Wednesday, 24 February 2021
Saturday, 24 October 2020
திருக்குறளை ஒழியுங்கள் -- ஈவேரா
வெளியிடப்பட்டது: 14 ஜனவரி 2019
திருக்குறளைத் தூக்கி எறியுங்கள்! வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்!
குறளில் வாழ்க்கைத் துணைநலத்தைப் பற்றி சொல்ல வந்த 6-ஆம் அத்தியாயத்திலும் பெண் வழிச் சேரல் என்பதைப்பற்றி சொல்ல வந்த 91-வது அத்தியாயத்திலும் மற்றும் சில தனி இடங்களிலும் பெண்கள் விஷயத்தில் மிக்க அடிமைத் தன்மையையும் தாழ்ந்த தன்மையையும் புகுத்தப்பட்டிருப்பதாகவே எண்ணக்கிடக்கின்றது. தெய்வத்தைத் தொழாமல் தன் கொழுநனாகிய தன் தலைவனைத் தொழுகின்றவள் மழையைப் பெய்யென்றால் பெய்யும் என்றும், தன்னைக் கொண்டவன் என்றும் இம் மாதிரியான பல தாழ்த்தத் தகுந்த கருத்து கொண்ட வாசகங்கள் காணப்படுகின்றன.
இது விஷயத்தில் மாறுபட்ட அபிப்பிராயம் கொள்ளுவோர், மேல்கண்ட இரண்டு அத்தியாயங் களையும் 20 குறள்களையும் உரைகளைக் கவனியாமல் மூலத்தை மாத்திரம் கவனிக்கும்படி வேண்டுகிறேன். அப்படிப் பார்த்து பிறகு இந்த இரண்டு அதிகாரங்கள் அதாவது வாழ்க்கைத் துணை நல அதிகாரமும், பெண்வழிச் சேரல் அதிகாரமும் குற்றமற்றது என்பதாக யார் வந்து எவ்வளவு தூரம் வாதிப்பதானாலும் கடைசியாக, திருவள்ளுவர் ஒரு ஆணாயில்லாமல் பெண்ணா யிருந்து இக் குறள்களை எழுதியிருப்பாரானால் இம்மாதிரி கருத்துக்களை காட்டியிருப்பாரா? என்பதையாவது கவனிக்கும்படி வேண்டிக் கொள்ளுகிறேன்.
- தோழர் பெரியார், குடி அரசு - 08.01.1928
***
இனி தமிழர்களால் சமதர்மநூல் என்று சொல்லப்படும் குறளில் தீண்டாமைக்கு இடமில்லை என்று சொல்லப்படுகின்றது. ஆனால் அதன் உண்மைநிலை என்ன என்பதைக் கொஞ்சம் பார்ப்போம்.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா
செய்தொழில் வேற்றுமையால்”
என்ற குறளைக் கொண்டு பிறப்பு வித்தியாசத்தைத் திருவள்ளுவர் ஒப்புக் கொள்ளவில்லையென்றும் தொழில் வேற்றுமை பற்றியே உயர்வு தாழ்வு வித்தியாசம் உண்டென்றும் கூறுகின்றனர். இதுவும் தீண்டாமையை ஒரு வழியில் ஒப்புக் கொள்ளுகின்றதென்பதே நமது அபிப்பிராயமாகும். உயர்வு தாழ்வு வித்தியாசத்தைக் கற்பிப்பது பிறப்பாயிருந்தாலும் சரி அல்லது தொழிலாயிருந் தாலும் சரி, அவை மூலம்தான் தீண்டாமையும் உற்பத்தியா கின்ற தென்பதை யாரும் மறுக்க முடியாது.
அல்லாமலும் திருவள்ளுவரும் வருணாச்சிரம தர்மத்தை ஒப்புக் கொள்ளமலில்லை யென்றே சொல்லலாம்.
“மறப்பினும் ஒத்துக்கொளல் ஆகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக்கெடும்”
“ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர்
காவலன் காவான் எனின்”
என்னும் குறள்பாடல்கள் வருணாச்சிரம தருமத்தைப் போதிப்பனவேயாகும்.
“பார்ப்பான் வேதத்தை மறந்து விட்டாலும் மறுபடியும் கற்றுக் கொள்ளலாம். ஆனால் அவனுடைய பிறப்பிற்குரிய ஒழுக்கத்தை விட்டு விடுவானானால் கெடுவான்”.
‘அரசன் சரியாக அரசாட்சி செய்யாவிட்டால் பசுக்களின் நன்மை குறையும் ஆறுவகைத் தொழிலையுடைய பார்ப்பனர்கள் வேதத்தை மறந்து விடுவர்’
என்பனவே மேற்கூறிய குறள்களுக்கு அர்த்தம் என்பதைக் கொண்டு ஆராயும் போது திருவள்ளுவர் வருணாச்சிரம தருமத்தை ஒப்புக் கொள்ள வில்லையென்றாவது, உயர்வு தாழ்வு வித்தியாசங்களை ஒப்புக்கொள்ள வில்லை யென்றாவது, தீண்டாமைக்கு இடங்கொடுக்க வில்லையென்றாவது சொல்ல முடியுமா? ‘தமிழ் வேதம்’ ‘சமதர்ம வேதம்’ என்று சொல்லப்படும் குறளின் நிலமையே இப்படி இருக்குமானால் மற்ற நூல்களின் நிலைமையைப் பற்றிக் கூறவும் வேண்டுமா?
