Wednesday 14 November 2018

பார்ப்பனீயம் [Brahmanism] வார்த்தை தோற்றுவித்ததற்கான நோக்கம் என்ன??




பார்ப்பனீயம் [Brahmanism] - பெரியாரியர்களிலிருந்து கம்யூனிஸ்டுகள் அம்பேத்கரியர்கள்வரை பயன்படுத்தும் வார்த்தை
இந்த வார்த்தையினை முதன்முதலில் தோற்றுவித்தவர் யார்? அந்த வார்த்தைக்கான பொருள் என்ன ? அப்படி ஒரு வார்த்தை தோற்றுவித்ததற்கான நோக்கம் என்ன ?
இதற்கு நாம் செல்ல வேண்டியது இன்றிலிருந்து கிட்டத்தட்ட 131 ஆண்டுகள் முன்பு . ஆங்கிலேயர் தங்களின் ஆதிக்கத்தை வேரூன்றிய காலம். அப்பொழுது Oxford பல்கலைக்கழகத்தில் May 5 1886 மோனியர வில்லியம்ஸ் "Monier Williams" எனபவர் ஒரு விரிவுரை செய்கிறார். அந்த விரிவுரை "Holy Bible and Sacred Books of the East " என்றநூலில் அவரே பதிவும் செய்கிறார் [தரவுகள் புகைப்படங்களாக இணைக்கப்பட்டுள்ளன]. அந்த விரிவுரையின் சுருக்கம் -
"கடந்த 25 ஆண்டுகளாக பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் இந்திய பூர்வகுடி மக்களை கிறிஸ்துவத்துக்கு மதம்மாற்றம் செய்வதற்கான "Boden Chair of SanskritChair of Sanskrit" யின் முனைவராக இருப்பதில் நான் பெரும்மகிழ்ச்சி கொள்கிறேன். Colonel Boden தான் சம்பாதித்த சொத்துக்கள் அனைத்துமே சமஸ்க்ரிதம் படிக்க தானம் செய்திருக்கிறார். அவருடைய நோக்கம் நாம் சமஸ்க்ரிதம் படித்தால் , நமது கிறிஸ்துவமதத்தை சமஸ்க்ரிதத்தில் மொழிபெயர்த்து மக்களிடம் எடுத்துசென்றவிடமுடியும் . அவர் நினைத்ததை நானும் என் முழு ஈடுபாடுடன் செய்துகொண்டிருக்கிறேன்".
நாம் ஏன் யாரோ "Monier Williams" சொன்னதையெல்லாம் மதிக்கவேண்டும்? ஏனென்றால் இன்றளவும் அவர் எழுதிய "English-Sanskrit Dictionary " தான் மேற்கத்தியர்கள் நம் வேதங்களையும் இதிஹாச புராணங்களையும் மொழிபெயர்க்க உபயோகம் செய்யும் அகராதி .
முதன்முதலில் பார்ப்பனீயம் [Brahmanism] என்கிற வார்த்தையையும் இவர்தான் பயன்படுத்திகிறார் . "Modern India and Indians" என்கிற நூலில் அதை பதிவு செய்கிறார். ஆதி சங்கரர் நமக்கு கொடுத்த பொக்கிஷமான "அத்வைத" தத்துவத்தையே அவர் பார்ப்பனீயம் என்று குறிப்பிடுகிறார். கிறிஸ்துவத்தின் materialistic சித்தாந்தத்தில் சிக்கிக்கொண்டு, அத்வைத தத்துவத்தின் ஆழ் புரியாது அதன்பால் வன்மமும் கொட்டித்தீர்க்கிறார். ஹிந்து மதத்தை, "சாதிகள் நுழைந்த Polytheistic சீரழிந்த பார்ப்பனீயம் என்று சொல்கிறார்".
கவனிக்கவும், பார்ப்பனீயத்தில் சாதி இல்லை!!
பின்பு ஏன் இவர்கள் (மேற்கத்திய Indologists, பெரியார்வாதிகள், கம்யூனிஸ்டுகள், அம்பேத்கரியர்கள்) "பார்பனீயம்தான் சாதி கொடுமைக்கும் தீண்டாமைக்கு காரணம்" என்று பிரச்சாரம் செய்கிறார்கள்?
அதற்கான பதிலும் அவரே அந்த புத்தகத்தில் குறிப்பிடுகிறார் - "பார்ப்பனீயம் என்கிற பெரும் கோட்டையை தகர்க்கும் நாளில்தான் கிறிஸ்துவத்தின் பூரண வெற்றி".
இவர்களின் மதமாற்ற தொழிலுக்கு தத்துவரீதியாக எதிர்த்துநிற்கும் ஒன்று பார்பனீயம்தான் . அதுனாலதான் அதை எப்படியாவது அழிக்கவேண்டுமென்ற போராட்டம்தான் இவர்களுக்கு .
இங்கு எல்லா கிறிஸ்துவர்களையும் குறைகூறமாட்டேன். கிறிஸ்துவ மதத்தை பின்பற்றும், தான் உண்டு தன வேலை உண்டு என்று இருப்பவர்கள் ஏராளம் . அவர்களால் ஒன்றும் தொல்லையில்லை. ஆனால் மதம் மாறியதை வெளியில் சொல்லாமல் , அரசு அச்சிலும் பதியாமல் "ஹிந்து மதம்தான் சாதிக்கொடுமைக்கு காரணம்" என்று கம்யூனிஸ்ட் , பெரியார்வாதி , அம்பேத்கரியர் என்ற போர்வையில் நிறைய பெயர்கள் கம்புசுற்றுகிறார்கள் . அவர்களின் நோக்கமும் Monier WIlliams நோக்கமும் ஒன்றே.
இன்னொரு சுவாரசியமான விஷயம் - இதே கோஷ்டிதான் பார்ப்பனீயம் பௌதத்திலிருந்து Copy அடித்தது என்றும் அளந்துவிடுவார்கள். இன்று வரைக்கும் மேற்கத்திய இன்டோலோஜிஸ்ட்களும் இதை வைத்துக்கொண்டு நிறைய புத்தகத்தை எழுதுகிறார்கள் . இதற்கான விடையும் Monier Williams கொடுத்துவிடுகிறார் - "பௌத்தம் என்கிற ஒரு மதம் என்றுமே இருந்ததில்லை . அது வெறும் ஒரு proselytising சிஸ்டம். பார்ப்பனீயத்தை எடுத்துவிட்டால் அவர்களால் பௌத்தர்களாக இருக்க முடியாது , அவர்கள் கிறிஸ்துவர்களாகவோ, இஸ்லாமியர்களாகவோ தான் மாற முடியும்".
Monier Williams எழுதின புத்தகங்களை படித்தால் இன்னும் நிறைய கிடைக்கிறது . ஒரு சின்ன sample அடுத்து.
Caste என்கிற வார்த்தை பற்றி குறிப்பிடுகையில் - "போர்த்துகியர்கள் இந்த நாட்டில் முதன்முதலில் இறங்கியபொழுது அவர்கள் இவ்வளவு வர்க்கங்கள் இருப்பதை பார்த்து அதை Casta என்று அழைத்தார்கள் . Casta போர்த்துகியதில் என்பது இனரீதியான அடையாளம். அதையே நாம் நமது ஆட்சியில் Caste என்று மாற்றி அதை ஹிந்து மதத்துடன் இணைத்துவிட்டோம். இந்த வார்த்தை இந்தநாட்டு ஹிந்துமக்களுக்கே தெரியாத வார்த்தை ஆனால் இன்றளவும் ஹிந்து மதத்தை பற்றி எழுதும் அனைவரும் அதை மறக்காமல் சேர்த்துவிடுவார்கள் [The Portuguese, who were the first to trade with India, used the word 'casta', 'race,' to denote the infinite number of classes into which Indian society is divided. This word was changed by us into 'caste' - a word unrecognized by the natives, but now universally adopted by all writers on Hinduism. - Brahmanism and Hinduism, 1891] ".




Friday 13 July 2018

சூத்திரன் யார்? -1

பிராமண சாதி அல்லாதவன் சூத்திரன்ங்கிறது ஈவேரா, ஈவேராயிஸ்ட்டுகளின் வாதம்.... அப்படின்னா... ஈவேரா சூத்திரன்...

சூத்திரன் வேதம் படிக்க முடியாதுங்கிறது ஈவேரா கூட்டத்தின் வாதம்...

அப்படின்னா.... ஈவேரா வேதம் படிச்சதாக சொன்னது பித்தலாட்டம்...

அம்புட்டுகூட வேணாம்.... ஆலய நுழைவு போராட்டம் ஈவேராவோட மிகப்பெரிய தீரச்செயலாம்... எந்த கோவில்-டான்னு கேட்டால்... கேராளாவுல உள்ள கோவிலாம்... அப்படின்னா... தமிழ்நாட்டுல கோவிலே இல்லைன்னு எடுத்துக்கனுமா??
அல்லது... தமிழ்நாட்டு கோவில்களில் அதற்கான அவசியமில்லைன்னு எடுத்துக்கனுமா?..
அதெல்லாம் போகட்டும்... ஈவேரா ஆலயநுழைவு போராட்டம் நடத்தினதுக்கு ஆதாரம் கொடுங்கடான்னு கேட்டால்... திட்டுறானுக...

விடுதலை பேஸ்புக் பக்கத்துல ஒரு பஞ்சாயத்து...

பெண்களுக்கு... கல்வி , சுதந்திரம் கிடைக்க முக்கியமான காரணம் ஈவேரா-வாம்...

அப்படின்னா... சங்ககால பெண் புலவர்லாம்... ஈவேராகிட்ட பாடம் படிச்சிட்டுதான் சங்ககாலம் போய் பாட்டு எழுதினாகளான்னு கேட்டேன்...
 ப்ளாக் பண்ணிட்டாங்கே...

அதன் தொடர்ச்சியாக சிற்பி ராஜன்னு ஒரு ஈவேராயிஸ்ட்கிட்ட விவாதிக்க நேர்ந்தது...

அப்போது... அப்படி சங்ககால புலவர்களை மறைச்சுதான்... நீங்க , வேதம், மந்திரம்லாம் கொண்டு வந்தீங்கன்னு சொன்னார்...

சரி... பெண் கல்விக்காக போராடின ஈவேரா.. எத்தனை மேடைல சங்ககால பெண் புலவர்கள் பற்றி பேசினாருன்னு கேட்டேன்... பதில் சொல்லாம ஆள் வச்சு திட்டுறான்... என் கமென்ட்டையெல்லாம் அழிச்சிட்டான்...

வேலுநாச்சியார் பெண்தான்... வேலுநாச்சியார்கிட்ட மெய்காவலாளியாக இருந்த குயிலி பெண்தான்....

சாதி வெறி இருந்திச்சு... தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலுக்குள்ள போக முடியலைன்னு... ஒரு ஈவேராயிஸ ஆதரவு முஸ்லிம்... ( இந்துமத எதிர்ப்புல எல்லாம் ஒன்னு கூடிக்குவானுக..) சொன்னார்...

அப்படின்னா... பக்தி பாடல் பாடினவர்கள்னு 63 நாயன்மார் இருக்கிறார்கள்... அவர்களுக்குன்னு வழிபாடும் கோவில்களில் இருக்குது...
அதில்... மூன்றில் ஒருபங்குதான் பிராமணர்... மற்றவர்கள் எல்லாம் வேறு வேறு சாதி... அதில் சிலர்... என்ன சாதி என்றே தெரியாத ஆட்களாச்சேன்னு சொன்னேன்...

மறுமொழியையே காணாம்...

பறையர், சக்கிலியர்னு பலரும் ஒடுக்கபட்ட சாதி... மேல்சாதியினர் ஒடுக்கி வச்சிருந்தாங்க....
அதனால அவர்கள் மதம்மாறிட்டாங்கன்னு... ஒரு முஸ்லிமோட வாதம்...

பாளைய ஆட்சி காலம் வரை... படைத்தளபதிகளாவும்... பறையர், சக்கிலியர் இருந்திருக்காங்க...
ஒண்டிப்பகடை(ஒண்டிவீரன்)... சுந்தரலிங்கம்... வெண்ணிக்காலடின்னு  சிலர்... போட்டிக்கு ஆள் இல்லாத அளவுக்கு... படையில் செல்வாக்கு மிக்கவர்கள்...
ஒண்டிப்பகடை... மன்னர் மரணித்தபிறகு... மன்னராகவும் இருந்திருக்கிறார்... வேலுநாச்சியாரிடம்... மெய்காப்பாளராக இருந்த குயிலி... ஒண்டிப்பகடை, வெண்ணிக்காலாடி, சுந்தரலிங்கம்ன்னு சிலர் பற்றி உள்ள நாட்டுப்புற பாடல்களே... அவர்கள் எப்படி இருந்தார்கள்னு சொல்லும்....

இவர்களுக்கு தனித்தனியே கோவில்களும் உண்டு... அந்த பெயர்களும் நீங்க மேல்சாதின்னு சொல்ற ஆட்களிடம் வழமையாக உள்ள பெயர்தான்...
அவர்களில் பெரும்பாலான மக்கள் காவல் தெய்வமாக வழிபடுவது ஒண்டிவீரன், காலாடி, குயிலின்னுதானேன்னு கேட்டேன்... பதிலே வரலை....

ஆங்கிலேய, முகமதியர்களின்... மதமாற்ற வெறிக்கு... தமிழகத்தில் ஒத்துழைப்பு கொடுத்தது... ஈவேரா கூட்டம்தானே....

நாடார்கள் மதமாற்றத்துக்கு தீண்டாமை காரணம்...
அதை எதிர்த்து ஈவேரா தோள்சீலை போராட்டம்னு ஒன்னு நடத்தினதாக சொல்றானுக... அதுபற்றி.... படம் சிலவும் பதியுறானுக...

ஆனால்... அந்த படங்கள்... இலங்கையோட பழங்குடியான ரோடியாக்களின் படங்கள்...

இப்போதும் இணையத்துல தேடலாம்... RODIYA WOMEN அப்படின்னு...

அது பற்றிய எனது பதிவு...
ஈவேரா-வின் தோள்சீலை போராட்டமும் , அந்நிய ஆபிரகாமிய நச்சு சக்திகளின் மதமாற்ற செயல்திட்டமும்

ஈவேரா இலங்கைக்கு போய்தான்.. நாடார் சாதிப்பெண்களுக்கு தோள்சீலைக்கு போராடினாரா??

இங்கே முற்போக்கு எழுத்தாளர்கள் எனும் பிம்பமெல்லாம்.... மதமாற்ற சக்திகளின் கைக்கூலிகளும்... தமிழக ஏஜென்டுகளும்தான்....

★★★†††★★★

#ஈவேரா__வழியொற்றிகள்_கவனத்திற்கு.....

பெரியாரிஸ்ட்களோட  லாஜிக்படி இந்து மதம் சூத்திரனை வேசி மகன் அல்லது பாப்பானோட வைப்பாட்டி மகன்னு சொல்லும்....

சரி  சூத்திரன்  யாரு  அப்படின்னு பார்த்தால்.........
 யாரெல்லாம் ஆரியர்கள் இல்லியோ... அவங்க எல்லாரும் சூத்திரன்....

இருக்கட்டும்....

இங்கு இவ்விடம் நிற்க....

அம்பேத்காரிஸ்ட்களோட லாஜிக்படி....
நாத்திகனும் இந்துதான்.....
சமய சட்டம்  எழுதினது அம்பேத்கர்தான் அப்படிங்கிறதால....

அம்பேத்கர் பேச்சுப்படி பார்த்தால் ....

தன்னை நாத்திகன்னு சொல்லிக்கிட்ட பெரியார், பெரியாரிஸ்ட் எல்லாரும் சூத்திரன்தான்.....

ஏன்னா......

பெரியார், பெரியாரிஸ்ட் எல்லாரும் திராவிடர்கள்......

சூத்திரன்னா, என்ன அர்த்தம்னு ஊருக்கெல்லாம் பாடம் நடத்துற பெரியாரிஸ்ட்களுக்கு........
  பெரியாரியம் படி சூத்திரன்னா யாருன்னு நான் சொல்ல தேவையிருக்காது....

முக்கியக்குறிப்பு:-
சூத்திரன்ங்கிற பிரிவுக்கு கீழே.....

நீங்க எதை ( வேசி மகன் அல்லது பார்பானின் வைப்பாட்டி மகன்) மற்ற எல்லாருக்கும் பொருத்தி பெரியாரிய பொழிப்புரை நடத்துறீங்களோ........

அதையேதான் உங்களுக்கும் நீங்க பொருத்திக்கனும்......

வேணும்னா.... இப்படி வச்சுக்கோங்க....

மத்தவங்க... வெவரம் தெரியாத சூத்திரனுங்க....
 பெரியாரிஸ்ட்ங்க எல்லாரும் வெவரம் தெரிஞ்ச சூத்திரனுங்க......





Sunday 1 July 2018

இந்துமதம் - இந்து - இந்தியா - பாரதம்

இந்துமதம்  - இந்து - இந்தியா - பாரதம்

மஹான்கள் பலரும் தோன்றி அறம் வளர்த்த புண்ணிய பூமி நம் பாரத நாடு. நம் தர்மம் ஸ்நாதனம் என்று அறியப்படும். அழிவற்றது, பழமையானது என்பது இதன் பொருள். நன்மைகள் பெருகிவரும் காலத்தே சற்றே தீமையும் இழையோடிச் செல்லும் என்பது போல நடுவே சிலகாலம் நம் பண்பாட்டுக்குப் பொல்லாக் காலமாகிவிட்டது. மேற்கத்திய உலகின் தாக்கமும் மேற்காசியத்தின் ஆட்சியும் நம் தர்மத்தைச் சற்றே மங்கலான ஒளியில் உலகுக்குக் காட்டிவந்த காலம் சில நூற்றாண்டுகள்.








மேற்கத்திய உலகம் பாரத கலாசாரத்தை மறைந்துபட்டுப் போனது என்று முடிவுகட்டிய சமயம் அது. ஹிந்து தர்மம் பயனற்றது என்று ஒரு கருத்து உருவாக்கி வைக்கப்பட்டிருந்த நேரம். இந்தியர்கள் அடிமைகள் என்று உலகம் தூற்றிய காலம். கப்பலேறிக் கடல் தாண்டி மேற்கே போன ஒரு இளம் ஹிந்துத்துறவி பாரதத்தின் பெருமையை எடுத்துரைத்து நம் கலாசாரத்தின் மேன்மையை உலகுக்கு உணர்த்தினார். அவர் சொன்ன சொல் இது.”எதிர்காலம் குறித்து நான் கனவேதும் கொண்டிருக்கவில்லை. அது எனக்குத் தேவையுமில்லை. ஆனால் நிதர்சனம் என் கண்களில் தெரிகிறது. ஸநாதனத்தாய் விழித்துக் கொண்டுவிட்டாள். அவளது பொன்னாசனத்தில் மேலும் கம்பீரமாக அமர்ந்துவிட்டாள். அகில உலகத்தையும் அவளுக்கு அமைதியாக சமர்பித்து வணங்குவோம்.” ஆம். ஸ்வாமி விவேகானந்தர் தான் அந்த இளம் துறவி.

