Friday 3 January 2020

மந்திரங்களும் -- விளக்கமும்...

மந்திரங்களும் -- விளக்கமும்...

“ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர:
த்ரூதீயோ அக்னிஷ்டேபதி: துரீயஸ்தே மனுஷ்யஜா:

Somah prathamo vivide Gandharvo vivida uttarah

Trtiyo Agnistepatih Turiyastemanusyajah.

Somo dadad gandharvaya Gandharvo dadadagna; ye

Rayincapputramscadad Agnirmahyamatho imam

– Rigveda, 10. 85, 40. 41.

இதன் பொருள்:

“முதலில் சோமன் (சந்திரன்) உன்னை பாதுகாத்தான்

பின் கந்தர்வன் உன்னை பாதுகாத்தான்

மூன்றாவதாக அக்னி உன்னை பாதுகாத்தான்

நான்காவதாக மூன்றுமாகிய  நான் உன் பாதுகாவலன் ஆகிறேன்”

அல்லது

மூன்றுமானவனிடம் உன்னை ஒப்படைக்கிறேன்…

இதன் உட்பொருள்:

1. ஒரு பெண் குழந்தை பிறந்து தானாக ஆடைகளை அணியும் பருவம் (4 – 5 வயது) வரை சந்திர ஒளியின் மென்மை, குளிர்மையை ஒத்த குணங்களை பெற்று வளர்கிறது. ஆகவே இப்பருவம் சந்திரனின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் பருவம் எனப்படுகிறது

2. கந்தர்வன் என்பது இசைக்கும், கேளிக்கைக்கும் அழகியலுக்கும் அதிபதியாக சொல்லப்படும் தேவதை.

ஒரு பெண்குழந்தையின் 5 – 11 வயது காலம் என்பது குறும்பும், அழகும் நிரம்பி வழிய, கள்ளம் கபடம் இல்லாமல் துள்ளி திரியும் காலம். ஆகவே இது கந்தர்வனின் ஆதிக்கத்தில் (பாதுகாவலில்) இருக்கும் பருவம் எனப்படுகிறது

3. அதன் பின் 11 – 16 வயது பருவ காலம், உடலில் ஹோமோன்களின் மாற்றத்தால் உடலமைப்பு மெல்ல மாற உஷ்ண அழுத்த மாற்றங்கள் ஏற்பட்டு பூப்படையும் பருவம். காமவெப்பம் மெல்ல உடலில் தொற்றிக்கொள்ளும் மங்கை பருவம். ஆகவே இது அக்னி (வெப்பம்) யின் ஆதிக்கத்தின் கீழ் வரும் பருவம் எனப்படுகிறது

இப்படி ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு தேவதைகளின் அருளால் பெண்மைக்குரிய அம்சங்களை எல்லாம் பெற்று மங்கையாய் அமர்ந்திருக்கும் உனக்கு குறைவிலா நலமே தர இப்போது மானிடன் நான் உன் பாதுகாவலன் ஆகிறேன். இது தான் இந்த வேதமந்திரத்தின் உட்பொருள்.

பதி என்னும் சொல்லின் பொருள் பாதுகாவலன் என்பதாகும். அதற்கு பெண்ணை புணர்பவன் என்ற அர்த்தம் இல்லை. அப்படி என்றால் பெண்ணை வன்புணர்வு செய்பவனும் பதி ஆகிவிடுவான்.

ஒரு பெண் உருவாக 3 தேவதைகளின் அருள் தேவைப்படுகிறது. 3 தேவதைகளின் அம்சமாய் விளங்கும் பெண் மானிடனான உன்னை இன்று அடைகிறாள். அத்துணை உயர்வான அவளுக்கு நீ காலம் முழுவதும் துரோகம் செய்யாது கண் போல் காக்க வேண்டும் என்பது இங்கு வலியுறுத்தப்படுகிறது (மணமகன் எடுக்கும் சத்தியபிரமாண மந்திரங்களிலும் இந்த உறுதிமொழி உள்ளது)

பதி என்ற சொல்லுக்கு பெண்ணை புணர்பவன் என்ற ஒரு தவறான அர்த்தத்தை தோற்றுவித்துவிட்டு, ஒரு உயர்வான அர்த்தம் தரும் மந்திரத்தின் அர்த்த்த்தை அப்படியே தலை கீழாக மாற்றுபவர்களை பார்த்து பரிதாபப்படுவதை விட வேறென்ன செய்ய முடியும்.

