Monday 22 July 2019

தமிழகத்தின் மீதான இஸ்லாமியப் படையெடுப்புகள்


தமிழகத்தின் மீதான இஸ்லாமியப் படையெடுப்புகள்


எஸ். சுந்தரராஜ் (Former Asst. Professor of History, St. Joseph College, Trichy) அவர்கள் The Quarterly Journal of Mythic Society, Volume : LXXI-இல் எழுதிய வரலாற்றுக் கட்டுரையின் மொழிபெயர்ப்பு.

பதினான்காம் நூற்றாண்டில் தமிழகம் அரசியல் ரீதியாகத் தனிமைப்பட்டுக் கிடந்தது. வடக்கில் இஸ்லாமியப் படையெடுப்புகளால் நிகழ்ந்த மாற்றங்களில் பாதிப்பு எதுவும் அடையாமல் இருந்த தமிழகத்தின் மீது வடக்கிலிருந்து வந்த இஸ்லாமியப் படையெடுப்புகளினால் முற்றிலும் மாற்றமடைந்து தமிழக அரசர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது.

தென்னாட்டில் பொதுவாக நிலவிய ஒற்றுமையின்மையினாலும் அதனைவிடவும், பாண்டிய நாட்டில் நிகழ்ந்த வாரிசுரிமைப் போர்களாலும் மிகவும் பலவீனமடைந்திருந்த தமிழகத்தின் மீது தொடர்ச்சியாக நிகழ்ந்த இஸ்லாமியப் படையெடுப்புகள் சூறாவளியாகத் தாக்கின. இஸ்லாமிப்படைகளின் பாதம் படாமல் இருந்த தமிழ் நிலப்பரப்பினை டெல்லி சுல்தானின் படைத்தலைவர்களான மாலிக்கஃபூரும், குஸ்ரூகானும், உலூக்கானும் சின்னாபின்னமாக்கினர். இந்தப் படையெடுப்புகளைத் தொடர்ந்து பலவீனமடைந்திருந்த த்மிழகத்தின் மீது பிற அன்னியரும் தங்களின் ஆளுகையைச் செலுத்த இஸ்லாமியப் படையெடுப்புகள் வழிகோலியது. இந்த நிலையே 1947-ஆம் வருடம் இந்தியா சுதந்திரமடையும் வரை தொடர்ந்து வந்திருப்பதனை நாம் காணலாம்.

மூன்றாம் குலோத்துங்க சோழனின் காலத்திற்குப் பிறகு பலவீனமடைய ஆரம்பித்த சோழப் பேரரசு மூன்றாம் ராஜேந்திரன் காலத்தில் சிதறி, அதுவரையிலும் வலிமை குன்றியிருந்த பாண்டிய அரசு வலிமை பெற ஆரம்பித்தது. முதலாம் ஜடாவர்ம சுந்தர பாண்டியன், முதலாம் மாறவர்ம குலசேகர பாண்டியன் (1268-1308) போன்ற புகழ்பெற்ற பாண்டிய அரசர்கள் வலிமை பெற்றார்கள். இவர்களின் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் பொருளாதாரமும், அரசியல் ஸ்திரத்தன்மையும் வலிமை பெற்றன. மேற்கூறிய பாண்டியர்களின் காலத்தில் தமிழகத்திற்கு வருகை தந்த இத்தாலியப் பயணியான மார்க்கோ-போலோ, இந்தியாவிலேயே மிகவும் சிறந்த ஆட்சி நிலவும் பகுதியாக தமிழகம் இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.

முதலாம் மாறவர்மன் குலசேகரனுக்கு மூன்றாம் ஜடாவர்ம சுந்தரபாண்டியன் மற்றும் ஜடாவர்ம வீரபாண்டியன் என இரண்டு மகன்கள் இருந்தார்கள். வீரத்திலும், தீரத்திலும் சிறந்து விளங்கிய இந்த இரண்டு மகன்களையும் மாறவர்ம குலசேகரன் தன்னுடன் இணைந்து தனது இணை அரசர்களாக பாண்டிய நாட்டின் பல பகுதிகளை ஆளவதற்கு நியமித்திருந்தான். கடற்கரையோரம் இருந்த பகுதிகளை ஆள்வதற்கு மூன்றாம் சுந்தரபாண்டியன் நியமிக்கப்பட்டிருந்தான் (1302-3). இவனையே மார்க்கோ-போலோ தனது குறிப்பில் “Sondar Bandi Davar” எனக் குறிப்பிடுவதனைக் காணலாம்.

இதில் மூன்றாம் சுந்தரபாண்டியனே பட்டத்தரசிக்குப் பிறந்த நேரடி வாரிசு எனத்தெரிகிறது. ஆனால் அவனுக்குப் பதிலாக, நேரடி வாரிசு அல்லத மூத்தமகனான ஜடாவர்மன் வீரபாண்டியன் பாண்டிய அரசனாக அறியணை ஏறுகிறான் (1296). இவனையே சரியான வாரிசாக வட இந்திய சுல்தான் கருதியதாகத் தெரிகிறது. சுந்தர பாண்டியன் மதுரைக்கு வடக்கே உள்ள பகுதிகளை ஆண்டு கொண்டிருந்தான். சுல்தானின் வரலாற்றசிரியரான வசாஃப், சுந்தரபாண்டியன் மிகவும் கூர்மதியும், துணிச்சலும் கொண்டவன் எனக் குறிப்பிடுகிறார். இதன் காரணமாகவே மாறவர்ம குலசேகரன் அவனைத் தனக்குப் பின்னர் பாண்டிய அரசை ஆளும் அரசனாக நியமித்தான் எனத் தெரிகிறது.

தனது தந்தையின் இந்தச் செயலை பட்டத்திற்கு உரிய வாரிசான தனக்கு முடிசூட்டாமல், முறைதவறிப் பிறந்த தனது அண்ணனான் வீரபாண்டியனுக்கு அளித்ததின் காரணமாகக் கோபமுற்றிருந்த மூன்றாம் சுந்தரபாண்டியன் கலகம் செய்ய ஆரம்பித்ததுடன், வீரபாண்டியனை 1311-ஆம் வருடம் கொலை செய்ய முயற்சிக்கிறான். இந்த வாரிசுரிமைச் சண்டையே இஸ்லாமியப் படையெடுப்பாளர்கள் தமிழகத்தின் மீது படையெடுத்து வர ஒரு சாக்காக அமைகிறது.

அதையும் விட அன்றைக்குத் தென்னிந்தியாவில் நிலவிய அரசியல் ஸ்திரத்தன்மையும் இஸ்லாமியர்கள் தென்னிந்தியாவின் மீது படையெடுக்க முக்கியமானதொரு காரணம் என்பதில் சந்தேகமில்லை. தென்னிந்திய ஹிந்து அரசர்கள் ஒற்றுமையின்றி ஒருவர் மீது ஒருவர் படையெடுத்துப் போர்புரிந்து கொண்டிருந்தார்கள். எப்படியாவது அடுத்த நாட்டு அரசனின் பகுதிகளைக் கவர வேண்டும் என்கிற குறுகிய எண்ணத்துடன் தென்னிந்திய ஹிந்து அரசர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள்.

இதைக் கவனித்துக் கொண்டிருந்த அலாவுதீன் கில்ஜிக்கோ இந்த நம்பிக்கையற்ற காஃபிர்களை வீழ்த்தி அவர்களின் நாடுகளில் இஸ்லாமைப் பரப்பும் எண்ணம் இருந்தது. அதனைவும் விட பாண்டிய நாட்டில் இருந்த, தலைமுறை தலைமுறையாக சேர்த்து வைக்கப்பட்டிருந்த கணக்கிட முடியாத பொக்கிஷங்களின் அளவினைக் கேள்விப்பட்டதும் கில்ஜிக்கு தென்னிந்தியாவின் மீது படையெடுக்க இன்னொரு முக்கிய காரணம் என்பதில் சந்தேகமில்லை.

இப்படியாக, தென்னிந்தியாவின் மீது இஸ்லாமியப் படையெடுப்பு நிகழ்வதற்கான காரணங்கள் பல்வேறு தரப்பின் பேராசையாலும், ஒற்றுமையின்மையாலும் பின்னப்பட்டது எனலாம்.


