Tuesday, 24 April 2018

ஆஸிபா யாரால் கொலை?

ஆசிபா கொலையின் மர்ம முடிச்சுகள்! நடந்தது என்ன? ஒரு கள ஆய்வு!


கத்துவாவிலிருந்து நேரடி கள ஆய்வு: விசாரணையின் முடிவை கிராமத்துவாசிகளால் ஏன் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை? மிக விரிவான அலசல்.
இதுவரை கத்துவா வழக்கு சந்தித்த திருப்பங்களையும், ஜம்மு & காஷ்மீர் குற்றக்கிளையின் மூலம் பதிவு செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் எழுப்பப்பட்ட கேள்விகளையும் அது சார்ந்த உண்மைகள் அனைத்தையும் மிக விரிவாக கள ஆய்வு செய்து இங்கே தொகுத்துள்ளோம்.
சஞ்சி ராம், ஆறு சகோதரிகளுடன் பிறந்த ஒரே சகோதரன், திருமணமான இரண்டு பெண்களுக்கு தகப்பன். பெண்கள் சூழப்பிறந்து வளர்ந்த இந்த நபர் தான் இன்று இந்திய தேசத்தின் நினைவில் இருந்து அகலாத அரிதினும் அரிதான குற்றத்தை ஒரு சிறு பெண் குழந்தைக்கு எதிராக ஒரு கோஷ்டியுடன் நிகழ்த்தியிருக்கிறான்
என்று குற்றம் சுமத்தப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை அந்த பகுதியை விட்டு விரட்டவும், அவர்களுக்குள் ஒரு பயத்தை விதைக்கும் விதமாகவும், குஜார்-பக்கெர்வல் என்கிற நாடோடி இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த 8 வயது சிறுமியை எந்த வித இரக்கமுமின்றி, மிக வன்மையான முறையில் கடத்த
திட்டமிட்டிருக்கிறான். அந்த கேவலமான திட்டத்தை செயல்படுத்தியதன் மூலம் அவனின் ஒழுக்கக்கேடான பண்பு கண்டனத்திற்குரியதாகிறது.
சஞ்சி தன்னுடைய குல தெய்வங்களின் உறைவிடமான தேவஸ்தானத்தை இந்த குற்றத்திற்கு தேர்ந்தெடுத்ததன் மூலம் இந்த குற்றம் மேலும் புத்துயிர் பெற்று சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இந்த புனித இடத்தில் அவன் பல ஆண்டுகளாக பூசாரியாக இருந்து வந்துள்ளான். அத்துடன் கதை முடிந்துவிடவில்லை. தன்னுடைய சகோதரி மகனை இந்த குற்றத்தின் கதாநாயகனாக சேர்த்து கொண்டிருக்கிறான். இவருடைய மகன் தூரத்திலிருக்கும் மீருட்டில் படித்து கொண்டிருந்துள்ளான். இந்த குற்றத்தின் தொடர்ச்சியாக, அவனும் இந்த சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் பின்னாளில் உடந்தையாக சேர்ந்துள்ளான்.
இந்த வழக்கின் பிடி மிக இருக்கமாக அவர்களை துரத்திய போது, சஞ்சி அவனுடைய சகோதரி மகனை சிக்க வைக்க முயற்சித்தபோது; அழுத்தம் தாங்காமல் முட்டையென உடைந்து சிதறி, கத்தி கதறி அனைத்து உண்மைகளையும் அவன் காவல் துறை அதிகாரியிடம் தெரிவித்து விட்டான். இந்த வாக்குமூலம் தான்
குற்றம் சுமத்தப்பட்ட எட்டு நபர்களையும் கைது செய்ய காரணமாக இருந்தது.
சில மாதங்கள் முன்பு வரை பிரபலமாகாமல் இருந்த கத்துவா பலாத்கார வழக்கு தொடர்பாக பதியப்பட்டிருந்த குற்றப்பத்திரிக்கையில் இடம்பெற்றிருந்த அடிப்படை சம்பவம் இது தான்.


இதை அனைவரும் நம்பவில்லை. குறிப்பாக உள்ளூர் வாசிகள். அவர்களுக்கு குற்றப்பிரிவின் மீது நம்பிக்கையில்லை. மேலும் இந்த கதை காவலாளிகளால், ஶ்ரீநகர் அரசியல்வாதிகளுக்கு தகுந்தார் போல் மிகுந்த சிரத்தையுடன் நெய்யப்பட்ட ஒரு கட்டுக்கதை என்று குறிப்பிடுகின்றனர். எனவே போராட்டக்காரர்கள் இந்த வழக்கில் சிபிஐ யின் விசாரணையை கோருகின்றனர். சஞ்சி ராமின் மூத்த மகள் மதுபாலா மார்ச் 31-ஆம் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ரஸானாவின் குடியிருப்புவாசிகளும் அவருடன் சேர்ந்து கொட்டாமொத் பகுதியின் ஒரு பெரும் அரச மரத்தின் கீழ் மிக உறுதியாக இந்த போராட்டத்தை நடத்துகின்றனர். அவர்கள் கோருவது மத்திய நிறுவனத்தின் மூலம் ஒரு நியாயமான விசாரணையை.
குற்றம் மற்றும் சதித்திட்டம்: குற்றப்பத்திரிக்கையின் படி, அதில் வெளிப்பட்டிருக்கும் நிகழ்வுகளின் தொடர்ச்சி இங்கே:
ஜம்முவின் கத்துவா மாவட்டத்தின், ஹிரநகர் பகுதியில் ரஸானாவின் அழகிய மலைப்பகுதி அமைந்துள்ளது. வனப்பகுதிகளாலும் வனங்களாலும் சூழப்பட்டிருக்கும் ஒரு குறுகிய நீளத்திற்குள் நுழையும் போது ஒரு இரும்பு தகடு அப்பகுதியின் பெயரை தாங்கி நம்மை வரவேற்கிறது.
மிகவும் மெத்தனமாக இருக்கும் இக்கிராமத்தில் இது போன்ற எழிச்சியான சில செயல்பாடுகள் தீடிரென முளைப்பதற்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். அப்பகுதிக்கு வரும் வருகையாளர்கள் அங்கு அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காவல்ச்சாவடியில் கையெழுத்திட்டு உள்ளே நுழைய வேண்டியுள்ளது. அங்கு இருந்த உதவிகரமான காவலாளி ஒருவர், “பார்த்து செல்லுங்கள், கிராம மக்கள் டெல்லி பத்திரிக்கையாளர்கள் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள்” என்ற அறிவுரையுடன் உள்ளே அனுப்பினார்.