- தோழர் பெரியார், குடி அரசு - 27.03.1932
***
தீண்டப்படாதவர்கள் விஷயமாகவோ, ஜாதி வித்தியாசம் விஷயமாகவோ, இந்து மத சீர்திருத்த விஷயமாகவோ இந்து மதம் என்றும் சாதி வித்தியாசம் என்றும் ஏற்பட்ட காலம் முதலே முயற்சிகள் செய்யப்பட்டுத்தான் வந்திருக்கின்றன.
கபிலர், திருவள்ளுவர், ராமானுஜர் முதலாகியவர்கள் ‘தெய்வத் தன்மையில்’ இருந்து பாடுபட்டிருப்பதாய் சரித்திரம் கூறுகின்றன. புத்தர் முதலிய அரசர்கள் பாடுபட்டிருப்பதாய் ஆதாரங்கள் கூறுகின்றன.
ராம் மோகன்ராய் மற்றும் சுவாமி தயானந்த சரஸ்வதி, ராமலிங்க சுவாமிகள், விவேகானந்தர் முதலிய ஞானவான்கள் முயற்சித்திருப்பதாய்ப் பிரத்தியட்ச அனுபவங்கள் கூறுகின்றன. இவர்கள் எல்லாம் இன்று பூஜிக்கப்படுகிறார்கள் என்றாலும் காரியத்தில் ஒரு பயனும் ஏற்பட்டதாகக் கூற முடியாது. மேற்கண்ட பெரியார்களுக்கு சிஷ்யர்களாக 100 பேர்களோ பதினாயிரம் பேர்களோ ஒரு லட்சம் பேர்களோ இருக்கலாம்.
அவரவர்கள் ஸ்தாபனங்களில் ஒரு சில லக்ஷம் அங்கத்தினர்கள் இருக்கலாம். மற்றப்படி காரியத்தில் நடந்ததென்ன என்று பார்த்தால் பழய நிலைமையே தான். சட்டதிட்டங்கள் மூலம், வருணாச்சிரம கூட்டங்கள் மூலம் பத்திரப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.
ஆகவே இவ்விஷயத்தில் ஏதாவது ஒரு காரியம் தகுந்த அளவுக்கு நடைபெற வேண்டுமானால் மேல்கண்டபடி சுவாமிகள் என்றும், அவதாரங்கள் என்றும், மகாத்மா என்றும், பூஜிக்கப்படத் தக்கவர்கள் என்றும் சொல்லி சொல்லிக் கொள்ளுபவர்களால் ஒரு காரியமும் நடைபெறாது. இவர்களை பண்டார சன்னதிகள், சங்கராச்சாரி யார்கள் என்று சொல்லப் படுபவர்களுக்கு ஒரு படி மேலாகச் சொல்லலாம். ஆனால் பொது ஜனங்களால் வெறுக்கப்படுகிறவர்களாலும் தூற்றப் படுகின்றவர்களாலும் தான் அவசியமான ஏதாவது மாறுதல்கள் காரியத்தில் நடைபெறக்கூடும்.
எனவே தோழர் அம்பத்கார் அவர்களின் கர்ஜ்ஜனையும், வீரமும், ஞானமும் நிறைந்த தீர்மானமும் பொது ஜனங்களால் எவ்வளவுதான் வெறுக்கப்பட்ட போதிலும் அவர் எவ்வளவு தான் தூற்றப்பட்ட போதிலும் அதுதான் தாழ்த்தப்பட்ட மக்கள் மாத்திரமல்லாமல் இந்தியாவில் உள்ள இந்துக்களில் பார்ப்பனரல்லாத மக்களாகிய 100க்கு 97 விகிதாச்சாரமுள்ள 24 கோடி இந்து மக்களின் விடுதலைக்கு சர்வசமய சஞ்சீவி ஆகப் போகிறது.
- தோழர் பெரியர் - குடி அரசு - 20.10.1935
***
திருவள்ளுவர், கபிலர், ராமானுஜர் முதலிய புராணக்காரர்களும் பிரம்மசமாஜம், ஆரிய சமாஜம் முதலிய மத சம்மந்தமான சில புது முயற்சிகளும், மற்றும் எத்தனையோ சீர்திருத்த முயற்சிகளும் எல்லாம் உண்மையறியாமலும், உலக மெப்புக்கும் தனிப்பட்ட சமூக சுயநலத்தை முன்னிட்டும் செய்யப்பட்ட காரியங்களே தவிர, மனித சமூகத்தில் பிறவியின் பேரால் உள்ள ஜாதிபேதம் அடியோடு ஒழியத்தக்க மாதிரிக்கோ, ஒழியும் படியாகவோ செய்த காரியங்கள் அல்ல.
- தோழர் பெரியார், குடி அரசு - 05.04.1936
***
திருமணம் என்று சில தமிழ்ப் புலவர்கள் சொன்னாலும், திருமணத்திற்கும் இந்நிகழ்ச்சிக்கும் சம்பந்தமோ, பொருளோ இல்லை. தமிழனுக்கு மட்டுமல்ல, ஆரியனுக்கும் கிடையாது என்று சொல்வேன். விவாகம், கல்யாணம், முகூர்த்தம் என்பதெல்லாம் வேறு பொருளைக் குறிப்பிடும் சொற்களே தவிர, இந்நிகழ்ச்சியை காரியத்தைக் குறிப்பிடும் சொற்கள் அல்ல.
வாழ்க்கைத் துணை என்பதை வள்ளுவன் சொல்லி இருக்கிறானே என்பார்கள். அவன் ஆணுக்குப் பெண் அடிமை என்பதையே குறிப்பிட்டிருக்கிறான். “தற்கொண்டாற்பேணி” என்ற குறளே பெண்ணை அடிமை என்பதைக் குறிப்பிடுவதே ஆகும் என்று ஆண் - பெண் திருமண முறை தோன்றிற்றோ அன்றே ஆணுக்குப் பெண் நிரந்தரமான அடிமை என்பதும் தோன்றி விட்டது.