மாலிக்காபூர் படையெடுப்புப் பாதை
தனக்கு அரச பதவியை அளிக்காத தனத்து தந்தையை மூன்றாம் ஜடாவர்ம சுந்தரபாண்டியன் மதுரையில் கொலை செய்துவிட்டு மணிமுடியைத் தலையில் சூடித் தன்னை அரசனாக அறிவித்துக் கொண்டான். அதனைத் தொடர்ந்து தனக்கு விசுவாசமாக இருக்க மான்குளம் (Mankul) என்னுமிடத்தில் வைக்கப்பட்டிருந்த பாண்டிய அரசின் பொக்கிஷங்களைத் தனது படைகளுக்குப் பகிர்ந்தளித்தான். இப்படியாக, ஆட்சியைக் கைப்பற்றிய சுந்தரபாண்டியன் தனது சகோதரனன வீரபாண்டியனை அழிக்கும் எண்ணத்துடன் அவன் மீது படையெடுத்தான்.

தனது தந்தையின் கொலைக்குப் பழிவாங்கும் எண்ணத்துடன் இருந்த வீரபாண்டியன், மூன்றாம் ஜடாவர்ம சுந்தரபாண்டியனுடன் தலச்சி (Thalachi) என்னுமிடத்தில் போர் புரிகிறார். ஆனால் துரதிருஷ்டவசமாக வீரபாண்டியன் அந்தப் போரில் தோல்வியடைந்தான். இருப்பினும் கரூரை ஆண்ட அவனது நண்பனான மன்னர் பர்னுல் (Manar Barnul) என்பவரின் உதவியால் சுந்தரபாண்டியனைத் தோற்கடிக்கிறான் வீரபாண்டியன். எனவே போரில் தோற்ற சுந்தரபாண்டியன் அலாவுதின் கில்ஜியிடம் சரணடைந்து தனக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுக்கிறான் எனத் தெரிகிறது.

ஆனால் அலாவுதீன் கில்ஜியின் வரலாற்றாசிரியர்களான அமிர் குஸ்ருவும், பரானியும் மூன்றாம் ஜடாவர்ம சுந்தரபாண்டியனின் கொலை குறித்தோ அல்லது கில்ஜியிடம் உதவிகேட்டு வந்த சுந்தரபாண்டியனைக் குறித்தோ எதுவும் குறிப்பிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இரண்டு பாண்டிய ராஜாக்களும் ஒருவர் மீது ஒருவர் படையெடுத்து போர்தொடுத்தார்கள் என்கிற செய்தி மட்டுமே அலாவுதீன் கில்ஜிக்குச் சொல்லப்பட்டது என்று மட்டுமே குறிப்பிடுகிறார் அமிர் குஸ்ரு. எதற்காக இரண்டு சகோதரர்களும் ஒருவர் மீது ஒருவர் பகைமை பாராட்டினார்கள் என்பது குறித்தான குறிப்பு எதுவும் அவரிடமில்லை.


இரண்டு சகோதரர்களிம் மீது இருந்த பகைமையை, அதன் காரணத்தைச் சொல்பவர் வசாஃப் மட்டுமே. அதேசமயம் சுந்தரபாண்டியன் அலாவுதீன் கில்ஜியைச் சந்தித்தான் என வசாஃப் சொவது சந்தேகத்திற்குரியது. ஏனென்றால் மற்ற இரண்டு வரலாற்றாசிரியர்களும் இதனைக் குறித்து மவுனம் சாதிக்கிறார்கள்.

அந்தக் காலத்தில் தில்லியிலிருந்து மதுரைக்கு வர ஏறக்குறைய ஆறுமாதங்களாவது ஆகும் என்பதினை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இதனடிப்படையில் சுந்தரபாண்டியன், அன்றைக்கு தேவசமுத்திரத்தில் முகாமிட்டிருந்த அலாவுதீன் கில்ஜியின் தளபதியான மாலிக் கஃபூரை சந்தித்திருக்க வேண்டும். தக்காணப் படையெடுப்பின் ஒருபகுதியாக மலபாரின் மீது படையெடுக்கும் எண்ணத்துடன் வந்திருந்த மாலிக் கஃபூர் அங்கு தங்கியிருந்ததாகத் தெரிகிறது.

எனவே, மதுரையிலிருந்து சுந்தரபாண்டியன் தப்பி ஓடியதும், மாலிக் கஃபூர் தக்காணத்தின் மீது படையெடுத்து வந்ததுவும் திட்டமிடப்படாமல் ஏதேச்சையான நிகழ்வுகளாக இருக்க வேண்டும் என்றாலும், தென்னிந்தியாவின் மீது படையெடுக்க பாண்டிய அரசின் உள்நாட்டுக் கலவரம் வசதியான ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. எனவே, வசாஃப் சொல்வது போல சுந்தரபாண்டியன் மதுரையிலிருந்து தப்பி ஆறுமாதகாலம் பயணம் செய்து தில்லியில் அலாவுதீன் கில்ஜியைச் சந்திருக்க வாய்ப்புகள் மிக, மிகக் குறைவு. எனவே இதுவொரு கற்பனைச் செய்தியாக இருக்கவே வாய்ப்பிருக்கிறது.

இதற்கிடையே, மதுரையில் பாண்டிய சகோதரர்கள் ஒருவொருக்கொருவர் போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என அறிந்த மூன்றாம் வீரவல்லாளன் மதுரையின் மீது படையெடுத்து அந்த நகரைக் கொள்ளையிட்டான். அதையும் விட, பாண்டியர்களிடம் சமீபத்தில் தான் இழந்த தனது முன்னோர்களின் நகரான கண்ணனூரை மீட்பதுவும் அவனது மதுரைப் படையெடுப்பின் முக்கிய காரணமாக இருந்தது. பாண்டிய நாட்டை நோக்கித் துருக்கர்களின் படைகள் வந்து கொண்டிருக்கின்றன எனக் கேள்விப்படும் வீரவலாளன் மதுரையை விட்டு விலகி தனது நாட்டுக்குத் திரும்பிச் சென்றுவிட்டான். மாலிக் கஃபூருடன் போர் புரிவது தனக்குப் பாதகமானதாகவே இருக்கும் என உணர்ந்தே அவன் திரும்பிச் சென்றிருக்க வேண்டும்.

சர்மலை (சிறுமலை?) மற்றும் தபர் கணவாய்களைக் கடந்த மாலிக் கஃபூர் 1311-ஆம் வருடம் பாண்டிய நாட்டை வந்தடைகிறான். காவேரிக்கரை வந்தடையும் மாலிக் கஃபூர், வீரபாண்டியன் ஒளிந்திருக்கும் எனக் கருதப்படும் பிர்துல் என்கிற பகுதியை நோக்கி உடனடியாகக் கிளம்பிச் செல்கிறான். அவனுடன் வந்த இஸ்லாமியப் படை பிர்துல் நகரைத் துவம்சம் செய்து அங்கிருந்த குடிமக்களைப் படுகொலை செய்து அழிக்கிறது. வீரபாண்டியன் அங்கிருந்து தப்பி கண்டூர் என்கிற பகுதிக்கு ஓடுகிறான். அவன் எங்கு சென்றிருக்கக்கூடும் என விசாரிக்கும் மாலிக் கஃபூர், வீரபாண்டியன் ஜலக்கோட்டா என்கிற பகுதிக்குச் சென்று ஒளிந்திருப்பதாக அறிகிறான்.

ஜலக்கோட்டாவிற்குச் செல்லும் மாலிக் கஃபூரிடமிருந்து தப்பும் வீரபாண்டியன் அங்கிருந்து கண்டூர் எனப்படும் காட்டுப்பகுதிக்குள் சென்று ஒளிந்து கொள்கிறான். கடுமையான காட்டினுள் நுழைய முடியாத மாலிக் கஃபூர் அங்கிருந்து மீண்டும் கண்டூர் பகுதிக்குத் திரும்பி வருகிறான். அங்கு பிரம்ஹாஸ்திபுரி என்னும் ஆலயத்திலிருக்கும் தங்க ஆலயத்தையும் அதன் தங்க விக்கிரகத்தைக் குறித்துக் கேள்விப்படும் மாலிக் கஃபூர் இரவோடிரவாக அந்த ஆலயத்தின் மீது படையெடுக்கிறான். விடிவதற்குள் அந்த ஆலயம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.