பாரத தேசம் என்பதை ஒருங்கிணைத்து வைத்ததே மொகலாயர்களும் ஆங்கிலேயர்களும் என்று ஒரு வரலாற்றுப் பிழை நம் புத்தகங்கள் பலவற்றில் உலா வருகிறது. நம்மில் சிலரும் சற்றே யோசித்து,”ஆமாம். இங்கேயே என்ன வாழ்ந்தது? சேரன் சோழன் பாண்டியன் என்று பிரிந்து கிடந்தது சரித்திரம் தானே?” என்று பிழைக்குப் பின்பாட்டுப் பாடுவதைக் காண்கிறோம்.

வாடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்,
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்,
குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்,
குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும்

இப்பாடல் புறநாநூற்றில் காரிக்கிழார் எனும் புலவர் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை வாழ்த்திப் பாடிய பாடலின் தொடக்கம். இதில் பாரத தேசத்தின் எல்கைகள் குறித்துச் சொல்லி அதை வென்று ஆளும் மன்னன் முதுகுடுமிப் பெருவழுதி என்று புகழ்ந்துரைக்கிறார்.

இதையே பாரதியார் சற்றே எளியதமிழில்
வடக்கில் இமய மலை பாப்பா
தெற்கில் வாழும் குமரியடி பாப்பா
கிடக்கும் பெரிய கடல் கண்டாய் - அதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா
என்று தேசத்தைப் போற்றுகிறார்.

சங்கப் பாடல்கள் போலவே தொன்மை மிக்க நம் புராணங்களிலும் பாரத தேசத்தைப் பற்றிய எல்லை வரையறைகள் தெளிவாக உள்ளன.
உத்தரம் யத் ஸமுத்ரஸ்ய ஹிமாத்ரே: சைவ தக்ஷிணாம்|
வர்ஷம் தத் பாரதம் நாம பாரதீ யத்ர சந்ததி:||
(விஷ்ணு புராணம்)
கடலுக்கு வடக்கிலும் இமயத்திற்குத் தெற்கிலும் இருக்கும் நிலப்பரப்பு பாரதம் எனப்படும் அதன் மக்கள் பாரதியர் என்றும் அறியப்படுகிறார்கள் என்கிறது விஷ்ணு புராணம்.

இதே விதமாக
ஹிமாலயம் ஸமாரப்ய யாவதிந்து சரோவரம்|
தம் தேவநிர்மிதம் தேசம் ஹிந்துஸ்தானம் ப்ரசக்ஷதே||
என்று பிரஹஸ்பத்ய ஸாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது. இது ஹிதோபதேசம் உள்ளிட்ட பல நூல்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
”ஹிமாலயத்தில் தொடங்கி இந்து மஹா சமுத்திரம் வரை தேவர்களால் அமைக்கப்பட்ட தேசமே ஹிந்துஸ்தானம்” என்பது இதன் பொருள்.
ஹி என்ற ஹிமாசலத்தின் முதலெழுத்தையும் இந்து மாக்கடலின் பெயரில் ‘ந்து’ என்பவற்றையும் இணைத்து ஹிந்து என்ற பெயர் வந்தது. ஸ்தானம் என்பதற்கு இடம், நிலம் என்பது பொருள். ஆகவே இந்த நிலப்பரப்பு ஹிந்துஸ்தானம். இங்கே வசிக்கும் மக்கள் ஹிந்துக்கள்.

இது வழிபாட்டுமுறை சார்ந்த பிரிவு அல்ல. உலகின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு வாழ்க்கைமுறை இருப்பது போல இமயத்துக்கும் குமரிக்கும் இடைப்பட்ட பூமியில் வாழும் மக்களின் வாழ்வுமுறை சார்ந்தே ஹிந்துக்கள் என்று அறியப்பட்டனர்.

ஹிந்துஸ்தானத்தின் வாழ்வியல் முறை ஸநாதன தர்மம் என்று அறியப்படுகிறது. ஸநாதனம் என்றால் தொன்மைமிக்கது, அழிவில்லாதது என்று பொருள்.

ஸநாதன தர்மத்துக்கு என்று தனி விதமான அடையாளங்கள் சின்னங்கள் ஏதுமில்லை. பல்வேறு அடையாளங்களையும் சின்னங்களையும் தன்னகத்தே கொண்டது நம் தர்மம். வழிபாட்டு முறைகள் என்று பார்த்தாலும் பல்வேறு முறைகளின் சங்கமமே நம் தர்மத்தின் வழிபாட்டு முறை. ஆதிசங்கர பகவத் பாதர் தொகுத்தளித்த ஆறு வழிபாட்டு நெறிமுறைகளும் அதனோடு இயைந்து வரும் நாட்டார் தெய்வ வழிபாடும் நம் தர்மத்தின் அங்கம்.
ஸநாதனிகள் தம் நடத்தையால் அறியப்படுபவர்கள். வசுதைவ குடும்பகம் என்ற கோட்பாட்டை மனதில் நிறுத்தி உலகின் ஒவ்வொரு உயிரினத்தையும் தன்னில் ஒருவராக உணரும் எவரும் ஸநாதன தர்மத்தைப் பின்பற்றுபவரே.
வசுதைவ குடும்பகம் என்றால் என்ன?
अयं बन्धुरयं नेति गणना लघुचेतसाम् | उदारचरितानां तु वसुधैव कुटुम्बकम् ||
அயம் பந்துரயம் நேதி கணனா லகுசேதஸாம்|
உதாரசரிதானாம் து வஸுதைவ குடும்பகம்||
(மஹோபநிஷத்)
இவை நெருக்கமானவை இவை அந்நியமானவை என்று கொள்வது தாழ்ந்த மனது.
உலகம் முழுமையும் ஒரு குடும்பம் தான் என்று கொள்வது உயர்ந்த மனது.
என்பதே இதன் பொருள்.

இது ஆன்ம சாதனையில் மிக உயரிய நிலை அடைந்த ஒரு மனிதனின் மனோநிலையாகச் சொல்லப்பட்டுள்ளது. யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பது இதற்கு இணையான வாக்கியம். ஆப்பிரிக்க கலாசாரத்தின் உபுண்டு தத்துவம் இதே போன்றது.

ஆன்ம சாதனையில் மிக உயரிய நிலை எட்டிய மஹான்களுக்கு மண்ணில் நெளியும் புழுவும் மண்ணாளும் மன்னனும் படைப்பின் பல்வேறு அம்சங்களைப் பிரதிபலிக்கும் தன்னைப் போன்ற உயிரினங்கள். அவ்வளவே! ஒரு கேள்வி எழலாம். இப்படி எல்லோரும் ஓர் குடும்பம் என்றால் தவறுகளக் கண்டிப்பதும் குற்றங்களை தண்டிப்பதும் எப்படி? இதற்கான விடை தேடும் போது தர்மத்தைச் சற்றே ஆழ்ந்து நோக்கவேண்டும். புரிந்து கொள்ளக் கடினமானது அல்ல.

உலகியல் வாழ்வில் ஈடுபட்டிருக்கும் மக்களுக்கு அவர்களது வாழ்வு முறைக்கேற்ப வெவ்வேறு விதமான நியாயங்கள் இருக்கின்றன. பகவத் கீதையில் கண்ணன் பார்த்தனுக்குச் சொன்ன வாக்கே அதுதான். தர்மம் என்பதும் அதர்மம் என்பதுமே வாழ்வியல் முடிவுகளுக்கு முக்கியமான அடிப்படைகளாக இருக்கவேண்டும். தர்மம் முறையே பின்பற்றப்படுவது தர்மம் காக்கப்படுவதாகும். தர்மம் வழுவும் செயல்களைக் கண்டிப்பதும் தர்மத்துக்கு விரோதமான செயல்களை கடுமையாக எதிர்த்து தண்டிப்பதுமே கற்றறிந்தவர்களும் ஆட்சிப்பணி செய்வோரும் ஆற்றவேண்டிய கடமை.
வாழ்வுமுறை என்பது ஒவ்வொருவர் செய்யும் பணி சார்ந்தும் இருக்கும் இடம் சார்ந்தும் அமைகிறது. நம் தேசம் முழுதும் சுற்றினாலும் பழக்க வழக்கங்கள் வேறுபட்டிருக்கும் ஆனால் வாழ்வின் அடிநாதம் மாறாது. நம் கிராமங்களில் இன்றும் மக்கள் காலையில் எழுந்ததும் சூரியனை வணங்கிவிட்டுப் பசுவையும் வணங்குவர். பின் ’எல்லாத்தையும் நல்லா வெச்சிரு சாமி’ என்று ஒரு பிரார்த்தனை. அதன் பின் அன்றைய தினத்தின் பணியைச் செய்யக் கிளம்பிவிடுவர்.

வட இந்தியாவில் போய்க் கிராமங்களில் பார்த்தாலும் இதே முறை. காலையில் எழுந்து சூரியனையும் பசுவையும் வணங்கிவிட்டு, “ஸப்கா சுக் சுக் ரகோ பகவான்” என்ற பிரார்த்தனையுடன் பணிகளைத் துவக்குவார்கள். இதை ஏன் செய்கிறோம்? யார் சொல்லிக் கொடுத்தார்கள்? இந்த முறையின் வரலாறு என்ன என்பதெல்லாம் அந்த மக்களுக்குத் தெரிந்துதான் செய்கிறார்களா?
கேட்டபோது வந்த பதில் “இது காலங்காலமாக நடப்பது” என்பதே. ஆனால் அதோடு நில்லாமல் இதை ஏன் எதற்கு என்று கேட்கிறாயே உனக்கு உன் தாய் தந்தையர் இதைக்கூடவா சொல்லித்தரவில்லை என்று பல இடங்களில் எதிர்க்கேள்வி திணறச் செய்ததும் உண்டு. எல்லோரும் இன்புற்றிருக்க என்பதே சநாதன தர்மம் எனப்படும் இந்த மண்ணின் வாழ்வியல் முறையின் அடிநாதம்.

இதில் ஒவ்வொருவர் தொழிலுக்கு ஏற்ப அவரவருக்கான நியாயங்கள் நிர்ணயிக்கப்பட்டன. இது வர்ணாஸ்ரம தர்மம் என்று அறியப்பட்டது. இதில் நான்கு பிரிவுகள் இருந்தன.
கற்றறிந்தவர்களாக, சான்றோராக இருந்தவர்கள் பிராமணர்கள் என்று அறியப்பட்டனர். இவர்கள் தர்மத்தையும் வாழ்வியல் சிக்கல்களுக்குத் தீர்வுகளையும் சொல்லி சமுதாயத்துக்கு உதவினர்.
காவல் தொழிலும் ஆட்சிப்பணியும் செய்துவந்தோர் க்ஷத்ரியர் என்று அறியப்பட்டனர். போர்த்திறம் கொண்டு தேசம் காக்கும் பணியில் ஈடுபட்டுவந்தனர் இவர்கள்.
வணிகம் செய்து பொருள் ஈட்டி சமுதாயத்துக்கு பொருளாதாரம் செழிக்க உதவியோர் வைசியர் எனப்பட்டனர். பொருளாதார விவகாரங்களில் இவர்கள் நிபுணர்களாக இருந்தனர்.
உடல் உழைப்பில் ஈடுபட்டோர் சூத்திரர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டனர். வயல்களிலும் பிற இடங்களிலும் உழைப்பது இவர்கள் பணியாக இருந்தது.

பாரத சமுதாயம் தன்னிறைவு பெற்ற கிராமங்களாக இருந்தது. ஒவ்வொரு கிராமத்திலும் இந்த நால்வருண அமைப்பும் அவர்கள் கிராம நன்மைக்குப் பாடுபடுவதுமாக வாழ்க்கை இருந்தது. இப்படிப் பல கிராமங்கள் சேர்ந்து ஒரு ராஜ்ஜியம் என்று மொத்தமாக 57 ராஜ்ஜியங்கள் இமயத்துக்கும் குமரிக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பில் இருந்தன. 57 ராஜ்ஜியங்களில் பல சிற்றரசுகள் இருந்தன. அது வரலாறு.

இந்த வர்ணாஸ்ரமம் மிகப் பெரிய குற்றம் என்பது போலச் சில சித்தாந்திகளால் சித்தரிக்கப்படுகிறது. ஆனால் அது தொழில்சார் பிரிவு மட்டுமே, நம் புராணங்கள் இதிஹாசங்கள் இவற்றை வலியுறுத்தியே வந்திருக்கின்றன. தொழில் சார்ந்த பிரிவுகளையும் வேற்றுமைப் படுத்தியோ உயர்வு தாழ்வு கொண்டோ நோக்குதல் கூடாது என்பது வழிவழியாக ஆதிசங்கரர் முதலான பெரியவர்களாலும் (மனீஷா பஞ்சகம்) அறிவுறுத்தப்பட்டு வந்திருக்கிறது.

 நம் சநாதன தர்மத்தைக் குறைகூறுவோர் இந்த வர்ணப் பிரிவினையைத் தவிர வேறெதுவும் சொல்ல வழியில்லை. ஆதிசக்தி அம்பிகையின் துதியாம் லலிதா சகஸ்ரநாமத்தில் வர்ணாஸ்ரம விதாயினீ என்றொரு திருநாமம் தேவியைக் குறித்துச் சொல்லப்படுகிறது. உலகின் அனைத்து உயிர்களுக்கும் தாயாக ஆப்ரம்ஹ கீட ஜனனீ என்று போற்றப்படும் தேவி வர்ணாஸ்ரமம் தீயது என்றால் அதனுடன் சம்பந்தப்பட்டிருப்பாளா? இது குறித்து ஒரு சிறு விளக்கத்தைப் பார்க்கலாம்.

ஆப்ரம்ஹ கீடஜனனீ => அற்பப்புழு முதற்கொண்டு ஆதிபகவன் வரையான  அனைவருக்கும் தாய்.
வர்ணாஸ்ரம விதாயினீ => வர்ணாஸ்ரமத்தை அளித்து ஆள்பவள்.
விதாயின் என்ற சொல்லுக்கு அளித்தல், நிர்வகித்தல். ஆளுதல், அதிகாரப்ரயோகம் செய்தல், நடாத்துதல், காரணமாயிருத்தல் என்றெல்லாம் பொருள்.

விதாயினீ என்றால் அளிப்பவள், நிர்வகிப்பவள், ஆள்பவள், நடாத்துபவள், அதிகாரப்ரயோகம் செய்பள், காரணமாயிருப்பவள் என்பதே பொருள்.
வர்ணாஸ்ரமம் என்பது தொழில் ரீதியான குழுக்களாக மாந்தரைப் பிரித்து வைத்த சமுதாயச் செயல்பாடு. இதற்கும் இறையை அடைய வழிகாட்டும் தர்மக் கோட்பாடுகளுக்கும் சம்பந்தமில்லை.
இந்த வர்ணாஸ்ரமத்தை அளிப்பவள், நிர்வகிப்பவள் இதில் அதிகாரப்ரயோகம் செய்பவள் என்று இறைவியை ஏன் சொன்னார்கள்?

இந்தப் பிரிவுகளில் ஒவ்வொரு மனிதனும் இருக்கும் இடம் அவனுக்கு இறை அளித்த கொடை. இது குறித்து மனிதா நீ பெருமை கொள்! ஆனால் கர்வம் கொள்ளாதே. இதில் உயர்வு தாழ்வு கண்டு கர்வத்தில் கொக்கரித்தால் இந்த ஏற்பாடுகளை நிர்வகித்து அதிகாரம் செலுத்தும் இறைவியால் நீ கீழானது என்று தூற்றும் நிலைக்குத் தள்ளப்படுவாய் என்பது எச்சரிக்கை.

உன்னால் ஆவது இங்கு எதுவுமில்லை. வர்ணாஸ்ரமத்தில் உன் இடம் இறைக் கொடையே அன்றி உன் உயர்வு தாழ்வு ஒரு பொருட்டே அல்ல என்பதைக் குறிக்கவே இந்தப் பெயர் இறைவிக்கு வந்ததாக அறியப்படுகிறது.
எந்தச் சமுதாய ஏற்பாட்டையும் இறையின் துணை கொண்டு செய்வது நீதி பரிபாலனத்துக்கு பேருதவியாக இருக்கும் என்பது மனசாட்சி உயிர்ப்புடனிருந்த நம் முன்னோர் செய்த ஏற்பாடு.

ஆப்ரம்ஹ கீடஜனனீ என்று அனைத்துயிர்களுக்கும் தாயாக அறியப்படுபவளின் பிள்ளைகள் ஒருவருக்கொருவர் வேற்றுமை பாராட்டலாமா என்ற கேள்விக்கு, வர்ணாஸ்ரம விதாயினீ என்று பணி சார்ந்த பிரிவுகளை அளித்தாள்பவளே தாய்தான் என்பது பதில்.

ஆக, வர்ணாஸ்ரமப் பிரிவுகள் தாயால் தரப்பட்டவை. பணிகளின் வேறுபாட்டைக் கொண்டு பிள்ளைகள் தமக்குள் உயர்வுதாழ்வு பாராட்டினால் தாய் கண்டிப்பாள். திருந்தாவிடில் தண்டிப்பாள். பணி சார்ந்து வேறுபாடுகள் இருக்கும், ஆனால் அவற்றைக் கொண்டு வேற்றுமை பாராட்டாதே என்று சொல்கிறது லலிதா ஸகஸ்ரநாமம்.

இது போல நம் முன்னோர் தர்மம் குறித்துச் சொல்லிச் சென்ற நல்ல பல விஷயங்களைக் காலப் போக்கில் சரியான புரிதலின்றி நாம் விட்டிருக்கிறோம். நம் தர்மம் வாழ்வின் ஒவ்வொரு நிலைக்கும் வழிகாட்டுகிறது. அதைச் சரியாகப் புரிந்து கொள்ள தக்கதோர் நல்லவரின் வழிகாட்டுதல் அவசியம். அத்தகைய வழிகாட்டுதல் இல்லை என்றால் சொல்லபட்ட விஷயங்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாது நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு தர்மத்தையும் பின்பற்றாது விட்டுவிடும் அபாயம் இருக்கிறது. 

தாய்நாடும் தர்மமமும் நம்மிரு கண்கள் என்பது பெரியோர் வாக்காகும். ஆகவே தேசம் குறித்தும் தர்மம் குறித்தும் தெளிவு பெற விழைவோர் தக்க குருவை நாடிச் சரியாகப் புரிந்து தெளிவதே சிறப்பு.

Monday 25 June 2018

குறையுள்ளவையா தமிழ் எழுத்துக்கள்?


குறையுள்ளவையா தமிழ் எழுத்துக்கள்?