மணப்பாறையில் 4, 5-ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியில், என் மேல் அன்பு கொண்ட சில புலவர்கள் நான் இதுபோல் பேசியதைக் கேட்டு இம்முறைக்கு இலக்கியத்தில் சான்றுகள் இருக்கின்றன என்று சொல்லி, மணமகன் காளையை அடக்கிப் பெண் கொள்ள வேண்டுமென்று ஒரு கவிதையையும் எடுத்துக் கூறினர். இன்னொன்று ஆணும், பெண்ணும் தோட்டத்தில் உலவும் போது ஒருவருக்கொருவர் பார்த்து சேர்ந்து கொள்வார்கள் என்றும் சொன்னார்கள்.
நான் கேட்டேன், பெண் என்ன காளை, புலியைப் போல அவ்வளவு முரட்டுக் குணத்தன்மை உடையதா? அதை அடக்க அவ்வளவு பலம் பொருந்தியவன் தான் தேவையா? என்று கேட்டேன். அந்தப் புலவர்கள் சிரித்துக் கொண்டார்கள். நான் இவற்றை ஏன் சொல்கிறேன் என்றால், இந்த நிகழ்ச்சியைக் குறிக்கத்தக்க வகையில் இந்த நிகழ்ச்சியை உணர்த்தக் கூடிய பொருளில் இந்நிகழ்ச்சி இப்படித்தான் செய்யப்பட வேண்டு மென்கிற முறையில் ஒரு சொல்லோ, ஆதாரமோ எதுவும் நமக்குச் சரித்திர வாயிலாகவுமில்லை - இலக்கியங்களிலும் இல்லை என்பதைத் தெளிவு படுத்தவே ஆகும்.
(19.05.1967 அன்று புதுக்கோட்டையில் நடைபெற்ற திருமண விழாவில் தோழர் பெரியார் உரை. விடுதலை, 29.05.1967)
***
...தமிழனின் வாழ்வு முறைக்குக் குறள்தான் என்று சொல்வார்கள். நாம் காட்டு மனிதனாக இருந்த வரை குறள் சரி. நாட்டு மனிதனான பின், பெண்களுக்குத் தான் அதில் கற்பு நீதி சொல்லப் பட்டிருக்கிறதே தவிர, ஆண்கள் கற்பு நீதி பற்றி அதில் ஒன்றுமில்லை. குறளைத் தூக்கியெறிய வேண்டியது தான். பெண்கள் முன்னேற்றத்திற்கு ஒரு வார்த்தை கூட அதில் இல்லை.
குறளில் மட்டுமல்ல, தமிழ் இலக்கியங்கள் யாவுமே பெண்களை அடிமைப்படுத்தக் கூடிய தாகவே இருக்கின்றன என்பதை விளக்கும்போது சின்னத்தம்பி அவர்கள் "அய்யா அவர்கள் மன்னிக்க வேண்டும் குறளில் ஆண்களுக்கும் நீதி சொல்லப் பட்டிருக்கிறது. "பிறர் இல் விழையாமை" என்ற ஓர் அதிகாரமே இருக்கிறது. பிறன் மனைவியை நினைப்பது, தீண்டுவது குற்றமென்று வள்ளுவர் ஆண்களுக்கும் சொல்லியிருக்கின்றார்" எனக் குறிப்பிட்டார்.
தந்தை பெரியார் அவர்கள், “அய்யா சொன்னது ரொம்ப சரி. வள்ளுவன் மற்றவன் திருமணமும் செய்து கொண்டுள்ள பெண்களை நினைப்பது, தீண்டுவது குற்றமென்று சொன்னானே தவிர, திருமணமாகாத பெண்களைத் தீண்டுவது குற்றமென்று சொல்லவில்லையே! பெண்கள் அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு, அதாவது ஆண்களைக் கண்டால் பயந்து கொண்டும், வெட்கப்பட்டும், படிக்காத மடைச்சியாகவும், பிறர் கண்டால் அருவருப்பு அடையும்படியும் இருக்க வேண்டுமென்று சொன்னானே தவிர, மனைவி கடவுளைத் தொழவிட்டாலும், கணவனைத் தொழுபவளாக இருக்க வேண்டுமென்று சொன்னானே தவிர, ஆண்கள் தன் மனைவியைத் தொழ வேண்டும். மனைவி சொல்படி கேட்க வேண்டும் என்று சொல்லவில்லையே. அவ்வை பெண்தான். அப்படி இருந்தும், அவளே "தையல் சொல் கேளேல்" 'பெண் சொல்வதைக் கேட்காதே' என்று தான் எழுதி இருக்கிறாள்.
நான் வள்ளுவனைக் குறை கூறுகிறேன் என்று கருத வேண்டாம். அவன் வாழ்ந்த காலம் அப்படிப்பட்டது. மனிதனெல்லாம் காட்டு மிராண்டியாக இருந்த காலம். அப்போதிருந்த நிலைமைக்குத் தக்கபடி அப்போதுள்ள வாழ்க்கை முறைக்கு ஏற்றபடி அவன் எழுதி இருக்கின்றான். இது அவன் குற்றமல்ல. அப்போதிருந்த நிலை அப்படிப்பட்டது. அதுவே இன்றைக்கும் என்பது தான் தவறாகும். மனிதன் 2,000-ஆண்டுகளுக்கு முன் இருந்தது போல் இன்றில்லை. தனது வசதிக்கும், வாய்ப்பிற்கும், தேவைக்கும் ஏற்ப உணவு, உடை, உறையுள் மற்ற எல்லாவற்றையும் மாற்றிக் கொண்டிருக்கின்றான்.