இதனையே பரானி “மாபாரின் தங்க ஆலயம் இடித்து ஒழிக்கப்பட்டதாக” தனது வரலாற்றுக் குறிப்பில் குறிப்பிடுகிறார். அந்த ஆலயத்தில் உடைக்கப்பட்ட தங்க சுவாமி சிலைகளின் துண்டுகள் மற்றும் விலையுயர்ந்த ஆபரணங்கள் மாலிக் கஃபூரின் படைகளால் கொள்ளையடிக்கப்படுகின்றன.


அதேசமயம் இன்னொரு வரலாற்றாசிரியரான அமிர் குஸ்ரு, பிரம்ஹாஸ்திபுரி என்பது முற்றிலும் வேறு ஆலயம் எனக் குறிப்பிடுகிறார். ஆராய்ச்சியாளர் எஸ்.கே. ஐயங்கார் அது ஸ்ரீரங்க ஆலயமாக இருக்கலாம் எனக் கூறுகிறார். ஏனென்றால் மாலிக் கஃபூர், கண்ணனூரில் இருக்கையிலேயே பிரம்ஹாஸ்திபூரைப் பற்றி கேள்விப் படுகிறான். கண்ணனூர் இன்றைய ஸ்ரீரங்கத்திற்கு மிக அருகிலிருக்கும் ஒரு ஊர். எனவே மாலிக் கஃபூரின் படைகள் ஒரே இரவில் அங்கு வருவதற்குச் சாத்தியங்கள் இருக்கின்றன. இன்னும் சிலர் கூறுவது போல அந்த ஆலயம் சிதம்பரமாக இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் கண்ணனூரிலிருந்து சிதம்பரத்திற்கு விரைவாக, ஓரிரிவில் வருவது சாத்தியிமில்லை. 
அதையும் விட, வீரபாண்டியனைத் தேடி கண்டூருக்குச் செல்லும் வழியில் மாலிக் கஃபூர் ஜால்கோட்டா (ஸ்ரீரங்கம்) ஆலயத்தைப் பார்த்திருக்கலாம். திரும்பி வரும் வழியில் அதனைக் கொள்ளையடிக்கலாம் என நினைத்து அப்படிச் செய்யாமல் வீரபாண்டியனை விரட்டிச் சென்றிருக்கலாம்.

பிரம்ஹாஸ்திபுரி (ஸ்ரீரங்கம்) வீழ்ந்த ஐந்து நாட்கள் கழித்து மாலிக் கஃபூர் அங்கிருந்து புறப்பட்டு பிர்துல் நகரை வந்தடைந்து பின்னர் அங்கிருந்து மதுரையை நோக்கிப் படையெடுத்துச் செல்கிறான்.

சக 1249 (பொ.யு. 1327) வருடம் இஸ்லாமியப் படைகள் தொண்டைமண்டலத்தின் அத்தனை பகுதிகளிலும் அழிவுகளை நிகழ்த்தியதாக ஸ்ரீரங்க வரலாறான “கோவிலொழுகு” விளக்குகிறது. இதன்மூலம் ஸ்ரீரங்க ஆலயத்தை இஸ்லாமியப்படைகள் 1327-ஆம் வருடம் தாக்கியது உறுதியாகிறது. இஸ்லாமியப் படைகள் சமயபுரத்தை நெருங்கியதை அறிந்த ஆலய பூசாரிகள் ரங்கநாதரின் திருமேனியை தமிழகத்தின் தென்பகுதிக்கு ரகசியமாக அனுப்பி வைத்தார்கள்.

ஆலயத்தைத் தாக்கிய இஸ்லாமியப்படைகள் ரங்கநாதரின் சிலையைக் காணாது கோபமுற்று அங்கிருந்த பல பூசாரிகளின் மற்றும் பக்தர்களின் தலையைக் கொய்ததாக கோவொலொழுகு மேலும் கூறுகிறது. ஆல்யத்திலிருந்த நாட்டியப் பெண்மணி ஒருத்தியின் முயற்சியின் காரணமாக ஸ்ரீரங்கம் ஆலயம் பெரும் அழிவிலிருந்து தப்பியதாகத் தெரிகிறது. மேற்கூறியபடி 1327-ஆம் வருடம் ஸ்ரீரங்க ஆலயத்தைக் கைப்பற்றிய இஸ்லாமியப்படைகள் பின்னர் அங்கேயே தங்கிவிட்டன.

ஸ்ரீரங்கம் மற்றும் ஜம்புகேசுவரரர் ஆலயங்களில் இஸ்லாமியப் படைகள் நிகழ்த்திய அழிவுகளைக் குறித்து கங்காதேவி தனது மதுரா விஜயத்தில் விளக்கியிருக்கிறார். ஆலயத்தின் விமானம் தகர்த்தெறியப்பட்டதால் ஆதிசேஷன் மட்டுமே ஸ்ரீரங்கநாதரின் சிலையைக் காத்து நின்று அது மேலும் சிதைவடையாமல் காத்ததது. உற்சவ ரங்கநாதரின் சிலை அங்கிருந்து பாதுகாப்பாக ஆலய பூசாரிகளால் வேறு இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுவிட்டது.

இஸ்லாமியர்களின் இரண்டாவது படையெடுப்பின்போது ஸ்ரீரங்க ஆலயம் அழிவிலிருந்து தப்பினாலும் அவர்களது மூன்றாவது படையெடுப்பில் ஆலயம் பெரும் சேதமுற்றதாகக் கோவிலோழுகு விளக்குகிறது. மூன்றாவது இஸ்லாமியப் படையெடுப்பே தமிழகத்தில் இஸ்லாமிய ஆட்சிக்கு அடிகோலியது. முந்தைய இரண்டு படையெடுப்புகளை விடவும் தனது மூன்றாவது தமிழகப் படையெடுப்பில் மாலிக் கஃபூர் ஸ்ரீரங்க ஆலயத்திற்குப் பெரும் சேதத்தை விளைவித்தான். எனவே, கோவிலொழுகு கூறும் இஸ்லாமியப் படையெடுப்பு நடந்ததாகக் கூறும் பொ.யு. 1327-ஆம் வருடம் என்பது தவறான ஒன்றாக இருக்க வாய்ப்பிருக்கிறது.

மேலும், மாலிக்கஃபூரின் படையெடுப்பு உய்யகொண்டான் திருமலைக்கும் (பிர்துல்) கண்ணனூருக்கும் இடையே பெருமளவு இருந்ததுவும் ஒரு காரணம் என நாம் கவனிக்க வேண்டும். எனவே கே.எஸ். ஐயங்கார் மாலிக்கஃபூர் தாக்கி அழித்தது சிதம்பரம் ஆலயம் எனக்கூறுவதும் தவறான தகவலே. சரியான ஆதாரங்கள் கிட்டும்வரை அமிர் குஸ்ரு கூறும் பிரஹ்மாஸ்திபுரி ஸ்ரீரங்கமே எனக்கொள்ளுதல் வேண்டும்.


ஸ்ரீரங்கத்திலிருந்து மதுரைக்குச் செல்லும் மாலிக் கஃபூர் அங்கு மொத்த நகரமும் காலியாகியிருப்பதனைக் காண்கிறான். மாலிக் கஃபூர் மதுரையை அடையுமுன்பே சுந்தரபாண்டியன் தனது ராணிகளுடன் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தான். மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு யானைகளைத் தவிர அரண்மனையிலும், ஆலயத்திலுமிருந்த முக்கியஸ்தர்கள் அத்தனைபேர்களும் அங்கிருந்து வெளியேறியிருந்தனர்.