தமிழ் எழுத்துக் குறிகள் மிகவும் குறையுடையன வென்பது அன்னியர்களுடைய அபிப்ராயம். க, ச, ட, த, ப இவ்வைந்து தமிழ் எழுத்துக் குறிகளும் முறையே क, ख, ग, घ, ह; च, छ, ज, झ, श, स; ट, ठ, ड, ढ; त, थ, द, ध; प, फ, ब, भ; இந்த இருபத்தி மூன்று வடமொழி எழுத்துக்களுக்குப் பதிலாக நிற்பது பெருங்குறை என்பார்கள். மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்த திராவிட பாஷைகளில் இவ்விருபத்து மூன்று எழுத்துக்களுக்கு இருபத்து மூன்று குறிகள் வழங்குகின்றன. ஆனால் தமிழில்,
க என்பது क, ख, ह என்ற மூன்று உச்சரிப்புகளையும் குறிக்கும்.
ச என்பது श, च, ज என்ற மூன்று சப்தங்களுக்கும் நிற்கும்.
ட என்பது ट, ड என்ற இரண்டு வகை உச்சரிப்பும் கொள்ளும்.
த என்பது त, द என்று இரண்டு வகையாகவும் உச்சரிக்கப் படும்.
ப என்பது प, ब என்று இரண்டு எழுத்துக்களுக்கும் குறியாகும்.
ஆக இந்த ஐந்து எழுத்துக்கள் பன்னிரண்டு உச்சரிப்பு கொள்ளும்.
மற்ற பதினோரு உச்சரிப்புகள் தமிழில் கிடையவே கிடையாது. தமிழில் இராத உச்சரிப்புகளுக்குத் தமிழில் குறிப்புகள் இல்லாதது ஒரு குறையாகாது. ஒப்புக் கொள்ளப் பட்ட குறையை மட்டில் ஆராய்வோம். உண்மையில் சரியாக ஆராய்ந்து பார்த்தால் இந்த குறை குறுகி குறுகி முற்றிலும் ஒரு விதிக்கு உட்பட்டுப் போவதைக் காண்போம். எவ்வாறென்பதைப் பார்க்கலாம்.
க என்பது மொழியின் முதலெழுத்தாக வந்தால் தான் क உச்சரிப்பு. மொழியின் இடையிலோ, ஈற்றிலோ வந்தால் ह – உச்சரிப்புக் கொள்ளும். உதாரணம்: களவு, கொடுமை, காடு, கிளி, குதிரை; பகுதி, தகுதி, விகுதி, வகை, ஆகாரம், அதிகம், ஆகும், வருக என்பன. மெல்லின எழுத்துடன் சேர்ந்து வந்தால் ग உச்சரிப்புக் கொள்ளும். பங்கு, தங்கம், வாங்கலாம் முதலியன. க இரட்டித்தால் சுத்த வல்லின ஓசை பெறும்; பக்கம், அக்கா, தக்கவன்.
ச என்பது மொழியின் முதலிலும் இடையிலும் ஈற்றிலும் श உச்சரிப்புத்தான் கொள்ளும்; செவ்வாய், சுவை, சும்மா, சாதல், பசி, மாசு, கொசு, தசை, ஆசான் முதலியவாறு.
இரட்டித்தால் தான் च, வல்லோசை பெறும். அச்சம், பச்சை, தச்சன், கச்சை, அச்சு, பிச்சை முதலியன. மெல்லினத்துடன் வந்தால் ज ஓசை பெறும். பஞ்சம், இஞ்சி, தஞ்சை முதலியன.
ட என்பது ड உச்சரிப்புத்தான். ट என்கிற உச்சரிப்பு இரட்டித்தால் தான் வரும். கட்டு, பட்டை, கட்டை, கட்டில், மட்டு, இடு, ஆடு, ஓடு, கடை, வடக்கு, தடை முதலியவைகளில் ட என்பது உச்சரிப்பே. மெல்லினத்துடன் ड என்றாகும் என்பது சொல்லாமலே விளங்கும். பண்டம், வண்டி, கூண்டு முதலியன.
த என்பது மொழியின் முதலில் त உச்சரிப்பு; இடையிலும் இறுதியிலும் द உச்சரிப்பு. தகப்பன், தாய், தித்திப்பு, தோல், துவையல், தையல்.
அது, இது, பொது, பாதி, பகுதி, காதம், கதை, மாதம், காதல். இரட்டித்தால் त உச்சரிப்பு பெறும். மெத்தை, கத்து, வாத்து, அத்தி முதலியன. மெல்லினத்துடன் வரின் द உச்சரிப்பு; வந்து, கந்தல், கூந்தல், மந்தி.
ப என்பது மொழியின் முதலில் प உச்சரிப்பு; பாலம், பசு, பொது, பூட்டு. இரட்டித்தாலும் प உச்சரிப்பு; அப்பம், கப்பல், தித்திப்பு. அப்போது இரட்டிக்காமல் இடையிலும் ஈற்றிலும் வந்தாலும், மெல்லினத்துடன் வந்தாலும் ब உச்சரிப்பு. கம்பம், வம்பு, அம்பு, செம்பு, உருபு, மரபு, திரிபு, மார்பு.
றகர ஒற்றுக்குப் பின்வரும் வல்லின எழுத்தை இரட்டித்ததாகவே கொள்ளவேண்டும்; ஆகையால் அது வல்லோசை பெறும். ஆகவே பொதுவாக வல்லின எழுத்துக்கள் மொழியின் முதலிலும், ற-கர ஒற்றுக்குப் பின் அல்லது இரட்டிக்கும்போதே வல்லோசை பெறும். மற்ற இடங்களில் உண்மையான வல்லோசை பெறாது. இடையிலும் ஈற்றிலும் க என்பது ஹ ஆகும். ச என்பது श எழுத்தே ஆகும். ற-கருத்திற்குப் பின் அல்லது இரட்டித்தால் தான் च ஆகும். ட என்பது ड
எழுத்தே ஆகும். இரட்டித்தால் தான் ट ஆகும்.
மெல்லினத்திற்கு அடுத்தாற்போல் எல்லா வல்லின எழுத்துக்களும் முறையே ग, ज, ड, द, ब ஆகும்.
வடமொழிச் சொற்களை தமிழில் கொள்ளும் போது, அவைகளின் சம்ஸ்க்ருத உச்சரிப்பை வைத்துச் சொல்ல வேண்டும் என்பது கூடாது. அது தமிழ் முறையாகாது. மணிப்பிரவாள மாகும். வருஷம் என்று தான் தமிழில் சொல்ல வேண்டும். வர்ஷம் என்பது தமிழல்ல. மாதம் என்று சொல்லுவது தான் சரி. மாஸம் என்பது சுத்த சம்ஸ்க்ருதமே ஆகும்; தமிழாகாது. அவ்வாறே, துவேஷம், மாமிசம், சீதை, அருச்சுனன் முதலியன.
புராதனமாகத் தமிழில் வழங்கும் வடமொழிச் சொற்களுக்குத் தமிழ் உச்சரிப்புக் கொடுத்துச் சொல்லுவதே முறையாகும். த்வேஷம், மாம்ஸம், ஸீதா, அர்ஜூனன் என்று உச்சரிப்பது தமிழல்ல.
இதை ஞாபகத்தில் வைத்தால் மேலே நான் குறிப்பிட்ட விதிகள் தமிழில் கலந்த வடமொழிச் சொற்களுக்கும் பொருந்தும் என்பது விளங்கும். சீதை என்பதை தமிழில் शीतै என்றுதான் சொல்லுகிறோம். सीता அல்லது सीतै என்பது தமிழர் முறையாகாது.
கதை என்பதை गदै என்று உச்சரிப்பதுதான் தமிழ் முறை. ‘அதை’, ‘கதை’, ‘விதை’, ‘மதி’, ‘அன்னையும் பிதாவும்’ இவைகளில் எல்லாம் தமிழர் த என்பதைத் தெரிந்தும் தெரியாமலும் द வாகத்தான் உச்சரிப்பார்கள். அவ்வாறு உச்சரிப்பது தமிழ் முறையில் சரியேயாகும். நான் கூறியிருப்பது வடமொழிப் பயிற்சி அடைந்தவர்களுக்கும் தெலுங்கு, கன்னடம் வழங்கும் பிரதேசங்களில் வசிக்கும் தமிழர்களுக்கும் சில விஷயங்களில் வித்தியாசமாகத் தோன்றலாம்.
தாகம், தசரதன், தமயந்தி, துரோணன் என்பவையில் மொழியில் முதலில் நிற்கும் த-கரத்தை தமிழர் त – ஆகவே உச்சரிப்பார்கள்; அவ்வாறு உச்சரிப்பதும் சரியேயாகும். द என்று உச்சரிப்பது வடமொழிப் பயிற்சியினால் ஏற்பட்ட வழக்காகும். தமிழில் நன்றாகப் பதியாத வடமொழிச் சொற்களின் உச்சரிப்பு சம்ஸ்க்ருதத்தை ஒட்டியே நிற்கும். அச்சொற்களுக்கு மேற்குறித்த விதிகள் பொருந்தா.
ஆகவே தமிழில் உள்ள உயிரெழுத்துக்களும் மெல்லின இடையின எழுத்துக்களும், குறைவின்றி இருக்கின்றன. வல்லின எழுத்துக்கள் மேற்கண்டவாறு சில விதிகளுக்குட்பட்டு, மாறுபாடு இல்லாமல் இடத்தை அனுசரித்து உச்சரிக்கப் பெறுவதால் அவ்வகையிலும் கூறப்படும் குறையானது உண்மையில் குறையாகாது.
தமிழ்ச் சொற்களுக்கும் தமிழருக்குமே தமிழ் எழுத்துக் குறிகள் உண்டாக்கப் பட்டவை. பிற பாஷைகளைத் தமிழ் எழுத்தைக் கொண்டு எழுதப் புகின் பல குறைகள் தோன்றும். அதைக் கொண்டு தமிழ் எழுத்துக்களை நாம் குறை கூறுவதோ இகழ்வதோ கூடாது.

சம்ஸ்க்ருதம் படிக்கவேண்டிய மொழி

சம்ஸ்க்ருதம் படிக்கவேண்டிய மொழி.. ட்ரான்ஸ்லேட்டர் வச்சு கத்துக்கும்மொழி அல்ல..

ஏன் சம்ஸ்க்ருதமை ட்ரான்ஸ்லேட்டர் வச்சு அர்த்தம் பண்ணாமல்... அதை முறையாக கத்துக்கிட்டு படிச்சு புரிஞ்சுக்க சொல்றோம்னா...

ஏனைய மற்ற மொழிகளிலிருந்து சமஸ்க்ருதம் எவ்வாறு வேறுபடுகிறது என்று புரிஞ்சுக்க அது மிக அவசியம்...
பொதுவாகவே எல்லாருக்கும் தெரியும் சம்ஸ்க்ருதம் குறியீடுகளை அடிப்படையாகக்கொண்டு உருவானது... பிற மொழிகள்போல சொற்களை கொண்டு உருவானது அல்லவென...

நவீன மொழிகள் என்று பெயரளவில் கருதப் படும் பல மொழிகள், உண்மையில் முழுமையற்று, பிற்போக்குத்தனத்துடன், அநாவசியமான பகுதிகளைக் கொண்டுள்ளன என்பது இதைப் படிக்கும் போது உங்களுக்கே புரியும்.
உதாரணமாக அதிகமக்களால் பேசப்படும் மொழி(கள்)னு  கம்பு சுத்தப்படும் மொழிகள் எல்லாம் நாளுக்குநாள் மொழி அகராதின்னு சொல்லப்படும்.. டிக்ஸ்னரி பக்கங்களை அதிகரிச்சிட்டே போகுது.. காரணம்... புதிதாக உண்டாகும் கருவிகளுக்கு தொழில்களுக்கு ஏற்ப... புதிய சொற்களை உண்டாக்கி.. சேர்க்கவேண்டிய அவசியம்...
ஆனால் சம்ஸ்க்ருதம் மாறுபட்டது..
சைக்கிள்ல இருந்து ஸ்பேஸ் ஷட்டில் வரைக்கும் ஒரே அர்த்தம்தான்...

மிகச்சிலவற்றுக்கு மட்டும்... தனிப்பெயர் உண்டு... அதாவது... நூற்றில்  பத்துக்கும் குறைவாக..

ரைட்.... துவங்குவோம்.

நவீன மொழிகளினுள் (ஆங்கிலம், இந்தி, ஜெர்மன் போன்றவை) நுழைந்து விடும் முதல் குறைபாடு, அவைகளுக்கு அடிப்படையாக  உள்ள கொள்கையில் இருந்தே உருவாகிறது.

அந்த கொள்கை: சொற்கள் உலகில் உள்ள பொருட்களை நேரடியாகக் குறிக்கும்.

இது சாதாரணமாக, கவனத்தில் கொள்ளத் தேவை இல்லாத, குழப்பம் தராத ஒரு சிறிய விஷயமாக படும். ஆனால், நவீன கால பேச்சு முறைகளில் உள்ள பல குறைபாடுகளுக்கு இந்த அடிப்படை கொள்கைதான் முக்கிய காரணம் என்பதை மேற்கொண்டு பார்ப்போம். இதே சமயத்தில், சமஸ்க்ருதம் இந்த கொள்கையின் அடிப்படையில் அமைந்தது அன்று. சொல்லப் போனால், சமஸ்க்ருதத்தில், சொற்கள் – உலகில் உள்ள  பொருட்கள்/குழுக்கள் ஆகியவற்றின் பண்பை அல்லது இயல்பை குறிக்கிறதே தவிர எந்த சொற்களும் பொருட்களையோ/குழுக்களையோ தாமே நேரடியாக குறிப்பதில்லை.

இதற்கு என்ன அர்த்தம் என்று கேள்வி பதில் முறையில் சில உதாரணங்களுடன் காணலாம்.

கேள்வி: ஆங்கிலத்தில் அல்லது ஹிந்தியில் மரம் என்பதை எப்படி சொல்வது?
பதில்: ஆங்கிலத்தில் மரத்துக்கு Tree என்று சொல்ல வேண்டும்.ஹிந்தியில் மரத்துக்கு  पेड़ என்று சொல்ல வேண்டும்.

கேள்வி: சமஸ்க்ருத மொழியில் மரம் என்பதை எப்படி சொல்வது?
பதில்: சமஸ்க்ருதத்தில் மரத்துக்கு என்று சொல் எதுவும் இல்லை.

கேள்வி: என்ன, விளையாட்டாக இருக்கிறதே!
பதில்: இல்லை, விரிவாக விளக்குகிறேன். மேலே சொன்னது போல, சமஸ்க்ருதத்தில் சொற்கள் பொருட்கள்/குழுக்கள் ஆகியவற்றின் பண்பை அல்லது இயல்பை மட்டுமே குறிக்கின்றன. எந்த சொற்களும் பொருட்களையோ/குழுக்களையோ தாமே நேரடியாக குறிப்பதில்லை. ஆகையால் “மரம்” என்று நேரடியாக மரத்தைக் குறிக்கும் சொல் எதுவுமே சமஸ்க்ருதத்தில் இல்லை. உண்மையில்  எந்த உலகில் காணும் எந்த பொருளுக்குமே சமஸ்க்ருதத்தில் வார்த்தைகள் இல்லை (சில குறைவான எண்ணிக்கையிலான வார்த்தைகளை தவிர).

கேள்வி: அப்படியானால் வ்ருக்ஷ: என்பது என்ன? நான் வ்ருக்ஷம் என்பது மரம் என்றல்லவா கேள்விப் பட்டேன்!
பதில்: ஆம், சரியான கேள்வி. வ்ருக்ஷ: என்கிற சம்ஸ்க்ருத வார்த்தையை மரத்தைக் குறிக்க உபயோகப் படுத்தலாம். நான் முன்னரே குறிப்பிட்ட படி, சொற்கள் பொருட்கள்/குழுக்கள் ஆகியவற்றின் பண்பை மட்டுமே குறிக்கின்றன. அந்த வகையில் வ்ருக்ஷ: என்னும் இந்த வார்த்தை மரத்தின் ஒரு பண்பை குறிக்கிறது.

வ்ருக்ஷ (वृक्ष) = வெட்டப்பட்டு கீழே தள்ளப் படும் ஒன்று.

இந்த பண்பை உடைய எந்தப் பொருளையும் குறிக்க வ்ருக்ஷ என்ற வார்த்தையை உபயோகப் படுத்தலாம். ஒரு பொருள் பொதுவாக, வெட்டப்பட்டு கீழே தள்ளப் படும் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் அதை குறிக்க வ்ருக்ஷ என்ற சொல்லைப் பயன்படுத்தலாம். வ்ருக்ஷ என்பது மரமாகத் தான் இருக்க வேண்டும் என்னும் அவசியம் இல்லை.

இதே போல சம்ஸ்க்ருதத்தில் மரம் என்பதற்கு பல வார்த்தைகள் உண்டு. உதாரணமாக தரு (तरु), பாத³ப (पादप)  ஆகியவையும் மரத்தையே குறிக்கும். ஆனால் இவையும் கூட நேரடியாகக் குறிப்பதல்ல.

தரு ((तरु)) – மிதக்கும் தன்மை உடையது

பாத³ப span class=”GadyamSmall”>(पादप) –  காலால் பருகுவது

மரத்துக்கு இத்தகைய பண்புகள் இருப்பதால், அதாவது மரம் நீரில் மிதக்கக் கூடியது, அதே போல நீரை தன்னுடைய வேர்களால் (காலால்) உறிஞ்சிப் பருகுவதால், மரத்தைக் குறிக்க இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தலாம். ஏனெனில் மரத்துக்கு இந்த பண்புகள் உண்டு அல்லவா.  இதே பண்புகள் உள்ள வேறு பொருட்கள் இருந்தால் அவற்றைக் குறிக்கவும் இந்த சொற்களைப் பயன்படுத்தலாம் என்று சொல்லத் தேவை இல்லை.

கேள்வி: ஓ.. இப்போது புரிகிறது. அப்படியானால் மரத்தின் கிளையைக் கூட வ்ருக்ஷ என்று அழைக்கலாம் தானே… மரத்தைப் போல கிளையும் வெட்டப் பட்டு கீழே தள்ளப் படும் ஒன்று அல்லவா.
பதில்: நிச்சயமாக. நீங்கள் ஒரு புத்திசாலி.

கேள்வி: எனக்கு எல்லாவற்றையும் சுருக்கமாக முடிவாகக் கூற முடியுமா..
பதில்:  சரி, நவீன கருத்துப் பரிமாற்றத்தில், சொல்லுக்கும் அது குறிக்கும் பொருளுக்கும் ஒன்றுக்கு ஒன்று நேரடியாக இணைக்கப் பட்டிருக்கிறது. ஆனால் சம்ஸ்க்ருதத்தில் சொல்லும் அது குறிக்கும் பொருளுடைய பண்புகளுமே இணைக்கப் பட்டுள்ளன.

கேள்வி: நல்ல ஆராய்ச்சி. இருந்தும் எனக்கு ஒன்று புரியவில்லை. நீங்கள் சொன்னது சுவையாக இருந்தாலும், இதனால் என்ன பயன்? என்ன சொல்கிறேன் என்றால், ஏன் சொற்கள் பொருட்களின் பண்பை குறிப்பதாக சிக்கல் படுத்திக் கொள்ள வேண்டும், சாதாரணமாக சொல் நேரடியாக பொருட்களை குறித்தால் என்ன? இதனால் எல்லாம் என்ன பயன்?

பதில்: இதற்காகத் தான் காத்திருந்தேன். இதோ பதில். உதாரணமாக ஆங்கிலத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஆங்கிலத்தில் சுமார் ஐந்து லட்சம் வார்த்தைகள் (ஆக்ஸ்போர்ட் டிக்ஷனரியில் உள்ளபடி) உள்ளன. இதில் பெரும்பாலும் மற்ற மொழிகளில் இருந்து பெறப்பட்டவை.

