ஐந்திணை முதற்பொருள்
திணை | நிலம் | சிறுபொழுது | பெரும்பொழுது |
------------ | ------------------------------- | ------------------ | ----------------------------------------- |
குறிஞ்சி | மலையும் மலை சார்ந்த இடமும் | யாமம் | கூதிர், முன்பனி |
------------ | ------------------------------- | ------------------ | ----------------------------------------- |
முல்லை | காடும் காடு சார்ந்த இடமும் | மாலை | கார் |
------------ | ------------------------------- | ------------------ | ----------------------------------------- |
மருதம் | வயலும் வயல் சார்ந்த இடமும் | வைகறை | கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் |
------------ | ------------------------------- | ------------------ | ----------------------------------------- |
நெய்தல் | கடலும் கடல் சார்ந்த இடமும் | எற்பாடு | கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் |
------------ | ------------------------------- | ------------------ | ----------------------------------------- |
பாலை | வெப்பம் மிகுந்த சுரமும் சுரம் சார்ந்த இடமும் | நண்பகல் | வேனில், பின்பனி |
------------ | ------------------------------- | ------------------ | ----------------------------------------- |
சிறுபொழுது
மாலை | - | கதிரவன் மறைந்த பிறகு இரவுப்பொழுதின் முற்பகு |
யாமம் | - | நள்ளிரவு; இரவுப்பொழுதின் பிற்பகுதி |
வைகறை | - | கதிரவன் தோன்றுவதற்கு முன் இரவுப்பொழுதின் இறுதிப்பகுதி |
காலை | - | கதிரவன் தோன்றியதற்குப் பின் பகற்பொழுதின் முற்பகுதி; விடியற்காலம் |
நண்பகல் | - | பகற்பொழுதின் நடுப்பகுதி |
எற்பாடு | - | பகற்பொழுதின் இறுதிப்பகுதி, கதிரவன் மறைகின்ற காலம் |
பெரும்பொழுது
கார் | -- | ஆவணி, புரட்டாசி |
கூதிர் | -- | ஐப்பசி, கார்த்திகை |
முன்பனி | -- | மார்கழி, தை |
பின்பனி | -- | மாசி, பங்குனி |
இளவேனில் | -- | சித்திரை, வைகாசி |
முதுவேனில் | -- | ஆனி, ஆடி |
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஐந்திணைக் கருப்பொருள்
குறிஞ்சித் திணை | முல்லைத் திணை | மருதத் திணை | நெய்தல் திணை | பாலைத் திணை | |
----------- | ----------------------- | --------------------- | --------------------- | --------------------- | --------------------- |
தெய்வம் | முருகன் | திருமால் | இந்திரன் | வருணன் | துர்கை |
----------- | ----------------------- | --------------------- | --------------------- | --------------------- | --------------------- |
சிலம்பன், வெற்பன், பொருப்பன், கொடிச்சி, குறத்தி | குறும்பொறை நாடன், தோன்றல், கிழத்தி, மனைவி | ஊரன், மகிழ்நன், கிழத்தி, மனைவி | துறைவன், சேர்ப்பன் | மீளி, விடலை, காளை, எயிற்றி | |
மக்கள் | ----------------------- | --------------------- | --------------------- | --------------------- | --------------------- |
குறவர், குறத்தியர், கானவர் | ஆயர், ஆய்ச்சியர், இடையர் | கடையர், கடைசியர், உழவர், உழத்தியர், இடைச்சியர் | பரதவர், பரத்தியர், நுளையர், நுளைச்சியர் | எயினர், எயிற்றியர், மறவர், மறத்தியர் | |
----------- | ----------------------- | --------------------- | --------------------- | --------------------- | --------------------- |
பறவை | கிளி, மயில் | கானக்கோழி | நாரை, நீர்க்கோழி, அன்னம், குருகு | நீக்காக்கை | கழுகு, பருந்து, புறா |