யானைகளைக் கைப்பற்றும் மாலிக் கஃபூர் பின்னர் மீனாட்சியம்மன் ஆலயத்தைத் தீ வைத்துக் கொளுத்தி அழிக்கிறான். மதுரையில் மாலிக் கஃபூரின் படைகள் நடத்திய வெறியாட்டங்களைக் குறித்து வரலாற்றாசிரியர் நெல்சன் விளக்கமாக எழுதியிருக்கிறார். மதுரையிலிருந்த பொதுமக்கள் தங்களின் கடவுளர்களை வணங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டது. மதுரைக் கோவில் எரிக்கப்பட்டு, இடிக்கப்பட்டு ஏறக்குறைய தரைமட்டமாக்கப்பட்டது. ஆலயத்தைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்த கொள்ளையர்களின் இருபிரிவினருக்கிடைய நிகழ்ந்த மோதலால் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயப்பகுதி மட்டும் எப்படியோ தப்பிப் பிழைத்தது.
குமார கம்பணன் மதுரையின் மீது படையெடுத்து அதனை மீட்டெடுக்கும் வரையில், ஏறக்குறைய 48 ஆண்டுகள், மதுரை ஆலயப் பூசனைகள் எதுவும் நடைபெறவில்லை. மதுரையை மீட்டபிறகு மீனாட்சி அம்மனின் ஆலயத்திற்குச் சென்ற கம்பணன் அங்கிருந்த விளக்கினை ஏற்றி மீண்டும் வழிபாட்டைத் துவக்கி வைத்தான். பொது யுகம் 1365-ஆம் வருடம் குமார கம்பணன் மதுரையை மீட்டதாக வரலாற்றாசிரியர் நெல்சன் குறிப்பிடுகிறார். அதிலிருந்து வழிபாடு நடைபெறாத 48 ஆண்டுகளைக் கழித்துப் பார்க்கையில், மாலிக்கஃபூர் 1317-ஆம் வருடம் மதுரையைத் தாக்கிப் பிடித்திருக்க வேண்டும்.

பின்னர் அதே வருடம் தில்லிக்குச் சென்று திரும்பும் மாலிக் கஃபூரின் படைகளினால் அதே 1317-18-ஆம் ஆண்டுகளில் மீண்டும் மதுரை தாக்கப்படுகிறது. ஆனால் அந்த இரண்டாவது தாக்குதல்களில் பெருமளவு அழிவுகள் எதுவும் நிகழவில்லை எனத் தெரிகிறது.

அதேசமயம் நெல்சனின் கூற்றை மறுக்கும் பிற வரலாற்றாளர்கள் குமார கம்பணன் மதுரையை 1374 வருடம் மீட்டதாக அறிவிக்கிறார்கள். அதன்படி பார்க்கையில் மதுரை ஆலய வழிபாடு பொ.யு. 1328 வருடத்திலிருந்து நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். மீண்டும் 1327-28-ஆம் வருடம் மூன்றாவது முறையாக மதுரையின் மீது இஸ்லாமியப் படையெடுப்பு நிகழ்ந்தது. ஆனால் இந்த முறை மாலிக் கஃபூர் மீனாட்சி சுந்தரேஸ்வரரர் ஆலயத்தை அழிப்பதை விட்டுவிட்டு அதே மதுரையிலிருந்த ஜகன்னாதர் ஆலயத்தை இடித்து அழித்ததாகக் கூறுகிறார் அமிர் குஸ்ரு.

இந்த ஆலயம் மதுரைக்கு அருகில் அணைக்கல் (ஆனைக்கல்?) என்னுமிடத்தில் இருந்ததாகத் தெரிகிறது. எனவே இம்முறை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் அழிவிலிருந்து தப்பியிருக்க வேண்டும். எப்படியாகினும், தில்லி சுல்தான் முகம்மது-பின் துக்ளக்கின் கட்டுப்பாட்டிற்குள் வந்த பாண்டிய நாட்டில், அவன் ஆணைப்படி ஆலயங்களில் நிகழ்ந்த நித்திய பூசை, புனஸ்காரங்கள் அனைத்து நிறுத்தப்பட்டன.

தங்களின் நாடு துருக்கர்களின் கையால் சின்னாபின்னமாவதனைக் கண்டு வருந்திய பாண்டியன் சகோதரர்கள், சுந்தரபாண்டியனின் மாமனான விக்கிரம பாண்டியனின் முன்னிலையில் தங்கள் சச்சரவுகளை நிறுத்தி சமாதானம் செய்து கொண்டார்கள். விக்கிரம பாண்டியன் மாலிக் கஃபூரின் படைகளைப் போரில் தோற்கடித்து தென்னிந்தியா முழுமையும் இஸ்லாமியர்களின் ஆளுகைக்குக் கீழ்வரவிடாமல் தடுத்தான் எனத் தெரிகிறது.

வரலாற்றாசிரியர் ஃபரிஷ்டா, மாலிக் கஃபூர் தென்னிந்தியாவில் ராமேஸ்வரம் வரையில் படையெடுத்து சென்றதாகவும் பின்னர் அங்கு ஒரு மசூதியைக் கட்டி அதில் தனது எஜமானான தில்லி சுல்தானின் பெயரை ஒரு கல்வெட்டில் பொறித்து வைத்ததாகவும் கூறுகிறார். எனவே, இஸ்லாமியப் படைகள் ராமேஸ்வரம் வரையில் கைப்பற்றியிருக்கலாம் என்பதுவே பிற வரலாற்றாசிரியர்களின் கூற்றுமாகும்.

எஸ்.கே. ஐயங்கார், மதுரையை விட்டுச் செல்லுவதற்கு முன்னர் மாலிக் கஃபூர் சுல்தானின் சார்பாக ஒரு கவர்னரை நியமித்துவிட்டு அவனுக்குப் பாதுகாப்பாக தேவையான இஸ்லாமியப்படைகளை மதுரையில் விட்டுச் சென்றதாகவும் கூறுகிறார். இதற்கு உறுதியான ஆதாரம் எதுவும் இல்லை. ஏனென்றால் விக்கிரம பாண்டியன் மாலிக் கஃபூரைத் தோற்கடித்த பின்னர் மதுரையில் அவனது அதிகாரம் செல்லுபடியாக வாய்ப்புகள் இல்லை. அதையும் விட மாலிக் கஃபூர் மதுரையைத் தாண்டி தென்பகுதிக்குச் சென்றதற்கு ஆதாரங்களும் இல்லை. துவாரசமுத்திரத்தையே ஃபரிஷ்டா ராமேஸ்வரம் எனக் குறிப்பிட்டிருக்க வேண்டும். துக்ளக்கின் ஆட்சி வரும்வரையில் மலபார் பகுதியை ஹிந்து அரசர்களே ஆண்டுவந்தார்கள். எனவே அதுவும் சரியான செய்தியாகத் தெரியவில்லை. அதனடிப்படையில் மாலிக் கஃபூரின் மூன்றாவது தென்னாட்டுப் படையெடுப்பு ஒரு தோல்வியே என நாம் கொள்ளவேண்டும்.

*** மொழிபெயர்ப்பாளர் குறிப்பு : கட்டுரையாளரின் கீழ்க்கண்ட பகுதி தொடர்பின்றி குழப்பத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. பாண்டிய சகோதரர்களிடமிருந்து விக்கிரம பாண்டியன் ஆட்சியைக் கைப்பற்றி நடத்தியிருக்கலாம். சரிவர விளங்கவில்லை. ***

பாண்டிய சகோதரர்கள் மீண்டும் தங்களுக்குள் பூசலைத் துவக்கிச் சண்டையிட்டுக் கொண்டார்கள். உள்நாட்டுக் கலவரம் துவங்கி நாடு மீண்டும் மோசமான நிலையை நோக்கிச் சென்றது. இதன் காரணமாக பலவீனமான நிலை அடைந்த பாண்டிய நாட்டின் சூழலைப் பயன்படுத்துக் கொண்ட திருவாங்கூர் அரசரான குலசேகர ரவிவர்மா மதுரையின் மீது படையெடுத்து வீரபாண்டியனப் போரில் தோற்கடித்தார். காஞ்சிபுரத்தின் மீது படையெடுத்து அதனையு வெல்லும் குலசேகர ரவிவர்மா அங்கு முடிசூட்டிக் கொள்கிறார் (1313). பின்னர் நெல்லூரைச் சேர்ந்த முப்பிடி நாயக்கன் அவரைப் போரில் தோற்கடித்து காஞ்சிபுரத்தை விட்டு வெளியேற்றுகிறான்.