கார் (car) என்ற ஒரு வாகனம் கண்டுபிடிப்பதற்கு முன், கார் (car) என்ற சொல்  டிக்ஷனரியில் இருக்கவில்லை. ஆனால் கார் கண்டுபிடிக்கப் பட்டவுடன், யாரோ “கார்” என்ற சொல்லை உருவாக்க அன்றிலிருந்து நாமும் மகிழ்ச்சியாக “கார்” என்ற சொல்லை உபயோகப் படுத்தி வருகிறோம். ஒரு புதிய வார்த்தை உருவானவுடன் அது அகராதியில் சேர்க்கப் பட்டாக வேண்டும். ஏனெனில் அப்போதுதான் புதியவர்கள் அகராதியைப் பார்த்து அந்த வார்த்தையையும் அதன் பொருளையும் படித்து தெரிந்து கொள்ள முடியும். இது எதனால் என்றால், கார் என்பது ஒரு பொருளைக் குறிக்கிறது.

வருங்காலத்தில்  புதியவகை  வாகனம் ஒன்று கண்டுபிடிக்கும் போது, புது வார்த்தை ஒன்றை நாம்   உருவாக்குவோம். அப்போது கார் என்னும் வாகனம் உபயோகத்தில் இல்லாமல் போகும், அதோடு கார் என்ற சொல்லும் வழக்கொழிந்து போகும் (ஏனெனில் கார்களே வழக்கொழிந்து விட்டனவே!).  மறுபடி அந்த புதியவகை வாகனத்துக்கான வார்த்தை அகராதியில் சேர்த்தாக வேண்டும்.   ஏனெனில் ஆங்கிலத்தில் ஒரு சொல் உலகில் உள்ள ஒரு பொருளை நேரடியாகக் குறிக்கிறது.

சமஸ்க்ருதத்திலோ ஒரு சொல் உருவாக்கப் பட்டாலும் அதனை அகராதியில் சேர்க்கத் தேவை இல்லை.  சமஸ்க்ருத இலக்கணம் தெரிந்த ஒருவர் ஒரு சொல்லின் அர்த்தத்தை அகராதியைப் பார்க்காமலேயே ஏறக்குறைய சரியாகச் சொல்லி விட முடியும். ஏனெனில் புதியதாக சமஸ்க்ருதத்தில் கார்களைக் குறிக்க  உருவாக்கப் பட்ட சொல், கார் என்ற வாகனத்தின் ஒரு பண்பை, இயல்பை  குறிப்பதாக இருக்கும்.  சமஸ்க்ருத இலக்கண சூத்திரங்களை வைத்து (வ்யாகரணம்), ஒரு வார்த்தை ஒரு பொருளின் எந்த இயல்பைக் குறிக்கிறது என்று கண்டுபிடித்து விட முடியும். ஆகையால், சமஸ்க்ருத இலக்கணம் தெரிந்த ஒருவருக்கு (பெரும்பாலும்) அகராதியே தேவை இல்லை.

கேள்வி: ஆச்சரியமாக இருக்கிறது. அப்படியானால் சமஸ்க்ருத இலக்கணம் தெரிந்த ஒருவருக்கு வார்த்தைகளின் அர்த்தங்களை தெரிந்து கொள்ள அகராதி தேவைப் படாது என்கிறீர்கள். வேறு ஏதேனும் நன்மை உண்டா?

பதில்: ஆம், வேறு நன்மைகளும் உண்டு. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும், ஆங்கிலத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கை அளவுள்ள வார்த்தைகளே இருக்கும். இப்போது ஐந்து லட்சம் இருக்கிறது. ஆனால் சம்ஸ்க்ருதத்திலோ, இந்த பிரபஞ்சத்தில் எத்தனை இயல்புகள், பண்புகள் உண்டோ, அத்தனை வார்த்தைகள் உண்டு. இந்த பிரபஞ்சத்தில் உள்ள பொருட்களும், அதன் பண்புகளும் எண்ணமுடியாத அளவு இருக்குமெனில், சம்ஸ்க்ருதத்திலும் எண்ணவே முடியாத, எண்ணிக்கையில் அடங்காத அளவு வார்த்தைகள் உண்டு. உலகில் இன்னும் கண்டுபிடிக்கப் படாத பொருட்களுக்கும் சம்ஸ்க்ருதத்தில் வார்த்தைகள் உண்டு. ஏனெனில் புதியதாக கண்டுபிடிக்கப் படும் பொருட்களுடைய பண்புகள் புதியதல்ல. உதாரணமாக மின்விசிரிக்கு சில பண்புகள் உண்டு, அது சுற்றுகிறது, காற்றை வீசுகிறது, காற்றை தள்ள இலை போன்ற அமைப்புகள் இருக்கின்றன. மின்விசிறி கண்டுபிடிக்கப் பட்ட போது, அது புதிய பொருள் என்றாலும், இந்த பண்புகள் புதியது அல்ல. ஆகவே ஒரு பொருள் புதியதாக உருவாக்கப் பட்டாலோ/கண்டுபிடிக்கப் பட்டாலோ, சம்ஸ்க்ருத இலக்கணம் தெரிந்த யாரும் அதன் இயல்பை வைத்து அதற்கு ஒரு பெயரை சூட்ட முடியும், அதே போல சம்ஸ்க்ருத இலக்கணம் தெரிந்த வேறு யாரும், அந்த பெயர் எதனைக் குறிக்கிறது என்று கண்டுகொண்டு விட முடியும்.

கேள்வி: அற்புதம். ஆனால் புரிந்து கொள்ள சற்றுக் கடினமாகத் தான் இருக்கிறது. சுருக்கமாக இது வரை சொன்னதை திரும்ப ஒருமுறை கூற முடியுமா…

பதில்: சரி, சமஸ்க்ருதத்தில் எண்ணிலடங்காத அளவு சொற்கள், அதன் அடிப்படைக் கொள்கையின் காரணமாகவே அமைந்துள்ளன (இதில் பெரும்பாலும் உள்ள சொற்களை புரிந்து கொள்ள அகராதியே தேவைப் படாது!). சமஸ்க்ருத இலக்கண அறிஞர்கள், இலக்கணத்தையும் (Grammar), சொற்பொருளியலையும் (semantics) வேறு வேறாக கருதாமல், இணையான – முரண்பாடுகள் அற்ற ஒரே விஷயமாக கருதினர். ஏனைய மற்ற மொழிகளில் இலக்கணமும், சொற்பொருளியலும் வேறு வேறாக உள்ளன – சமஸ்க்ருதத்தில் அப்படி இல்லை.

நீங்கள் உலகில்  ஒரு பொருளைப் பற்றி  எண்ணும் போது, அதன் இயல்பைக் கொண்டே சிந்திக்கிறீர்கள்; ஏனெனில் ஒரு பொருளின் இயல்பே அதனை மற்றதிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. ஆகையால் ஒரு சாதாரணமாக ஒரு  பொருளைப் பற்றி எண்ணும் போது, அதன் இயல்பு நினைவுக்கு வரும், அதனால் நீங்களே அந்த பொருளின் பெயர் முன்பே தெரியாவிட்டாலும் அதன்  இயல்புக் கேற்ப ஒரு பெயரை சூட்ட முடியும்.

இது வெறும் ஆரம்பம்  தான்.  இந்த தொடரில் வரும் பகுதிகளில் சமஸ்க்ருதம் எவ்வளவு சுருக்கமான,  அழகான, ஒழுங்கான முறையில் அமைந்த, உலகமே வியக்கும் வகையில் அமைந்த ஒரு மொழி என்று பார்ப்போம். ஒரு பொருளின் இயல்பை வைத்து எப்படி அதற்கு பெயரை உருவாக்க முடியும் என்றும் பார்ப்போம்.

இந்தப் பகுதியை ஒரு “சுபாஷித”த்துடன் முடிப்போம்.

भाषासु मधुरा मुख्या दिव्या गीर्वाण भारती
तस्माद्धि काव्यं मधुरं तस्मादपी सुभाषितम

பா⁴ஷாஸு மது⁴ரா முக்²யா தி³வ்யா கீ³ர்வாண பா⁴ரதீ
தஸ்மாத்³தி⁴ காவ்யம்ʼ மது⁴ரம்ʼ தஸ்மாத³பீ ஸுபா⁴ஷிதம்

அதாவது, சம்ஸ்க்ருத மொழி இந்திய மொழிகளில் முதன்மையானது, இனிமையானது, தெய்வீகமானது. இதனால் கவிதையும் அழகாகிறது. நன்மொழிகளும் இனிமையாகின்றன.

– திரு. கௌரவ் ஷா எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு.

குறிப்புகள்:

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப் பட்டுள்ள சிறப்பு பண்புகள் சமஸ்க்ருத மொழியில் மட்டுமே இருக்கின்றன என்று சொல்ல இயலாது. வேறு சில மொழிகளிலும் இச்சிறப்பு இயல்புகள் உண்டு. எனினும் இம்மொழிகளில் இத்தகைய இயல்புகள் மிகவும் அடிப்படை நிலையில் மேலதிக வளர்ச்சி இன்றி உள்ளன. ஆனால் சம்ஸ்க்ருதத்தில் இந்த இயல்புகள் முற்றிலும் வளர்ச்சி கண்டு மொழியின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளன.
சம்ஸ்க்ருத எழுத்தாளர் திரு.ஜகந்நாதன் அவர்கள் இது குறித்து எழுதிய குறிப்பு: பொதுவாக மொழிகளின் சொல்லமைப்பு நடைமுறை உபயோகத்தைப் பொறுத்த வரை மூன்று வகையாக அமையும்.
யோக(योग) என்ற முறையில் இலக்கண விதிகளின் படி அமையும் சொற்கள். உதாரணமாக கும்ப⁴கார​: கும்ப⁴ம்ʼ கரோதி இதி கும்ப⁴கார​: (कुम्भकारः कुम्भं करोति इति कुम्भकारः) – உழுபவன் உழவன்
என்பது போல.
ரூட⁴ (रूढ) = இதற்கு உதாரணம் நூபுரம் (नूपुरम्) – கைவளை. இந்த சொல் எதிலிருந்தும் உருவானதல்ல. எந்த பண்பையும் குறிப்பதல்ல. இந்த சொல்லை பிரிக்கவும் முடியாது.
योगरूढ= पङ्के जायते इति पङ्कजम् யோக³ரூட⁴= பங்கே ஜாயதே இதி பங்கஜம் – சேற்றில் இருப்பது. இது போன்ற வார்த்தைகளில் பிரித்து அர்த்தம் சொல்ல முடிந்தாலும், உபயோகத்தில் அவ்வாறு செய்வதில்லை. அதாவது சேற்றில் இருக்கும் புழு பூச்சி ஆகியவையும் பங்கஜம் என்று அழைக்கப் படமாட்டாது. பங்கஜம் என்றால் தாமரையை மட்டுமே குறிக்கும்.

சமஸ்க்ருத இலக்கண சொற்கள்




சமஸ்க்ருத இலக்கண சொற்கள்


அகர்மக க்ரியா (अकर्मक क्रिया)செயலற்ற வினை (intransitive verb). ஒரு வினையில் செயலும் (action), செயலின் பயனும் செயலாற்றுபவரிடமே இருப்பதால் (फलव्यापारयोरेकनिष्ठतायामकर्मक:) அங்கே செயப்படு பொருள் (object) என்று எதுவும் இருப்பதில்லை. எவை எல்லாம் அகர்மக க்ரியை என்பதற்கு ஒரு ஸ்லோகமும் உண்டு:

वृद्दिक्षयभयजीवितमरणं लज्जाशङ्कास्थितिजागरणम् ।
शयनक्रीडारुचिदीप्त्यर्थं धातुगणं तमकर्मकमाहू ॥
(பாடபேதம்: लज्जासत्तास्थितिजागरणं)

உதா: शिशु: शेते
அதிதே³ஸ²: (अतिदेश:)உபயோகத்தில் நீட்சி; (extended application). பாணிநீய வ்யாகரணத்தில் मत्, वत् போன்ற ஒட்டுகளால், ஒன்றின் பண்பு இன்னொன்றுக்கு நீட்டிக்கப் படுகிறது. இவை அதிதேஸ ஆகும்.
உதா: लोटो लाङ्वत्
அதி⁴கரண (अधिकरण)பேசப்படும்/ஆராயப்படும் விஷயம்;
அதி⁴கார சூத்ர: (अधिकार सूत्र)ஒன்றோ அதற்கு மேற்பட்ட சொல்லில் அமைந்துள்ள இலக்கண விதி. இவ்விதியில் இடம் பெறும் வார்த்தைகள் தானே எந்த பொருளும் தராது. ஆனால் இதற்கு பிறகு வரும் விதிகளுடன் இணைக்கப் படுவதால் பொருள் மிகுந்தது ஆகும். உதா: प्रत्यय:, परश्च
அனுதா³த்த (अनुदात्त)வைதிக சம்ஸ்க்ருதத்தில் எழுத்துக்களை உச்சரிக்கும் ஒரு முறை.
அநுநாஸிக (अनुनासिक)ஒரே சமயத்தில் வாயினாலும் மூக்கினாலும் உச்சரிக்கப் படும் எழுத்துக்கள் உதா: अं
அனுப³ந்த⁴ (अनुबन्ध)இலக்கண விதிகளை அமைப்பதற்காக சொற்களின் முன்போ பின்போ சேர்க்கப் படும் எழுத்துக்கள்
அனுபந்தம் எனப்படும்.
அனுவ்ருʼத்தி (अनुवृत्ति)அஷ்டாத்யாயி இலக்கண நூலில் ஒரு இலக்கண விதியில் இருந்து ஒரு சில வார்த்தைகள் அதற்கு அடுத்த அடுத்த விதிகளுடன் சேர்க்கப் படுவது அனுவ்ருத்தி என்று அழைக்கப் படுகிறது. இந்த வார்த்தைகளின் உபயோகம் கங்கை பிரவாகம் போல (गङ्गास्रोतोवत्) தடையின்றி வரிசையாக அடுத்த விதிகளுக்கு உபயோகப் படலாம். அல்லது தவளைப் பாய்ச்சலாக (मण्डूकप्लुत्यानुवृत्ति) ஒரு விதியில் இருந்து வார்த்தைகள் அடுத்த சில விதிகள் தாண்டி வேறொரு விதி வாக்கியத்தில் உயயோகப் படலாம். சில அரிய நிகழ்வுகளாக ஒரு விதியின் சில வார்த்தைகள் பின்னோக்கி சென்று இதற்கு முன்பு கூறப்படும் விதியிலும் இணையலாம். (सिंहावलोकनम् – சிங்கம் திரும்பிப் பார்ப்பது போல).
அனுஸ்வரம் (अनुस्वर)தேவநாகரி லிபியில் ஒரு சொல்லில் ங், ஞ், ண் போன்ற அநுநாஸிக எழுத்துக்களை குறிக்க, அதற்கு முதல் எழுத்தின் மேலே புள்ளி வைப்பது வழக்கம். இது அனுஸ்வரம் எனுப்படுகிறது.
அந்யோந்யாஸ்²ரய (अन्योन्याश्रय)ஒரு விதியை புரிந்து கொள்ள இன்னொரு விதியும் அந்த விதியை புரிந்து கொள்ள முதல் விதியும் தேவைப் படுமானால் அது அந்யோந்யாஸ்²ரய எனப்படும். இது ஒரு தோஷம்.
அபா⁴வ (अभाव)மறைந்து போதல், இல்லாமல் ஆதல்
அல்பப்ராண(अल्पप्राण)உச்சரிக்க குறைந்த அளவு மூச்சுக் காற்றுத் தேவைப்படும் எழுத்துக்கள்
அவக்³ரஹ(अवग्रह)வேத சம்ஹிதைகளில், பதபாடப் பகுதியில் குறிப்பிடப் பட்டுள்ளபடி, சந்தி விதிகளின் படி சேர்ந்த சொற்கள் பிரிக்கப் படுவது அவக்³ரஹ எனப்படும்.
அவச்சே²த³ (अवच्छेद)குறை, ஒரு குறிப்பிட்ட அளவிலான பயன்பாடு.
அவயவ (अवयव)ஒரு பகுதி, அங்கம்
அவஸான (अवसान)நிறுத்தம், pause, termination
அபப்⁴ரம்ʼஸ² (अपभ्रंश)சம்ஸ்க்ருத வார்த்தைகளின் தேய்ந்த வழக்கு; வட்டார வழக்குகள் போன்றவை.
அயோக³வாஹ (अयोगवाह)அநுஸ்வரம், விஸர்க்கம், ஜிஹ்வாமூலியம் (ஹ்க..), உபத்மாநியம் போன்றவை பொதுவாக அயோக³வாஹ என்று அழைக்கப் படுகின்றது. இவ்வெழுத்துக்கள், வேறொரு எழுத்தைச் சார்ந்தே ஒலிக்கும்.
அனுஸா²ஸன (अनुशासन)பாரம்பரிய வழியில் உள்ள குறிப்பு – வழிமுறை. ஒரு விஷயத்தை ஆராய்தல்.
அந்வய (अन्वय)அந்வயம் என்பது ஒரு செய்யுள் அல்லது வாக்கியத்தை புரிந்து கொள்ள மேற்கொள்ளும் முயற்சி. இது தண்டாந்வயம், கண்டாந்வயம் என்று இரு வகை உண்டு. தண்டாந்வயம் என்பது வாக்கியத்தில் உள்ள சொற்களின் வரிசை முறையிலேயே அர்த்தத்தை புரிந்து கொள்ளுதல். கண்டாந்வயம் என்பது வாக்கியத்தில் உள்ள சொற்களை இடம் மாற்றி அர்த்தத்தை புரிந்து கொள்ளுதல்.
அபேக்ஷா (अपेक्षा)ஒரு விஷயத்தை பொருத்த வரை உள்ள விளக்கம்.
அபவாத³ (अपवाद)ஒரு விதிக்கு எதிராக விதிவிலக்கு சூத்திரம் அபவாதம் எனப்படும். விதிவிலக்கிற்கு விதி விலக்கு ஏற்படுவதும் உண்டு. அது அபவாதப்ரதிஷேதம் எனப்படும்.
அவ்யய (अव्यय)ஆண்பால், பெண்பால் போன்ற எந்த பாலினமாக இருந்தாலும், எந்த காலத்திலும், எந்த வேற்றுமையிலும் மாறாமல் இருப்பது அவ்யயம் ஆகும். இதற்கு காசிகாவில் ஒரு விளக்கம் ஸ்லோக வடிவில் உள்ளது:

सदृशं त्रिषु लिङ्गेषु, सर्वासु च विभक्तिषु |
वचनेषु च सर्वेषु यन्न व्येति तदव्ययम् ।
ஆக்²யாத (आख्यात)தாது (வேர்ச்சொல்) அல்லது வினைச்சொல்
ஆத்மநேபதி³ (आत्मनेपदि)வினைச்சொற்களில் ஒரு வகை. மற்றொரு வகை பரஸ்மைபதி. ஆத்மநேபத வினைகளில், அந்த வினையின் பயன் செய்பவரையே சேருவதாக இருக்கும் என்று கூறப் படுகிறது.
ஆதே³ஸ² (आदेश)ஒரு சொல்லின் இடத்தில் அதற்கு பதிலாக வேறொரு சொல் பயின்று வருவது ஆதேசம் ஆகும்.
ஆக்²யாத (आख्यात)தாது (வேர்ச்சொல்) அல்லது வினைச்சொல்
ஆஸ்ய (आस्य)உடலில் சொல் உருவாகும் இடம் (தொண்டை, மூக்கு போன்றவை)
இத் (इत्)பேச்சு மொழியில், வழக்கத்தில் இல்லாத வகையில் இலக்கணத்தை இயற்றும் வசதிக்காக ஒரு சொல்லுடன் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்கள் சேர்க்கப் படும் போது அவை இத் எனப்படும்.

