Wednesday 11 October 2017

திகவின் பித்தலாட்ட கதைகள் (பாம்பு -- பார்ப்பான்)




பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் 

பார்ப்பானை அடி, பாம்பை விட்டுவிடு




பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பார்ப்பானை அடி, பாம்பை விட்டுவிடு என்ற சொல்லாடல் பற்றியது. 

இதுபற்றிய நேர்காணலில் நடந்தது என்ன என்பதை பார்ப்போம்.

பாண்டே : பாம்பையும் பார்ப்பானையும் கண்டா பாம்பைவிட்டுட்டு முதல்ல பார்ப்பானை அடின்னு சொல்லிகொடுத்திருக்கீங்க நீங்க….

வீரமணி : இது வடநாட்டு பழமொழி, ஒருநாளும் பெரியார் சொன்னது இல்ல…

பாண்டே : விடுதலையிலோ, உண்மையிலோ வந்ததில்லையா?

வீரமணி : ஒருநாளும் வந்ததில்லை… அப்படி காட்டிட்டா இந்த பதவியில் இருந்து விலகிவிடுகிறேன்.

இப்படி நடைபெற்ற நேர்காணலில் பாண்டே அவர்கள் மூன்று ஆதாரத் தகவல்களைக் கொடுத்திருக்கிறார்.

  1. பார்ப்பனன் இந்நாட்டினின்று விரட்டப்பட வேண்டும். (பெரியார், விடுதலை, 29-1-1954)
  2. கடவுளை ஒழிக்கவேண்டுமானால் பார்ப்பானை ஒழிக்கவேண்டும். (பெரியார், விடுதலை, 19-10-1958)
  3. பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பாம்பைவிட்டுவிடு, பார்ப்பானை அடி என்றார் பெரியார். (நூல் : இந்துத்துவாவின் படையெடுப்பு)
மேற்கண்ட 1,2 ஆதாரத்தைப் பற்றி பதில் எதுவும் சொல்லாமல் ஒதுக்கிவிட்டு திராவிடர் கழகம் மூன்றாவதாக பாண்டே கொடுத்திருக்கின்ற ஆதாரத்தின் உண்மைத் தன்மையை மட்டும் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார்கள்.

பெரியார் எங்கே சொன்னார், விடுதலையில் எப்போது வந்திருக்கிறது என்பதற்கு மேற்கண்ட இந்துத்துவாவின் படையெடுப்பு என்ற நூல் ஆதாரம் தருகிறதா? அப்படி ஒருநூல் யாரால் எழுதப்பட்டது? அதை வெளியிட்டது யார்? வெளியிடப்பட்ட ஆண்டு என்ன? தகவல்களை காணோமே? பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தாலோ, திராவிடர் கழகத்தாலோ வெளியிடப்பட்டதா?

இதுதான் திராவிடர் கழகம் கேட்டிருக்கின்ற கேள்வி.
இனி விஷயத்திற்கு வருவோம். திரு. பாண்டே கேட்ட கேள்வி என்ன? திரு.வீரமணி அளித்த பதில் என்ன என்பதை பாருங்கள். திரு.பாண்டே பொதுவாக யார் பெயரையும் குறிப்பிட்டு சொல்லாமல் (முக்கியமாக பெரியாரை குறிப்பிட்டு சொல்லாமல்) கேள்வி கேட்கிறார். ஆனால் வீரமணி அதற்கு பெரியார் அப்படி சொல்லவேயில்லை என்று வலிந்து பெரியார் பெயரை கூறுகிறார். 

அப்படி பெரியார் பெயரை கூறிவிட்டு அதற்கு விடுதலையில் ஆதாரம் உண்டா என்றுவேறு கேட்கிறார். தன் பதவியை விட்டுவிலகுவதாக கூறுகிறார். ஆனால் பாண்டே கேட்ட கேள்வி, பாம்பையும் பார்ப்பானையும் கண்டா பாம்பைவிட்டுட்டு முதல்ல பார்ப்பானை அடின்னு சொல்லிகொடுத்திருக்கீங்க நீங்க…. என்பதுதான். 


திராவிட இயக்கத்தவர்கள் சொல்லியிருக்கிறார்களே என்பதுதான் அந்த கேள்வியின் உள்அர்த்தம். அதற்கு பதில் சொல்லாமல் பெரியார் அப்படி சொல்லவேயில்லை என்று கேள்விக்கான பதிலை திசைமாற்றிவிட்டார் வீரமணி. எங்கள் இயக்கத்தவர்கள் யாருமே அப்படி சொல்லியதில்லை என்றுதானே பதில் வந்திருக்க வேண்டும்? அப்படி சொல்ல தைரியம் இல்லாமல் பெரியார் அப்படி சொல்லவில்லை என்கிறார்.