இதை மட்டும் மாற்றிக் கொள்ள மாட்டேனென்றால் இதை முட்டாள்தனம் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது? நீங்கள் நன்றாகச் சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மனிதன் எதில் மாறாமல் இருக்கின்றான்? நன்றாகச் சிந்தியுங்கள். உங்களுக்கு ஏதாவது தோன்றினால் எடுத்துச் சொல்லுங்கள். மாற்றிக் கொள்ளக் கூடியதாக இருந்தால் எனது கருத்தை மாற்றிக் கொள்கிறேன்.
(02.06.1968-அன்று நடைபெற்ற கொட்டையூர் திருமண விழாவில் தோழர் பெரியார் உரை. விடுதலை, 15.06.1968)
***
...திருமணம் என்பதே ஓர் ஆணுக்கு ஒரு பெண்ணை அடிமைப்படுத்துவது என்பது தான் பொருள். நீங்கள் இன்னும் பத்தாயிரக்கணக்கில் நகை போட்டாலும் அந்தப் பெண் ஆணுக்கு அடிமையாக இருக்க வேண்டுமென்பது, “தெய்வம் தொழா அள் கொழுநன் தொழு தெழுவாள்” என்கிறான் வள்ளுவன். நாம் கடவுளே வேண்டாமென்று சொன்னால், அப்புறம் கணவன் என்ன வெங்காயம், எதற்காக ஒரு பெண் தன் கணவனை வணங்க வேண்டும்? அவன் என்ன அவ்வளவு உயர்ந்தவனா என்பதைச் சிந்திக்க வேண்டும்.
(16.06.1968- அன்று பொத்தனூரில் நடைபெற்ற திருமண விழாவில் தோழர் பெரியார் உரை. 'விடுதலை', 08.07.1968)
***
நம் அறிஞர்களும், புலவர்களும் நமக்கு மனித தர்மத்திற்குக் குறளைத் தான் எடுத்துக் காட்டுவார்கள். அந்த வள்ளுவன் கூட இருக்கிற மற்றவனை விடக் கொஞ்சம் பரவாயில்லை என்பது தானேயொழிய, அவன் தான் எல்லாவற்றிற்கும் என்பது பொருந்தாதது. நேற்று ஒரு பள்ளியில் பாரதிதாசன் படத்தைத் திறந்து வைத்துப் பேசும் போது, வள்ளுவன் படத்தைத் தூக்கி எறிந்து விட்டு பாரதிதாசன் படத்தை வைக்க வேண்டுமென்று சொன்னேன். பாரதிதாசனைப் போல சீர்திருத்தக் கருத்துக்களைச் சொல்ல நம் புலவர்கள் முன்வர வேண்டும். புலவர்களை வணக்கத்தோடு கேட்டுக் கொள்கிறேன்.
ஆண்களுக்கு எந்தப் புலவனும் ஒழுக்கத்தைப் பற்றிச் சொல்லவில்லை. அத்தனை நீதி சொன்னவனும், ஒழுக்கம் பற்றிச் சொன்னவனும் பெண்களுக்குத்தான் சொல்லி இருக்கிறான். இன்றைக்கு நாம் நினைப்பதை அவன் எப்படி நினைக்க முடியும். இன்றைய உலகம் வேறு; நேற்றிருந்த உலகம் வேறு.
பழைய வைத்தியன் எவ்வளவு அறிவாளியாக இருந்தாலும், இப்போது இங்கிலீஷ் வைத்தியத்தில் பெயிலாகப் போனவனால் செய்யக் கூடியதைக் கூட அவனால் செய்ய முடியாது. பழைய வைத்தியன் முறையே மணி - மந்திரம் - அவ்டதம் என்பது. இப்போது அதெல்லாம் பயன்படுவது கிடையாது. அதுபோல இன்றைய வாழ்வுக்குப் பழைய சங்கதியைப் படிக்கவே கூடாது. எந்த நெருக்கடியான கட்டமாக இருந்தாலும் நமக்கு எதிரேயுள்ள - நம் அறிவிற்கு, சிந்தனைக்கு, நடப்பிற்கு ஏற்றதைக் கொண்டு தான் செயல்பட வேண்டுமே தவிர, முன்னோர்கள் நடந்து கொண்டார்கள், பழைய புராணம், இதிகாசம் இப்படிச் சொல்கிறது என்று பின்னோக்கியுள்ளதைப் பார்க்கக் கூடாது.
...வள்ளுவன் அப்படிச் சொன்னான்; தொல்காப்பியன் இப்படிச் சொன்னான் என்றால், அதெல்லாம் அவன் வாழ்ந்த காலத்திற்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாமே தவிர, இப்போதைக்கு அவை பயன்படக் கூடியதல்ல. இந்த வாழ்க்கைக்கு எவனும் வேலி போட முடியாது. நாளைக்கு எப்படி அமையும் என்று சொல்ல முடியாது. நாளுக்கு நாள், நேரத்திற்கு நேரம் உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. அதற்கேற்ப மனிதன் மாறிக் கொள்ளத்தான் வேண்டும்.