உபதே³ஸ² (उपदेश)
முதன் முதலில் ஒரு ஆசிரியரால் உபதேசிக்கப் பட்டது. சம்ஸ்க்ருத இலக்கணத்தில் பாணினி, காத்யாயனர், பதஞ்சலி, ஆகிய மூன்று முனிவர்களும் கூறியவை உபதேசம் எனப்படுகிறது.
உபஸர்க³ (उपसर्ग)சொற்களின் முன்னால் சேர்க்கப்படும் சிறிய முன்னொட்டு (prefix). உபசர்க்கங்கள், வேர்ச்சொல்லின் அர்த்தத்தில் இருந்து முற்றிலும் மாறான அர்த்தத்தையும் கூட தரக்கூடும். இதை விளக்க கீழ்க்கண்ட ஸ்லோகம் பொதுவாக குறிப்பிடப் படுகிறது.
उपसर्गेण धात्वर्थो बलादन्यत्र नीयते।
प्रहार-आहार-संहार-विहार-परिहार वत् ।।

உபஸர்கே³ண தா⁴த்வர்தோ² ப³லாத³ன்யத்ர நீயதே|
ப்ரஹார-ஆஹார-ஸம்ʼஹார-விஹார-பரிஹார வத் ||
உப⁴யபதி³ன் (उभयपदिन्)ஆத்மநேபதம் மற்றும் பரஸ்மைபதம் இரண்டிலும் இடம் பெரும் வினைச்சொற்கள் உபயபதம் எனப்படும்.
உத்ஸர்க³ (उत्सर्ग)பொது விதி, இதற்கு விதி விலக்கு அபவாதம் எனப்படுகிறது.
உபமா (उपमा)ஒப்பீடு செய்யத் தகுந்த ஒரு உதாரணப் பொருள்
உபமேய (उपमेय)ஒப்பீடு செய்யப் படும் பொருள்
உபலக்ஷண (उपलक्षण)குறிப்பால் உணர்த்துதல்
ஏகாதே³ஸ² (एकादेश)இரண்டு எழுத்துக்களுக்கு பதிலாக ஒரே எழுத்து (ஏகாதேசமாக) உபயோகிக்கப் பட்டால் அது ஏகாதேசம் ஆகும்.


சம்ஸ்க்ருதத்தில் காலங்கள் (Tenses)


காலம் என்பது மாறிக் கொண்டே இருக்கிறது. யோசித்துப் பார்த்தால் நிகழ்காலம் என்று ஒன்றை சுட்டிக் காட்டுவது மிகக் கடினம். ஏனெனில் இந்த நொடி, இந்த க்ஷணம் என்று கூறும் போதே அந்தக் கணம் கடந்து சென்று இறந்த காலம் ஆகிவிடுகிறது. மனிதர்களிடையே உருவான மொழிகள் ஒவ்வொன்றிலும் இந்த காலத்தை, ஒரு செயல் நடைபெற்ற தருணத்தை வெளிப்படுத்த பலவிதமான முறைகளில் வெளிப்படுத்த வார்த்தைகள் உருவாகின்றன.
சம்ஸ்க்ருதம் போன்றதொரு செம்மையான மொழியில் செயல் நடைபெற்ற காலத்தைக் குறிப்பதொடு (Tenses) மட்டும் நின்று விடாமல் அதனோடு ஆணை, ஆசி, எதிர்பார்ப்பு போன்ற செயலுக்கு பின்னுள்ள மனநிலையையும் (Moods) குறிப்பிடும் வகையில் வினைச்சொல் அமைப்பு அமைந்துள்ளது.
சம்ஸ்க்ருதத்தில் மொத்தம் ஏழு விதமான காலங்கள் (Tenses) உள்ளன. இது தவிர ஒரு செயலைப் பற்றிச் சொல்லும்போது என்ன விதமான மனநிலையுடன் நிகழ்த்தப் படுகிறது என்பதையும் வெளிப்படுத்தும் விதமாக மூன்று விதமான மனநிலைகள் (Moods) உள்ளன. ஆக சம்ஸ்க்ருதத்தில் ஒரு செயலைப் பற்றி கூறும்போது மொத்தம் பத்து விதமாக கருத்தை வெளிப்படுத்த இயலும்.
वर्तमाने लट् (3.2.123), परोक्षे लिट् (3.2.115), अनद्यतने लुट् (3.3.15), लृट् शेषे च (3.3.13), लिङ्र्थे लेट् (3.4.7), विधिनिमन्त्रणाऽमन्त्रणाधीष्टसंप्रश्नप्रार्थनेषु लिङ् (3.3.161), लोट् च (3.3.162), अनद्यतने लङ् (3.2.111), आशिषि लिङ् लोटौ (3.3.173), लुङ् (3.2.110), लिङ्निमित्ते लृङ् क्रियाऽतिपत्तौ (3.3.139) ஆகிய பாணிநீய சூத்திரங்கள் காலங்களைப் பற்றியவை.
பாணினியின் இலக்கண சூத்திரங்களில் மிகச்சுருக்கமாக இந்த காலங்களைப் பற்றி குறிக்க வேண்டி, இவற்றின் பெயர்களை இறந்தகாலம் (भूतकाल:), நிகழ்காலம் (वर्तमान काल:) என்று நீண்ட பெயர்களாகச் சொல்லாமல் இரண்டே எழுத்து பெயர்களாக லட், லங் என்று பெயரிட்டுள்ளார். இவை அனைத்தும் ல என்கிற எழுத்தில் துவங்குவதால் லகாரங்கள் என்று பெயர் பெறுகின்றன. பாணினி இலக்கணம் தவிர்த்த வேறு சம்ஸ்க்ருத இலக்கண முறைகளில் இவ்வாறாக காலங்களுக்கு ஈரெழுத்து பெயர்கள் இடும் முறை இல்லை.
tenses
லட் (நிகழ்காலம்), லிட் (நேரில் பார்க்காத இறந்த காலம்), லங் (இன்றைக்கு முன் நிகழ்ந்த இறந்த காலம்), லுங் (சாமான்ய இறந்த காலம்), ல்ருட் (சாமான்ய எதிர்காலம்), லுட் (இன்றல்லாத எதிர்காலம்), ல்ருங் (நிபந்தனை அடிப்படியிலான எதிர்காலம்) ஆகிய காலங்களும், லேட் (விருப்பம்), லிங் (விதி லிங், ஆஸி லிங் – ஆணை, கோரிக்கை போன்றவை), லோட் (ஏவல்/கோரிக்கை) ஆகிய மனநிலைக் குறிப்புகளும் (moods) ஆக லகாரங்கள் அமைந்துள்ளன.
லங், லிங் என்றெல்லாம் நினைவில் வைத்துக் கொள்வது கடினம், அதை சுலபமாக்க ஒரு வழி உண்டு. அதாவது அ, இ, உ, ரு, ஏ, ஒ ஆகிய எழுத்துக்களுடன் ல்-ஐ முதலிலும், ட்-ஐ இறுதியிலும் சேர்க்க ஆறு காலங்கள் கிடைத்துவிடும். (லட், லிட், லுட், ல்ருட், லேட், லோட்). அதே போல அ, இ, உ, ரு வுடன் ல்-ஐயும், ங்-ஐயும் முறையே முன்னும் பின்னும் இணைக்க மீதமுள்ள நான்கும் கிடைக்கும் (லங், லிங், லுங், ல்ருங்).
மேலும் சுலபமாக நினைவில் வைக்க எல்லா லகாரங்களையும் தொகுத்து கூறும் விதமாக ஸ்லோகம் ஒன்று உண்டு:
लट् वर्तमाने लेट् वेदे भूते लुङ् लङ् लिटस्तथा ।
विध्याशिषौ लिङ्लोटौ लुट् लृट् लृङ् च भविष्यतः ॥
***
லட் (वर्तमाने लट् ) – Present
நிகழ்காலத்தைக் குறிக்கும் லட் லகாரம். உதாரணம்: देवदत्त: गच्छति (தேவதத்தன் செல்கிறான்) என்பன போன்ற வாக்கியங்கள். அதே போல என்றும் மாறாத தன்மையுடையவற்றைச் சொல்லும் போதும் லட் லகாரம் உபயோகிக்கப் படுகிறது. உதாரணம்: पर्वता: सन्ति | आत्मा अस्ति |. மலைகள் எத்தனையோ காலங்களாக இருக்கின்றன. அவற்றைப் பற்றி சொல்லும் போது லட் லகாரமே உபயோகிக்கப் படுகிறது. வர்த்தமானம் என்பது இருப்பு, தற்சமயம் இருப்பது என்று பொதுவாக அர்த்தம். இதனை நான்கு விதமாக பிரிக்கிறார்கள்:
प्रवृत्तोपरतश्चैव वृत्तविरत एव च
नित्यप्रवृत्त: सामीप्यो वर्तमानश्चतुर्विध: ||
  • प्रवृत्तोपरत – முன்பே துவங்கி தற்சமயம் தொடருகிற நிலை உதா: मांसं न खादति 
  • वृत्तविरत – தற்சமயம் நடைபெற்றுக் கொண்டு, இனியும் தொடர்கிற நிலை உதா: बाला: क्रीडन्ति 
  • नित्यप्रवृत्त: – எப்போதோ துவங்கி இனி எக்காலத்துக்கும் தொடரும் நிலை உதா: मेरु: तिष्ठति 
  • सामीप्य: – இன்னும் சில நொடிகளில் அடையப் போகிற நிலை உதா: ओदन: सिद्ध: भवति
***
லிட் (परोक्षे लिट्) – Perfect
பேசுபவர் நேரில் பார்க்காத, இறந்த காலத்தில் நடந்த, ஒரு நிகழ்வைப் பற்றிக் கூறும்போது அதற்கு லிட் லகாரம் உபயோகிக்க வேண்டும்.
சகார (चकार) – அவன் செய்தான்,
பபூவ (बबूव) – ஆனான் ஆகியவை லிட் வகையை சேர்ந்தவை.
रामो नाम: राजा बभूव |
இதில் தன்னிலை வினைச்சொற்கள் அமையுமா என்ற விசாரணை இலக்கண ஆசிரியர்களால் எழுப்பப் பட்டு பதிலும் சொல்லப் படுகிறது. ஒருவர் தன் நினைவோடு ஒரு நிகழ்ச்சியை பார்க்காதவராகவோ, செய்யாதவராகவோ இருக்கக் கூடும். சுயநினைவின்றி ஒரு செயலை செய்திருக்கக் கூடும். அதைப் பற்றி பேசுகையில் தன்னிலையில் லிட் பயன்படுத்த முடியும்.
ஸுப்தோ (அ)ஹம்ʼ கில விலலாப (सुप्तो ऽहं किल विललाप)
தூங்கும்போது நான் புலம்பினேன்
இங்கே புலம்பியது சுயநினைவில் அல்ல என்பதால் பரோக்ஷ லிட் காலத்தில் அடங்கும்.
ஒருவர் தான் செய்த செயலை மறுக்கும் போதும் லிட் லகாரம் உபயோகிக்கலாம்.
நா(அ)ஹம்ʼ கலிங்கா³ன் ஜகா³ம| (नाऽहं कलिङ्गान् जगाम।)
நான் கலிங்கத்துக்கு போனதே இல்லை.
ஜகாம என்பது தன்னிலையில் உள்ள லிட் லகார சொல்.
***
லங் (अनद्यतन भूते लङ्) – Imperfect
இன்றைய நாள் தவிர்த்த இறந்த காலம். ஹ்ய: வ்ருʼஷ்டி: அப⁴வத் |(ह्य: वृष्टि: अभवत् |) நேற்று மழை பெய்தது.
அதே சமயம், இன்றோ அல்லது நேற்றோ என்று சேர்த்து சொல்லும் பொது லங் லகாரம் வராது, லுங் வரும். அதே போல அண்மையில் நிகழ்ந்த செய்தி, அது எல்லோரும் அறிந்த ஒன்றாக இருப்பின், பேசுபவர் நேரில் பார்க்காத போதும் அது லங் லகாரத்திலேயே அமையும்.
த³ஸ²ரத²: நாம ராஜா அப⁴வத் | (दशरथ: नाम राजा अभवत् |)
தசரதர் என்ற ராஜா இருந்தார்.
பா³ல: து³க்³த³ம் அபிப³த் | (बाल: दुग्दम् अपिबत् | )
குழந்தை பால் அருந்தியது.
பொதுவாக இறந்த, நிகழ், எதிர் காலங்கள் தான் பல மொழிகளில் காணப்படுகிறது. சம்ஸ்க்ருதத்தில் தான் இன்று நடந்த நிகழ்வு (अद्यतन), இன்று அல்லாத (अनद्यतन) என்று இரு வேறுபாடுகள் இறந்த காலத்திலும், எதிர்காலத்திலும் உண்டு. அதாவது இன்று அல்லாத இறந்த காலம், இன்றைய இறந்த காலம், இன்று அல்லாத எதிர்காலம், இன்றைய எதிர்காலம் என்று நான்கு வகை உண்டு.
***
லுங் (भूत सामान्ये लुङ्) – இறந்த காலம்
கண்ணால் காணாத இறந்த காலம், இன்றைய நாள் தவிர்த்த இறந்த காலம் என்று ஏற்கனவே இரண்டு வகை பார்த்தோம். இரண்டிற்கும் பொதுவாக, எல்லா இறந்தகாலங்களையும் குறிக்க உதவுவது லுங் லகாரம். இருந்தும் இந்த வகை வினைச்சொற்களை அதன் அமைப்பை புரிந்து கொள்வது கடினம் என்பதால் அதிகம் உபயோகிக்கப் படுவது இல்லை.
அத்³ய வ்ருʼஷ்டி: அபூ⁴த் | अद्य वृष्टि: अभूत् | 
இன்று மழை பெய்தது.
ராம: நாம ராஜா அபூ⁴த் | राम: नाम राजा अभूत् |
ராமன் என்ற ராஜா இருந்தார்.
***
லுட் (अनद्यतन भविष्यति लुट्) – First Future
இன்றைய நாளைத் தவிர்த்த எதிர்காலம். பொதுவான எதிர்காலம் ல்ருட் லகாரத்தில் குறித்தாலும் இன்றைய நாளைத் தவிர்த்த ஒரு தினத்தில் நடப்பதை குறிக்க இந்த லுட் லகாரம் வரும். श्व: वृष्टि: भविता |
அதே சமயம் ஒரே சொல்லில் இன்றைக்கோ நாளைக்கோ என்று இரு தினங்களும் குறிக்கும் பொது லுட் லகாரம் பயன்படுத்தப் படமாட்டாது – अद्य: श्व: वा गमिष्यति | (இன்றோ அல்லது நாளையோ என்பதில் லுட் லகாரம் வாராது).
மேலும் எதிர்கால வருத்தத்தினைக் குறிக்கவும் லுட் லகாரம் வரும்.
इयं नु कदा गन्ता, या एवं पादौ निदधाति।
இயம்ʼ நு கதா³ க³ந்தா, யா ஏவம்ʼ பாதௌ³ நித³தா⁴தி|
இப்படி மெதுவாக நடப்பவள் எப்போது போவாள்?
अयं नु कदा ऽध्येता, य एवम् अनभियुक्तः।
அயம்ʼ நு கதா³ (அ)த்⁴யேதா, ய ஏவம் அனபி⁴யுக்த​:|
இப்படி கவனமில்லாமல் இருப்பவன் எப்போது படிப்பான்?
***
ல்ருட் (भविष्यति सामान्ये लृट्) – Second Future
எல்லா எதிர்கால (Simple future) வினைகளுக்கும் பொதுவாக உபயோகிக்கப் படும் லகாரம் இது.
உதா: श्व: गुरुवासर: दीपावली भविष्यति |
***
ல்ருங் (हेतुहेतुमद् भविष्यति लृङ्) – Conditional
ஒரு செயல் நடைபெற்றிருந்தால் என்கிற நிலையில் எதிர்காலத்தைப் பற்றி பேசுவது. பொதுவாக यदि… तर्हि ஆகிய வற்றுடன் இணைந்தே இந்த கால வினைகள் இடம் பெரும்.
உதா: यदि वृष्टि: अभविष्यत् तर्हि सुभिक्षम् अभविष्यत् |
***
லோட் – (लोट्) – Imperative
ஆணை அல்லது கோரிக்கை
ஆணை, கோரிக்கை ஆகிய மனநிலைகளில் லோட் லகாரம் உபயோகிக்கப் படுகிறது. இது லிங் லகாரத்தைப் போன்றே அமைந்தாலும் சிறு வேறுபாடுகளே இவற்றின் நடுவில் உள்ளது.
ப⁴வான் க்³ராமம்ʼ ஆக³ச்ச²து (भवान् ग्रामं आगच्छतु)
நீங்கள் கிராமத்துக்கு வாருங்கள்
அத்ர திஷ்ட²து (अत्र तिष्ठतु)
இங்கே இருங்கள்
***
விதி⁴நிமந்த்ரணாமந்த்ரணாதீ⁴ஷ்டஸம்ப்ரஸ்²நப்ரார்த²நார்தே²ஷு லிங் – (विधिनिमन्त्रणामन्त्रणाधीष्टसंप्रश्नप्रार्थनार्थेषु लिङ्) – Potential & Benedictive
விதி, அழைப்பு (நிமந்தரண), அனுமதி (ஆமந்தரண), மரியாதையுடன் விருப்பத்தை தெரிவித்தல் (அதீ⁴ஷ்ட), வினா எழுப்புதல் (ஸம்ப்ரஸ்ந), வேண்டுதல் (ப்ரார்தநா) ஆகிய மனநிலைகளில் உபயோகிக்கப் படுவது லிங் லகாரம்.
இதில் இரண்டு வகை உண்டு.
  • விதி லிங் (विधि लिङ्) ஆணை, கோரிக்கை, வேண்டுதல் ஆகியவை உதா: भवान् मम सहचरो भवेत् | – நீங்களே என் நண்பராக ஆகட்டும்.
  • ஆசி லிங் (आशिष् लिङ्) – ஆசீர்வாதம் செய்யும் மனநிலை உதா: तव कल्याणं भूयात् | உங்களுக்கு நன்மை உண்டாகட்டும்.
***
லேட் (लिङर्थे लेट्) – Subjunctive (is used only in vedas)
வேதத்தில் விருப்பம்/ஆசீர்வாதம் செய்வது போன்ற மன நிலையில் உபயோகிக்கப் படுகிறது. லௌகிக சம்ஸ்க்ருதத்தில் இதன் பயன்பாடு இல்லை.
பதாதி வித்³யுத் (पताति विद्युत् |) – மின்னல் விழட்டும்
ஜீவாதி ஸ²ரத³: ஸ²தம் (जीवाति शरद: शतम्) – நூறு ஆண்டு வாழட்டும்
***
இவ்வாறு ஒரு வினையை பலவிதமாக லௌகிக சம்ஸ்க்ருதத்தில் சொல்ல முடியும். ஒரு வேர்ச்சொல் ஏழு காலங்கள், மூன்று மனநிலைக் குறிப்புகள், தன்மை – முன்னிலை போன்ற மூன்று திணைகள், அவற்றில் ஒருமை, இருமை, பன்மை என தொண்ணூறு விதங்களில் மாறுகிறது. இவ்வளவு கடினம் எதற்கு என்றால், அதுதான் மொழியின் உச்சம். அதன் அழகு. ஒரு செய்தியை வெளிப்படுத்த இத்தனை வாய்ப்புகளை கொட்டி கொடுக்கிறது இந்த மொழி. புதிய புதிய சொற்கோவைகள் உருவாவதற்கு ஏற்ற மொழியாக, எல்லா மொழிகளுக்கும், எல்லாக் காலத்திலும், எல்லா வகை சிந்தனைகளுக்கும் உதவுவதாக இருப்பதே சம்ஸ்க்ருதத்தின் சிறப்பு.