திரு.பாண்டே ”தான் கேட்ட கேள்விக்கான” ஆதாரத்தை கொடுத்திருக்கிறார். ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்ட வீரமணி பெரியார் சொல்லியிருக்கிறாரா, விடுதலையில் வந்திருக்கிறதா என்றெல்லாம் திசைமாற்றுவது ஏமாற்றுத்தனத்தை தவிர வேறல்ல. இந்துத்துவாவின் படையெடுப்பு என்ற நூல் முழுக்க முழுக்க இந்துத்துவத்தை விமர்சிக்கின்ற புத்தகம். அந்த புத்தகம் இதோ :




இந்துத்துவ படையெடுப்பு 1 




இந்துத்துவ படையெடுப்பு 2




இந்துத்துவ படையெடுப்பு 3




இதை எழுதிய ஆசிரியர்களுக்கு கண்டனம் தெரிவிப்பாரா வீரமணி அவர்கள்? அல்லது இதை எழுதிய ஆசிரியர்கள் பொய்யை எழுதிவிட்டனர் என்பதை அவர்களே சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.


பெரியாருடன் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள் பெரியார் அப்படி பேசியிருக்கிறார் என்பதை சொல்கின்றனர். ஆனால் யாருக்குத்தெரியும் இப்படி ஆதாரம் கேட்பார்கள் என்று!

பெரியார் அப்படி சொல்லவில்லை என்று சொல்கின்ற வீரமணிக்கு நாம் ஒரு ஆதாரத்தை காட்ட விரும்புகிறோம். பெரியார் அப்படி சொன்னதாக சாட்சாத் வீரமணியே சொல்லியிருக்கிறார் என்பதுதான் அது.


கீற்று இணையதளம் பெரியாரிய, இடதுசாரி சிந்தனையுள்ள இணையதளம். அத்தளத்தில் திருமதி வசந்தா கந்தசாமி எழுதிய புத்தகத்தை வெளியிட்டு திரு.வீரமணி பேசிய பேச்சை வெளியிட்டிருக்கிறது. அதில் வீரமணி பேசியதாவது: ‘….பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தால் பாம்பை விட்டுவிடு, பார்ப்பானை அடி என்று குறிப்பிடுவார் தந்தை பெரியார். அதனுடைய தத்துவம் என்ன?…’ என்று பேசியிருக்கிறார்.

கீற்று இணையதள படம்


இந்த ஆதாரம் போதாதா வீரமணிக்கு? இதுவும் பொய் என்றால் கீற்று வெளியிடுகின்ற அத்தனையும் பொய் என்றே நாம் நினைக்கவேண்டும். இதை மறுக்கப்போகிறதா கீற்று இணையதளம்? அல்லது வீரமணிதான் மறுக்கப் போகிறாரா? அதுமட்டுமல்ல, தமிழ் ஓவியா பெரியாரியவாதி. அவரும் இந்த கட்டுரையை தன்னுடைய வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
http://thamizhoviya.blogspot.in/2008/07/blog-post_4118.html
tamil oviya


இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழ்ஓவியா இப்போது வீரமணிக்கு ஆதரவாக, பெரியார் அப்படி சொல்லவில்லை என்று பதிவிட்டிருக்கிறார் என்பதுதான். முரண்பாட்டின் மொத்த உருவமாக விளங்குபவர்கள் இவர்கள்.
இன்னொரு ஆதாரத்தையும் பார்ப்போம். விடுதலையில் பெரியார் சொன்னதாக வந்திருக்கிறதா என்று கேட்கிறார். விடுதலையில் ஒரு கவிதை வெளிவந்திருக்கிறது. 

அது இதோ...

பெரியார் கைத்தடி

பாம்பையும்
பார்ப்பானையும்
கண்டால்..
பாம்பை விட்டு விடு
பார்ப்பானை அடி..!
பேசியது பெரியார்
கைத்தடி!!

http://www.viduthalai.in/page-1/77360.html
பெரியாரின் கைத்தடி



இதுதான் அந்த கவிதை. பெரியார் பேசியதாகவே இந்த கவிதையில் சொல்லப்பட்டிருக்கிறது, அதுவும் விடுதலையில் வந்திருக்கிறது. இதற்கு வீரமணி என்ன சொல்லப்போகிறார்?