நம் புலவர்களுக்குத் தைரியம் இல்லை. இலக்கணம் - இலக்கியத்தின் மேலேயே அவர்கள் கண் இருப்பதால் அவர்கள் எண்ணம் பழைமை யிலேயே போகிறது. பகுத்தறிவே அவர்களுக்கு ஏற்படுவது கிடையாது. பகுத்தறிவு ஏற்படும்படியான இலக்கியங்கள் - நூல்கள் எதுவும் தமிழில் கிடையாது. இருப்பதெல்லாம் மனிதனின் அறியாமை - முட்டாள்தனம் - மூடநம்பிக்கை இவற்றை வளர்ப்பவை தான். பார்ப்பான் வருகிற வரை நமக்குச் சரித்திரமே கிடையாது. இருந்ததை யெல்லாம் பார்ப்பான் கொளுத்தி விட்டான். ஒன்றிரண்டு மிஞ்சியதையும் மாற்றி விட்டான்.
புலவனென்றால் புதிய கருத்துகளைச் சொல்ல வேண்டும். பழைய குப்பைக் கூளங்களையே கிளறிக் கொண்டிருப்பது, அதற்கு விளக்கம் - உரை - பொருள் என்றெல்லாம் துருவிக் கொண்டிருப்பது பழைமையானது. இன்றைக்கு என்ன நடக்கிறது, நாளைக்கு என்ன நடக்கும் என்பதைப் பற்றிச் சிந்தித்து அதை எடுத்துக் கூறுவதுதான் உண்மை. புலமைக்கும் புலவனுக்கும் இலட்சணமாகும்.
நாய் எலும்பைக் கடிக்குமாம். அந்த எலும்பில் சதையே இருக்காதாம். அந்த எலும்பு நாயின் எயிறில் பட்டு இரத்தம் வருமாம். அந்த இரத்தம் எலும்பிலிருந்து வருவதாகக் கருதி மேலும் கடித்து எயிறை எல்லாம் கிழித்துக் கொள்ளுமாம். அதுபோன்றுதான் நம் புலவர்கள் பழைய குப்பைகளைக் கிளறி அதன் மூலம் கிடைக்கும் பதவி எலும்பைக் கடிக்க ஆசைப்படுகின்றார்களே தவிர, உண்மை நிலையை எடுத்துச் சொல்லி சமுதாய மக்களை முன்னேற்றுவோம் - அறிவுடையவர்களாக்குவோம் என்று எவரும் பாடுபடுவது கிடையாது.
(03.07.1968 அன்று நடைபெற்ற பரமசிவம் - பானுமதி திருமணத்தில் தோழர் பெரியார் உரை. விடுதலை - 06.08.1968)
***
...நாம் காட்டுமிராண்டிக் காலத்தில் காட்டுமிராண்டியாக மனிதன் இருந்த போது எழுதப்பட்டதுதான் நம் இலக்கியங்களாகும். நம் புலவர்கள் பெருமைப்படும் வள்ளுவன் பெண்களைப் பற்றி என்ன சொல்கிறான் என்றால், பெண் கடவுளைத் தொழ வேண்டும் என்கின்றான். மற்றும் புராணங்கள் - கடவுள் கதைகள், இலக்கியங்கள் எல்லாமே பெண்கள் ஆண்களுக்கு அடிமையாக இருக்க வேண்டியவர்கள் என்பதை வலியுறுத்துவதாகவே இருக்கின்றன. இந்தத் துறையில் ஒரு மாறுதல் ஏற்பட வேண்டுமென்று சொன்னதும் அதற்காகத் தொண்டாற்றியதும் நம் சுயமரியாதை இயக்கமேயாகும்.
(09.03.1969 அன்று பூதலூரில் நடைபெற்ற திருமணத்தில் தோழர் பெரியார் உரை. விடுதலை, 17.03.1969)
***
...வள்ளுவன் மேலே எனக்குக் கோபம் வந்ததற்குக் காரணமே அவன் இல்வாழ்வு வாழ வேண்டுமென்று கூறியதில் தான்! எதற்காக அறிவுடைய மனிதனுக்கு இல்வாழ்வு? அதனால் மனிதன் அடைந்த பலன் என்ன? இல்வாழ்வு குடும்பம் என்று இப்படியே 1,000- வருஷத்திற்கு இருந்து பலன் என்ன? உன்னால் ஆனது என்ன? உன்னுடைய அறிவிற்கு என்ன பயன்? மனித ஜீவனுடைய நிலை இதுதானா?
இதற்கு மேலே போகிற அறிவு நமக்கு இல்லாதனாலே மோட்சம் தான், நரகம் தான் என்றிருப்பதாலே கோயிலைக் கட்டிக் கொண்டு போகிறான். மனிதன் என்றால் ஞானம், மோட்சம் வேண்டும் என்கின்றான். அவை என்னடா என்றால், அது உனக்கல்ல, ஞானிகளுக்கு என்கின்றான். உனக்குப் புரிந்து கொள்ள முடியாது என்கின்றான்.
குறைந்த அளவு ஒழுக்கத்தோடு, நாணயத்தோடு வாழ வேண்டுமென்றில்லையே! பெண்ணாகப் பிறந்தால் கணவனுக்குத் தொண்டு செய்ய வேண்டும். குட்டி போட வேண்டும். தன் அறிவைப் பயன்படுத்தக் கூடாது. ஆணாகப் பிறந்தால் மனைவியை - பிள்ளைக் குட்டியைக் காப்பாற்ற வேண்டும். இதுதான் அவனுக்கு வாழ்க்கைச் சிந்தனையாக இருக்கிறது.
மதம், கடவுள், இலக்கியம், மோட்சம், இவை நம் அறிவைக் கெடுத்து விட்டன. மனித சமுதாயம் அறிவோடு வாழ வேண்டியது; சுதந்திரத்தோடு வாழ வேண்டியது; புதுவாழ்வு மலர வேண்டியது என்கின்ற எண்ணம் எவனுக்குமே தோன்றுவது கிடையாது. மனித சக்திக்கு மேல் ஒரு சக்தி இருப்பது என்பது பித்தலாட்டம். இனி இந்தக் குடும்ப வாழ்வு - இல்லற வாழ்வு என்பதைச் சட்டப்படிக் குற்றமாக்க வேண்டும்.