Tuesday 24 April 2018

ஆஸிபா யாரால் கொலை?

ஆசிபா கொலையின் மர்ம முடிச்சுகள்! நடந்தது என்ன? ஒரு கள ஆய்வு!


கத்துவாவிலிருந்து நேரடி கள ஆய்வு: விசாரணையின் முடிவை கிராமத்துவாசிகளால் ஏன் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை? மிக விரிவான அலசல்.
இதுவரை கத்துவா வழக்கு சந்தித்த திருப்பங்களையும், ஜம்மு & காஷ்மீர் குற்றக்கிளையின் மூலம் பதிவு செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் எழுப்பப்பட்ட கேள்விகளையும் அது சார்ந்த உண்மைகள் அனைத்தையும் மிக விரிவாக கள ஆய்வு செய்து இங்கே தொகுத்துள்ளோம்.
சஞ்சி ராம், ஆறு சகோதரிகளுடன் பிறந்த ஒரே சகோதரன், திருமணமான இரண்டு பெண்களுக்கு தகப்பன். பெண்கள் சூழப்பிறந்து வளர்ந்த இந்த நபர் தான் இன்று இந்திய தேசத்தின் நினைவில் இருந்து அகலாத அரிதினும் அரிதான குற்றத்தை ஒரு சிறு பெண் குழந்தைக்கு எதிராக ஒரு கோஷ்டியுடன் நிகழ்த்தியிருக்கிறான்
என்று குற்றம் சுமத்தப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை அந்த பகுதியை விட்டு விரட்டவும், அவர்களுக்குள் ஒரு பயத்தை விதைக்கும் விதமாகவும், குஜார்-பக்கெர்வல் என்கிற நாடோடி இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த 8 வயது சிறுமியை எந்த வித இரக்கமுமின்றி, மிக வன்மையான முறையில் கடத்த
திட்டமிட்டிருக்கிறான். அந்த கேவலமான திட்டத்தை செயல்படுத்தியதன் மூலம் அவனின் ஒழுக்கக்கேடான பண்பு கண்டனத்திற்குரியதாகிறது.
சஞ்சி தன்னுடைய குல தெய்வங்களின் உறைவிடமான தேவஸ்தானத்தை இந்த குற்றத்திற்கு தேர்ந்தெடுத்ததன் மூலம் இந்த குற்றம் மேலும் புத்துயிர் பெற்று சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இந்த புனித இடத்தில் அவன் பல ஆண்டுகளாக பூசாரியாக இருந்து வந்துள்ளான். அத்துடன் கதை முடிந்துவிடவில்லை. தன்னுடைய சகோதரி மகனை இந்த குற்றத்தின் கதாநாயகனாக சேர்த்து கொண்டிருக்கிறான். இவருடைய மகன் தூரத்திலிருக்கும் மீருட்டில் படித்து கொண்டிருந்துள்ளான். இந்த குற்றத்தின் தொடர்ச்சியாக, அவனும் இந்த சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் பின்னாளில் உடந்தையாக சேர்ந்துள்ளான்.
இந்த வழக்கின் பிடி மிக இருக்கமாக அவர்களை துரத்திய போது, சஞ்சி அவனுடைய சகோதரி மகனை சிக்க வைக்க முயற்சித்தபோது; அழுத்தம் தாங்காமல் முட்டையென உடைந்து சிதறி, கத்தி கதறி அனைத்து உண்மைகளையும் அவன் காவல் துறை அதிகாரியிடம் தெரிவித்து விட்டான். இந்த வாக்குமூலம் தான்
குற்றம் சுமத்தப்பட்ட எட்டு நபர்களையும் கைது செய்ய காரணமாக இருந்தது.
சில மாதங்கள் முன்பு வரை பிரபலமாகாமல் இருந்த கத்துவா பலாத்கார வழக்கு தொடர்பாக பதியப்பட்டிருந்த குற்றப்பத்திரிக்கையில் இடம்பெற்றிருந்த அடிப்படை சம்பவம் இது தான்.


இதை அனைவரும் நம்பவில்லை. குறிப்பாக உள்ளூர் வாசிகள். அவர்களுக்கு குற்றப்பிரிவின் மீது நம்பிக்கையில்லை. மேலும் இந்த கதை காவலாளிகளால், ஶ்ரீநகர் அரசியல்வாதிகளுக்கு தகுந்தார் போல் மிகுந்த சிரத்தையுடன் நெய்யப்பட்ட ஒரு கட்டுக்கதை என்று குறிப்பிடுகின்றனர். எனவே போராட்டக்காரர்கள் இந்த வழக்கில் சிபிஐ யின் விசாரணையை கோருகின்றனர். சஞ்சி ராமின் மூத்த மகள் மதுபாலா மார்ச் 31-ஆம் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ரஸானாவின் குடியிருப்புவாசிகளும் அவருடன் சேர்ந்து கொட்டாமொத் பகுதியின் ஒரு பெரும் அரச மரத்தின் கீழ் மிக உறுதியாக இந்த போராட்டத்தை நடத்துகின்றனர். அவர்கள் கோருவது மத்திய நிறுவனத்தின் மூலம் ஒரு நியாயமான விசாரணையை.
குற்றம் மற்றும் சதித்திட்டம்: குற்றப்பத்திரிக்கையின் படி, அதில் வெளிப்பட்டிருக்கும் நிகழ்வுகளின் தொடர்ச்சி இங்கே:
ஜம்முவின் கத்துவா மாவட்டத்தின், ஹிரநகர் பகுதியில் ரஸானாவின் அழகிய மலைப்பகுதி அமைந்துள்ளது. வனப்பகுதிகளாலும் வனங்களாலும் சூழப்பட்டிருக்கும் ஒரு குறுகிய நீளத்திற்குள் நுழையும் போது ஒரு இரும்பு தகடு அப்பகுதியின் பெயரை தாங்கி நம்மை வரவேற்கிறது.
மிகவும் மெத்தனமாக இருக்கும் இக்கிராமத்தில் இது போன்ற எழிச்சியான சில செயல்பாடுகள் தீடிரென முளைப்பதற்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். அப்பகுதிக்கு வரும் வருகையாளர்கள் அங்கு அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காவல்ச்சாவடியில் கையெழுத்திட்டு உள்ளே நுழைய வேண்டியுள்ளது. அங்கு இருந்த உதவிகரமான காவலாளி ஒருவர், “பார்த்து செல்லுங்கள், கிராம மக்கள் டெல்லி பத்திரிக்கையாளர்கள் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள்” என்ற அறிவுரையுடன் உள்ளே அனுப்பினார்.
வெறும் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு சந்தினுள், வீணா தேவி என்கிற பெண்ணின் வீட்டை சென்றடைந்தோம். இவர் இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான சஞ்சியின் பக்கத்து வீட்டுக்காரர். இவர் தான் பாதிக்கப்பட்ட பெண்ணை கடைசியாக பார்த்த சாட்சியாக குற்றப்பத்திரிக்கையில் பதியப்பட்டுள்ளார். அவர் ஸ்வராஜ்யா ஆங்கில பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், அவர் இறுதியாக அந்த சிறுமியை பார்த்ததை குறித்து விளக்குகிறார். “ஆன்டி, நீங்கள் என்னுடைய குதிரையை பார்த்தீர்களா?” அதற்கு நான் “பார்க்கவில்லை” என்றேன். அதன் பிறகு அச்சிறுமி அவள் வீட்டிற்கு சென்றிருக்க வேண்டும். அப்போது கூட நான், இங்கே தனியாக என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று கடிந்துக் கொண்டேன். பின்பு பக்கத்து வீடான சஞ்சி வீட்டின் மொட்ட மாடியை பார்த்தேன். அங்கே ஒருவர் கட்டிலில் போர்வையை போர்த்தி கொண்டு உறங்கி கொண்டிருந்தார். நான் தர்சனாவிடம்(சஞ்சியின் மனைவி) யார் இந்த வெயிலில் இப்படி உறங்கி கொண்டிருப்பது என கேட்டேன். அதற்கு அவர், என் அண்ணியின் மகன் என்றார். பின் நான் என் வேலையை பார்க்க சென்றுவிட்டேன்.
(வீணா தேவி)
குற்றபத்திரிக்கையின் அறிக்கை படி, அச்சிறுமி சஞ்சி ராமின் வீட்டுக்கு பின் புறம் குதிரை மேய்க்க அடிக்கடி வருவாள் என்றும், அப்படி வரும் போது அப்பெண்ணை கடத்த வேண்டும் என்றும், அங்கு உறங்கி கொண்டிருந்த பையனின்(ஓம்பிரகாஷ் மற்றும் த்ரிப்தா தேவியின் மகன்) முன்னதாகவே தாய் மாமன் சஞ்சி ராம் அறிவுறுத்தியிருந்தான். இந்த தாக்குதலுக்கு தயாராக இருந்த அந்த பையன், சம்பவ நாளுக்கு முன் தினமே தூக்க மருந்துகளை வாங்கி வைத்திருந்தான். அத்தோடு உடனடியாக தேவஸ்தானத்தின் சாவிகளையும் எடுத்து
கொண்டு அந்த பெண்ணிற்கு காட்டில் உதவி செய்வதாக போலியான வாக்குறுதியை கொடுத்து அழைத்து வந்துள்ளான். அங்கே அவனுடைய நண்பனும், சக குற்றவாளி மனுவும் இவனுடைய சைகைக்காக காத்து கொண்டிருந்துள்ளனர்.
வீணா தேவி, அந்த பையன் மாடியில் இருந்து இறங்கி வந்ததை பார்க்கவில்லை, ஆனாலும் அவன் இறங்கிவருவதற்கான வாய்ப்பிருப்பதை மறுக்கவும் இல்லை. “அவன் அச்சிறுமியை அழைத்து, கீழே இறங்கி வந்து சந்தித்தானா என்பது எனக்கு தெரியாது” என்று கூறிய வீணாதேவி, அச்சிறுமியை அவர் காண்பது அது தான் முதல் முறை என்றும் கூறினார். “அவள் தொடர்ந்து வருபவள் அல்ல. அவள் அப்படி வருபவளாக இருந்திருந்தால் எனக்கு தெரிந்திருக்கும். அச்சிறுமியை நான் பார்ப்பது அதுவே முதல் முறை” என்கிறார்.

(வீணா தேவியின் வீட்டிலிருந்து தெரியும் மொட்டை மாடி. வாஸ்பேசின் உடன் இருக்கும் பச்சை நிற வீடு புகைப்படத்தில் தெரிகிறது. அது தான் சஞ்சி ராமின் இல்லம். அந்த மாடியில் தெரியும் கட்டிலில் தான் குற்றம்
சாட்டப்பட்ட இளம் சிறுவன்  உறங்கியிருக்கிறான்)
மற்ற கிராம வாசிகளிடம், ஸ்வராஜ்யா பத்திரிக்கையாளர்கள் பேசிய போது, அவர்களும் இதற்கு முன் அச்சிறுமியை பார்த்ததில்லை என மறுத்தனர். அச்சிறுமியின் தந்தை “மொஹமத் யுசுப்” ஒரு பேட்டியில் கூறும் போது கூட பக்கர்வால் இனத்தவர்கள் குதிரை மேய்க்க ரஸானாவிற்கு செல்ல மாட்டர்கள். ஆனால் எப்படியோ துணிந்து அவள் அங்கே சென்றுவிட்டாள்” என்று கூறியிருக்கிறார்.
இது கேள்வியின் பிறப்பிடம், அந்த பெண் அப்பகுதியில் காணப்படுவது இதுவே முதல் முறை என்றால் எப்படி அவள் சஞ்சி ராமின் குறிப்பிட்ட இலக்காக இருக்க முடியும்? வீணா தேவியின் கணவர் மஹேந்திர ஷர்மா, மும்பையில் பணியாற்றுகிறார். அவர் மனைவி குறித்து அவர் தெரிவிக்கும் போது, அவர் மனைவி அவருடன் தொலைபேசியில் உரையாடுகையில் மூன்று முறை அச்சிறுமி குறித்து வீணா பேசியுள்ளார். ஒன்று ஜனவரி 10-ஆம் தேதி, அவர் மனைவி அச்சிறுமியை கண்ட போது. அடுத்து 11 ஜனவரி, அச்சிறுமியின் தாய் அவர் மகளை
தேடி வந்த போது மற்றொன்று 17 ஜனவரி அச்சிறுமியின் உடல் கிடைத்த போது”. அது மட்டுமின்றி “நம்முடைய குழந்தைகள் 10 நிமிடம் தாமதித்தாலே நம் மனத்தை நாம் முற்றிலுமாக தொலைத்துவிடும் சூழலில் இப்படி ஒரு நாள் கழித்து வந்து தேடுகிறீர்களே” என்று நான் அச்சிறுமியின் தாயை கண்டித்தேன் என வீணா தேவி
குறிப்பிட்டுள்ளார்.
வீணா தேவி நினைவு கூர்ந்து சொல்லும் போது, அச்சிறுமி மிக அழகாக இருந்ததாகவும். “ஜமுனி” என்கிற சல்வார் கமீஸ் வகையான ஆடையை அணிந்திருந்ததாகவும் தெரிவித்தார். அச்சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்ட போதும் அவர் அதே உடையில் தான் இருந்துள்ளார். இவ்வழக்கின் வழக்கறிஞர், அங்கூர் சர்மா இது குறித்து சர்ச்சையான ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார். அச்சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்ட போது, எந்த உடையில் இருந்தாரோ, அதே உடையணிந்த புகைப்படம் அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது. இதை பார்க்கிற போது, யாரோ அலுவல் ரீதியாக அந்த புகைப்படத்தை அச்சிறுமி கொலை செய்யப்படுவதற்கு முன்பாகவே எடுத்திருப்பார்களா? அப்படியெனில் ஏன்? என்ற கேள்வி எழுகிறது.
ஆனாலும் கிராமப்புறவாசிகள் தெரிவிப்பது, பக்கர்வல் குழந்தைகளிடம் வெறும் ஒன்று அல்லது இரண்டு ஆடைகள் இருப்பது ஒன்றும் ஆச்சரியமான ஒன்றல்ல என்கின்றனர். ஆனாலும் அவர்கள், அப்பெண்ணின் தாய்,
அக்குழந்தையின் பள்ளி சீருடையுடன், புத்தக பையுடன் இருப்பது போல் வைரலாகியுள்ள புகைப்படம் குறித்து கேள்வி எழுப்புகின்றனர். காரணம், “எங்களுக்கு தெரிந்து அந்த பெண் எந்த பள்ளிக்கும் சென்றதில்லை.
அப்படியெனில் அந்த பள்ளி சீருடை எங்கிருந்து வந்தது?” அச்சிறுமியின் தந்தை யூசுப் அவருடைய இரண்டு மகன்களை பள்ளிக்கு அனுப்பினாரே தவிர, தத்து பிள்ளையான இச்சிறுமியை பள்ளிக்கு அனுப்பவில்லை. அவள் குதிரைகளை மேய்த்து கொண்டு தான் இருந்தாள்” என்கின்றனர் உள்ளூர்வாசிகள்.
குற்றப்பத்திரிக்கை அறிக்கையில், சஞ்சி ராமின் உறவினர் மகன், அச்சிறுமி அவள் குதிரையை குறித்து வீணா தேவியிடம் கேட்டதை ஒட்டுக் கேட்டிருக்கிறான். அதன் பின் கீழே இறங்கி சென்று அச்சிறுமிக்கு உதவியிருக்கிறான். கொஞ்ச நேரத்திற்கு பின் பொது மக்கள் பார்வைப்படாத இடத்தில், அவனுடைய நண்பன் மனு அச்சிறுமியை பிடித்து கொள்ள, அவள் மீது வன்முறையாக மயக்க மருந்துகளை பூசியிருக்கிறான். பின் அச்சிறுவன் அச்சிறுமியை பலாத்காரம் செய்திருக்கிறான்; மனு முயற்சித்துள்ளான் ஆனால் முடியவில்லை. பின்பு
இருவரும் அவளை தேவஸ்தானத்திற்க்கு அழைத்து சென்று அங்கேயே இரண்டு நாட்கள் வைத்திருந்துள்ளனர்.