தலைகீழாய் தொங்கும் வௌவாலுக்கு உலகமே தலைகீழாய் தான் தெரியும் என்று சொல்வது போல். வக்கிரமாய் பார்ப்போருக்கு நல்ல விடயங்களும் வக்கிரமாய் தான் தெரியும்.

வடமொழி தெரிந்தவர்களும் தங்கள் மகளின் திருமணத்தில் இந்த மந்திரம் தான் சொல்கிறார்கள். புனிதமான திருமண சடங்கில் சொல்லப்படும் மந்திரத்தில் வக்கிரத்தை கலக்க வேண்டிய அவசியம் தான் என்ன?

்….்…..்

“ஏக மாதா பகு பிதா சற்சூத்திராய நமக” என்றும் மந்திரம் இருக்கிறது.

இதற்கும் ஒரு தாய்க்கும் பல தந்தைகளுக்கும் பிறந்த சூத்திரன் என்றுதான் அர்த்தம்.

இதை உங்களுக்கு பார்ப்பணன் ஒருவன்தான் கருத்தோடு சொல்லி வைத்தானா..??? சூத்திரரும் ஆரியர்தானுங்கோ….!! அவர்களும் சமஸ்கிர்தம் படிப்பவர்கள்தான்…

“ஏக” என்றால் ஒன்று என்று மட்டும் தான் என்பது இல்லை.. அது முதலில் என்றும் அர்த்தம் வரும்…

 “பகு” என்பது பின்னர்/அடுத்து  என்று அர்த்தம் வரும்…

அதிலும் சத்சூத்திராய என்பது ” ஆசிரியர்”

அதாவது ” முதலில் தாய்... அடுத்து தந்தை..  அடுத்து குரு... அதன்பிறகு அவர்களோட வழிகாட்டலில்...  மூவருக்கு அடுத்து தெய்வமான உன்னை ஆராதிக்கிறேன் என பொருள்...

சுருக்கமாக.. மாதா, பிதா, குரு, தெய்வம்னு.. குறிப்பிடலாம்…

்….்….்

மந்திரம் :

“என்மே மாதா ப்ரலுலோபசரதி
அனனவ் வ்ரதா தன்மேரேதஹாபிதா
வ்ருந்த்தாம் ஆபுரண்யஹா அவபத்யதாம்…”

பொருள் :

யன்மே: இதன் அர்த்தம் ஶ்ரீ வத்ஸ சோமதேவ சர்மா அவரதுஆபஸ்தம்ப பார்வண ச்ராத்த ப்ரயோகம் புத்தகத்தில் த்மிழ் அர்த்தம் கொடுத்து இருப்பது இவ்வாறு.: எனது தாயார் பதிவ்ரதா தர்மப்படி பதியின் தர்ம வ்ரதங்களை ப் பூர்ணமாக அனுஷ்டிக்காமலிருந்தாலும் என்னை உன்டு பண்ணின பிதாவே இந்த ஹவிஸ்ஸை பெறட்டும்.

விதி தவறி இருந்தால் ஹவிஸை பெற வரும் மற்ற அஸுராதிகள் இதை அடைய வேண்டாம். என் தந்தைக்கே தருகிறேன்.

ஆனால் இவையெல்லாம் இந்த மந்திரம் தொடர்பான வாதத்திற்கு நமக்குத் தேவையே இல்லை.

காரணம் இந்த மந்திரத்தில் அப்படிப்பட்ட பொருள் எதுவும் இல்லை.

எளிதாக சொல்வதானால்.. இப்போது பெண்கள் மறு திருமணம் செய்துகொள்வதென்பது ஆச்சரியமற்ற செயலாகிவிட்டது.. அதிலும் குழந்தையோடு உள்ள பெண்களும் இருப்பதும் சாதாரணமாகிவிட்டது..