----------- | ----------------------- | --------------------- | --------------------- | --------------------- | --------------------- |
விலங்கு | புலி, கரடி, பன்றி | முயல், மான் | எருமை, நீர்நாய் | சுறா | வலிமை இழந்த புலி, செந்நாய் |
----------- | ----------------------- | --------------------- | --------------------- | --------------------- | --------------------- |
ஊர் | சிறுகுடி | பாடி, சேரி | பேரூர், மூதூர் | பட்டினம், பாக்கம் | குறும்பு |
----------- | ----------------------- | --------------------- | --------------------- | --------------------- | --------------------- |
நீர் | சுனை நீர், அருவி நீர் | கான்யாறு | மனைக் கிணறு, பொய்கை, யாறு | உவர்நீர்க்கேணி, உவர்க்கழி | நீர் வற்றின சுனை, நீர் வற்றிய கிணறு |
----------- | ----------------------- | --------------------- | --------------------- | --------------------- | --------------------- |
பூ | காந்தள், குறிஞ்சி, வேங்கை | முல்லை, குல்லை, பிடவம், தோன்றி | தாமரை, கழுநீர் குவளை | தாழை, நெய்தல், புன்னை | மரா, குரா, பாதிரி |
----------- | ----------------------- | --------------------- | --------------------- | --------------------- | --------------------- |
மரம் | அகில், சந்தனம், வேங்கை | கொன்றை, குருந்து, காயா | மருதம், வஞ்சி, காஞ்சி | புன்னை, தாழை | இருப்பை, ஓமை, உழிஞை, பாலை |
----------- | ----------------------- | --------------------- | --------------------- | --------------------- | --------------------- |
உணவு | திணை, மலைநெல், மூங்கிலரிசி | வரகு, சாமை, முதிரை | செந்நெல், வெண்ணெலரிசி | மீனும், உப்பும் விற்றலால் பெறும் பொருள் | வழிப்பறி செய்த பொருள், கொள்ளையடித்த பொருள் |
----------- | ----------------------- | --------------------- | --------------------- | --------------------- | --------------------- |
பறை | வெறியாட்டுப்பறை, தொண்டகப்பறை | ஏறுகோட் பறை | மனமுழா, நெல்லரிகிணை | மீன்கோட்பறை | போர்ப்பறை, ஊரெறிபறை |
----------- | ----------------------- | --------------------- | --------------------- | --------------------- | --------------------- |
பண் | குறிஞ்சி பண் | முல்லைப்பண் (சாதாரி) | மருதப்பண் | நெய்தல்பண் (செவ்வழி) | பாலைப்பண் (பஞ்சுரம்) |
----------- | ----------------------- | --------------------- | --------------------- | --------------------- | --------------------- |
யாழ் | குறிஞ்சி யாழ் | முல்லை யாழ் | மருத யாழ் | விளரி யாழ் | பாலை யாழ் |
----------- | ----------------------- | --------------------- | --------------------- | --------------------- | --------------------- |
தொழில் | தேனெடுத்தல், கிழங்ககழ்தல், வெறியாடல், தினைகாத்தல் | வரகு விதைத்தல், களை பறித்தல், ஆநிரை மேய்த்தல், குழலூதல், காளை தழுவல் | நெல்லரிதல், களை பறித்தல், கடா விடுதல் | மீன் பிடித்தல், உப்பு விற்றல் | நிரை கவர்தல், சூறையாடல், வழிப்பறி செய்தல் |
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஐந்திணை உரிப்பொருள்
குறிஞ்சித் திணை | -- | புணர்தலும் புணர்தல் நிமித்தமும் |
முல்லைத் திணை | -- | இருத்தலும் இருத்தல் நிமித்தமும் |
மருதத் திணை | -- | ஊடலும் ஊடல் நிமித்தமும் |
நெய்தல் திணை | -- | இரங்கலும் இரங்கல் நிமித்தமும் |
பாலைத் திணை | -- | பிரிதலும் பிரிதல் நிமித்தமும் |
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
No comments:
Post a Comment