வெறும் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு சந்தினுள், வீணா தேவி என்கிற பெண்ணின் வீட்டை சென்றடைந்தோம். இவர் இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான சஞ்சியின் பக்கத்து வீட்டுக்காரர். இவர் தான் பாதிக்கப்பட்ட பெண்ணை கடைசியாக பார்த்த சாட்சியாக குற்றப்பத்திரிக்கையில் பதியப்பட்டுள்ளார். அவர் ஸ்வராஜ்யா ஆங்கில பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், அவர் இறுதியாக அந்த சிறுமியை பார்த்ததை குறித்து விளக்குகிறார். “ஆன்டி, நீங்கள் என்னுடைய குதிரையை பார்த்தீர்களா?” அதற்கு நான் “பார்க்கவில்லை” என்றேன். அதன் பிறகு அச்சிறுமி அவள் வீட்டிற்கு சென்றிருக்க வேண்டும். அப்போது கூட நான், இங்கே தனியாக என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று கடிந்துக் கொண்டேன். பின்பு பக்கத்து வீடான சஞ்சி வீட்டின் மொட்ட மாடியை பார்த்தேன். அங்கே ஒருவர் கட்டிலில் போர்வையை போர்த்தி கொண்டு உறங்கி கொண்டிருந்தார். நான் தர்சனாவிடம்(சஞ்சியின் மனைவி) யார் இந்த வெயிலில் இப்படி உறங்கி கொண்டிருப்பது என கேட்டேன். அதற்கு அவர், என் அண்ணியின் மகன் என்றார். பின் நான் என் வேலையை பார்க்க சென்றுவிட்டேன்.
(வீணா தேவி)
குற்றபத்திரிக்கையின் அறிக்கை படி, அச்சிறுமி சஞ்சி ராமின் வீட்டுக்கு பின் புறம் குதிரை மேய்க்க அடிக்கடி வருவாள் என்றும், அப்படி வரும் போது அப்பெண்ணை கடத்த வேண்டும் என்றும், அங்கு உறங்கி கொண்டிருந்த பையனின்(ஓம்பிரகாஷ் மற்றும் த்ரிப்தா தேவியின் மகன்) முன்னதாகவே தாய் மாமன் சஞ்சி ராம் அறிவுறுத்தியிருந்தான். இந்த தாக்குதலுக்கு தயாராக இருந்த அந்த பையன், சம்பவ நாளுக்கு முன் தினமே தூக்க மருந்துகளை வாங்கி வைத்திருந்தான். அத்தோடு உடனடியாக தேவஸ்தானத்தின் சாவிகளையும் எடுத்து
கொண்டு அந்த பெண்ணிற்கு காட்டில் உதவி செய்வதாக போலியான வாக்குறுதியை கொடுத்து அழைத்து வந்துள்ளான். அங்கே அவனுடைய நண்பனும், சக குற்றவாளி மனுவும் இவனுடைய சைகைக்காக காத்து கொண்டிருந்துள்ளனர்.
வீணா தேவி, அந்த பையன் மாடியில் இருந்து இறங்கி வந்ததை பார்க்கவில்லை, ஆனாலும் அவன் இறங்கிவருவதற்கான வாய்ப்பிருப்பதை மறுக்கவும் இல்லை. “அவன் அச்சிறுமியை அழைத்து, கீழே இறங்கி வந்து சந்தித்தானா என்பது எனக்கு தெரியாது” என்று கூறிய வீணாதேவி, அச்சிறுமியை அவர் காண்பது அது தான் முதல் முறை என்றும் கூறினார். “அவள் தொடர்ந்து வருபவள் அல்ல. அவள் அப்படி வருபவளாக இருந்திருந்தால் எனக்கு தெரிந்திருக்கும். அச்சிறுமியை நான் பார்ப்பது அதுவே முதல் முறை” என்கிறார்.

(வீணா தேவியின் வீட்டிலிருந்து தெரியும் மொட்டை மாடி. வாஸ்பேசின் உடன் இருக்கும் பச்சை நிற வீடு புகைப்படத்தில் தெரிகிறது. அது தான் சஞ்சி ராமின் இல்லம். அந்த மாடியில் தெரியும் கட்டிலில் தான் குற்றம்
சாட்டப்பட்ட இளம் சிறுவன்  உறங்கியிருக்கிறான்)
மற்ற கிராம வாசிகளிடம், ஸ்வராஜ்யா பத்திரிக்கையாளர்கள் பேசிய போது, அவர்களும் இதற்கு முன் அச்சிறுமியை பார்த்ததில்லை என மறுத்தனர். அச்சிறுமியின் தந்தை “மொஹமத் யுசுப்” ஒரு பேட்டியில் கூறும் போது கூட பக்கர்வால் இனத்தவர்கள் குதிரை மேய்க்க ரஸானாவிற்கு செல்ல மாட்டர்கள். ஆனால் எப்படியோ துணிந்து அவள் அங்கே சென்றுவிட்டாள்” என்று கூறியிருக்கிறார்.
இது கேள்வியின் பிறப்பிடம், அந்த பெண் அப்பகுதியில் காணப்படுவது இதுவே முதல் முறை என்றால் எப்படி அவள் சஞ்சி ராமின் குறிப்பிட்ட இலக்காக இருக்க முடியும்? வீணா தேவியின் கணவர் மஹேந்திர ஷர்மா, மும்பையில் பணியாற்றுகிறார். அவர் மனைவி குறித்து அவர் தெரிவிக்கும் போது, அவர் மனைவி அவருடன் தொலைபேசியில் உரையாடுகையில் மூன்று முறை அச்சிறுமி குறித்து வீணா பேசியுள்ளார். ஒன்று ஜனவரி 10-ஆம் தேதி, அவர் மனைவி அச்சிறுமியை கண்ட போது. அடுத்து 11 ஜனவரி, அச்சிறுமியின் தாய் அவர் மகளை
தேடி வந்த போது மற்றொன்று 17 ஜனவரி அச்சிறுமியின் உடல் கிடைத்த போது”. அது மட்டுமின்றி “நம்முடைய குழந்தைகள் 10 நிமிடம் தாமதித்தாலே நம் மனத்தை நாம் முற்றிலுமாக தொலைத்துவிடும் சூழலில் இப்படி ஒரு நாள் கழித்து வந்து தேடுகிறீர்களே” என்று நான் அச்சிறுமியின் தாயை கண்டித்தேன் என வீணா தேவி
குறிப்பிட்டுள்ளார்.
வீணா தேவி நினைவு கூர்ந்து சொல்லும் போது, அச்சிறுமி மிக அழகாக இருந்ததாகவும். “ஜமுனி” என்கிற சல்வார் கமீஸ் வகையான ஆடையை அணிந்திருந்ததாகவும் தெரிவித்தார். அச்சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்ட போதும் அவர் அதே உடையில் தான் இருந்துள்ளார். இவ்வழக்கின் வழக்கறிஞர், அங்கூர் சர்மா இது குறித்து சர்ச்சையான ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார். அச்சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்ட போது, எந்த உடையில் இருந்தாரோ, அதே உடையணிந்த புகைப்படம் அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது. இதை பார்க்கிற போது, யாரோ அலுவல் ரீதியாக அந்த புகைப்படத்தை அச்சிறுமி கொலை செய்யப்படுவதற்கு முன்பாகவே எடுத்திருப்பார்களா? அப்படியெனில் ஏன்? என்ற கேள்வி எழுகிறது.