(23.04.1969 அன்று தஞ்சையில் நடைபெற்ற திருமணத்தில் தோழர் பெரியார் உரை. விடுதலை, 02.05.1969)
***
...நம் புலவர்கள் என்பவர்கள் மூட நம்பிக்கையைப் பரப்புகின்றவர்களாக இருக்கின் றார்களே தவிர, புதுமையைப் பரப்பக் கூடியவர் களாக இல்லை. நம் புலவர்கள் எல்லாம் குறை யில்லாமல் ஏற்றுக் கொள்ளக்கூடிய பெரும் அறிவாளி புலவர் வள்ளுவர். அவர் முதற்கொண்டு அத்தனைப் புலவர்களும் பெண்கள் அடிமையாக இருக்க வேண்டும் என்பதைத்தான் வலியுறுத்து கின்றவர்களாக இருக்கின்றார்களே ஒழிய, ஒருவன் கூட பெண்கள் உரிமையோடு, சுதந்திரத்தோடு, சமத்துவத்தோடு வாழ வேண்டுமென்று சொல்ல வில்லை. இந்த வள்ளுவர்தான் பெண் தன் கணவனைத் தொழ வேண்டுமென்று சொல்லி யிருக்கின்றார். வள்ளுவன் பெண்களைத்தான் கற்போடிருக்க வேண்டு மென்று சொன்னாரே தவிர, ஆண்கள் இப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று சொல்லவில்லை என்று ஒரு திருமணத்தில் இதுபோன்று குறிப்பிட்டேன்.
அந்தத் திருமணத்தில் திருக்குறள் முனுசாமி அவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். நான் அவரிடம், “சொன்னது தவறாகக் கூட இருக்கலாம். வள்ளுவர் ஆண்கள் கற்போடு இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் என்பதை எடுத்துக் காட்டினால், நான் எனது தவறை மாற்றிக் கொள்கிறேன்” என்று சொன்னேன்.
அதற்கு அவர் திருக்குறளிலிருந்து “பிறன் இல்விழையாமை” என்ற அதிகாரத்தைக் காட்டி, “வள்ளுவர் ஆண்களுக்கும் அறிவுரை கூறி இருக்கிறார்” என்று சொன்னார். நான் உடனே, “பிறன் மனைவியிடம் போக வேண்டாமென்று சொன்னாரே ஒழிய, கல்யாணம் ஆகாத பெண்களிடமோ, கணவன் இல்லாத பெண் களிடமோ போகக்கூடாது என்று சொல்ல வில்லையே. கல்யாணம் ஆன பெண் இன்னொரு வனுடைய சொத்து என்பதால், பிறர் சொத்தைத் திருடக் கூடாது என்று சொல்லியிருக்கிறாரே தவிர, மற்றப்படி பெண்களுக்குச் சொன்னது போல எந்த ஆணிடமும் செல்லக்கூடாது என்று சொல்ல வில்லையே” என்று சொன்னதும் அவரால் பதில் ஒன்றும் சொல்ல முடியவில்லை.
(18.5.1969 அன்று இரும்புலிக்குறிச்சியில் நடைபெற்ற திருமணத்தில் தோழர் பெரியார் உரை)
***
...தமிழ்நாட்டில் ஒரு வீரன் யார் என்றால் கட்டபொம்மன் என்கின்றான். அவன் கதையைப் பார்த்தால் அவன் ஒரு பெரிய கொள்ளைக்காரனாக இருந்திருக்கின்றான். அந்தக் கொள்ளைக்காரனைத் தான் வீரன் என்று சொல்ல முடிகிறதே தவிர, உண்மையான வீரன் ஒருவனைச் சொல்ல முடிய வில்லையே.
உயர்ந்த இலக்கியம் எது என்றால் திருக்குறள் என்கின்றான். திருவள்ளுவர்தான் உலகிலேயே சிறந்த அறிவாளி என்கின்றான். அந்த வள்ளுவன் என்ன சொல்கின்றான் என்றால், “பெண்கள் கணவனைத் தொழ வேண்டும்” என்கின்றான். எதற்காக ஒரு பெண் கணவனைத் தொழ வேண்டும்? மனு தர்மத்தில், எப்படி சூத்திரன் பார்ப்பானைத் தொழ வேண்டும் என்று சூத்திரனை இழிவுபடுத்து கின்றானோ அதுபோலத்தானே இதுவும் பெண்ணைக் கீழ்மைப்படுத்துவதாக இருக்கிறது? பெண்ணை விட ஆண் எதில் உயர்ந்தவன்? இன்னும் எத்தனையோ முட்டாள்தன - மூட நம்பிக்கைகள் நிறைந்திருக்கின்றன.
இன்றைய அறிவிற்கு அது ஏற்றதில்லை. இருக்கின்ற பழைய குப்பைகளில் அது ஓரளவுக்குத் தேவலாம் என்றுதான் சொல்லலாமே தவிர, அதுதான் உயர்ந்தது என்று சொல்ல அதில் எதுவும் கிடையாது.
(07.05.1969 அன்று காவாலக்குடியில் நடைபெற்ற திருமணத்தில் தோழர் பெரியார் உரை. விடுதலை, 13.05.1969)
தொகுப்பு: தமிழ் ஓவியா, பழனி
Friday, 7 February 2020
நாடார் இன வரலாறு எப்படி ஒடுக்கப்பட்டது?