பாண்டிய சகோதரச் சண்டைகளுக்குப் பிறகும் பாண்டியர்களின் ஆட்சி மதுரையில் தொடர்ந்ததாகத் தெரிகிறது. பாண்டியர்களின் வரலாற்றுக் குறிப்புகளின்படி விக்கிரம பாண்டியன் திருநெல்வேலி, மதுரை, ராமநாதபுரம், தஞ்சாவூர் பகுதிகளையும் புதுக்கோட்டைப் பகுதிகளையும் ஆண்டதாகத் தெரிகிறது (1315). எனவே சேர அரசனின் படையெடுப்பு ஒரு குறுகிய காலத்திற்குள் மட்டுமே நிகழ்ந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

1318-ஆம் வருடம் சுல்தான் முபாரக்-ஷா அவனது படைத்தலைவனான குஸ்ரூகானை தமிழகத்தின் மீது படையெடுக்க அனுப்பி வைத்தான். இருப்பினும் அவனது படைகளுக்குள்ளேயே நிகழ்ந்த கருத்து வேறுபாடுகளால் கலகம் உண்டாகி அவன் மீண்டும் தில்லிக்குச் செல்ல நேரிட்டது.

பின்னர் 1327-ஆம் வருடம் முகமது-பின்-துக்ளக் அவனது படைத்தலைவனான உலூக்-கானின் தலைமையில் ஒருபடையை தென்னிந்தியாவிற்கு அனுப்பி வைத்தான். அவனே விக்கிரம பாண்டியனை வென்று, அவனைச் சிறைப்பிடித்தான். அதன் வழியாக தென்னிந்தியாவில், மதுரையில் இஸ்லாமிய ஆட்சி துவங்கியது.

மலபாரையும் வென்ற உலுக்கானின் படைகள் வென்றன. சுல்தான் முகமது-பின்-துக்ளக், ஜலாலுதீன் அஸான்ஷா என்பவனை மலபாரின் கவர்னராக நியமித்தான். அஸான்ஷா தன்னிடம் ஆட்சிப் பொறுப்பு வந்ததும் சுல்தானுக்கு விசுவாசமானவர்களைக் கொலை செய்துவிட்டுத் தன்னைச் சுதந்திர ஆட்சியாளனாகப் பிரகடனம் செய்துகொண்டான். இதனால் கோபமுற்ற சுல்தான் அவனை விரட்டியடிக்கப் படைகளை அனுப்பி வைத்தான். மலபாரை நெருங்கிய அந்தப் படைகளுக்குள் ப்ளேக் நோய் தோன்றி ஏராளமானவர்கள் இறந்தார்கள். தப்பிப் பிழைத்தவர்கள் தவுலதாபாத்திற்கு ஓடி அங்கு தஞ்சம் புகுந்தார்கள்.

இதன் பின்னர் மதுரையில் அஸன்ஷா தலைமையில் ஒரு சுதந்திர சுல்தானேட் தோன்றி குமார கம்பணன் மதுரையைக் கைப்பற்றும் வரையில் ஆட்சியில் இருந்தது. OK

Wednesday 17 July 2019

மாட்டிறைச்சி உண்பவர்களாக சொல்லப்பட்டவர்கள் தமிழர்களா?


தமிழர்கள் மாட்டிறைச்சி உண்டார்களா??
இலக்கியத்தில் மாட்டிறைச்சி உண்பவர்களாக சொல்லப்பட்டவர்கள் தமிழர்களா??

அகநானூறு -129.

தன்னுடன் தலைவியை அழைத்துச் செல்லத் தலைவன் ஒப்புக்கொண்டுள்ளான் என்னும் செய்தியைத் தோழி தலைவிக்குத் தெரிவிக்கிறாள்.
1
“நான் உயிரோடு இல்லாமல் போய்விட்டால்தானே, நீ ஏதாவது நினைக்கவேண்டும், நான்தான் இருக்கிறேனே” என்று நள்ளிரவில் நடுங்கும்படி கூறியவர் உன்னை மறந்து எப்படி வாழ்வார்?
2
பெருங்காற்று ஆட்டுவதால் வானளாவிய மூங்கிலிலிருந்து உதிர்ந்த நெல்லைப் பார்த்த ஆண்மான் தன் பெண்மானை உண்ண அழைக்கும் கானம் அது. அங்குக் கல்லுப் பாறையின் ஓரமாக இருந்தது ஒரு கூரைக் குடிசை. அதில் வாழும் பெண் பானையில் வைத்துத் தான் வளர்த்த கொழுத்த இலை கொண்ட பருத்திச் செடியின் வயிறு தள்ளிய இளங்காயை தன் வளர்ப்பு மானுக்கு ஊட்டுவாள். நெற்றாகி (போகில்) வெடித்த வெள்ளைப் பஞ்சைப் பறித்துத் தன் மடியில் சேகரிப்பாள்.  
3
இப்படிப்பட்ட சிற்றூர் மக்கள் மழவர். பிறர் தலையில் கைவைக்கும்படி அவர்கள் போரிடுவர். கொழுப்பை உண்பர். காலில் செருப்பு அணிந்திருப்பர். சுனையில் நீராடுவர். “இவர்கள் வாழும் சுரத்தில் இவளை அழைத்துக்கொண்டு கடந்து செல்லுதல் எனக்கு அரிய செயல் அன்று” என்று தன் உள்ளக் கிடக்கையை வாயால் அவர் தெரிவிக்கிறார்.  
தலைவி – அழகிய சிலவாகிய நீண்ட அழகான கூந்தலை உடையவள். தேன் மணக்கும் கூந்தலை உடையவள். தோள் நிறைய அணிகலன்களைப் பூண்டவள். குவளைமலர் போன்ற கண்ணை உடையவள்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை – பாலை
1
''உள்ளல் வேண்டும் ஒழிந்த பின்'' என
நள்ளென் கங்குல் நடுங்கு துணை ஆயவர்
நின் மறந்து உறைதல் யாவது? ''புல் மறைந்து
2
அலங்கல் வான் கழை உதிர்நெல் நோக்கி,
கலை பிணை விளிக்கும் கானத்து ஆங்கண்,  5
கல் சேர்பு இருந்த கதுவாய்க் குரம்பைத்
தாழிமுதற் கலித்த கோழிலைப் பருத்திப்
பொதி வயிற்று இளங் காய் பேடை ஊட்டி,
போகில் பிளந்திட்ட பொங்கல் வெண் காழ்
நல்கூர் பெண்டிர் அல்கற் கூட்டும் 10
3
கலங்குமுனைச் சீறூர் கை தலைவைப்ப,
கொழுப்பா தின்ற கூர்ம் படை மழவர்,
செருப்புடை அடியர், தெண் சுனை மண்டும்
அருஞ் சுரம் அரிய அல்ல; வார் கோல்
திருந்து இழைப் பணைத் தோள், தேன் நாறு கதுப்பின்,   15
குவளை உண்கண், இவளொடு செலற்கு'' என
நெஞ்சு வாய் அவிழ்ந்தனர் காதலர்
அம் சில் ஓதி ஆயிழை! நமக்கே.

அகநானூறு - 309

1
மழவர் ஆனிரை (பசு-மந்தை) கவர்ந்து வருவர். வாள், வில் கொண்டு போரிட்டு எதிர்ப்போரை வென்று கவர்ந்துகொண்டு வருவர். பசுக்களை வேப்ப மரத்தடிக் கடவுள் முன் நிறுத்தி வழிபடுவர். வெற்றியைப் பாறைமீது அமர்ந்து விருந்துண்டு கொண்டாடுவர். விருந்தில் தெய்வத்துக்கு இரத்தக் காவுக் கொடுக்கப்பட்ட காளை மாட்டின் இறைச்சி இருக்கும்.
அங்கே, வலிமையான அடிமரம் கொண்ட இலவ-மரத்தில் யானை தன் உடம்பை உரசிக்கொள்ளும். அப்போது உடைந்திருக்கும் இலவம்பூ நெற்றுகள் மழையோடு விழும் பனிக்கட்டி போல் விழும்.
இப்படிப்பட்ட நீண்ட காடாயிற்றே என்று எண்ணாமல் அந்த வழியில் அவர் செல்கிறார்.
2
அரசன் வானவன் பெருங் குதிரைப்படையை நடத்தி நன்கு போரிட்டு வெற்றி கண்டவன். அவன் சிறந்த வள்ளலாகவும் விளங்கினான். யாழிசையில் வல்ல கோடியர் அவனை நாடிச் செல்வது போல, நாமும் அவர் செல்லும் வழியில் உடன் சென்றால் என்ன? தோழி! எண்ணிப் பார்த்துச் சொல்.
3
கவண் எறிந்த கல் பட்டுக் காட்டு மூங்கில் உடைந்து தீ பற்றி வெடிக்கும். இரவில் தினைப் புனத்தில் மேயும் யானை அந்த வெடிப்பு ஒலியைக் கேட்டு அஞ்சி விலகும். இப்படிப்பட்ட வழியில் அவர் செல்கிறார்.