ஆனாலும் கிராமப்புறவாசிகள் தெரிவிப்பது, பக்கர்வல் குழந்தைகளிடம் வெறும் ஒன்று அல்லது இரண்டு ஆடைகள் இருப்பது ஒன்றும் ஆச்சரியமான ஒன்றல்ல என்கின்றனர். ஆனாலும் அவர்கள், அப்பெண்ணின் தாய்,
அக்குழந்தையின் பள்ளி சீருடையுடன், புத்தக பையுடன் இருப்பது போல் வைரலாகியுள்ள புகைப்படம் குறித்து கேள்வி எழுப்புகின்றனர். காரணம், “எங்களுக்கு தெரிந்து அந்த பெண் எந்த பள்ளிக்கும் சென்றதில்லை.
அப்படியெனில் அந்த பள்ளி சீருடை எங்கிருந்து வந்தது?” அச்சிறுமியின் தந்தை யூசுப் அவருடைய இரண்டு மகன்களை பள்ளிக்கு அனுப்பினாரே தவிர, தத்து பிள்ளையான இச்சிறுமியை பள்ளிக்கு அனுப்பவில்லை. அவள் குதிரைகளை மேய்த்து கொண்டு தான் இருந்தாள்” என்கின்றனர் உள்ளூர்வாசிகள்.
குற்றப்பத்திரிக்கை அறிக்கையில், சஞ்சி ராமின் உறவினர் மகன், அச்சிறுமி அவள் குதிரையை குறித்து வீணா தேவியிடம் கேட்டதை ஒட்டுக் கேட்டிருக்கிறான். அதன் பின் கீழே இறங்கி சென்று அச்சிறுமிக்கு உதவியிருக்கிறான். கொஞ்ச நேரத்திற்கு பின் பொது மக்கள் பார்வைப்படாத இடத்தில், அவனுடைய நண்பன் மனு அச்சிறுமியை பிடித்து கொள்ள, அவள் மீது வன்முறையாக மயக்க மருந்துகளை பூசியிருக்கிறான். பின் அச்சிறுவன் அச்சிறுமியை பலாத்காரம் செய்திருக்கிறான்; மனு முயற்சித்துள்ளான் ஆனால் முடியவில்லை. பின்பு
இருவரும் அவளை தேவஸ்தானத்திற்க்கு அழைத்து சென்று அங்கேயே இரண்டு நாட்கள் வைத்திருந்துள்ளனர்.

(சஞ்சி ராம் வீட்டிலிருந்து தேவஸ்தானத்திற்கு (ரோஸ் வண்ணத்தில் இருப்பது) செல்லும் மண் பாதை. இந்த முழுமையான பாதையின் முடிவில் இடது புறம் திரும்பும் இடத்தில் தான் ஜகதீஸ் ராஜ் என்பவரால் ஆச்சிறுமியின்
உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. )
இந்த தேவஸ்தானத்திலிருந்து இரண்டு நிமிட நடையில் சஞ்சி ராமின் இல்லத்தை அடைந்துவிடலாம். அவர் வீட்டு முற்றத்திலிருக்கும் கதவை திறந்தால் அது பிரதான சாலைக்கு வழிவகுக்கும். அவர் இல்லத்தில்
ஓரத்திலிருக்கும் கதவை திறந்தால் இந்த மண் சாலை தெரியும் இதுவே தேவஸ்தானத்திற்க்கு அவர் வீட்டிலிருந்து செல்லும் பாதை. இது அடிப்படையில் வனத்திற்கு நடுவே அமைந்திருக்கும் ஒரு அறை. இங்கிருந்து பார்த்தால் தெரிகின்ற ஒரே வீடு சஞ்சி ராமினுடையது. ரோஸ் நிற சுவருகள், மூன்று கதவு,
சிமெண்ட் தரை, பம்ப், பெரிய டின் ஷெட்டால் போர்த்தப்பட்ட கட்டிடம். இந்த தேவஸ்தானம் நாங்கள் சென்ற போது மூடியிருந்தது. எங்களுடன் வந்துக் கொண்டிருந்த சில உள்ளூர் வாசிகள் சாவிகளுக்கு ஏற்பாடு செய்தனர். உள்ளே ஒரு புறத்தில் சில சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. அதனோடு குல தெய்வத்தின் புகைப்படமும் இருந்தது (காளிவீர் என்பது பெயர், ஒரு மனிதர் குதிரையின் மீது உட்கார்ந்திருப்பதை போன்ற புகைப்படம்) மற்றொரு புறத்தில் இரண்டு டிரம்முகள் இருந்தன. அதில் மளிகை பொருள் சர்க்கரை, அரிசி போன்றவை நிரப்பி வைக்கப்பட்டிருந்தன. அங்கே ஒரு மேஜையும் அதன் மேல் சில பாத்திரங்களும், மிக சுத்தமாக போர்த்தப்பட்ட பாயும் இருந்தது. 4 X 3 என்ற அளவிலான மேஜையின் கீழ் தான் ப்ளாஸ்டிக் மற்றும் பஞ்சு பாயினால் சுற்றப்பட்டு அச்சிறுமி வைக்கப்பட்டிருந்தாள் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதை பார்க்கிற பொழுது ஒரு சிறுமியை மற்றவர் கண்ணில் படாமல் மறைத்து வைக்கின்ற அளவிற்கான மேஜையாக அது இல்லை. மிக சிறிதாக இருந்தது.
சஞ்சி ராம் இந்த தேவஸ்தானத்தின் மூன்று சாவிகளை வைத்துள்ளார். மற்ற இரண்டு சாவிகளும் சம்பவம் நடந்த இக்கிராமத்திற்கு அருகே இருக்கும் பாட்டா மற்றும் கூட்டாக் என்ற மற்ற இரண்டு கிராமத்தில் இருந்துள்ளது. அவர்களும் இவர்களின் வம்சவாளியை சார்ந்த குடும்ப உறுப்பினர்களே.
மற்ற கிராமத்தார்களுக்கு தெரியாமல் அச்சிறுமியை இந்த அறையில் இரண்டு நாட்கள் வைத்திருப்பது சாத்தியமா? இது ரஸானா கிராமத்து மக்களும் மற்ற இரண்டு கிராமத்து மக்களும் வந்து செல்ல முடியாத வண்ணம் அத்தனை ஒதுக்கு புறமாக இருந்துள்ளது? அல்லது மொத்த கிராமமும் இந்த சதி திட்டத்தில்
பங்கு உள்ளதா?
நாங்கள் அந்த தேவஸ்தானத்தில் மதிய நேரத்தில் ஒரு மணி நேரத்தை செலவு செய்தோம். அச்சமயத்தில் அங்கே எங்களை தவிர யாரும் வரவில்லை. ஆனாலும் கிராமத்துவாசிகள், “அனைவரும் அதிகாலை பொழுதில் ஒரு நாளின் துவக்கத்தில் இங்கு வருவது தான் வழக்கம்” என்று சொன்னார்கள். அப்போது சிலைகளின்
பக்கத்தில் விளக்குகள் முன்னமே எரிந்து கொண்டிருந்தன.
