Tuesday, 11 July 2017

இஸ்லாத்தும், சாதீய கட்டமைப்பும்


இஸ்லாமிய மதத்தில் உள்ள மனித , சாதீய பேதங்கள்..




// லெப்பை, தக்கினி முஸ்லிம், மரைக்காயர், ராவுத்தர், மாப்பிள்ளை, பட்டாணி, (பத்ஹான்கான்) காக்கா, சேட், சையது, ஷேக், பீர், தாவூத், அன்சாரி, நவாப் உள்ளிட்ட முஸ்லிம்கள் பிற்படுத்தப்பட்டவர்களின் பட்டியலைச் சேர்ந்தவர்கள். //

//இதற்கு என்ன பதில் Nazeer Ahamed// - Ram nivas
https://suvanappiriyan.blogspot.in/2015/06/blog-post_21.html?m=1#comment-form


//
மனிதர்களே! உங்களை ஓர் ஆண் - பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களை கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன். - (அல்குர்ஆன் 49:13)

மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள். அவரிலிருந்து அவரது துணையை படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். -- (அல்குர்ஆன் 4:1)

மேற்கண்ட இறை வசனங்கள் சாதீயத்தின் ஆணி வேரையே அறுத்தெறிந்து விட்டது. 

அதே நேரம் இந்து மதம் என்ன சொல்கிறது என்பதையும் பார்போம்.

“த்ருஷ்ட்வா தேவஹா பலாயதே...”என்று போகிற பாஞ்சாத்ர ஆகம ஸ்லோகம் என்ன உத்தரவிடுகிறது என்றால்...பல ஆச்சார அனுஷ்டானங்களின் அடிப்படையில் பகவானை விக்ரகங்களில் இருத்தி வைத்திருக்கிறோம். 


இந்தப் புனிதமான கோயில்களுக்குள் சூத்ரனோ, பஞ்சமனோ ஒரு அடியெடுத்து வைத்தால்கூட அனுஷ்டானங்கள் கறைபட்டு விடும். அதனால்... அந்த விக்ரகங்களில் இருந்து பகவான் ‘பட்’டென ஓடிப் போய்விடுவார்.

அதனால்... சூத்ரனோ, பஞ்சமனோ கோயிலுக்குள் பாதம் எடுத்து வைத்தால்... விக்ரகம் வெறுங்கல்லாகி விடும். பகவான் அதில் க்ஷணம் கூட தங்கமாட்டார். எனவே, அவர்களை கோயிலுக்குள் விடாதே... என்கிறது ஆஹமம்.
//


பஞ்சராத்ர ஆகமத்தின்படி தீட்சை பெற்ற எந்த சாதியினர் வேண்டுமானாலும் ஆராதனை செய்ய முடியும்...



இதற்கு ஆதாரமாக 63 நாயன்மார்களின் பட்டியல் இணைக்கப்படுள்ளது..




இஸ்லாத்துல சாதிக்கு ஆதாரமாக குர்ஆன்ல இருந்து வசனம் எனில்.. இந்துமத்தில் சாதிக்கு ஆதாரமாக வேதத்தில் இருந்துதானே ஆதாரம் கொடுக்கனும்.

அதைவிட்டு இராமானுஜ தாத்தாச்சாரியே சொல்லிட்டாரு எனும் அளவுக்கு நீங்கள் புல்லரிப்பது என்ன வகை அறிவமைவு?..

மேலும் இராமானுஜ தாத்தாச்சாரிக்கு .... தாத்தாச்சாரி காலத்திலேயே மறுப்புநூலும் பிரசுரிக்கப்பட்டது..






இனி ....
நீங்கள் கொடுத்த குர்ஆன் வசனங்களைக்கொண்டும்... அதற்கு முரணாக வாழும் முஸ்லிம்களை வைத்தும்... இன்று இஸ்லாம் இருக்கிறதா என பார்ப்போம்..

/./

மனிதர்களே! உங்களை ஓர் ஆண் - பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களை கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன். - (அல்குர்ஆன் 49:13)

மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள். அவரிலிருந்து அவரது துணையை படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். -- (அல்குர்ஆன் 4:1)

மேற்கண்ட இறை வசனங்கள் சாதீயத்தின் ஆணி வேரையே அறுத்தெறிந்து விட்டது.