திணை -- பாலை

1
வய வாள் எறிந்து, வில்லின் நீக்கி,
பயம் நிரை தழீஇய கடுங்கண் மழவர்,
அம்பு சேண் படுத்து வன்புலத்து உய்த்தென,
தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில்
கொழுப்பு ஆ எறிந்து, குருதி தூஉய்,      5
புலவுப் புழுக்கு உண்ட வான் கண் அகல் அறை,
களிறு புறம் உரிஞ்சிய கருங் கால் இலவத்து
அரலை வெண் காழ் ஆலியின் தாஅம்
காடு மிக நெடிய என்னார், கோடியர்
2
பெரும் படைக் குதிரை, நல் போர், வானவன்     10
திருந்து கழற் சேவடி நசைஇப் படர்ந்தாங்கு,
நாம் செலின், எவனோ தோழி! காம்பின்
3
வனை கழை உடைந்த கவண் விசைக் கடி இடிக்
கனை சுடர் அமையத்து வழங்கல் செல்லாது,
இரவுப் புனம் மேய்ந்த உரவுச் சின வேழம்  15
தண் பெரு படாஅர் வெரூஉம்
குன்று விலங்கு இயவின், அவர் சென்ற, நாட்டே?

்.......்......். 

அடுத்து...

சிறுபாணாற்றுப்படை

வேலூர் வளமும் எயினர் விருந்தும்

பைந்நனை யவரை பவழங் கோப்பவுங்
கருநனைக் காயாக் கணமயி லவிழவுங் 165
கொழுங்கொடி முசுண்டை கொட்டங் கொள்ளவுஞ்
செழுங்குலைக் காந்தள் கைவிரல் பூப்பவுங்
கொல்லை நெடுவழிக் கோப மூரவு 
முல்லை சான்ற முல்லையம் புறவின்
விடர்கா லருவி வியன்மலை மூழ்கிச் 170
சுடர்கான் மாறிய செவ்வி நோக்கித்
திறல்வே னுதியிற் பூத்த கேணி 
விறல்வேல் வென்றி வேலூ ரெய்தி

எயிற்பட்டினத்துக்குப் பின்னர் முல்லை நிலத்தைக் கடந்து வேலூர் செல்லவேண்டி வரும். இந்த வேலூர் நல்லியக்கோடனால் வேல் வீசி வெல்லப்பட்டது. இந்த வேல் வெற்றிவேல். மற்றொரு வேல் திறல்வேலாகிய கல்லுளி. கல்லுளியைக் கொண்டு கேணி வெட்டி வேலூர் மக்கள் தண்ணீர் பூக்கும்படி செய்தனர். கேணி தோண்டிய திறல்வேல், நல்லியக்கோடன் வெற்றி கொண்ட விறல்வேல் ஆகிய இரண்டு காரணங்களால் கடலூர் மாவட்டத்து வேலூர் (இக்காலத்தில் சிற்றூர்) வேலூர் என்னும் பெயரைப் பெற்றிருந்தது. வேலூர்ப் பகுதியை முல்லைநிலம் என்றும் பாடல் காட்டுகிறது. 

வேலூரைச் சார்ந்த முல்லைநிலம் எப்படி யிருந்தது? அவரையில் பவளப்பூக்கள் பூத்தன. இளங்கொழுந்துள்ள அவரைக் கொடியில் செம்பவழம் பூத்துக் கிடப்பது போல் செந்நிற அவரைப்பூ பூத்துக்கிடக்கும். கருநீலக் காயாம்பூச்செடி ஆங்காங்கே மயில்கள் ஆடுவதுபோல் புதர்புதராகப் பூத்துக் கிடக்கும். முசுண்டைக் கீரை கொழுத்துச் சுருண்டு கிடக்கும். காந்தள் பூவின் குலை கைவிரல் போலப் பூத்துக் கிடக்கும். பயன்படுத்தப் படாத கொல்லைப்புறத்து வழிகளில் கோபம் என்று சொல்லப்படும் தம்பலப் பூச்சிகள் ஊர்ந்து சென்று கொண்டிருக்கும். அதுதான் முல்லைப் பூத்துக் கிடக்கும் முல்லைப் புறவு. அகன்ற மலைப்பிளவுகளில் காலூன்றி நடந்த அருவியின் நீர் முல்லை நிலத்துக்கு வந்து சேராமல் மலையிலேயே மூழ்கிப் போகும். . தெற்குப் பக்கம் இறங்கிச் சென்று கொண்டிருந்த சூரியன் தன் வழித்தடத்தை வடக்குப் பக்கமாகத் திருப்பி வந்துகொண்டிருந்த காலம் அது. ( உத்தராயணம் ) திறல் வேலால் கேணி தோண்டியும் ,விறல் வேலால் வெற்றி கண்டும் நல்லியக்கோடன் பெற்ற ஊர் வேலூர். அந்த வேலூரை அடைந்தால்… 

னுறுவெயிற் குலைஇய வுருப்பவிர் குரம்பை
யெயிற்றிய ரட்ட இன்புளி வெஞ்சோறு 175
தேமா மேனிச் சில்வளை யாயமொ
டாமான் சூட்டி னமைவரப் பெறுகுவிர்  

வேலூர்ப் பகுதியானது முல்லைவளம் திரிந்து பாலை நிலமாக மாறியிருக்கும். அந்த நிலப்பகுதி மக்கள் எயிற்றியரும் அங்கு வாழ்வதைக் காணலாம். கூரை வேயப்பட்டிருக்கும் அவர்களது குரம்பை வீடுகளில் உறுத்தும் வெயில் வாலைக் குலைத்துக் கொண்டு முற்றத்திலேயே முடங்கிக் கிடக்கும். வெயிலின் சினம் செல்லுபடி ஆகாத குரம்பை அது. அங்கே எயிற்றியர் நல்கும் இனிய புளிச்சோறு பெறலாம். காட்டில் மேயும் ஆமான் ஆட்டுக் கறி சுட்ட வறுவல் உணவும் பெறலாம். போதும்போதும் என்னும் அளவுக்கு விருப்பம் தீரப் பெறலாம்.

ஆமூர் வளமும் உழவர் விருந்தும்

நறும்பூங் கோதை தொடுத்த நாட்சினைக்
குறுங்காற் காஞ்சிக் கொம்ப ரேறி
நிலையருங் குட்ட நோக்கி நெடிதிருந்து 180
புலவுக்கய லெடுத்த பொன்வாய் மணிச்சிரல் 
வள்ளுகிர் கிழித்த வடுவாழ் பாசடை 
முள்ளரைத் தாமரை முகிழ்விரி நாட்போது
கொங்குகவர் நீலச் செங்கட் சேவல் 
மதிசே ரரவின் மானத் தோன்று 185
மருதஞ் சான்ற மருதத் தண்பணை 
யந்தண ரருகா வருங்கடி வியனக 
ரந்தண் கிடங்கினவ னாமூ ரெய்தின்

நல்லியக்கோடனின் ஆமூர் மருத நிலவளம் மிக்க ஊர். அங்கு உயரமில்லாமல் வளர்ந்திருந்த காஞ்சி மரத்தில் ஆழமான நீர்நிலையின் பக்கமாகச் சாய்ந்திருந்த கிளையில் அமர்ந்திருந்த சிரல் என்று சொல்லப்படும் மீன்கொத்திக் குருவி அம் மரத்தடிப் பொய்கையிலிருந்த மீனைக் கொத்தப் பாய்ந்தது. அதன் கால் நகம் தாமரை இலையைக் கிழித்தது. மீனைக் கொத்திக் கொண்டு அங்கே அன்று மலர்ந்த தாமரைப் பூவின்மேல் அமர்ந்தது. அதன் குருவி-நீல நிறம். நிலாவைப் போல் மலர்ந்திருந்த தாமரையை அது மறைத்தது. இச்செயல் கிரகண நாளில் நிலாவைப் பாம்பு மறைத்துவிட்டு விலகுவது போல இருந்தது. இத்தகைய நீர்வளம் மிக்க ஊர்தான் ஆமூர். அவ்வூருக்கு அகழியும் உண்டு. அங்கு அந்தணர்கள் வருவதில்லை. உழவர்கள் மட்டுமே வாழ்ந்து வந்தனர். அங்குச் சென்றால்…. 