குற்றப்பத்திரிக்கையின் அறிக்கை படி ஜனவரி 13, பின் மாலை பொழுது, லொஹரி பண்டிகை நாளில், சஞ்சி ராம் அவனுடைய உறவினர் சிறுவன், மற்றும் அவர் மகன் விஷால் ஜங்கோத்ரா பின் மனுவிடம் இது தான் அப்பெண்ணை கொல்ல சரியான தருணம் என கூறியதாகவும்; பின்பு அப்பெண்ணின் உடலை அருகிலுள்ள பாலத்திற்க்கு விரைந்து எடுத்து சென்றதாகவும் அப்போது அவர்களுடம் 28 வயதான காவல் அதிகாரி தீபக் குஜூரியாவும் இந்த குற்றத்தில் இணைந்து கொண்டு, அப்பெண் கொல்லப்படுவதற்கு முன் அவளை பலாத்காரம் செய்ய விரும்பவதாக தெரிவித்ததாகவும் அறிக்கை சொல்கிறது. அந்த காவலதிகாரி அப்பெண்ணை அழுத்தி
கொலை செய்ய முயற்சித்து தோல்வி அடைந்ததாகவும் பின் அந்த வேலையை சஞ்சி ராமின் உறவினர் மகன் “அச்சிறுமியின் முதுகில் கால் மூட்டை அழுத்தி கொன்றதாகவும்”, மேலும் அவள் தலையில் இரண்டு முறை கல்லால் தாக்கி கொலை செய்ததாகவும் சொல்லப்படுகிறது. (28 வயதான, முறையாக பயிற்சி பெற்ற
காவலதிகாரி செய்ய முடியாத ஒரு வேலையை, அவர் வயதில் பாதியிருக்கும் அச்சிறுவன் செய்திருப்பது நம்ப கடினமாக உள்ளது).
இந்த கோரமான செயலுக்கு பின் அச்சிறுமியின் உடல் அங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹிரா நகரில் கால்வாயில் வீசுவதற்கு தேவையான வாகனத்தை ஏற்பாடு செய்ய முடியாததால், அச்சிறுமியின் உடல் தேவஸ்தானத்தில் வைக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஜனவரி 15 அன்று சஞ்சி ராம்
அவன் சகாக்களிடம் வாகனத்தை அன்றளவும் ஏற்பாடு செய்யமுடியாததால் அச்சிறுமியின் உடல் அருகிலுள்ள காட்டில் புதைக்கப்பட வேண்டும். ஏனெனில் அடுத்த நாள் சஞ்சி ராம் “ஃபான்டா” என்ற சடங்கை கோவிலில் நிகழ்த்த வேண்டியிருப்பதாக தெரிவித்துள்ளான். ஃபான்டா என்றால் வந்திருக்கும் மனிதருக்கு பூசாரி திருஷ்டி கழிப்பதை போன்ற ஒரு சடங்கு. இந்த சடங்கை தொடர்ந்து “பாந்த்ரா” நடைபெறுவது வழக்கம். பாந்த்ரா என்றால் அன்னதானம்.
குற்றப்பத்திரிக்கை அறிக்கையின் படி, சஞ்சி ராம் காவலாளிகளை தன் கைவசம் வைத்திருந்தார் என்றும். உள்ளூர் காவல் நிலையத்தின் அதிகாரியாக இருந்த தீபக் கஜூரியாவிற்க்கும் அச்சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்டதில் ஒரு பங்கு உள்ளது என குற்றம் சாட்டப்படுகிறது. மற்ற காவலாளிகளான திலக் ராஜ்
மற்றும் ஆனந்த் தத்தாவுக்கு 4 இலட்சம் இலஞ்சம் வழங்கப்பட்டு அவர்கள் சரி செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப்பத்திரிக்கையின் அறிக்கை படி, த்ரிப்பதா தேவி(சஞ்சி ராம் சகோதரி) சஞ்சி ராமின் இல்லத்திற்க்கு ஜனவரி 12 அன்று வந்துள்ளார். அங்கே சஞ்சி தன் சகோதரியிடம் அவர் மகன் உடந்தையாக இருந்து சிறுமியை கடத்தியது பதுக்கியது என அவன் புரிந்த அனைத்து குற்றங்களையும் கூறியுள்ளார். குற்றப்பத்திரிக்கையின் படி, காவலாளி திலக் ராஜ்ஜை சிறு வயதிலிருந்தே த்ரிப்தா தேவிக்கு தெரியும் என்பதால் 1.5 இலட்சம் ரூபாயை த்ரிப்தா தேவியிடம் சஞ்சி ராம் கொடுத்து, திலக் ராஜ்ஜிடம் கொடுத்து விடுமாறு கூறியுள்ளார். ஸ்வராஜ்யா குழுமத்தினர் அவரை சந்திக்க சென்ற போது, த்ரிப்தா தேவி அவர் மீது சுமத்தப்படும் குற்றம் அனைத்தையும் மறுத்தார். “அவர்கள் குற்ற அறிக்கையில் சொல்வது போல் நான் என் சகோதரன் வீட்டுக்கு செல்வும் இல்லை. திலக் ராஜ்ஜிற்கு பணம் கொடுக்கவும் இல்லை. என் மகன் அவனுடைய மோசமான நடவடிக்கையால் அவன் பயிலும் பள்ளியிலிருந்து கண்டிக்கப்பட்டிருந்தான். அவனுக்கும் அங்கு பயிலும் மற்றொரு மாணவனுக்கும் பிரச்சனை. ஆனால் அவன் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதால் பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்டான் என்று தவறாக பதிவு செய்யப்பட்டுள்ளது. நான் அவனை என் சகோதரன் வீட்டுக்கு, அவனுடைய பொது தேர்வை சரியாக படித்து எழுதி தேர்வு பெற வேண்டும் என்பதற்காக அனுப்பினேன். அவன் அங்கே டியூசன் சென்று கொண்டிருந்தான். ஒரு தாயாக நான் எப்படி என் மகன் இப்படி ஒரு சதிச்செயலை செய்ய அனுமதிப்பேன்?
இது ஒரு தொலைக்காட்சியின் திரைக்கதை போல் உள்ளது. இது உண்மையில்லை” என்றார். அந்த சிறுவனுக்கு ஒரு மூத்த சகோதரியும் சகோதரனும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கிராமவாசிகளும் எழுப்பும் கேள்விகள்:
குற்ற அறிக்கையின் படி, சிறுமியின் உடல் காடுகளுக்கிடையே திணித்து வீசப்பட்டு ஜனவரி 17 அன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது கிராமவாசிகளிடையே பல கேள்விகளை எழுப்புகிறது.
முதலில், சிறுமியின் உடல் மூன்று நாட்களுக்கு பின் கண்டெடுக்கப்பட்ட போதும் எப்படி அதிலிருந்து எந்த துர்நாற்றமும் வரவில்லை? (ஜனவரி 13 இரவு துவங்கி, 14, 15, மற்றும் 16).
இரண்டாவது, ஏன் ஒருவரின் பார்வையில் கூட சிறுமியின் உடல் படவில்லை. குறிப்பாக 16 ஜனவரி அன்று தேவஸ்தானத்தில் பெரும் கூட்டம் கூடி ஒரு வைபத்தை நிகழ்த்திய போது?