/./

ஒரே மனிதன்கிட்டயிருந்து படைக்கப்பட்ட மனித குலத்தில்... முஸ்லிம், முமீன், முஸ்லிம், முஸ்ரிக், முனாபிக், மஜூஸி, ஸாபியீன், காபிர்னுலாம் பேதம் வருதே... அதும் இதுவெல்லாம் குர்ஆன்லயே வருதே...

இந்த பேதங்களை உருவாக்கினது யார்??


இஸ்லாத்துல மனித இன பேதம் இல்லியா?..

முமீன், முனாஃபிக், முஸ்ரிக், காபிர்... மஜூஸி, ஸாபியீன்னு... குர்ஆன் இறக்கின அல்லாஹ்வையும், முகம்மதுவை அல்லாஹ்வின் தூதர்னு நம்புறவன்ங்கிறதையும் அடிப்படையாக்கி பேதத்தை ஆரம்பிச்சு....
முஸ்லிம்களிலேயே.... 

1) ஷேக், 
2) சைய்யது, 
3) மொகல் (மொகலாயர்), 
4) பதான் (பத்ஹன்கான்) 
என நான்கு சர்வதேச சாதிக்குழுக்கள் இருக்குது..

அந்த நான்கு குழுக்களிலேயே...
1) அஷ்ராஃப் (அ) அஷ்ரஃப்-- உயர்ந்த பிரிவினன்...
2)அஜ்லாஃப் (அ) அஜ்லஃப்-- தாழ்ந்த பிரிவினன்...
3) அர்ஸல் (அ) ரஸில் -- தாழ்ந்த நிலைக்கும் கீழானவன்....
அப்படின்னு... பேதம் இருக்குது....

அஷ்ரஃப்:-
அராபி (ஷேக்) என பெரிய சாதி.... ( அதும்போக குரைஷி முதல் பல பிரத்யேக குழுக்கள்...) 
இதும்போக அஷ்ரஃப் சாதி குழுக்கள்:-
1. ஷேக்குகள்
2. சையத்துகள்
3. பட்டாணியர்கள்
4. மொகலாயர்கள்
5. மாலிக்குகள்
6. மிர்ஜாக்கள்
மற்றும் இந்தியாவில்(பாகிஸ்தான், பங்களாதேஷ் உட்பட)... ஷேக், சைய்யது, மொகல் ( மொகலாயனோட வாரிசுகள்), பத்ஹன்கான்... (இந்த சாதிகள் இந்தியாவிலேயே உயர்ந்த சாதியாம்...).

அடுத்து... 

அஜ்லஃப்:-
இவர்களுக்கு காமினாக்கள், இதார்கள்..னு வேறு பெயர்களும் உண்டு... (அஜ்லஃப் என்றால் விளக்கம் கேட்கும் நம்ம ஊரு முமீன்கள், காமினாவுக்கும், இதாருக்கும் விளக்கம் கேட்க மாட்டார்கள்.. ஏனெனில் அது அன்றாடம் அவர்கள் பழக்கத்தில் உள்ளது...)
1) பயிர்த்தொழிலில் (அது எப்படி கேவலம்னு கேட்காதீங்க... ஹதீஸ் சொல்லுது...) ஈடுபட்டுள்ள ஷேக்குகளும் மற்றும் பூர்வீகத்தில் இந்துக்களாக இருந்து மதம்மாறி அஷ்ராஃப் சமூகத்தில் இடம்பெறாத பிராலி, தக்ராய் போன்றவர்களும். 
புஹாரி ஹதீஸ்:- 2321. 
முஹம்மத் இப்னு ஸியாத் அல் அல்ஹானீ(ரஹ்) அறிவித்தார். 
அபூ உமாமா அல் பாஹிலீ(ரலி), ஒரு வீட்டில் ஏர் கலப்பையையும் மற்றும் சில விவசாயக் கருவிகளையும் கண்டார்கள். உடனே அவர்கள், 'இந்தக் கருவி ஒரு சமுதாயத்தினரின் வீட்டில் புகும்போது அந்த வீட்டில் அல்லாஹ் இழிவைப் புகச் செய்யாமல் இருப்பதில்லை' என்று நபி(ஸல்) அவர்கள் கூற கேட்டிருக்கிறேன்' என்று கூறினார்கள். 
Book : 41
2) தார்ஜி, ஜொலாஹா, பக்கீர், ரங்ரெஸ்.
3) பர்ஹி, பாதியரா, சிக், சுரிஹார், தய், தவா, துனியா, காத்தி, கலால், கசய், குலா குஞ்சரா, லாஹரி, மஹிஃப்ரோஷ், மல்லா, நலியா, நிகாரி.
4) அப்தல், பாகோ, பெதியா, பாட், சாம்பா, தஃபாலி, தோபி, ஹஜ்ஜம், முச்சோ, நகர்ச்சி, நாத், பன்வாரியா, மதாரியா, துந்தியா.
நம்ம ஊரு ராவுத்தர்லாம் இந்த குரூப்புதான்...