இப்படிப்பட்ட நிலையில்… பெண்ணின் முந்தைய கணவனுக்கு பிறந்த குழந்தை.. அதே பெண்ணின் இரண்டாவது கணவனுக்கா தன் தந்தை என்று திதி கொடுக்க முடியும்?

அவன் தந்தை யாரோ.. அவருக்கு திதி கொடுத்தால்தானே பித்ரு கடன் தீரும்..

“என்மே மாதா” என்கிற ச்ராத்த

மந்திரத்திற்கு சரியான

பொருள்:

“…ப்ரலுலோப சரதி …”

சாஸ்த்ர’த்தில் ஐந்து பேரை அப்பாவாகச் சொல்லியிருக்கிறது.

யாரார் என்றால்

ஜநீதா சோபநீதா ச யச்ச வித்யாம்
ப்ரயச்சதி !
அந்நதாதா பயத்ராதா பஞ்சைதே
பிதர:ஸ்ம்ருதா:!!

1) பெற்ற தகப்பன்
2) ப்ரஹ்மஉபதேசம் செய்தவன்
3) குரு
4) அன்னமிட்டு காப்பாற்றியவன்
5) பயத்திலிருந்து / ஆபத்திலிருந்து காப்பாற்றியவன்

இந்த ஐவரும் தந்தையாகப் போற்றப்படவேண்டியவர்கள்

ஆயினும் யாருடைய சுக்லத்தினால் நான் பிறவி பெற்றேனோ... அந்த, என்னைப் பெற்ற தந்தைக்கு இந்த ஆஹுதி போகவேண்டும். என்பது பொருள்.

அதுபோல்..

என்மே பிதாமஹி – என்பது பாட்டியையும்

என்மே ப்ரபிதாமஹி – என்பது கொள்ளுபாட்டியையும் குறிக்கும்..

(பாட்டிக்கு – ரேத:பிதாமஹ: என்றும்
கொள்ளுப் பாட்டிக்கு – ரேத:ப்ரபிதாமஹ: என்றும்
மந்த்ரம் தெளிவாக உள்ளது).

இந்த காரணத்தினால்தான் பெண்களிடமிருந்து புல் வாங்கிப்பண்ணப்படும் ச்ராத்தங்களுக்கு இந்த மந்த்ரங்களை உபயோகித்து ஹோமம் செய்ய முடிவதில்லை.

எவ்வளவு அழகான, தெளிவான, குறிப்பான மந்த்ரம்? இதை கொச்சைப்படுத்துகிறார்களே?!! ஏனோ??

போகவும்... இப்பத்திய காலத்தில்தானே இரண்டாம் கணவன் முறை.. பிறகெப்படி இந்த மந்திரம் பொருந்தும் என நினைக்கவேண்டாம்... பாஞ்சாலிக்கு 5 கணவர்களும்.. அவர்கள் மூலம்  குழந்தைகள் இருந்ததையும் கவனிக்க வேண்டும்..

மேலும் இந்த மந்திரத்தைச் சொல்லி கோத்திரத்தையும், பெயரையும் சொல்கிறோம்,

பல இடங்களில் உபநயனத்தின்போது வைக்கப்பட்ட சர்மா யாரும் உபயோகிக்காமல்

போகுமானால் மறந்து போயிருக்கும். தாத்தா, கொள்ளுத் தாத்தா பெயர் பலருக்குத் தெரியவில்லை, இதனால் பெயரும், கோத்திரமும்கூட தவறாகப்

போவதற்கு வாய்பிருக்கிறது, ஆனால் நான் பிறப்பதற்கு யார் காரணமோ அவனுக்கு

இந்த ஆகுதி போய்ச் சேரவேண்டும் என்று கூறுவதில் என்ன தவறு இருக்கிறது?

அந்தக் குறிப்பிட்ட தன்னைப்பெற்ற தகப்பனுக்கு இந்த ஆகுதி பலிதமாகவேண்டும்

என்பதில் இந்த மந்திரம் காட்டும் அக்கறையை கண்டு வியக்கவேண்டாமா?