வலம்பட நடக்கும் வலிபுண ரெருத்தி
னுரன்கெழு நோன்பகட் டுழவர் தங்கை 190
பிடிக்கை யன்ன பின்னுவீழ் சிறுபுறத்துத்
தொடிக்கை மகடூஉ மகமுறை தடுப்ப 
விருங்கா ழுலக்கை யிரும்புமுகந் தேய்த்த
அவைப்புமா ணரிசி யமலைவெண் சோறு
கவைத்தா ளலவன் கலவையொடு பெறுகுவி 195

அவர்களின் எருதுகள் பாரம் தாங்கி இழுக்கும் வல்லமை பெற்றவை. இத்தகைய எருதுகளைப் பூட்டி ஆமூர் உழவர்கள் நிலத்தை உழுவார்கள். அவர்களின் தங்கைமார் தம் தலைமுடியைப் பின்னிப் பின்புறம் தொங்கவிட்டிருப்பர். அச்சடை யானையின் துதிக்கை போலத் தொங்கும். அவர்கள் உங்களை நீங்கள் பெற்ற மக்கள் போல எண்ணித் தடுத்து நிறுத்தி உணவளிப்பர். உலக்கைப் பூண் தேய நன்றாகக் குத்திச் சமைத்த வெண்பொங்கல் சோற்றுக்கு நண்டுக் குழம்பு ஊற்றிப் போடுவதைப் பெறுவீர்கள்.


மாட்டிறைச்சிக்கு ஆதரவாக கம்புசுத்துறவனுக எல்லோரும்... சங்க இலக்கியம்னு எடுத்துவைக்கும்... பாட்டுகள் பாலைத் திணைக்குரியவை..

பாலைத்திணை எப்படி இருக்கும்னு தமிழ் படிச்ச தமிழர்களுக்கு... 
என்னைவிட மிக நன்றாகவே தெரியும்...

நல்லா கவனிச்சு பாருங்களேன்... 
மாட்டிறைச்சி சாப்பிட இவனுக ஆதாரம்னு தூக்கிட்டு வர்றதும்... அவனுக தொழிலுக்கு ஒத்துப்போகும் அதே பாலைத்திணை பாடலைதான்...

பொம்பளை பொறுக்கி , செம்மரம் வெட்டுறவன்... போலீஸை அடிக்கிறவன், தங்கம் , கஞ்சா கடத்துறவன்... கொள்ளையடிக்கிறவனுகளையெல்லாம்... இவனுக தமிழன்னு சொல்வதற்கு இதுதான் காரணம் போல... 😜😜

பாலைத்திணை பற்றிய மேலதிக தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும்




பசும்பொன் தேவரை கொலை செய்ய முயற்சித்த இஸ்லாமியர்கள்



பசும்பொன் தேவரை கொலை செய்ய முயற்சித்த இஸ்லாமியர்கள்...

பசும்பொன் கிராமத்துக்கு அருகே இருக்கும் ஊர் அபிராமம். அங்கே இஸ்லாமியர்கள் அதிகமாக வசித்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் பர்மா, மலேசியா போன்ற நாடுகளுக்குப் போய் தொழிலோ, வியாபாரமோ செய்து திரும்பி வந்தவர்கள் பெரும் பணக்காரர்களாக வாழ்பவர்கள்.

அந்த கிராமத்தில் ஒரு சந்தை இருந்தது. வாரம்தோறும் புதன்கிழமை சந்தை கூடும். அது முஸ்லீம்கள் அதிகம் வசிக்கிற பகுதி. சந்தைக்கு வியாபாரம் செய்ய வருகிற இளம் பெண்களை சில முஸ்லீம் இளைஞர்கள் கேலி செய்து வம்புக்கிழுப்பது நடந்து வந்தது.

ஒரு நாள் மோர் விற்ற ஒரு பெண்ணிடமும், காய்கறி விற்கப் போன பெண்ணிடமும் அவர்கள் மோசமாக நடந்து கொண்டார்கள். அந்த இளைஞர்களைத் தட்டிக் கேட்கும் அளவுக்கு அங்கே யாருக்கும் தைரியமும் இல்லை.

எனவே பாதிக்கப்பட்ட பெண்கள் பசும்பொன்னுக்கு வந்தார்கள். தேவரிடம் முறையிட்டார்கள். "நான் பார்த்துக்கொகிறேன். போய் வாருங்கள்" என்று அந்தப் பெண்களை அனுப்பி வைத்தார் தேவர்.

எம்மதத்தினராயினும் சரி தாய்க்குலமாகிய பெண் இனத்திற்கு இழைக்கப்படும் அநீதியைத் தாங்கமுடியாத உள்ளம் கொண்ட தேவர். அந்த பெண்கள் சொல்வதைக் கேட்டு மனம் வேதனை அடைந்தார்.

பிறகு அடிக்கடி அபிராமம் போய் வருகிற சிலரை அழைத்து விசாரித்தார். அந்தப் பெண்கள் சொன்னது உண்மைதான் என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டார். முதல் வேலையாக அபிராமம் கிராமத்தில் இருக்கும் பள்ளிவாசல் பெரியவர்களுக்கு ஆள் மூலம் தகவல் சொல்லி அனுப்பினார்.

உங்கள் ஊர் இளைஞர்கள் சிலர் சந்தைக்கு வரும் இளம் பெண்களிடம் தகாத முறையில் நடப்பதாகக் கேள்விப்பட்டேன். அவர்களைக் கண்டித்து வையுங்கள். இனிமேல் இது போல் நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று.

ஆனால் தேவர் சொன்ன எதுவும் அபிராமத்தில் நடக்கவில்லை. அந்த இளைஞர்களுடைய அட்டகாசம் இன்னும் அதிகமானது. அவர்களைக் கட்டுப்படுத்த என்ன செய்வது என்று யோசித்து ஒரு முடிவெடுத்தார் தேவர்.

அபிராமத்தில் இருந்த இந்து சமயத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்று கூடினார்கள். #இந்து_மகா_சபை" ஒன்றை அமைத்தார்கள். அதற்கு தலைவர் முத்துராமலிங்க தேவர். முஸ்லீம் இளைஞர்களுடைய போக்கைக் கண்டிக்க சில அதிரடி நடவடிக்கைகளில் இறங்கினார் தேவர். சமூக ஒத்துழையாமை முஸ்லீம் மக்களின் நிலங்களில் இந்துக்கள் யாரும் வேலை செய்யக்கூடாது. இஸ்லாமியர்களின் கடைகளில் பொருள்கள் வாங்கக்கூடாது.

தேவர் பேச்சுக்கு மறு பேச்சு ஏது? அவர் சொன்னது அப்படியே நடந்தது. அதனால் பொருளாதாரரீதியாக மிகப் பெரும் சிக்கல்களை முஸ்லீம்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நிலைமை இன்றைக்குச் சரியாகிவிடும் நாளைக்குச் சரியாகிவிடும் என்று காத்திருந்த முஸ்லீம்கள் ஏமாந்து போனார்கள்.

அபிராமத்தில் இருந்த இந்துக்கள் தேவரின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அவர் சொன்னபடியே நடந்து கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் பொறுக்க மாட்டாதவர்களாக "தேவர் மத துவேஷத்தை வளர்க்கிறார்" என்று அபிராமம் ஊரைச் சேர்ந்த முஸ்லீம்கள் ஆங்கிலேய அரசுக்குத் தந்தி மேல் தந்தி கொடுத்தனர்.

ஏற்கெனவே தேவர் மீது ஒரு கண் வைத்திருந்த ஆங்கிலேய அரசு இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தது. தேவர் மீது வழக்கு தொடர்ந்தது. செக்ஷன் 107. தேவர் சமூகக் கலவரத்தைத் தூண்டினார் என்பது வழக்கு.