மூன்றாவது, ஏன் ஜனவரி மாத கடும் குளிரிலும் அவ்வுடல் விரைத்துபோகவில்லை? பக்கர்வல் இன மக்களால் நடத்தப்பட்ட போரட்டத்தின் போது வைக்கப்பட்டிருந்த உடல் மிகவும் தளர்வானதாக இருந்துள்ளது.
நான்காவது, ஒழுக்கமற்ற தன் மகனை சகோதரனின் கட்டுக்கோப்பான வழிகாட்டுதலின் மூலம் நன்றாக படிப்பான் என நம்பி அனுப்பிய தன் சகோதரி மகனை எதற்காக சஞ்சி ராம் வரிசையான குற்றங்களில் மாட்டி விட வேண்டும். தன்னுடைய சகோதரன் மனத்தில் இப்படியொரு எண்ணம் இருப்பது தெரிந்திருந்தால் அந்த தாய் மகனை அனுப்பியிருப்பார்களா?
ஐந்தாவது, ஏன் சதித்திட்டத்தின் மூலக்காரணமானவர்கள் சிறுமியின் உடலை வெறுமனே வெளியில் வீசி செல்ல வேண்டும்? குறிப்பாக ஃபான்டா (திருஷ்டி கழித்தல் வைபவம்) நடைபெற்ற நாளிலும் அதை தொடர்ந்து கூட்டமான மக்கள் வந்து உண்டு கழித்த பாந்த்ரா(அன்னதானம்) நாளிலும்? இதற்கு அவர்கள் பூமியை
தோண்டி புதைத்திருக்கலாமே? குற்ற அறிக்கையின் படி அவர்கள் ஆதாரங்களை அழிக்க அச்சிறுமியின் உடைகளை துவைத்துள்ளனர். “இதனால் துவைத்த துணியை பரிசோதிப்பதன் மூலம் FSL ஶ்ரீநகரால் எந்த ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை.” ஆனால் ஏன் குற்றவாளிகள் துணிகளை துவைப்பதோடு மட்டும் நிறுத்திவிட்டனர்? உடலை மறைப்பதற்கு எந்த விதமான முயற்சிகளும் எடுக்கவில்லை?
ஆறாவது, 13 ஜனவரி லொஹரி நாள். ஏராளமான மக்கள் தேவஸ்தானத்திற்கு வந்திருப்பார்கள். ஏன் ஒருவர் கூட அச்சிறுமியை பார்க்கவில்லை? “அது லொஹரி நாள். அன்று அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. நாங்கள் மேஜை மேல் இருந்து “தாரிக்களை” எடுத்து தரையில் வைத்து விட்டு பின் கீழே அமர்ந்து பக்தி பாடல்கள் பாட துவங்கினோம். எனவே அச்சிறுமி மேஜைக்கடியில் வைக்கப்பட்டிருப்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லை.” என பிஷான் தாஸ் என்ற 76 வயது முதியவர், ரஸானா கிராமத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி தெரிவித்தார்.
(பிஷான் தாஸ்)
ஏழாவது, எப்படி சஞ்சி ராமின் மகன் விஷால் ஜங்கோத்ரா மீருட்டிலும் கத்துவாவிலும் ஒரே நேரத்தில் இருக்க முடியும்? குற்றப்பிரிவின் விசாரணையின் படி விஷால் ரஸானாவில் இருந்துள்ளான். ஆனால் அவன் பயிலும் கல்லூரி பதிவேட்டின் படி அவன் மீருட்டில் அதே நாளில் தேர்வு எழுதிக் கொண்டிருந்துள்ளான். அவனுடைய மூத்த சகோதரி மோனிகா, விஷாலின் இன்ஸ்டாகிராம் பதிவுகளை நம்மிடம் காட்டி அதில் “லோகேஷன்” என்ற இடத்தில் முசாபர் நகர் வருவதை சுட்டிக்காட்டினார். ஆனால் இன்ஸ்டாகிராமில் லோகேஷனை மாற்றுவது என்பது மிக சுலபமான ஒரு விஷயம். எப்படியாயினும் விஷால் அந்நேரத்தில் ரஷானாவில் தான் இருந்தானா என்பதில் விசாரணை குழுவிற்கும் குழப்பம் உண்டு. காவல்த்துறையினர் கல்லூரி வளாகத்தின் சிசிடிவி தொகுப்புகளை பறிமுதல் செய்திருப்பதாக கூறுகின்றனர். ஆனால் இது நாள் வரை எந்த பதிவுகளையும் அவர்கள் வெளியிடவில்லை. “முதலில் அவர்கள் சஞ்சி ராமின் மூத்த மகனை தான் சிக்கலில் மாட்டி விட கட்டம் கட்டினார்கள். ஆனால் அவன் கப்பல் படையில் இருப்பதால் அது சாத்தியமில்லை என்பதால் பின்பு அவர்கள் விஷாலை பின் தொடர ஆரம்பித்திருக்கிறார்கள்” என்று ஜங்கோத்ரா குடும்ப உறுப்பினர் தெரிவித்தார்.
எட்டாவது, “குற்ற அறிக்கையின் படி சஞ்சி ராமின் உறவினர் சிறுவன், அச்சிறுமியை இரண்டு முறை கல்லால் தாக்கி “அவள் முதுகில் அவன் கால் மூட்டை அழுத்தி அவளின் இரண்டு முனைகளிலும் அழுத்தம் கொடுத்து கொலை செய்தான்” என்று கூறப்பட்டுள்ளது. ஆனாலும் மருத்துவ அறிக்கை படி பாதிக்கப்பட்ட அப்பெண் உணவு கொடுக்கப்படாமல், மயக்க மருந்துகளால் பாதிக்கப்பட்டு மூச்சு திணறி, இதய செயல்பாடு நின்றதால் உயிரழந்தாள்” என்று கூறப்படுகிறது. எது உண்மை?
ஒன்பதாவது, குற்ற அறிக்கையின் படி விசாரணை குழு அச்சிறுமியின் தலைமுடி ஒன்றை தேவஸ்தானிலிருந்து எடுத்துள்ளது. அவள் அந்த அறையிலேயே சில நாட்கள் வைக்கப்பட்டிருந்தால் அவர்கள் எப்படி வெறும் தலைமுடியை மட்டும் கண்டெடுக்க முடியும்?
பத்தாவது. இந்த இழிவான கதையின்  மூளையாக இருந்து செயல்பட்டு ஒரு பெரும் சதித்திட்டத்தின் மூளையாக இருந்தவன் எப்படி இப்படி முட்டாள்தனமாக கடைசி தருணத்தில் செயல்பட முடியும்? இந்த குற்றத்திலிருந்து தப்பிக்க காவல்த்துறைக்கு இலஞ்சமாக பல இலட்சத்தை அவனால் தர முடிந்திருக்கும் போது ஏன் அச்சிறுமியின் உடலை மறைக்க ஒரு வாகனத்தை அவனால் ஏற்பாடு செய்ய முடியவில்லை? அத்தனை பெரிய காட்டை விட்டுவிட்டு , அவன் வீட்டிலிருந்து கல்லெரிந்தால் வந்து விழுகிற தூரத்தில் இருக்கும் அருகாமையில் ஏன் அச்சிறுமியின் உடலை வீச வேண்டும்? இது தான் சந்தேகத்தை நீர்த்து போக செய்கிறது? “அச்சிறுமி கொல்லப்பட்டு ரஸானாவில் வீசப்பட்டதாக” சொல்லப்படும் இக்குற்றத்தின் பின் ஏதோவொரு சதித்திட்டம் வெளியிலிருந்து அரங்கேற்றப்பட்டுள்ளது என்று கிராமவாசிகள் நம்புவதன் சுருக்கம் இது.
