் சென்றால் என்ன? தோழி! எண்ணிப் பார்த்துச் சொல்.
3
கவண் எறிந்த கல் பட்டுக் காட்டு மூங்கில் உடைந்து தீ பற்றி வெடிக்கும். இரவில் தினைப் புனத்தில் மேயும் யானை அந்த வெடிப்பு ஒலியைக் கேட்டு அஞ்சி விலகும். இப்படிப்பட்ட வழியில் அவர் செல்கிறார்.
திணை -- பாலை
1
வய வாள் எறிந்து, வில்லின் நீக்கி,
பயம் நிரை தழீஇய கடுங்கண் மழவர்,
அம்பு சேண் படுத்து வன்புலத்து உய்த்தென,
தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில்
கொழுப்பு ஆ எறிந்து, குருதி தூஉய், 5
புலவுப் புழுக்கு உண்ட வான் கண் அகல் அறை,
களிறு புறம் உரிஞ்சிய கருங் கால் இலவத்து
அரலை வெண் காழ் ஆலியின் தாஅம்
காடு மிக நெடிய என்னார், கோடியர்
2
பெரும் படைக் குதிரை, நல் போர், வானவன் 10
திருந்து கழற் சேவடி நசைஇப் படர்ந்தாங்கு,
நாம் செலின், எவனோ தோழி! காம்பின்
3
வனை கழை உடைந்த கவண் விசைக் கடி இடிக்
கனை சுடர் அமையத்து வழங்கல் செல்லாது,
இரவுப் புனம் மேய்ந்த உரவுச் சின வேழம் 15
தண் பெரு படாஅர் வெரூஉம்
குன்று விலங்கு இயவின், அவர் சென்ற, நாட்டே?
்.......்......்.
அடுத்து...
சிறுபாணாற்றுப்படை
வேலூர் வளமும் எயினர் விருந்தும்
பைந்நனை யவரை பவழங் கோப்பவுங்
கருநனைக் காயாக் கணமயி லவிழவுங் 165
கொழுங்கொடி முசுண்டை கொட்டங் கொள்ளவுஞ்
செழுங்குலைக் காந்தள் கைவிரல் பூப்பவுங்
கொல்லை நெடுவழிக் கோப மூரவு
முல்லை சான்ற முல்லையம் புறவின்
விடர்கா லருவி வியன்மலை மூழ்கிச் 170
சுடர்கான் மாறிய செவ்வி நோக்கித்
திறல்வே னுதியிற் பூத்த கேணி
விறல்வேல் வென்றி வேலூ ரெய்தி
எயிற்பட்டினத்துக்குப் பின்னர் முல்லை நிலத்தைக் கடந்து வேலூர் செல்லவேண்டி வரும். இந்த வேலூர் நல்லியக்கோடனால் வேல் வீசி வெல்லப்பட்டது. இந்த வேல் வெற்றிவேல். மற்றொரு வேல் திறல்வேலாகிய கல்லுளி. கல்லுளியைக் கொண்டு கேணி வெட்டி வேலூர் மக்கள் தண்ணீர் பூக்கும்படி செய்தனர். கேணி தோண்டிய திறல்வேல், நல்லியக்கோடன் வெற்றி கொண்ட விறல்வேல் ஆகிய இரண்டு காரணங்களால் கடலூர் மாவட்டத்து வேலூர் (இக்காலத்தில் சிற்றூர்) வேலூர் என்னும் பெயரைப் பெற்றிருந்தது. வேலூர்ப் பகுதியை முல்லைநிலம் என்றும் பாடல் காட்டுகிறது.