அடுத்து...

அர்ஸல்:-
கீழ் சாதிக்கும் கீழானவன்னு சொன்னபிறகு... அதில் ஏதும் பேதம் இருக்க வாய்ப்பில்லைன்னு தப்பா நினைச்சிடாதீங்க...
1) பனார், 
2) ஹலால்கோர், 
3) ஹிஜ்ரா, 
4) கஸ்பி, 
5) லால்பெகி, 
6) மௌக்தா, 
7) மெஹ்தார்.
இதுபோக தமிழக அரசோட சாதிபட்டியல் படி... பிற்படுத்தப்பட்ட சாதியினரின் பட்டியலில்... ( இந்திய மத்திய அரசும், மாநில அரசுகளும் கொடுக்கும் சலுகைகளுக்காக முஸ்லிம்கள் தங்களை பிற்படுத்தப்பட்டவர்கள்னு சொல்லுறாங்க..)
1) ஷேக்.
2) சையது.
3) தக்னி முஸ்லிம்.
4) அன்சார்.
5) தூதுகோலா.
6) லெப்பை, ராவுத்தர், மரைக்காயர்.
7) மாப்பிள்ளா.
என 7 சாதியினராக முஸ்லிம்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கவனிக்க:- தமிழக அரசினை பொருத்தவரையும் கூட ... லெப்பை, ராவுத்தர், மரைக்காயர் எல்லாம்... ஒன்னுதான்...
அதிலும் ஷேக்தான் முதல்நிலை சாதி.... 
பக்கிரிஷாக்கள் எனும் முஸ்லிம் சாதியே தமிழ்நாட்டுல இல்லை...
தமிழ்நாட்டுல இருக்கும் கயலார் எனும் முஸ்லிம் சாதி... தமிழக அரசோட பட்டியலிலேயே இல்லை...

கொசுறு:- 
இஸ்லாம் பற்றி அம்பேத்கர் சொன்னது இது...

“நான் இஸ்லாத்தைத் தழுவியிருந்தால், கோடான கோடிப் பணம் எங்கள் காலடியில் கொட்டப் பட்டிருக்கும். ஆனால், ஐந்தாண்டுகளில் நாடே சீரழிந்து போயிருக்கும். 
மாபெரும் அழிவு வேலையைச் செய்தவன் என்று வரலாற்றில் இடம் பெற நான் விரும்பவில்லை’’என்று கூறினார் ((Ambethkar – A Critical Study))..

இந்தியாவில் இருக்கும் இஸ்லாமிய சாதிகள் இவையெல்லாம்...






பார்க்க:-
இடஒதுக்கீட்டின் நிழல் படாதவர்கள் 

தலித் முஸ்லிம் பின்னை தலித்திய தளத்தில் அர்சால்களின் எழுச்சி






கேரள மற்றும் தென்னிந்திய முஸ்லிம்களின் நிலையில் வளைகுடா நாடுகளின் பொருளீட்டல், வணிகரீதியான முன்னேற்றம் என சில வளர்ச்சித் தடங்கள் தென்படுகின்றன. எனினும், வட இந்திய முஸ்லிம்களின் நிலையோ மிகவும் பின்தங்கியே உள்ளது. பிஹார், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் தலித்துகள் மற்றும் பழங்குடியினரைவிட முஸ்லிம்கள் மோசமான வாழ்நிலையில் உள்ளனர். எனவேதான், பழங்குடியினர், தலித்துகளைப் போல் விளிம்புநிலைத் தொழில்களில் ஈடுபட்டுவரும் நலிந்த முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டு முன்னுரிமைக் குரல் மேலெழுந்துள்ளது.