மர்மம் 1: மர்மமான மோட்டார் சைக்கிள்
கிராமவாசிகளை பொருத்தவரை இந்த மோட்டார் சைக்கிள் சம்பவத்தை குற்றப்பிரிவின் அனைத்து அதிகாரிகள் தொடங்கி பல டெல்லி பத்திரிக்கையாளர்களிடமும் பகிர்ந்து கொண்டுள்ளனர். ஆனால் இந்த தகவலை யாரோ வேண்டுமென்றே தவிர்க்கிறார்கள். பிஷான் தாஸ் நம்மிடம் இந்த மோட்டார் சைக்கிள் குறித்து
தெரிவித்தது: “ஜனவரி 16 இரவு கிராமத்தின் டிரான்ஸ்பார்மர் இரவு 10 மணியளவில் வெடித்தது. அச்சமயம் வானிலையும் சாதகமாக இருந்திருக்கவில்லை. இது ஏன் நடந்தது என்பது இன்றளவும் மர்மமாகவே உள்ளது. எங்களுடைய சில உபகரணங்கள் அச்சமயத்தில் சேதப்படுத்தப்பட்டிருந்தன. பின் அதிகாலை 3 மணியளவில் நான் தூக்கத்திலிருந்து எழுந்தேன் அப்போது ஒரு மோட்டார் சைக்கிளை கண்டேன் – அது புல்லட் ரக வண்டியென நினைக்கிறேன் – அது கிராமத்திற்குள் நுழைந்தது. அதை ஓட்டி வந்த மனிதன் உடலை சுற்றி
கம்பளியை போர்த்தியிருந்தான். அச்சமயம் மிக குளிராகவும் இருந்தது. அதன்பின், என்னால் உறங்க முடியவில்லை. 25 – 30 நிமிடங்களுக்கு பின் அவன் மோட்டர் சைக்கிளுடன் கிராமத்தை விட்டு வெளியேறினான்” என்றார் தாஸ்.
இவருடைய வீடு தான் கிராமத்தின் நுழைவில் அமைந்துள்ளது. இது மிகவும் அசாதராணமான ஒரு செயல். கிராமவாசிகளின் கூற்றுப்படி, அக்கிராமத்தில் இருக்க கூடிய சில பெண்கள் இரவுகளில் பெரும்பாலும் உறங்க
மாட்டார்கள். அவர்களும் அந்த மோட்டார் சைக்கிளின் சத்தத்தை கேட்டுள்ளனர். போராட்ட களத்தில் இருந்த ஒரு வயதான பெண்மணியும் அந்த வண்டியை பார்த்ததாக தெரிவித்துள்ளார். “அந்த வண்டி சஞ்சி ராமின் வீட்டு முன்பு சில நிமிடம் நின்றுள்ளது பின்பு அங்கிருந்து சென்றுவிட்டது” என்கிறார். சஞ்சி ராமின் வீட்டின் மிக அருகாமையில் இருக்கும் தர்மபால் ஷர்மாவை ஸ்வாரஜ்யா குழு விசாரித்த போது “அச்சமயம் நான் ஜம்முவிலிருந்து வெளியே இருந்தேன். ஆனால் ட்ராஸ்பார்மர் வெடித்த சம்பவம் குறித்து அறிந்தேன். அதனால் தான் என் வீட்டு குளிர்சாதன பெட்டி சேதமடைந்திருந்தது.” என்றார்.
கிராமவாசிகள் அந்த மோட்டர் வண்டியில் வந்தவன் தான் அச்சிறுமியின் உடலை அந்த இடத்தில் வீசியிருக்க வேண்டும் என்று சந்தேகிக்கின்றனர்.
மர்மம் 2 – சஞ்சி ராம் தான் குற்றம் சாட்டப்பட்டவர் என்று வெளியுலகம் அறிவதற்கு முன்பே ஜனவரி 17-இல் எப்படி அவர் பெயர் முன்னெடுக்கப்பட்டது? இதில் அவர் தான் சம்மந்தப்பட்டுள்ளார் என்று எப்படி அவர்களுக்கு
தெரிந்தது?
அச்சிறுமியின் உடல் கத்துவா மாவட்டத்தின் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக 17 ஜனவரி மதியம் கொண்டு செல்லப்பட்டது. கிராமவாசிகளின் கருத்து படி, “போராட்டகாரர்களின் வழக்கறிஞர் தலிப் ஹுசைனும்
அங்கிருந்தார். அவருடைய வீடு காஷ்மீரில் பூன்ச் என்கிற இடத்தில் உள்ளது. இத்தனை விரைவாக சில மணி நேரங்களிலெல்லாம் அவரால் எப்படி அங்கு வர முடிந்தது? என கேள்வியெழுப்பினர்.
“அவர் இதற்கு முன் அங்கிருக்கவில்லை. ஆனால் அச்சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு மதியம் 12 மணிக்கு கொண்டு செல்லப்படும் போதே அவர் பக்கர்வால் இன மக்களுடன் இருந்தார். அப்படியெனில் அவர் முன்பிருந்தே கத்துவாவில் தான் இருந்தாரா? இருந்தார் எனில் எதற்காக? என்று குற்றத்தில் தொடர்புடையவராக சொல்லப்படும் மனுவின் உறவினர் ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.
ராஸானா மக்கள் கூறும் பொழுது “ஹுசைன் மற்றும் இரண்டு பக்கவர்வால் சகோதரர்கள் அந்த போராட்டத்தில் இருந்தனர். அந்த இரு சகோதரர்களில் ஒருவர் முகமத் ஜானின் மகன். இவர் தான் ஜனவரி 17 அன்று நடந்த போராட்டத்தில் சஞ்சு ராமின் பெயரை முதலில் சொன்னவர். யார் அச்சிறுமியை கொன்றார்கள் என்பதற்கு
எந்த துப்பும் இல்லாத போது எப்படி இவர்களால் சஞ்சி ராமின் பெயரை சொல்ல முடிந்தது? இதற்கு முன் நாங்கள் ஹுசைனை பார்த்ததில்லை. அவரும் எங்களை இதற்கு முன் பார்த்ததில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
நாம் அங்கிருந்த பல குடியிருப்பு வாசிகளிடம் பேசியபோது, அனைவரும் சஞ்சி ராமின் பெயர் 17 ஜனவரி அன்றே சொல்லப்பட்டு விட்டதை உறுதிப்படுத்தினர். ஜனவரி 17 மதியம் பக்கர்வால் இன மக்கள், கூட்டாஹ் முத் சந்திப்பில் அச்சிறுமியின் உடலை ஒரு படுக்கை விரிப்பில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு ஒரு ஐம்பது நபர்கள் இருந்தார்கள். பெரும்பாலும் பக்கர்வால் இன மக்கள் சிலர் காஷ்மீர் இஸ்லாமியர்கள். நான் தலீப் ஹுசைனை அங்கு கண்டேன், அவர் சஞ்சு வின் பெயரையும் அவர் மகனையும் குறிப்பிட்டு முழங்கிக் கொண்டிருந்தார் என பெயர் சொல்ல விரும்பாத கூத்தாஹ் குடியிருப்புவாசி ஒருவர் தெரிவித்தார். மேலும் அவர், “எனக்கு யூசுப்பை பல நாட்களாக தெரியும். அவருக்கு என் வருத்தத்தை தெரிவிக்க நான் சென்றிருந்தேன். ஆனால் அவருக்கு ஒரு மகள் இருப்பது குறித்து அறிந்து கொள்வது இதுவே முதல் முறை. அவரின் இரு மகன்கள் பள்ளிக்கு செல்வதை மட்டுமே நான் கண்டிருக்கிறேன்” என்றார். எப்படி ஹூசைனால் குற்றம் சாட்டப்பட்டவரின் பெயரை, அதிகாரப்பூர்வ விசாரணை துவங்கும் முன்பே சொல்ல முடியும்?