அப்படிச் சரியானவனுக்குப் போய்ச்சேர்ந்தால் அல்லவோ, இந்த மகனுக்கு பித்ரு கடன் தீரும்.

### திருமணத்தில் இறுதியாக சொல்லப்படும் மந்திரம் ###

“மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா
கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்”

“கெட்டி மேளம், கெட்டி மேளம்” என்று சொல்லுவதோடு,  தவில் நாதஸ்வர கலைஞர்களுக்கு தெரியும் வண்ணம் கையை உயர்த்தி சைகையும் காட்டுகிறார் புரோகிதர். சமிக்ஞை சரியாக செல்ல வேண்டும் என்பதற்காக பலரும் அதே போல கையை உயர்த்தி  விரலை ஆட்டி “கெட்டி மேளம் , கெட்டி மேளம்” என்கின்றனர். அதோடு இருக்கைகளை விட்டு எழுந்து பூவும் அட்சதையும் போடத் தயாராகின்றனர்.

இந்த மந்திரம் எந்த ஒரு தேவனையோ, கடவுளையோ புகழ்ந்தோ, அவர்களிடம் விண்ணப்பமாக அமைந்ததோ இல்லை.  இந்த மந்திரம் மணமகன்  தன்னுடைய வாழ்க்கையில் மனைவி எந்த அளவுக்கு இன்றியமையாதவள் என்பதை உணர்ந்த நிலையை வெளிப்படுத்தும் விதமாக, மனைவியின் மேன்மையை போற்றி அவள் பல்லாண்டு வாழ வாழ்த்தும் பாவாக அமைந்துள்ளது.  இந்திய சமுதாயத்தின் அடிப்படை ஆதாரக் கோட்பாட்டை இந்த மந்திரம் சொல்கிறது.

திருமணத்தின் போது மணமகன்,  தன வாழ்வில் மனைவியின் முக்கியத்துவத்தை உணரந்தவனாக, இவ்வளவு சிறப்புகளுடைய  என வாழ்க்கை துணைவியே நீ நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் என்பதை சொல்லும் மந்திரமே இந்த “மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா…. !”

மம ஜீவன ஹேதுனா – என்னுடைய வாழ்க்கையில் இன்றியமையாதவளாகி  இருப்பவளே

(மம -என்னுடைய, ஜீவன – வாழ்க்கையில், ஹேதுனா-  இன்றியமையாத(வளே)

மாங்கல்யம் தந்துனானே– இந்த மங்கல சாட்சியாக

கண்டே பத்னாமி –  உன்  கழுத்தை சுற்றி அணிவித்து ( நம் உறவை உறுதி செய்கிறேன் )

சுபாகே– மிகச் சிறந்த குண நலன்களை உடையவளே

த்வம் சஞ்சீவ சரத சதம்”– நீ நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்!

(த்வம் -நீ, சஞ்சீவ- வாழ்க , சரத – ஆண்டு ,  சதம் – நூறு)

இந்த மந்திரம் மனித வாழ்க்கையின் அடிப்படையை உணர்த்தும் பகுத்தறிவு கோட்பாடாகும் .  இந்த மந்திரத்தை வெறுமனே சொல்வதோடு நில்லாமல், இந்த மந்திரத்தின் பொருளை தெரிந்து  கொள்வதோடு நிறுத்தாமல், இந்த மந்திரத்தின் உண்மையை மனதில் உணர்ந்தவன், தன் மனைவி தன் வாழ்க்கையில் எந்தளவுக்கு இன்றியமையாதவள் என்பதை அறிந்து கொண்டவனின் வாழ்க்கை ஓடம் சிக்கி சிதறாமல் காப்பாற்றப் படும்.

No comments:

Post a Comment

ஸ்ரீமத் பாகவதம் (தமிழ்)

  Srimad-Bhagavatam  1 Srimad-Bhagavatam   2 Srimad-Bhagavatam   3 Srimad-Bhagavatam    4 Srimad-Bhagavatam   5 Srimad-Bhagavatam   6 Srimad...