(சஞ்சி ராம் வீட்டிலிருந்து தேவஸ்தானத்திற்கு (ரோஸ் வண்ணத்தில் இருப்பது) செல்லும் மண் பாதை. இந்த முழுமையான பாதையின் முடிவில் இடது புறம் திரும்பும் இடத்தில் தான் ஜகதீஸ் ராஜ் என்பவரால் ஆச்சிறுமியின்
உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. )
இந்த தேவஸ்தானத்திலிருந்து இரண்டு நிமிட நடையில் சஞ்சி ராமின் இல்லத்தை அடைந்துவிடலாம். அவர் வீட்டு முற்றத்திலிருக்கும் கதவை திறந்தால் அது பிரதான சாலைக்கு வழிவகுக்கும். அவர் இல்லத்தில்
ஓரத்திலிருக்கும் கதவை திறந்தால் இந்த மண் சாலை தெரியும் இதுவே தேவஸ்தானத்திற்க்கு அவர் வீட்டிலிருந்து செல்லும் பாதை. இது அடிப்படையில் வனத்திற்கு நடுவே அமைந்திருக்கும் ஒரு அறை. இங்கிருந்து பார்த்தால் தெரிகின்ற ஒரே வீடு சஞ்சி ராமினுடையது. ரோஸ் நிற சுவருகள், மூன்று கதவு,
சிமெண்ட் தரை, பம்ப், பெரிய டின் ஷெட்டால் போர்த்தப்பட்ட கட்டிடம். இந்த தேவஸ்தானம் நாங்கள் சென்ற போது மூடியிருந்தது. எங்களுடன் வந்துக் கொண்டிருந்த சில உள்ளூர் வாசிகள் சாவிகளுக்கு ஏற்பாடு செய்தனர். உள்ளே ஒரு புறத்தில் சில சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. அதனோடு குல தெய்வத்தின் புகைப்படமும் இருந்தது (காளிவீர் என்பது பெயர், ஒரு மனிதர் குதிரையின் மீது உட்கார்ந்திருப்பதை போன்ற புகைப்படம்) மற்றொரு புறத்தில் இரண்டு டிரம்முகள் இருந்தன. அதில் மளிகை பொருள் சர்க்கரை, அரிசி போன்றவை நிரப்பி வைக்கப்பட்டிருந்தன. அங்கே ஒரு மேஜையும் அதன் மேல் சில பாத்திரங்களும், மிக சுத்தமாக போர்த்தப்பட்ட பாயும் இருந்தது. 4 X 3 என்ற அளவிலான மேஜையின் கீழ் தான் ப்ளாஸ்டிக் மற்றும் பஞ்சு பாயினால் சுற்றப்பட்டு அச்சிறுமி வைக்கப்பட்டிருந்தாள் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதை பார்க்கிற பொழுது ஒரு சிறுமியை மற்றவர் கண்ணில் படாமல் மறைத்து வைக்கின்ற அளவிற்கான மேஜையாக அது இல்லை. மிக சிறிதாக இருந்தது.
சஞ்சி ராம் இந்த தேவஸ்தானத்தின் மூன்று சாவிகளை வைத்துள்ளார். மற்ற இரண்டு சாவிகளும் சம்பவம் நடந்த இக்கிராமத்திற்கு அருகே இருக்கும் பாட்டா மற்றும் கூட்டாக் என்ற மற்ற இரண்டு கிராமத்தில் இருந்துள்ளது. அவர்களும் இவர்களின் வம்சவாளியை சார்ந்த குடும்ப உறுப்பினர்களே.
மற்ற கிராமத்தார்களுக்கு தெரியாமல் அச்சிறுமியை இந்த அறையில் இரண்டு நாட்கள் வைத்திருப்பது சாத்தியமா? இது ரஸானா கிராமத்து மக்களும் மற்ற இரண்டு கிராமத்து மக்களும் வந்து செல்ல முடியாத வண்ணம் அத்தனை ஒதுக்கு புறமாக இருந்துள்ளது? அல்லது மொத்த கிராமமும் இந்த சதி திட்டத்தில்
பங்கு உள்ளதா?
நாங்கள் அந்த தேவஸ்தானத்தில் மதிய நேரத்தில் ஒரு மணி நேரத்தை செலவு செய்தோம். அச்சமயத்தில் அங்கே எங்களை தவிர யாரும் வரவில்லை. ஆனாலும் கிராமத்துவாசிகள், “அனைவரும் அதிகாலை பொழுதில் ஒரு நாளின் துவக்கத்தில் இங்கு வருவது தான் வழக்கம்” என்று சொன்னார்கள். அப்போது சிலைகளின்
பக்கத்தில் விளக்குகள் முன்னமே எரிந்து கொண்டிருந்தன.
குற்றப்பத்திரிக்கையின் அறிக்கை படி ஜனவரி 13, பின் மாலை பொழுது, லொஹரி பண்டிகை நாளில், சஞ்சி ராம் அவனுடைய உறவினர் சிறுவன், மற்றும் அவர் மகன் விஷால் ஜங்கோத்ரா பின் மனுவிடம் இது தான் அப்பெண்ணை கொல்ல சரியான தருணம் என கூறியதாகவும்; பின்பு அப்பெண்ணின் உடலை அருகிலுள்ள பாலத்திற்க்கு விரைந்து எடுத்து சென்றதாகவும் அப்போது அவர்களுடம் 28 வயதான காவல் அதிகாரி தீபக் குஜூரியாவும் இந்த குற்றத்தில் இணைந்து கொண்டு, அப்பெண் கொல்லப்படுவதற்கு முன் அவளை பலாத்காரம் செய்ய விரும்பவதாக தெரிவித்ததாகவும் அறிக்கை சொல்கிறது. அந்த காவலதிகாரி அப்பெண்ணை அழுத்தி
கொலை செய்ய முயற்சித்து தோல்வி அடைந்ததாகவும் பின் அந்த வேலையை சஞ்சி ராமின் உறவினர் மகன் “அச்சிறுமியின் முதுகில் கால் மூட்டை அழுத்தி கொன்றதாகவும்”, மேலும் அவள் தலையில் இரண்டு முறை கல்லால் தாக்கி கொலை செய்ததாகவும் சொல்லப்படுகிறது. (28 வயதான, முறையாக பயிற்சி பெற்ற
காவலதிகாரி செய்ய முடியாத ஒரு வேலையை, அவர் வயதில் பாதியிருக்கும் அச்சிறுவன் செய்திருப்பது நம்ப கடினமாக உள்ளது).
இந்த கோரமான செயலுக்கு பின் அச்சிறுமியின் உடல் அங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹிரா நகரில் கால்வாயில் வீசுவதற்கு தேவையான வாகனத்தை ஏற்பாடு செய்ய முடியாததால், அச்சிறுமியின் உடல் தேவஸ்தானத்தில் வைக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஜனவரி 15 அன்று சஞ்சி ராம்
அவன் சகாக்களிடம் வாகனத்தை அன்றளவும் ஏற்பாடு செய்யமுடியாததால் அச்சிறுமியின் உடல் அருகிலுள்ள காட்டில் புதைக்கப்பட வேண்டும். ஏனெனில் அடுத்த நாள் சஞ்சி ராம் “ஃபான்டா” என்ற சடங்கை கோவிலில் நிகழ்த்த வேண்டியிருப்பதாக தெரிவித்துள்ளான். ஃபான்டா என்றால் வந்திருக்கும் மனிதருக்கு பூசாரி திருஷ்டி கழிப்பதை போன்ற ஒரு சடங்கு. இந்த சடங்கை தொடர்ந்து “பாந்த்ரா” நடைபெறுவது வழக்கம். பாந்த்ரா என்றால் அன்னதானம்.
குற்றப்பத்திரிக்கை அறிக்கையின் படி, சஞ்சி ராம் காவலாளிகளை தன் கைவசம் வைத்திருந்தார் என்றும். உள்ளூர் காவல் நிலையத்தின் அதிகாரியாக இருந்த தீபக் கஜூரியாவிற்க்கும் அச்சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்டதில் ஒரு பங்கு உள்ளது என குற்றம் சாட்டப்படுகிறது. மற்ற காவலாளிகளான திலக் ராஜ்
மற்றும் ஆனந்த் தத்தாவுக்கு 4 இலட்சம் இலஞ்சம் வழங்கப்பட்டு அவர்கள் சரி செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப்பத்திரிக்கையின் அறிக்கை படி, த்ரிப்பதா தேவி(சஞ்சி ராம் சகோதரி) சஞ்சி ராமின் இல்லத்திற்க்கு ஜனவரி 12 அன்று வந்துள்ளார். அங்கே சஞ்சி தன் சகோதரியிடம் அவர் மகன் உடந்தையாக இருந்து சிறுமியை கடத்தியது பதுக்கியது என அவன் புரிந்த அனைத்து குற்றங்களையும் கூறியுள்ளார். குற்றப்பத்திரிக்கையின் படி, காவலாளி திலக் ராஜ்ஜை சிறு வயதிலிருந்தே த்ரிப்தா தேவிக்கு தெரியும் என்பதால் 1.5 இலட்சம் ரூபாயை த்ரிப்தா தேவியிடம் சஞ்சி ராம் கொடுத்து, திலக் ராஜ்ஜிடம் கொடுத்து விடுமாறு கூறியுள்ளார். ஸ்வராஜ்யா குழுமத்தினர் அவரை சந்திக்க சென்ற போது, த்ரிப்தா தேவி அவர் மீது சுமத்தப்படும் குற்றம் அனைத்தையும் மறுத்தார். “அவர்கள் குற்ற அறிக்கையில் சொல்வது போல் நான் என் சகோதரன் வீட்டுக்கு செல்வும் இல்லை. திலக் ராஜ்ஜிற்கு பணம் கொடுக்கவும் இல்லை. என் மகன் அவனுடைய மோசமான நடவடிக்கையால் அவன் பயிலும் பள்ளியிலிருந்து கண்டிக்கப்பட்டிருந்தான். அவனுக்கும் அங்கு பயிலும் மற்றொரு மாணவனுக்கும் பிரச்சனை. ஆனால் அவன் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதால் பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்டான் என்று தவறாக பதிவு செய்யப்பட்டுள்ளது. நான் அவனை என் சகோதரன் வீட்டுக்கு, அவனுடைய பொது தேர்வை சரியாக படித்து எழுதி தேர்வு பெற வேண்டும் என்பதற்காக அனுப்பினேன். அவன் அங்கே டியூசன் சென்று கொண்டிருந்தான். ஒரு தாயாக நான் எப்படி என் மகன் இப்படி ஒரு சதிச்செயலை செய்ய அனுமதிப்பேன்?
இது ஒரு தொலைக்காட்சியின் திரைக்கதை போல் உள்ளது. இது உண்மையில்லை” என்றார். அந்த சிறுவனுக்கு ஒரு மூத்த சகோதரியும் சகோதரனும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கிராமவாசிகளும் எழுப்பும் கேள்விகள்:
குற்ற அறிக்கையின் படி, சிறுமியின் உடல் காடுகளுக்கிடையே திணித்து வீசப்பட்டு ஜனவரி 17 அன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது கிராமவாசிகளிடையே பல கேள்விகளை எழுப்புகிறது.
முதலில், சிறுமியின் உடல் மூன்று நாட்களுக்கு பின் கண்டெடுக்கப்பட்ட போதும் எப்படி அதிலிருந்து எந்த துர்நாற்றமும் வரவில்லை? (ஜனவரி 13 இரவு துவங்கி, 14, 15, மற்றும் 16).
இரண்டாவது, ஏன் ஒருவரின் பார்வையில் கூட சிறுமியின் உடல் படவில்லை. குறிப்பாக 16 ஜனவரி அன்று தேவஸ்தானத்தில் பெரும் கூட்டம் கூடி ஒரு வைபத்தை நிகழ்த்திய போது?
மூன்றாவது, ஏன் ஜனவரி மாத கடும் குளிரிலும் அவ்வுடல் விரைத்துபோகவில்லை? பக்கர்வல் இன மக்களால் நடத்தப்பட்ட போரட்டத்தின் போது வைக்கப்பட்டிருந்த உடல் மிகவும் தளர்வானதாக இருந்துள்ளது.
நான்காவது, ஒழுக்கமற்ற தன் மகனை சகோதரனின் கட்டுக்கோப்பான வழிகாட்டுதலின் மூலம் நன்றாக படிப்பான் என நம்பி அனுப்பிய தன் சகோதரி மகனை எதற்காக சஞ்சி ராம் வரிசையான குற்றங்களில் மாட்டி விட வேண்டும். தன்னுடைய சகோதரன் மனத்தில் இப்படியொரு எண்ணம் இருப்பது தெரிந்திருந்தால் அந்த தாய் மகனை அனுப்பியிருப்பார்களா?
ஐந்தாவது, ஏன் சதித்திட்டத்தின் மூலக்காரணமானவர்கள் சிறுமியின் உடலை வெறுமனே வெளியில் வீசி செல்ல வேண்டும்? குறிப்பாக ஃபான்டா (திருஷ்டி கழித்தல் வைபவம்) நடைபெற்ற நாளிலும் அதை தொடர்ந்து கூட்டமான மக்கள் வந்து உண்டு கழித்த பாந்த்ரா(அன்னதானம்) நாளிலும்? இதற்கு அவர்கள் பூமியை
தோண்டி புதைத்திருக்கலாமே? குற்ற அறிக்கையின் படி அவர்கள் ஆதாரங்களை அழிக்க அச்சிறுமியின் உடைகளை துவைத்துள்ளனர். “இதனால் துவைத்த துணியை பரிசோதிப்பதன் மூலம் FSL ஶ்ரீநகரால் எந்த ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை.” ஆனால் ஏன் குற்றவாளிகள் துணிகளை துவைப்பதோடு மட்டும் நிறுத்திவிட்டனர்? உடலை மறைப்பதற்கு எந்த விதமான முயற்சிகளும் எடுக்கவில்லை?
ஆறாவது, 13 ஜனவரி லொஹரி நாள். ஏராளமான மக்கள் தேவஸ்தானத்திற்கு வந்திருப்பார்கள். ஏன் ஒருவர் கூட அச்சிறுமியை பார்க்கவில்லை? “அது லொஹரி நாள். அன்று அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. நாங்கள் மேஜை மேல் இருந்து “தாரிக்களை” எடுத்து தரையில் வைத்து விட்டு பின் கீழே அமர்ந்து பக்தி பாடல்கள் பாட துவங்கினோம். எனவே அச்சிறுமி மேஜைக்கடியில் வைக்கப்பட்டிருப்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லை.” என பிஷான் தாஸ் என்ற 76 வயது முதியவர், ரஸானா கிராமத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி தெரிவித்தார்.
(பிஷான் தாஸ்)
ஏழாவது, எப்படி சஞ்சி ராமின் மகன் விஷால் ஜங்கோத்ரா மீருட்டிலும் கத்துவாவிலும் ஒரே நேரத்தில் இருக்க முடியும்? குற்றப்பிரிவின் விசாரணையின் படி விஷால் ரஸானாவில் இருந்துள்ளான். ஆனால் அவன் பயிலும் கல்லூரி பதிவேட்டின் படி அவன் மீருட்டில் அதே நாளில் தேர்வு எழுதிக் கொண்டிருந்துள்ளான். அவனுடைய மூத்த சகோதரி மோனிகா, விஷாலின் இன்ஸ்டாகிராம் பதிவுகளை நம்மிடம் காட்டி அதில் “லோகேஷன்” என்ற இடத்தில் முசாபர் நகர் வருவதை சுட்டிக்காட்டினார். ஆனால் இன்ஸ்டாகிராமில் லோகேஷனை மாற்றுவது என்பது மிக சுலபமான ஒரு விஷயம். எப்படியாயினும் விஷால் அந்நேரத்தில் ரஷானாவில் தான் இருந்தானா என்பதில் விசாரணை குழுவிற்கும் குழப்பம் உண்டு. காவல்த்துறையினர் கல்லூரி வளாகத்தின் சிசிடிவி தொகுப்புகளை பறிமுதல் செய்திருப்பதாக கூறுகின்றனர். ஆனால் இது நாள் வரை எந்த பதிவுகளையும் அவர்கள் வெளியிடவில்லை. “முதலில் அவர்கள் சஞ்சி ராமின் மூத்த மகனை தான் சிக்கலில் மாட்டி விட கட்டம் கட்டினார்கள். ஆனால் அவன் கப்பல் படையில் இருப்பதால் அது சாத்தியமில்லை என்பதால் பின்பு அவர்கள் விஷாலை பின் தொடர ஆரம்பித்திருக்கிறார்கள்” என்று ஜங்கோத்ரா குடும்ப உறுப்பினர் தெரிவித்தார்.
எட்டாவது, “குற்ற அறிக்கையின் படி சஞ்சி ராமின் உறவினர் சிறுவன், அச்சிறுமியை இரண்டு முறை கல்லால் தாக்கி “அவள் முதுகில் அவன் கால் மூட்டை அழுத்தி அவளின் இரண்டு முனைகளிலும் அழுத்தம் கொடுத்து கொலை செய்தான்” என்று கூறப்பட்டுள்ளது. ஆனாலும் மருத்துவ அறிக்கை படி பாதிக்கப்பட்ட அப்பெண் உணவு கொடுக்கப்படாமல், மயக்க மருந்துகளால் பாதிக்கப்பட்டு மூச்சு திணறி, இதய செயல்பாடு நின்றதால் உயிரழந்தாள்” என்று கூறப்படுகிறது. எது உண்மை?
ஒன்பதாவது, குற்ற அறிக்கையின் படி விசாரணை குழு அச்சிறுமியின் தலைமுடி ஒன்றை தேவஸ்தானிலிருந்து எடுத்துள்ளது. அவள் அந்த அறையிலேயே சில நாட்கள் வைக்கப்பட்டிருந்தால் அவர்கள் எப்படி வெறும் தலைமுடியை மட்டும் கண்டெடுக்க முடியும்?
பத்தாவது. இந்த இழிவான கதையின்  மூளையாக இருந்து செயல்பட்டு ஒரு பெரும் சதித்திட்டத்தின் மூளையாக இருந்தவன் எப்படி இப்படி முட்டாள்தனமாக கடைசி தருணத்தில் செயல்பட முடியும்? இந்த குற்றத்திலிருந்து தப்பிக்க காவல்த்துறைக்கு இலஞ்சமாக பல இலட்சத்தை அவனால் தர முடிந்திருக்கும் போது ஏன் அச்சிறுமியின் உடலை மறைக்க ஒரு வாகனத்தை அவனால் ஏற்பாடு செய்ய முடியவில்லை? அத்தனை பெரிய காட்டை விட்டுவிட்டு , அவன் வீட்டிலிருந்து கல்லெரிந்தால் வந்து விழுகிற தூரத்தில் இருக்கும் அருகாமையில் ஏன் அச்சிறுமியின் உடலை வீச வேண்டும்? இது தான் சந்தேகத்தை நீர்த்து போக செய்கிறது? “அச்சிறுமி கொல்லப்பட்டு ரஸானாவில் வீசப்பட்டதாக” சொல்லப்படும் இக்குற்றத்தின் பின் ஏதோவொரு சதித்திட்டம் வெளியிலிருந்து அரங்கேற்றப்பட்டுள்ளது என்று கிராமவாசிகள் நம்புவதன் சுருக்கம் இது.
மர்மம் 1: மர்மமான மோட்டார் சைக்கிள்
கிராமவாசிகளை பொருத்தவரை இந்த மோட்டார் சைக்கிள் சம்பவத்தை குற்றப்பிரிவின் அனைத்து அதிகாரிகள் தொடங்கி பல டெல்லி பத்திரிக்கையாளர்களிடமும் பகிர்ந்து கொண்டுள்ளனர். ஆனால் இந்த தகவலை யாரோ வேண்டுமென்றே தவிர்க்கிறார்கள். பிஷான் தாஸ் நம்மிடம் இந்த மோட்டார் சைக்கிள் குறித்து