இன்னொரு ஆதாரத்தையும் பார்ப்போம். வரலாற்றுச் சுவடுகள் என்ற தலைப்பில் ஒரு செய்தியை விடுதலை வெளியிட்டிருக்கிறது. அதில் கும்பகோணத்தில் உள்ள திராவிடர் கழக அலுவகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு செய்தியை பதிவு செய்கிறது. வாசலின் வலது புறத்தில் பார்ப்பானையும் பாம்பையும் கண்டால் முதலில் பார்ப்பானை அடி!என்ற வாசகம் எழுதி வைத்துள்ளது.

http://www.viduthalai.in/home/viduthalai/history-/41007-viduthalai.htmlவரலாற்றுசுவடுகள்



விடுதலையில் வந்திருக்கிறதா என்று கேட்கிற வீரமணி இதற்கு என்ன சொல்லப் போகிறார்?

பெரியாரியவாதியான அ.மார்க்ஸ் அவர்கள் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் இந்த சொல்லாடல் பெரியார் கூறியதாக அவர் கூறுகிறார்.

அ.மார்க்ஸ் வலைதளம்


அதே மார்க்ஸ் இப்போது என்ன கூறுகிறார் தெரியுமா? ‘பார்ப்பானையும் பாம்பையும் கண்டால் பார்ப்பானை அடி’ எனப் பெரியார் எங்கும் சொன்னதில்லை என விவாதத்தில் ஆசிரியர் வீரமணி சொன்னதற்கு எதிராக “ஆதாரம்” காட்டி விட்டதாகப் பசப்பித் திரிவோருக்குக் கவிஞர் கலி பூங்குன்றன் அவர்கள் வைக்கும் ஆப்பு…. என்று தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் அ.மார்க்ஸ்.

அ.மார்க்ஸ் முகநூல்


கலிபூங்குன்றன் ஆப்பு வைத்திருக்கிறார் என்றால் முன்னர் அ.மார்க்ஸ் பெரியார் சொன்னதாக சொல்லியிருப்பது என்ன? அப்படியானால் அ.மார்க்ஸ் பொய் சொல்லியிருக்கிறாரா என்பதை அவர் தெளிவுபடுத்துவாரா?

விடுதலை சிறுத்தைகள் கட்சியினுடைய தலைவர் திரு.தொல்.திருமாவளவன்கூட பெரியார் இந்த சொல்லாடலை பயன்படுத்தியிருக்கிறார் என்று ஒரு ஆர்ப்பாட்டத்தில் பேசியிருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=sv4_zDrNK_Q


18.51 நிமிடத்திலிருந்து அந்த சொல்லாடல் வருகிறது. இப்போது வீரமணி என்ன சொல்லப்போகிறார்? திருமாவளவன் பொய் சொல்கிறார் என்று சொல்லப் போகிறாரா? பெரியார் சொல்லாத தை திருமா சொல்லி பெரியாரை கொச்சைப்படுத்துகிறார் என்று சொல்லப்போகிறாரா? அல்லது திருமாவளன் தான் பொய் சொல்லிவிட்டேன் என்று கூறப்போகிறாரா? அதையும் பார்ப்போம்.

திரு. பாண்டே கொடுத்த ஆதாரங்களைவிட அதிகளவு, வீரமணி எதிர்பார்த்த அளவு ஆதாரங்களை நாம் கொடுத்திருக்கிறோம். வீரமணி தன் பதவியை விட்டு விலகுவாரா? ஒருவேளை பதவியில் இருந்து விலகினாலும் விலகிவிடுவார். ஆனால் அந்தப் பதவியில் அவர் மகன் அன்பு வருவார் என்பதில் ஐயமில்லை.

 பாண்டே திரிபுவாதம் செய்கிறாரா அல்லது திராவிடர் கழகம் மறுப்பு என்ற பெயரில் திரிபுவாதம் செய்கிறதா என்பதை வாசகர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.  திரு.வீரமணி தான் சொல்லியபடி செய்யப் போகிறாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.


ஸ்ரீமத் பாகவதம் (தமிழ்)

  Srimad-Bhagavatam  1 Srimad-Bhagavatam   2 Srimad-Bhagavatam   3 Srimad-Bhagavatam    4 Srimad-Bhagavatam   5 Srimad-Bhagavatam   6 Srimad...