நாடார் இன வரலாறு எப்படி ஒடுக்கப்பட்டது?
நாடர்கள் ஏன் திருவாங்கூர் சமஸ்தானத்தால் கொடுமை படுத்தபட்டனர்?
இதெற்கெல்லாம் யார் காரணம் ?
நாடாண்ட மன்னர்களாகிய நாடார் இனம் ஏன் கொடுமை படுத்தப்பட்டார்கள்
பனைஏறுவது மட்டும் குலதொழில் என நினைத்துகொண்டிருக்கும் நாடார் இளைஞகளுக்கு நாடாண்ட வரலாறு தெரியாமல் போனது எப்படி?
இதற்கெல்லாம் பதிலறிய நாம் 200 ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டும்.
1814ல் இங்கிலாந்தின் வட அயர்லாந்து பகுதியில், ஒரு ப்ராட்டஸ்டண்ட் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவன் (ஒருமை என்று கருத வேண்டாம். இந்த மரியாதையே அதிகம்.) தான் கால்டுவெல். லண்டன் மிஷன் சொசைட்டி என்ற மதமாற்றும் கிறிஸ்தவ அமைப்பின் உதவியோடு தனது பட்டப்படிப்பை இங்கிலாந்தின் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் முடித்தான்.
1838ல் கால்டுவெல்லை சர்சு அதிகாரியாக சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.
Society of Propagation of the Gospel கால்டுவெல்லை, மதமாற்றம் செய்யும் பொருட்டும், திருநெல்வெலியில் உள்ள இளையான்குடி பகுதிக்கு அனுப்பி வைத்தது.
திருநெல்வெலியும் சரி, அதன் அருகில் தென் கோடியில் அமைந்துள்ள குமரியும் சரி - இவ்விரண்டு மாவட்டங்களும் நாடார் சாதி மக்களை அதிகமாக கொண்ட பகுதிகள். ஆதலால், கால்டுவெல்லின் மதமாற்றும் கண்கள் நாடார்கள் மீது விழுந்தது.
கிறித்துவ மதம் நாடார்களை பிரித்தது என்பதற்கு சாட்சி இதோ!
நாடார்களை எப்படி மதம் மாற்றுவது?
நாடார்கள் தங்களை தாங்களே இழிவாக கருத வேண்டும். அந்த இழி நிலைக்கு இந்து சமயமே காரணம் என்று திரிக்க வேண்டும்.
இதன் மூலம், இந்து சமயத்தின் மீது ஒரு வெறுப்புணர்வை நாடார்கள் மத்தியில் ஏற்படுத்தி, அவர்களை எளிதாக மதமாற்றிவிடலாம். ஆனால், இவை நடக்க வேண்டும் என்றால், என்ன செய்ய வேண்டும்? அதற்கு, முதலில் நாடார்களின் பூர்வீக வரலாறு குறித்த பெருமிதத்தை அழிக்க வேண்டும்.
அதை தான் கால்டுவெல்லும் செய்தான்!
இதன் முதற்கட்டமாக, 1849ல் "திருநெல்வேலி சாணார்கள்" என்ற 77 பக்க ஆங்கில புத்தகத்தை கால்டுவெல் எழுதினான். இப்புத்தகம் முதலில் கிழக்கிந்திய கம்பனியின் ஆதரவுடனும், பின்னர் 1850ஆம் ஆண்டு Society for the Propagation of Christian Knowledge என்ற அமைப்பின் மூலம் லண்டனில் வெளியிடப்பட்டது.
இப்புத்தகத்தில் கால்டுவெல், நாடார்களை தரைகுறைவாக காட்டுமிராண்டிகளாக சித்தரித்து இருந்தான். "நாடார்களின் பூர்விகம் தமிழகம் அல்ல என்றும், அவர்கள் இலங்கையில் இருந்து பனையேறிறிப் பிழைக்க வந்த வந்தேறிகள்" என்றும் குறிப்பிட்டுள்ளான்.
மேலும், நாடார்கள் கடவுளுக்கு பயப்படுகின்றவர்கள் அல்ல(ஏசுவை நினைத்து எழுதப்பட்வையாக இருக்கலாம்!) என்றும், நாடார்கள் மந்த புத்திகாரர்கள், அடிமைகள், மூர்க்கர்கள், எழுத்தறிவு அற்றவர்கள், மிகவும் தரைகுறைவான பழக்க வழக்கங்களை உடையவர்கள் என்றும், கால்டுவெல் தன் புத்தகத்தில் குறிப்பிட்டான்.
கால்டுவெல்லின் இந்த பொய் பிரச்சாரம் பல வகைகளில் எதிரொலித்தன. எதிரொலிக்கின்றன. இன்று, CBSE பாட புத்தகத்தில் நாடார்களை இழிவு படுத்தியதாக கூறி நாடார் சாதி அமைப்புகள் மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்துகின்றது. ஆனால், அவர்கள் உண்மையில் எதிர்த்து போராட வேண்டியது, கால்டுவெல்லையும், மிஷனரிகளையும் தான்.
ஏன் என்றால், இவர்கள் பரப்பிய கட்டுக்கதைகளைத் தான் வரலாற்று அவனங்களாக கருத்தில் கொண்டு, CBSE புத்தகத்தில் நாடார்கள் குறித்தான இழிவான கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மஷ"நரி"களின் நாடார்கள் பற்றிய பொய் பிரச்சாரம் பிற இந்து சாதியினர் மத்தியிலும் பல வினைகளை உருவாக்கியது.