கண்ணால் கண்ட சாட்சியாக கூத்தாஹ் இல் வசிக்கும் நபர் கூறியது “ஜனவரி 21, சவுத்தா (இறந்த நான்காம் நாளை பக்கர்வால் இனத்தவர் இப்படி குறிப்பிடுகின்றனர்) நாள் அன்று பெரும் கூட்டம் ஒன்று கூடியிருந்தது. இந்த முறை அதிகப்படியான கூட்டத்தை காண முடிந்தது. “இதில் பெரும்பாலான காஷ்மீரிய இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். இந்த முறை சஞ்சு, அவர் மகன் விஷால் கான்ஸ்டபிள் தீபக்கின் பெயர் ஒலிப்பெருக்கியில் அறிவிக்கப்பட்டது” என்றார்.
இதன் உள்நோக்கம்
இந்த குற்றத்தின் உள்நோக்கம் மத்திய அரசை தண்டனைக்குள்ளாக்குவதல்ல. அது முக்கியமும் அல்ல. குற்ற அறிக்கை, தெளிவாக கூறியுள்ளது, சஞ்சி ராம் இந்த சதித்திட்டத்தை தீட்டுவதற்கும், அச்சிறுமியை கடத்தி கொலை செய்வதற்கும் பின்னனியாக இருந்தது பக்கர்வால் இன மக்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்றுவது. மேலும், குற்ற அறிக்கையின் படி, பக்கர்வால் இன மக்கள் சஞ்சி ராமை இதற்கு முன் அடித்ததாகவும் அதற்கான பழிவாங்கும் நடவடிக்கை தான் இது என்கிறது. எப்படியோ ஒரு பெரும்பான்மை சமூகத்தை சார்ந்த ஒருவரை,
குறிப்பாக அவர்களின் வாழ்வாதாரத்திற்காக, மேய்ச்சலுக்காக நம்பியிருக்கும் ஒரு சமூகத்தின் ஆளை அடிக்கும் அளவிற்கான துணிச்சல் அவர்களுக்கு இருக்குமா என்பது கேள்வியாக உள்ளது.
குற்ற அறிக்கையின் படி, சஞ்சு ராம் கூட்டாஹ் பகுதியை சேர்ந்த ஹர்னம் சிங்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்ததாக சொல்லப்படுகிறது. காரணம் அவர் நிலத்தை பக்கவர்வால் இன மக்களுக்கு விற்றது. ஆனால் சிங்கோ இந்த குற்றச்சாட்டை கடுமையாக மறுத்துள்ளார். அவர் ஸ்வராஜ்யா குழுவிடம் பேசிய போது, “சஞ்சி ராம் அது போன்ற எந்த பிரச்சாரத்தையும் எனக்கு எதிராக செய்யவில்லை. எங்களுக்கு இடையே எந்த பிரச்சனையும் இல்லை. அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு நபர் பல்பீர் சிங், இவர் அச்சிறுமியின் தந்தை
யூசுப்பிற்க்கு 2007-இல் ஒரு நிலத்தை விற்றுள்ளார். அவர் மீதும் எந்த ஒரு எதிர்ப்பு பிராச்சாரத்தையும் சஞ்சி ராம் செய்ததில்லை என்றார்.
ரஸானா குடியிருப்புவாசிகள் எங்களிடம் தெரிவித்தது, ஜனவரி 17 அன்று நூற்றுக்கணக்கான பக்கவர்கால்கள் பல காஷ்மீர் இஸ்லாமியர்களுடம் சேர்ந்து அவர்களின் வாகனத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அன்று மாலையே ஒவ்வொரு வீட்டை கடந்து செல்லும் போதும் அவ்வீட்டின் கதவை லத்தியால் தட்டி ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். இது அவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஊட்டியுள்ளது. அந்த அணிவகுப்பு முடிந்த பின் கோபத்துடன் இருந்த பக்கர்வால்கள் அச்சிறுமியின் உடலை கூத்தாஹ் கிராமத்தின் சந்திப்பில் வைத்து “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்ற கோஷத்துடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு கூத்தாஹ் குடியிருப்புவாசி, அந்த போராட்டத்தை நேரில் கண்டவர் சொன்ன போது, “சிலர் சுவர்களில் “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என எழுதியிருந்தினர். இது மிகவும் மோசமான செயல். ஆனால் நான் அதை காதாற கேட்கவில்லை” என்றார். அந்த குடியிருப்புவாசிகள் அனைவரும் யூசுப்பையும், பக்கவர்வால் இன மக்களையும் பெரிதும் புகழத்தான் செய்கிறார்கள். அவர்கள் அங்கிருந்தவரை மிக அமைதியான மக்களாக இருந்துள்ளனர். அவர்கள் யாரையும் தொந்தரவு செய்யவில்லை. வனங்களில் வாழ்ந்து கொண்டு, மலைகள் மீது இருந்து கொண்டு, கிராமத்தின் புறப்பகுதியில் இருந்து கொண்டு யாருக்கும் எந்த தொல்லைகளையும் அவர்கள் கொடுத்ததில்லை. அவர்களுக்கும் கிராம மக்களுக்கும் ஆன உறவு சுமூகமானதாகவே இருந்திருக்கிறது. எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை” என்றனர்.
ரஸானா கிராம மக்கள் கூறும் போது, குற்றப்பிரிவு அதிகாரிகளில், ஜனவரி மாதத்தில் தோராயமாக சில நபர்களை கிராமத்தில் இருந்து விசாரணைக்கு அழைத்தப் போது பல அரசியல் கட்சிகள் மற்றும் போராட்டகாரர்கள் அவர்கள் உடன் வந்தனர். அவர்கள் ஒரு கூட்டமாக வந்த மனிதர்கள் மட்டுமே அவர்கள் ஒரு
பதிவு செய்யப்பட்ட அமைப்பை சார்ந்தவர்கள் அல்ல என்று அங்கூர் சர்மா என்பவர் தெரிவித்தார்.