அந்த வழக்கு ஒர் ஆண்டுக்கும் மேலாக நடந்தது. முதுகுளத்தூர் சப் கலெக்டர் முன்னால் நடந்த விசாரணையின் போது ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டார்கள். தேவருக்காக வாதாட அன்றைக்குப் பிரபலமாக இருந்த மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.ஆர். வெங்கட்ராமய்யர் ஆஜரானார்.

சப் கலெக்டர் தேவரிடம் ஜாமீன் கேட்டுத் தீர்ப்பளித்தார். பிறகு வழக்கு அப்பீல் செய்யப்பட்டு ராமநாதபுரம் மாவட்ட நீதி மன்றத்துக்குப் போனது. அப்பீலை விசாரித்தார் நீதிபதி. தீர்ப்பு சொன்னார். "அநீதியை எதிர்ப்பதற்காக சமூக ஒத்துழையாமையை அறவழியில் நடத்துவதில் எந்தத் தவறும் இல்லை"

அதோடு தேவர் மீதிருந்த ஜாமீன் வழக்கையும் ரத்து செய்தார். அதற்குப் பிறகும் அபிராமத்தில் சமூக ஒத்துழையாமை தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. அதே சமயத்தில் தேவரைக் கொலை செய்ய ஒரு முயற்சியும் நடந்தது.

பசும்பொன் தேவர் அந்தக் காலத்திய செவர்லெட் கார் ஒன்றை வைத்திருந்தார். இப்போது போல அதன் மேற்புறம் இரும்பு ஷீட் போட்டதல்ல. மேல்பாகம் கேன்வாஸ் துணியால் ஆனது.

ஒரு நாள் முத்துராமலிங்க தேவரும் காங்கிரஸ் தலைவரும் பேச்சாளருமான மட்டப்பாறை வெங்கட்ராமய்யரும் அந்த காரில் வந்து கொண்டிருந்தார்கள். இருவரும் பின் சீட்டில் அமர்ந்திருந்தார்கள். ரோட்டில் கார் போய்க் கொண்டிருந்தது. எதிரே தூரத்தில் சில மாட்டு வண்டிகள் திடீரென்று நடு ரோட்டுக்கு தேவர் வரும் காரை மறிப்பது போல் குறுக்காக வந்து நின்றன.

கிட்டத்தட்ட பத்து மாட்டு வண்டிகள். வண்டிக்குள் ஐம்பதுக்கும் மேற்ப்பட்டவர்கள் ஆயுதங்களுடன் காத்திருந்தார்கள். கார் நின்றதும் சூழ்ந்துகொண்டு தேவரைத் தாக்குவது எதிரிகளின் திட்டம்.

காரை ஒட்டிய டிரைவர் பெயர் ராஜு திறமைசாலி. நிலைமையின் தீவிரத்தைச் சட்டென்று புரிந்து கொண்டார். அடுத்த கணம் ரோட்டிலிருந்து இறங்கியது கார். காட்டுப் பகுதிக்குள் புகுந்து வேகமெடுத்தது. மாட்டு வண்டிகள் நிற்கும் இடத்தையும் தாண்டி கிட்டத்தட்ட ஒரு பர்லாங் தூரம் கடந்தபின் ரோட்டில் ஏறியது. ஆனாலும் பின்னால் சிலர் விரட்டி வந்தார்கள்.

ஒருவன் தன் கையில் இருக்கும் வேல் கம்பால் குத்தினான். அது காரின் மேல்புறத் துணியைக் கிழித்துக் கொண்டு உள்ளே வந்தது. தேவரும் வெங்கட்ராமய்யரும் பின் சீட்டில் அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு நடுவே வந்து சீட்டில் குத்தியது வேல் கம்பு. அதே வேகத்தில் உருவிக் கொண்டு பின்னால் போய்விட்டது.

வெங்கட்ராமய்யர் மிரட்சியோடு கேட்டார். "தேவர்வாள்" நம்மரெண்டு பேருக்கும் நடுவுல ஒரு முழு நீளத்துக்கு இப்போ வந்துட்டுப் போச்சே வேல் கம்புதானே? ஆமாம். அது உங்களுக்கு வரலை. என்னை கொல்ல வந்தது.

இந்தச் சம்பவம் நடந்த பிறகு இரவு இரண்டு மணிக்கு அருப்புக்கோட்டைக்கு வந்து சோந்தார் தேவர். அவர் எப்போதும் தங்குகிற அகம்படியார் மகாலில் தங்கினார். அவர் முகத்தில் அவரைக் கொல்ல நடந்த சதி குறித்து சிறு பதற்றம் கூட இல்லை. எப்போதும் போல சகஜமாக வேண்டியவர்களிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டு படுக்கப் போய்விட்டார்.

தேவர் எந்த காலத்திலும் வேற்று மதத்தவர்களுடன் வேறுபாடு காட்டியது கிடையாது. அபிராமம் ஊரில் தகாத வேலைகளில் இறங்கிய முஸ்லீம் இளைஞர்களைக் கண்டிக்கத்தான் சமூக ஒத்துழையாமை என்கிற அஹிம்சை ஆயுதத்தை எடுத்தாரே தவிர வேறு எந்த இடத்திலும் அதை அவர் பயன்படுத்தவில்லை.

முஸ்லீம் இன மக்கள் பெருமளவில் வாழும் கமுதி, முதுகுளத்தூர், பேரையூர், பெருநாழி போன்ற இடங்களில் எல்லாம் அவர் சமூக ஒத்துழையாமை இயக்கத்தை நடத்தவில்லை. அபிராமம் முஸிலீம் இன மக்கள் தேவர் போராட்டம் நடத்திய போது தங்களுக்கு ஒத்துழையாமைபடி அந்த ஊர்களில் இருந்த முஸ்லீம் பெரியவர்களிடம் கேட்டார்கள்.

இது உங்கள் ஊர் பிரச்சனை. தவறு உங்கள் ஊர் இளைஞர்களிடம் இருக்கிறது. ஆரம்பத்திலேயே நீங்கள் அதைத் தட்டிக் கேட்டிருந்தால் பிரச்சனை இந்த அளவுக்கு முற்றியிருக்காது. அதையும் இஸ்லாத்தையும் சம்பந்தப்படுத்தாதீர்கள். எங்களால் உங்களுக்கு ஒத்துழைப்புக் கொடுக்க முடியாது என்று சொல்லி மறுத்துவிட்டார்கள் அந்த ஊர்களில் இருந்த முஸ்லீம் பெரியவர்கள்.

ஒரு கட்டத்தில் அபிராமம் சந்தை வேறு ஒர் இடத்துக்கு மாற்றப்பட்டது.
முஸ்லீம் சமூகமும் நியாயமுணர்ந்து நடந்து கொண்டது. தமது மதத்தைச் சேர்ந்த பெண்களுக்கு ஏற்பட்ட இழிவைப் போக்கினார். தேவர் #மதத்தொண்டிலும் வெற்றிவாகை சூடினார்.

அதன் பிறகு தேவர் மறைந்த பின்னர், இந்த நிகழ்வை மறைக்க, தேவர் இஸ்லாமியத் தாயிடம் பால் குடித்ததாக கட்டுகதைகள் இஸ்லாமியர்களால் பரபப்பட்டதது

தேவரின் கூடவே இருந்த பெருமாள் அவர்கள் எழுதிய குறிப்பில் தேவர் சிறு வயதில் தாயை இழந்தபிறகு தனது பெரிய தாயார் மீனலோசினியிடம் தான் பால் குடித்து வளர்ந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.

புத்தகம்: பாலூ சத்யாவின் தேவர் ஒரு வாழ்க்கை
பக்கம் 77, 78, 79, 80

புத்தகம்: பேராசிரியர் ஞானவிஜயனின் பசும்பொன் தேவர்
பக்கம் 61, 62, 63

புத்தகத்தின் பக்கங்கள் புகைப்படங்களாக பதிவிட்டுள்ளேன்.



                                 






ஸ்ரீமத் பாகவதம் (தமிழ்)

  Srimad-Bhagavatam  1 Srimad-Bhagavatam   2 Srimad-Bhagavatam   3 Srimad-Bhagavatam    4 Srimad-Bhagavatam   5 Srimad-Bhagavatam   6 Srimad...