வேலூரைச் சார்ந்த முல்லைநிலம் எப்படி யிருந்தது? அவரையில் பவளப்பூக்கள் பூத்தன. இளங்கொழுந்துள்ள அவரைக் கொடியில் செம்பவழம் பூத்துக் கிடப்பது போல் செந்நிற அவரைப்பூ பூத்துக்கிடக்கும். கருநீலக் காயாம்பூச்செடி ஆங்காங்கே மயில்கள் ஆடுவதுபோல் புதர்புதராகப் பூத்துக் கிடக்கும். முசுண்டைக் கீரை கொழுத்துச் சுருண்டு கிடக்கும். காந்தள் பூவின் குலை கைவிரல் போலப் பூத்துக் கிடக்கும். பயன்படுத்தப் படாத கொல்லைப்புறத்து வழிகளில் கோபம் என்று சொல்லப்படும் தம்பலப் பூச்சிகள் ஊர்ந்து சென்று கொண்டிருக்கும். அதுதான் முல்லைப் பூத்துக் கிடக்கும் முல்லைப் புறவு. அகன்ற மலைப்பிளவுகளில் காலூன்றி நடந்த அருவியின் நீர் முல்லை நிலத்துக்கு வந்து சேராமல் மலையிலேயே மூழ்கிப் போகும். . தெற்குப் பக்கம் இறங்கிச் சென்று கொண்டிருந்த சூரியன் தன் வழித்தடத்தை வடக்குப் பக்கமாகத் திருப்பி வந்துகொண்டிருந்த காலம் அது. ( உத்தராயணம் ) திறல் வேலால் கேணி தோண்டியும் ,விறல் வேலால் வெற்றி கண்டும் நல்லியக்கோடன் பெற்ற ஊர் வேலூர். அந்த வேலூரை அடைந்தால்…
னுறுவெயிற் குலைஇய வுருப்பவிர் குரம்பை
யெயிற்றிய ரட்ட இன்புளி வெஞ்சோறு 175
தேமா மேனிச் சில்வளை யாயமொ
டாமான் சூட்டி னமைவரப் பெறுகுவிர்
வேலூர்ப் பகுதியானது முல்லைவளம் திரிந்து பாலை நிலமாக மாறியிருக்கும். அந்த நிலப்பகுதி மக்கள் எயிற்றியரும் அங்கு வாழ்வதைக் காணலாம். கூரை வேயப்பட்டிருக்கும் அவர்களது குரம்பை வீடுகளில் உறுத்தும் வெயில் வாலைக் குலைத்துக் கொண்டு முற்றத்திலேயே முடங்கிக் கிடக்கும். வெயிலின் சினம் செல்லுபடி ஆகாத குரம்பை அது. அங்கே எயிற்றியர் நல்கும் இனிய புளிச்சோறு பெறலாம். காட்டில் மேயும் ஆமான் ஆட்டுக் கறி சுட்ட வறுவல் உணவும் பெறலாம். போதும்போதும் என்னும் அளவுக்கு விருப்பம் தீரப் பெறலாம்.
ஆமூர் வளமும் உழவர் விருந்தும்
நறும்பூங் கோதை தொடுத்த நாட்சினைக்
குறுங்காற் காஞ்சிக் கொம்ப ரேறி
நிலையருங் குட்ட நோக்கி நெடிதிருந்து 180
புலவுக்கய லெடுத்த பொன்வாய் மணிச்சிரல்
வள்ளுகிர் கிழித்த வடுவாழ் பாசடை
முள்ளரைத் தாமரை முகிழ்விரி நாட்போது
கொங்குகவர் நீலச் செங்கட் சேவல்
மதிசே ரரவின் மானத் தோன்று 185
மருதஞ் சான்ற மருதத் தண்பணை
யந்தண ரருகா வருங்கடி வியனக
ரந்தண் கிடங்கினவ னாமூ ரெய்தின்
நல்லியக்கோடனின் ஆமூர் மருத நிலவளம் மிக்க ஊர். அங்கு உயரமில்லாமல் வளர்ந்திருந்த காஞ்சி மரத்தில் ஆழமான நீர்நிலையின் பக்கமாகச் சாய்ந்திருந்த கிளையில் அமர்ந்திருந்த சிரல் என்று சொல்லப்படும் மீன்கொத்திக் குருவி அம் மரத்தடிப் பொய்கையிலிருந்த மீனைக் கொத்தப் பாய்ந்தது. அதன் கால் நகம் தாமரை இலையைக் கிழித்தது. மீனைக் கொத்திக் கொண்டு அங்கே அன்று மலர்ந்த தாமரைப் பூவின்மேல் அமர்ந்தது. அதன் குருவி-நீல நிறம். நிலாவைப் போல் மலர்ந்திருந்த தாமரையை அது மறைத்தது. இச்செயல் கிரகண நாளில் நிலாவைப் பாம்பு மறைத்துவிட்டு விலகுவது போல இருந்தது. இத்தகைய நீர்வளம் மிக்க ஊர்தான் ஆமூர். அவ்வூருக்கு அகழியும் உண்டு. அங்கு அந்தணர்கள் வருவதில்லை. உழவர்கள் மட்டுமே வாழ்ந்து வந்தனர். அங்குச் சென்றால்….