“இந்த பிரச்சனை நடுவில் நாம் “பாரத் மாதா கி ஜெய்” என சொல்லக்கூடாது..? நம்மை நாமே ஏன் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டபட்டவர்களை பாதுகாப்பவர்களா கூறி அவமானப்படுத்தி கொள்ள வேண்டும்? இந்த சம்பவம் நிகழ்ந்த நாள் துவங்கி எது நடந்ததோ அது ஒரு மோசமான நிகழ்வு என சொல்லியே வந்துள்ளோம். அச்சிறுமிக்கு நியாயம் கிடைத்தாக வேண்டும் என்பதில் நாங்களும் உறுதியாக உள்ளோம். ஆனால் ஏன் அப்பாவித்தனமான சில கதைகளை புனையவேண்டும்? இதற்கான சிபிஐ விசாரணையை கோரியுள்ளோம். நாம் ஏன் பலாத்கார குற்றவாளிகளை பாதுக்கபவர்கள் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படவேண்டும்” என்று கேட்டார் மது.
கிராமவாசிகள் அனைவரும் அவர்கள் தவறாக அடையாளப் படுத்தப்பட்டது குறித்து கடும் கோபத்தில் உள்ளனர். ஜம்முவில் டோக்ரா இனத்தவர்கள் அவர்களின் மொத்த இனமும் நியாயமான விசாரணையை கோரியதை தவறாக அடையாளப்படுத்தி அவமானப்படுத்தப் பட்டதால் கடும் வருத்தத்தில் உள்ளனர். “இது டோக்ரா இனத்தவர்களோடு மட்டும் முடிந்து விடவில்லை, இவர்களின் எல்லை இப்போது டோக்ரா என்பதை கடந்து மொத்த ஹிந்து சமூகத்தையே எதிர்ப்பதாக மாறியுள்ளது. வாட்ஸாப், முகநூல் என சமூக ஊடகங்களில், சிவனின் திரிசூலத்துடன் இறந்த பெண்ணின் உடல் இருப்பது போன்ற கண்டன குரல்கள் எழுவதை நம்மால்
பார்க்கமுடிகிறது. சிறுமிக்கான நியாயம் கோரல் என்ற நிலையிலிருந்து தாழ்ந்து, அவர்களின் கவனம் இப்போது  ஒட்டு மொத்த ஹிந்து சமூகத்தையும் தாக்கி அவமானப்படுத்துவதாக மாற்றியுள்ளது. நம்முடைய சமூகத்தின் கடவுள்களும் நம் கலாச்சார குறியீடுகளும் பலாத்காரத்தின் அடையாளங்களா?” என கொந்தளித்தார்
கூட்டாஹ் சந்திப்பில் கடை வைத்திருக்கும் நபர் ஒருவர்.
தீய பிராச்சாரத்தின் மூலம் பெரிதும் பாதிக்கப்பட்டவன்:
“நம்மை குறித்து, எந்தவொரு ஆதரமுமின்றி எதுவும்  சொல்லலாம், எல்லாவற்றையும் சொல்லலாம் என்பது போல் ஆகிவிட்டது” என்றார் சச்சின் சங்ரா, இவர் தான் நம்மை விஷால் ஜங்கோத்ராவிற்கு அறிமுகம் செய்து
வைத்தவர், அப்பகுதி குடியிருப்புவாசி. விஷால் ஜங்கோத்ராவின், உண்மையில் இவர் குற்றம் சுமத்தப்பட்ட நபர் அல்ல. ஆனால் இவருடைய புகைப்படம் எப்படியோ தவறாக பதிவாகி இப்போதும் சமூக ஊடகங்களில் மிக வைரலாக “கற்பழிப்பு செய்தவன்” என்ற அடை மொழியுடன் வலம் வருகிறது. இதனால் முற்றிலும் கலக்கமடைந்த ஜங்கோத்ரா ஸ்வராஜ்யா குழுவிடம் தெரிவித்தது “அவர்கள் என் இரத்தத்தை வேண்டுகிறார்கள். ஆசஸ் கான் என்கிற நடிகர் என் தலைக்கு ஐம்பது இலட்சத்தை நிர்ணயித்துள்ளார். நான் என்னுடைய முகநூல் கணக்கை கூட முடக்கி விட்டேன். காரணம் அங்கே இடப்படும் பின்னூட்டங்கள் என்னை உரைந்து போக செய்கின்றது. நான் ஜம்முவிற்கு செல்ல வேண்டியிருந்ததால் என் முகத்தை கை குட்டையால் மூடி கொண்டு தான் சென்றேன். நான் திருமணங்களில் சமைப்பவன், என்னை யாராவது கொலை செய்து விட்டால் நான் என்ன செய்வேன்? என்று கேட்டார் பரிதாபமாக.
(விஷால் ஜங்கோத்ரா)
நியாயத்திற்கான பாதை:
ஜம்மு காஷ்மீர் குற்றப்பிரிவால் பதியப்பட்ட குற்ற அறிக்கையில் சில ஓட்டைகள் இருப்பதை காண முடிகிறது. மற்றும் சில ஊடகங்கள் உருவாக்கிய மாய பிம்பங்கள் சொல்வதற்கு கூட வாய் கூசுகின்றன. இதை இந்த கோரமான செயலை சஞ்சு ராம் செய்தாரா இல்லையா என்பதை திறமையான முகவர்கள் முடிவு செய்வார்கள்.
ஆனால் இந்த கொடும் தீமையான செயலை செய்வதற்கு சஞ்சு தன்னுடைய சொந்த மகனையும், சகோதரி மகனையுமே பயன்படுத்தியிருப்பார் என்பதை யாராலும் ஏற்று கொள்ள முடியவில்லை. பல மர்மான கதைகள் இந்த சம்பவத்தை சுற்றி சுழன்று கொண்டிருக்கின்றன, அதில் உண்மையான கதை என்பதை அறிவதற்கான பாதை விரைவில் தெரியும்.
இந்த வழக்கின் முக்கிய திருப்பமாக கருதப்படுவது குற்றம் சாட்டப்பட்டவர் சிபிஐ விசாரணை கோருவதும், மயக்க மருந்து பரிசோதனையை(NARCO Test) நடத்த சொல்வதும் தான். இதை ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முப்டி செயல்படுத்த விடமாட்டார், காரணம் இது அவருக்கு கெளரவ போராட்டம். இப்படி செய்வது அவருடைய அரசியல் எதிர்காலத்திற்க்கு பேரிடராக அமையும். இது தான் இவ்வழக்கை சிபிஐ போன்ற சிறப்பு பிரிவிற்கு மாற்றப்படுவதை தடுக்கிறது. இம்மாவட்டத்தின் குற்றக்கிளையின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை மிக குறைவானது. எனவே சிறுமிக்கான நியாயத்திற்கான பாதை தற்சமயம் சம தளத்தில் இல்லை.












No comments:

Post a Comment

ஸ்ரீமத் பாகவதம் (தமிழ்)

  Srimad-Bhagavatam  1 Srimad-Bhagavatam   2 Srimad-Bhagavatam   3 Srimad-Bhagavatam    4 Srimad-Bhagavatam   5 Srimad-Bhagavatam   6 Srimad...