முஸ்லிம் உட்பிரிவுகளின் நிலை

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு என்பது பல மாநிலங்களில் நடைமுறையில் இருப்பதுதான். மேற்கு வங்க மாநில மொத்த மக்கள்தொகையில் 25.25% முஸ்லிம்கள். அந்த அரசு 10% ஒதுக்கீட்டை 12 முஸ்லிம் சாதி உட்பிரிவுகளுக்கு வழங்கியுள்ளது. ஆனால், அரசுக் குறிப்போ மொத்தம் 37 முஸ்லிம் உட்பிரிவுகள் உள்ள தாகத் தெரிவிக்கிறது. கர்நாடக மாநிலத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர்களுக்கான உள் ஒதுக்கீடாக கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. கேரளத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 40% இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு 12% இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. பிஹாரில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 13% ஒதுக்கீட்டில் 9 வகை முஸ்லிம் பிரிவினருக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 18% ஒதுக்கீட்டில், 27 முஸ்லிம் பிரிவு களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் விளிம்புநிலை முஸ்லிம்கள்

தமிழக அரசு ஆணையின்படி லெப்பை, தக்கினி முஸ்லிம், மரைக்காயர், ராவுத்தர், மாப்பிள்ளை, பட்டாணி, (பத்ஹான்கான்) காக்கா, சேட், சையது, ஷேக், பீர், தாவூத், அன்சாரி, நவாப் உள்ளிட்ட முஸ்லிம்கள் பிற்படுத்தப்பட்டவர்களின் பட்டியலைச் சேர்ந்தவர்கள். 1982-ல் அம்பாசங்கர் கமிஷன் அறிக்கை அடிப்படையில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என இரு பிரிவுகளாகப் பகுக்கப்பட்டனர். 30% பிற்படுத்தப்பட்டவர், 20% மிகவும் பிற்படுத்தப்பட்டவர், 18% ஆதிதிராவிடர், பழங்குடியினர் 1% மற்றும் பிற சமூகத்தினர் 31% என்ற கணக்கில் இடஒதுக்கீடு அமைந்திருந்தது. இந்த 30% பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஒதுக் கீட்டில் முஸ்லிம்களுக்குத் தனி இடஒதுக்கீடாக 3.5% நடைமுறையில் இருந்துவருகிறது. தமிழகத்தின் முஸ்லிம்கள் 5.6% என அரசு தரப்பிலும், 7%-க்கு மேல் என முஸ்லிம் அமைப்புகள் தரப்பிலும் முன்வைக்கப்பட்டுள்ளன.

புதிதாக இஸ்லாத்துக்கு வந்த தலித் மக்கள் தங்களை லெப்பை என்ற பிரிவுக்குள் மட்டுமே இணைத்துக் கொள்ள முடிகிறது. இதனோடு சமூகரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் நலிந்த முஸ்லிம்களை அடையாளப்படுத்த வேண்டிய நிலையில் விவசாயக் கூலிகள், பாவோடிகள், பீடி சுற்றுபவர்கள், தோல் தொழிலாளர்கள், நகர்ப்புற சேரிகளில் வசிக்கும் உடல் உழைப்பாளிகள், சிறு வியாபாரம் செய்பவர்கள், பக்கிர்ஷாக்கள், மீங்காரர்கள், நாவிதர்கள் என்னும் ஒசாக்கள், நிரந்தர வாழிடமின்றி அலையும் முஸாபர்கள் என பல தரப்பட்ட விளிம்பு நிலை முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை சச்சார் அறிக்கையின் அடிப்படையில் கவனப்படுத்தவேண்டியுள்ளது. மேலும், சாதிய ஒடுக்குமுறையிலிருந்து தப்பிக்க முஸ்லிம்களாக மதம் மாறிய தலித் மக்களையும் அடித்தள முஸ்லிம்களாக அறிவிக்க வேண்டும். முஸ்லிம் தலித்துகளுக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் தனித்த இடஒதுக்கீட்டை வழங்குவது தமிழக முஸ்லிம் சமுதாயத்துக்கு உள்ளேயும் சமச்சீர் வளர்ச்சியை உருவாக்க வழிவகுக்கும்.

No comments:

Post a Comment