வலம்பட நடக்கும் வலிபுண ரெருத்தி
னுரன்கெழு நோன்பகட் டுழவர் தங்கை 190
பிடிக்கை யன்ன பின்னுவீழ் சிறுபுறத்துத்
தொடிக்கை மகடூஉ மகமுறை தடுப்ப
விருங்கா ழுலக்கை யிரும்புமுகந் தேய்த்த
அவைப்புமா ணரிசி யமலைவெண் சோறு
கவைத்தா ளலவன் கலவையொடு பெறுகுவி 195
அவர்களின் எருதுகள் பாரம் தாங்கி இழுக்கும் வல்லமை பெற்றவை. இத்தகைய எருதுகளைப் பூட்டி ஆமூர் உழவர்கள் நிலத்தை உழுவார்கள். அவர்களின் தங்கைமார் தம் தலைமுடியைப் பின்னிப் பின்புறம் தொங்கவிட்டிருப்பர். அச்சடை யானையின் துதிக்கை போலத் தொங்கும். அவர்கள் உங்களை நீங்கள் பெற்ற மக்கள் போல எண்ணித் தடுத்து நிறுத்தி உணவளிப்பர். உலக்கைப் பூண் தேய நன்றாகக் குத்திச் சமைத்த வெண்பொங்கல் சோற்றுக்கு நண்டுக் குழம்பு ஊற்றிப் போடுவதைப் பெறுவீர்கள்.
மாட்டிறைச்சிக்கு ஆதரவாக கம்புசுத்துறவனுக எல்லோரும்... சங்க இலக்கியம்னு எடுத்துவைக்கும்... பாட்டுகள் பாலைத் திணைக்குரியவை..
பாலைத்திணை எப்படி இருக்கும்னு தமிழ் படிச்ச தமிழர்களுக்கு...
என்னைவிட மிக நன்றாகவே தெரியும்...
நல்லா கவனிச்சு பாருங்களேன்...
மாட்டிறைச்சி சாப்பிட இவனுக ஆதாரம்னு தூக்கிட்டு வர்றதும்... அவனுக தொழிலுக்கு ஒத்துப்போகும் அதே பாலைத்திணை பாடலைதான்...
பொம்பளை பொறுக்கி , செம்மரம் வெட்டுறவன்... போலீஸை அடிக்கிறவன், தங்கம் , கஞ்சா கடத்துறவன்... கொள்ளையடிக்கிறவனுகளையெல்லாம்... இவனுக தமிழன்னு சொல்வதற்கு இதுதான் காரணம் போல... 😜😜
பாலைத்திணை பற்றிய மேலதிக தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும்
Subscribe to:
Post Comments (Atom)
ஸ்ரீமத் பாகவதம் (தமிழ்)
Srimad-Bhagavatam 1 Srimad-Bhagavatam 2 Srimad-Bhagavatam 3 Srimad-Bhagavatam 4 Srimad-Bhagavatam 5 Srimad-Bhagavatam 6 Srimad...
-
பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பார்ப்பானை அடி, பாம்பை விட்டுவிடு பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பார்ப்பானை அடி, பா...
-
ஈவேரா-வின் தோள்சீலை போராட்டமும் , அந்நிய ஆபிரகாமிய நச்சு சக்திகளின் மதமாற்ற செயல்திட்டமும் தன் முன்னோர்களை இழிவானர்கள்னு சொல்லி, மதம்மாத்த...
-
ஆரியம் , ஆரியன் - ங்கிறதுலாம்... தமிழனுக்கு அந்நியமா.? திருப்புகழ்:- தோரண கனக வாசலில் முழவு தோல்முர சதிர ...... முதிராத தோகையர் கவர...
No comments:
Post a Comment