தெரிவித்தது: “ஜனவரி 16 இரவு கிராமத்தின் டிரான்ஸ்பார்மர் இரவு 10 மணியளவில் வெடித்தது. அச்சமயம் வானிலையும் சாதகமாக இருந்திருக்கவில்லை. இது ஏன் நடந்தது என்பது இன்றளவும் மர்மமாகவே உள்ளது. எங்களுடைய சில உபகரணங்கள் அச்சமயத்தில் சேதப்படுத்தப்பட்டிருந்தன. பின் அதிகாலை 3 மணியளவில் நான் தூக்கத்திலிருந்து எழுந்தேன் அப்போது ஒரு மோட்டார் சைக்கிளை கண்டேன் – அது புல்லட் ரக வண்டியென நினைக்கிறேன் – அது கிராமத்திற்குள் நுழைந்தது. அதை ஓட்டி வந்த மனிதன் உடலை சுற்றி
கம்பளியை போர்த்தியிருந்தான். அச்சமயம் மிக குளிராகவும் இருந்தது. அதன்பின், என்னால் உறங்க முடியவில்லை. 25 – 30 நிமிடங்களுக்கு பின் அவன் மோட்டர் சைக்கிளுடன் கிராமத்தை விட்டு வெளியேறினான்” என்றார் தாஸ்.
இவருடைய வீடு தான் கிராமத்தின் நுழைவில் அமைந்துள்ளது. இது மிகவும் அசாதராணமான ஒரு செயல். கிராமவாசிகளின் கூற்றுப்படி, அக்கிராமத்தில் இருக்க கூடிய சில பெண்கள் இரவுகளில் பெரும்பாலும் உறங்க
மாட்டார்கள். அவர்களும் அந்த மோட்டார் சைக்கிளின் சத்தத்தை கேட்டுள்ளனர். போராட்ட களத்தில் இருந்த ஒரு வயதான பெண்மணியும் அந்த வண்டியை பார்த்ததாக தெரிவித்துள்ளார். “அந்த வண்டி சஞ்சி ராமின் வீட்டு முன்பு சில நிமிடம் நின்றுள்ளது பின்பு அங்கிருந்து சென்றுவிட்டது” என்கிறார். சஞ்சி ராமின் வீட்டின் மிக அருகாமையில் இருக்கும் தர்மபால் ஷர்மாவை ஸ்வாரஜ்யா குழு விசாரித்த போது “அச்சமயம் நான் ஜம்முவிலிருந்து வெளியே இருந்தேன். ஆனால் ட்ராஸ்பார்மர் வெடித்த சம்பவம் குறித்து அறிந்தேன். அதனால் தான் என் வீட்டு குளிர்சாதன பெட்டி சேதமடைந்திருந்தது.” என்றார்.
கிராமவாசிகள் அந்த மோட்டர் வண்டியில் வந்தவன் தான் அச்சிறுமியின் உடலை அந்த இடத்தில் வீசியிருக்க வேண்டும் என்று சந்தேகிக்கின்றனர்.
மர்மம் 2 – சஞ்சி ராம் தான் குற்றம் சாட்டப்பட்டவர் என்று வெளியுலகம் அறிவதற்கு முன்பே ஜனவரி 17-இல் எப்படி அவர் பெயர் முன்னெடுக்கப்பட்டது? இதில் அவர் தான் சம்மந்தப்பட்டுள்ளார் என்று எப்படி அவர்களுக்கு
தெரிந்தது?
அச்சிறுமியின் உடல் கத்துவா மாவட்டத்தின் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக 17 ஜனவரி மதியம் கொண்டு செல்லப்பட்டது. கிராமவாசிகளின் கருத்து படி, “போராட்டகாரர்களின் வழக்கறிஞர் தலிப் ஹுசைனும்
அங்கிருந்தார். அவருடைய வீடு காஷ்மீரில் பூன்ச் என்கிற இடத்தில் உள்ளது. இத்தனை விரைவாக சில மணி நேரங்களிலெல்லாம் அவரால் எப்படி அங்கு வர முடிந்தது? என கேள்வியெழுப்பினர்.
“அவர் இதற்கு முன் அங்கிருக்கவில்லை. ஆனால் அச்சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு மதியம் 12 மணிக்கு கொண்டு செல்லப்படும் போதே அவர் பக்கர்வால் இன மக்களுடன் இருந்தார். அப்படியெனில் அவர் முன்பிருந்தே கத்துவாவில் தான் இருந்தாரா? இருந்தார் எனில் எதற்காக? என்று குற்றத்தில் தொடர்புடையவராக சொல்லப்படும் மனுவின் உறவினர் ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.
ராஸானா மக்கள் கூறும் பொழுது “ஹுசைன் மற்றும் இரண்டு பக்கவர்வால் சகோதரர்கள் அந்த போராட்டத்தில் இருந்தனர். அந்த இரு சகோதரர்களில் ஒருவர் முகமத் ஜானின் மகன். இவர் தான் ஜனவரி 17 அன்று நடந்த போராட்டத்தில் சஞ்சு ராமின் பெயரை முதலில் சொன்னவர். யார் அச்சிறுமியை கொன்றார்கள் என்பதற்கு
எந்த துப்பும் இல்லாத போது எப்படி இவர்களால் சஞ்சி ராமின் பெயரை சொல்ல முடிந்தது? இதற்கு முன் நாங்கள் ஹுசைனை பார்த்ததில்லை. அவரும் எங்களை இதற்கு முன் பார்த்ததில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
நாம் அங்கிருந்த பல குடியிருப்பு வாசிகளிடம் பேசியபோது, அனைவரும் சஞ்சி ராமின் பெயர் 17 ஜனவரி அன்றே சொல்லப்பட்டு விட்டதை உறுதிப்படுத்தினர். ஜனவரி 17 மதியம் பக்கர்வால் இன மக்கள், கூட்டாஹ் முத் சந்திப்பில் அச்சிறுமியின் உடலை ஒரு படுக்கை விரிப்பில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு ஒரு ஐம்பது நபர்கள் இருந்தார்கள். பெரும்பாலும் பக்கர்வால் இன மக்கள் சிலர் காஷ்மீர் இஸ்லாமியர்கள். நான் தலீப் ஹுசைனை அங்கு கண்டேன், அவர் சஞ்சு வின் பெயரையும் அவர் மகனையும் குறிப்பிட்டு முழங்கிக் கொண்டிருந்தார் என பெயர் சொல்ல விரும்பாத கூத்தாஹ் குடியிருப்புவாசி ஒருவர் தெரிவித்தார். மேலும் அவர், “எனக்கு யூசுப்பை பல நாட்களாக தெரியும். அவருக்கு என் வருத்தத்தை தெரிவிக்க நான் சென்றிருந்தேன். ஆனால் அவருக்கு ஒரு மகள் இருப்பது குறித்து அறிந்து கொள்வது இதுவே முதல் முறை. அவரின் இரு மகன்கள் பள்ளிக்கு செல்வதை மட்டுமே நான் கண்டிருக்கிறேன்” என்றார். எப்படி ஹூசைனால் குற்றம் சாட்டப்பட்டவரின் பெயரை, அதிகாரப்பூர்வ விசாரணை துவங்கும் முன்பே சொல்ல முடியும்?
கண்ணால் கண்ட சாட்சியாக கூத்தாஹ் இல் வசிக்கும் நபர் கூறியது “ஜனவரி 21, சவுத்தா (இறந்த நான்காம் நாளை பக்கர்வால் இனத்தவர் இப்படி குறிப்பிடுகின்றனர்) நாள் அன்று பெரும் கூட்டம் ஒன்று கூடியிருந்தது. இந்த முறை அதிகப்படியான கூட்டத்தை காண முடிந்தது. “இதில் பெரும்பாலான காஷ்மீரிய இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். இந்த முறை சஞ்சு, அவர் மகன் விஷால் கான்ஸ்டபிள் தீபக்கின் பெயர் ஒலிப்பெருக்கியில் அறிவிக்கப்பட்டது” என்றார்.
இதன் உள்நோக்கம்
இந்த குற்றத்தின் உள்நோக்கம் மத்திய அரசை தண்டனைக்குள்ளாக்குவதல்ல. அது முக்கியமும் அல்ல. குற்ற அறிக்கை, தெளிவாக கூறியுள்ளது, சஞ்சி ராம் இந்த சதித்திட்டத்தை தீட்டுவதற்கும், அச்சிறுமியை கடத்தி கொலை செய்வதற்கும் பின்னனியாக இருந்தது பக்கர்வால் இன மக்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்றுவது. மேலும், குற்ற அறிக்கையின் படி, பக்கர்வால் இன மக்கள் சஞ்சி ராமை இதற்கு முன் அடித்ததாகவும் அதற்கான பழிவாங்கும் நடவடிக்கை தான் இது என்கிறது. எப்படியோ ஒரு பெரும்பான்மை சமூகத்தை சார்ந்த ஒருவரை,
குறிப்பாக அவர்களின் வாழ்வாதாரத்திற்காக, மேய்ச்சலுக்காக நம்பியிருக்கும் ஒரு சமூகத்தின் ஆளை அடிக்கும் அளவிற்கான துணிச்சல் அவர்களுக்கு இருக்குமா என்பது கேள்வியாக உள்ளது.
குற்ற அறிக்கையின் படி, சஞ்சு ராம் கூட்டாஹ் பகுதியை சேர்ந்த ஹர்னம் சிங்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்ததாக சொல்லப்படுகிறது. காரணம் அவர் நிலத்தை பக்கவர்வால் இன மக்களுக்கு விற்றது. ஆனால் சிங்கோ இந்த குற்றச்சாட்டை கடுமையாக மறுத்துள்ளார். அவர் ஸ்வராஜ்யா குழுவிடம் பேசிய போது, “சஞ்சி ராம் அது போன்ற எந்த பிரச்சாரத்தையும் எனக்கு எதிராக செய்யவில்லை. எங்களுக்கு இடையே எந்த பிரச்சனையும் இல்லை. அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு நபர் பல்பீர் சிங், இவர் அச்சிறுமியின் தந்தை
யூசுப்பிற்க்கு 2007-இல் ஒரு நிலத்தை விற்றுள்ளார். அவர் மீதும் எந்த ஒரு எதிர்ப்பு பிராச்சாரத்தையும் சஞ்சி ராம் செய்ததில்லை என்றார்.
ரஸானா குடியிருப்புவாசிகள் எங்களிடம் தெரிவித்தது, ஜனவரி 17 அன்று நூற்றுக்கணக்கான பக்கவர்கால்கள் பல காஷ்மீர் இஸ்லாமியர்களுடம் சேர்ந்து அவர்களின் வாகனத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அன்று மாலையே ஒவ்வொரு வீட்டை கடந்து செல்லும் போதும் அவ்வீட்டின் கதவை லத்தியால் தட்டி ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். இது அவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஊட்டியுள்ளது. அந்த அணிவகுப்பு முடிந்த பின் கோபத்துடன் இருந்த பக்கர்வால்கள் அச்சிறுமியின் உடலை கூத்தாஹ் கிராமத்தின் சந்திப்பில் வைத்து “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்ற கோஷத்துடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு கூத்தாஹ் குடியிருப்புவாசி, அந்த போராட்டத்தை நேரில் கண்டவர் சொன்ன போது, “சிலர் சுவர்களில் “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என எழுதியிருந்தினர். இது மிகவும் மோசமான செயல். ஆனால் நான் அதை காதாற கேட்கவில்லை” என்றார். அந்த குடியிருப்புவாசிகள் அனைவரும் யூசுப்பையும், பக்கவர்வால் இன மக்களையும் பெரிதும் புகழத்தான் செய்கிறார்கள். அவர்கள் அங்கிருந்தவரை மிக அமைதியான மக்களாக இருந்துள்ளனர். அவர்கள் யாரையும் தொந்தரவு செய்யவில்லை. வனங்களில் வாழ்ந்து கொண்டு, மலைகள் மீது இருந்து கொண்டு, கிராமத்தின் புறப்பகுதியில் இருந்து கொண்டு யாருக்கும் எந்த தொல்லைகளையும் அவர்கள் கொடுத்ததில்லை. அவர்களுக்கும் கிராம மக்களுக்கும் ஆன உறவு சுமூகமானதாகவே இருந்திருக்கிறது. எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை” என்றனர்.
ரஸானா கிராம மக்கள் கூறும் போது, குற்றப்பிரிவு அதிகாரிகளில், ஜனவரி மாதத்தில் தோராயமாக சில நபர்களை கிராமத்தில் இருந்து விசாரணைக்கு அழைத்தப் போது பல அரசியல் கட்சிகள் மற்றும் போராட்டகாரர்கள் அவர்கள் உடன் வந்தனர். அவர்கள் ஒரு கூட்டமாக வந்த மனிதர்கள் மட்டுமே அவர்கள் ஒரு
பதிவு செய்யப்பட்ட அமைப்பை சார்ந்தவர்கள் அல்ல என்று அங்கூர் சர்மா என்பவர் தெரிவித்தார்.
“இந்த பிரச்சனை நடுவில் நாம் “பாரத் மாதா கி ஜெய்” என சொல்லக்கூடாது..? நம்மை நாமே ஏன் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டபட்டவர்களை பாதுகாப்பவர்களா கூறி அவமானப்படுத்தி கொள்ள வேண்டும்? இந்த சம்பவம் நிகழ்ந்த நாள் துவங்கி எது நடந்ததோ அது ஒரு மோசமான நிகழ்வு என சொல்லியே வந்துள்ளோம். அச்சிறுமிக்கு நியாயம் கிடைத்தாக வேண்டும் என்பதில் நாங்களும் உறுதியாக உள்ளோம். ஆனால் ஏன் அப்பாவித்தனமான சில கதைகளை புனையவேண்டும்? இதற்கான சிபிஐ விசாரணையை கோரியுள்ளோம். நாம் ஏன் பலாத்கார குற்றவாளிகளை பாதுக்கபவர்கள் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படவேண்டும்” என்று கேட்டார் மது.
கிராமவாசிகள் அனைவரும் அவர்கள் தவறாக அடையாளப் படுத்தப்பட்டது குறித்து கடும் கோபத்தில் உள்ளனர். ஜம்முவில் டோக்ரா இனத்தவர்கள் அவர்களின் மொத்த இனமும் நியாயமான விசாரணையை கோரியதை தவறாக அடையாளப்படுத்தி அவமானப்படுத்தப் பட்டதால் கடும் வருத்தத்தில் உள்ளனர். “இது டோக்ரா இனத்தவர்களோடு மட்டும் முடிந்து விடவில்லை, இவர்களின் எல்லை இப்போது டோக்ரா என்பதை கடந்து மொத்த ஹிந்து சமூகத்தையே எதிர்ப்பதாக மாறியுள்ளது. வாட்ஸாப், முகநூல் என சமூக ஊடகங்களில், சிவனின் திரிசூலத்துடன் இறந்த பெண்ணின் உடல் இருப்பது போன்ற கண்டன குரல்கள் எழுவதை நம்மால்
பார்க்கமுடிகிறது. சிறுமிக்கான நியாயம் கோரல் என்ற நிலையிலிருந்து தாழ்ந்து, அவர்களின் கவனம் இப்போது  ஒட்டு மொத்த ஹிந்து சமூகத்தையும் தாக்கி அவமானப்படுத்துவதாக மாற்றியுள்ளது. நம்முடைய சமூகத்தின் கடவுள்களும் நம் கலாச்சார குறியீடுகளும் பலாத்காரத்தின் அடையாளங்களா?” என கொந்தளித்தார்
கூட்டாஹ் சந்திப்பில் கடை வைத்திருக்கும் நபர் ஒருவர்.
தீய பிராச்சாரத்தின் மூலம் பெரிதும் பாதிக்கப்பட்டவன்:
“நம்மை குறித்து, எந்தவொரு ஆதரமுமின்றி எதுவும்  சொல்லலாம், எல்லாவற்றையும் சொல்லலாம் என்பது போல் ஆகிவிட்டது” என்றார் சச்சின் சங்ரா, இவர் தான் நம்மை விஷால் ஜங்கோத்ராவிற்கு அறிமுகம் செய்து
வைத்தவர், அப்பகுதி குடியிருப்புவாசி. விஷால் ஜங்கோத்ராவின், உண்மையில் இவர் குற்றம் சுமத்தப்பட்ட நபர் அல்ல. ஆனால் இவருடைய புகைப்படம் எப்படியோ தவறாக பதிவாகி இப்போதும் சமூக ஊடகங்களில் மிக வைரலாக “கற்பழிப்பு செய்தவன்” என்ற அடை மொழியுடன் வலம் வருகிறது. இதனால் முற்றிலும் கலக்கமடைந்த ஜங்கோத்ரா ஸ்வராஜ்யா குழுவிடம் தெரிவித்தது “அவர்கள் என் இரத்தத்தை வேண்டுகிறார்கள். ஆசஸ் கான் என்கிற நடிகர் என் தலைக்கு ஐம்பது இலட்சத்தை நிர்ணயித்துள்ளார். நான் என்னுடைய முகநூல் கணக்கை கூட முடக்கி விட்டேன். காரணம் அங்கே இடப்படும் பின்னூட்டங்கள் என்னை உரைந்து போக செய்கின்றது. நான் ஜம்முவிற்கு செல்ல வேண்டியிருந்ததால் என் முகத்தை கை குட்டையால் மூடி கொண்டு தான் சென்றேன். நான் திருமணங்களில் சமைப்பவன், என்னை யாராவது கொலை செய்து விட்டால் நான் என்ன செய்வேன்? என்று கேட்டார் பரிதாபமாக.
(விஷால் ஜங்கோத்ரா)
நியாயத்திற்கான பாதை:
ஜம்மு காஷ்மீர் குற்றப்பிரிவால் பதியப்பட்ட குற்ற அறிக்கையில் சில ஓட்டைகள் இருப்பதை காண முடிகிறது. மற்றும் சில ஊடகங்கள் உருவாக்கிய மாய பிம்பங்கள் சொல்வதற்கு கூட வாய் கூசுகின்றன. இதை இந்த கோரமான செயலை சஞ்சு ராம் செய்தாரா இல்லையா என்பதை திறமையான முகவர்கள் முடிவு செய்வார்கள்.
ஆனால் இந்த கொடும் தீமையான செயலை செய்வதற்கு சஞ்சு தன்னுடைய சொந்த மகனையும், சகோதரி மகனையுமே பயன்படுத்தியிருப்பார் என்பதை யாராலும் ஏற்று கொள்ள முடியவில்லை. பல மர்மான கதைகள் இந்த சம்பவத்தை சுற்றி சுழன்று கொண்டிருக்கின்றன, அதில் உண்மையான கதை என்பதை அறிவதற்கான பாதை விரைவில் தெரியும்.
இந்த வழக்கின் முக்கிய திருப்பமாக கருதப்படுவது குற்றம் சாட்டப்பட்டவர் சிபிஐ விசாரணை கோருவதும், மயக்க மருந்து பரிசோதனையை(NARCO Test) நடத்த சொல்வதும் தான். இதை ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முப்டி செயல்படுத்த விடமாட்டார், காரணம் இது அவருக்கு கெளரவ போராட்டம். இப்படி செய்வது அவருடைய அரசியல் எதிர்காலத்திற்க்கு பேரிடராக அமையும். இது தான் இவ்வழக்கை சிபிஐ போன்ற சிறப்பு பிரிவிற்கு மாற்றப்படுவதை தடுக்கிறது. இம்மாவட்டத்தின் குற்றக்கிளையின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை மிக குறைவானது. எனவே சிறுமிக்கான நியாயத்திற்கான பாதை தற்சமயம் சம தளத்தில் இல்லை.












ஸ்ரீமத் பாகவதம் (தமிழ்)

  Srimad-Bhagavatam  1 Srimad-Bhagavatam   2 Srimad-Bhagavatam   3 Srimad-Bhagavatam    4 Srimad-Bhagavatam   5 Srimad-Bhagavatam   6 Srimad...