அதைப்பற்றி பார்ப்பதற்கு முன், நாடார்கள் இழிவானவர்களா? அடிமைகளா? என்பதை பற்றி பார்போம்.
1921ல் தான் "நாடார்" என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக அரசு மூலம் செயல்பாட்டுக்கு வந்தது. அதற்கு முன் நாடார்கள் சாணார்கள் என்றே அழைக்கப்பட்டனர். சாணார் என்ற சொல், சான்(றோ)றார் என்ற சொல்லின் திரிந்த பேச்சு வழக்காகும். சான்றோர் என்பதின் பொருள், அறப்போர் மரபிலும், ஆட்சிக் கலையிலும் தேர்ந்த தலைமக்கள் என்பதாகும்.
நாடார் என்பதின் அர்த்தம் கூட, நாட்டை ஆள்பவர்கள் என்பது தான். கால்டுவெல் கூறுவதை போல, நாடார்கள் மூர்கர்களாகவோ, அடிமைகளாகவோ இருந்திருந்தால், அவர்கள் "சான்றோர் குலத்தவர்" என்று அழைக்கப்பட்டிருப்பரா?
மிஷனரிமார்கள் தங்கள் மதமாற்ற சுயநலத்திற்காக "சாணார்" என்ற சொல்லை இழிவானதாக பிரச்சாரம் செய்ததன் எதிரொலி, சாணார்கள் அப்பெயரை வெறுத்து, தாங்கள் இனி "நாடார்கள்" என்றே அழைக்கப்பட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அது அரசால் 1921ல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
உண்மையிலேயே நாடார்கள் சேர, சோழ, பாண்டிய நாட்டின் அரச குலத்தை சார்ந்தவர்கள். அரச குலம் என்றால், போர்த் தொழிலையும், குடிகாவலையும் தன் பரம்பரை உரிமையாக கொண்ட குலம் என்று பொருள். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவான் பேஷ்கராக இருந்த நாகம் அய்யா கூட, தனது Travancore State Manual என்ற நூலில், "சான்றோர் சாதியினர், முற்காலத்தில் ஆட்சியாளர்களாக இருந்தவர்கள்" என்றே குறிப்பிட்டுள்ளார்.
இப்போ சொல்லுங்க நாடாரை பிரிச்சது கிறித்துவமதம் தானே.
இப்படி பட்ட கேவலமான கிறிஸ்துவ மதத்தை அழிக்கனுமா வேண்டாமா சொல்லுங்க நாடார்களே?.?.
Thursday, 16 January 2020
திராவிட திருட்டு மடம்
எந்த ஒரு இயக்கமும் வரலாற்றை மறு உருவாக்கம் செய்வது, மாற்றி அமைப்பது, கட்டுடைப்பது முதலானவற்றின் தொடர்நிகழ்வாகவே இருக்கும்.
அதன் நோக்கம் பரிணாம அடிப்படையிலான செயல்திறனை வைத்தே மதிப்பிடப்படும்.
தமிழ் வரலாற்றில் திராவிட இயக்கமும் இதன் பிரதிபலிப்பு தான். சமூக சீர்திருத்தத்திற்கான நெகிழ்வான இயக்கமாக தொடங்கபட்ட திராவிட இயக்கம் இன்று அதன் எல்லா நெகிழ்வையும் சிதைத்து இறுக்கமான ஒன்றாக மாறி விட்டது.
வலுவான பசை போன்றதாக இருக்கிறது அதன் பரிணாம வளர்ச்சி. வீரமணியாச்சாரியாரின் தலைமையை தொடர்ந்து மடாலயத்திற்கான எல்லா கூறுகளையும் உள்ளடக்கி மீட்சிமைக்கான எந்த அறிகுறியும் இல்லாமல் ஆகி விட்டது. இதை இன்னொரு தளத்தில் நாம் அதன் தேர்தல் அரசியல் இயக்கமாக பரிணமைந்த திராவிட முன்னேற்ற கழகத்தின் மீதும் விரிக்க வேண்டியதிருக்கிறது. இன்றைய தேர்தல் தோல்வியிலிருந்து அதன் தலைமையையும், வளர்ச்சிப்போக்கையும் பின்னோக்கி பார்ப்பது அவசியம்.
பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தில் இந்திய நிலப்பரப்பு என்பது பிராமணிய ஆதிக்கத்தை நிரப்பிக்கொண்டதாக இருந்தது. பிரிட்டன் அதிகாரிகளுக்கு அடுத்தப்படியாக எல்லா அதிகார மையங்களும் அவர்களாலேயே நிரப்பப்பட்டிருந்தது. பல துறைகளில் பிராமணர் அல்லாதவர்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. இதன் நீட்சியில் அன்றைய சென்னை மாகாணமும் அப்படியே. அரசின் மேல் மட்ட நிலையிலிருந்து சாதாரண உள்ளாட்சி அமைப்பு வரை அவர்களின் ஆதிக்கமே. பிராமணர் அல்லாதவர்களின் வணிக செயல்பாடுகள் கூட கேள்விக்குரியதாக இருந்தன.
இந்நிலையில் 1912 ஆம் ஆண்டு சமூக சீர்திருத்த ஆர்வம் கொண்ட சில பார்ப்பணர் அல்லாத தலைவர்களால் சென்னை மாகாண திராவிடம் சங்கம் ஏற்படுத்தப்பட்டது. இதன் நோக்கம் சென்னை மாகாணத்தில் பார்ப்பணர் அல்லாதவர்கள் நலனை முன்னிறுத்துவது. அதன் தொடர்ச்சியில் 1917 ஆம் ஆண்டு சர்.பி.டி தியாகராயர், டி.எம் நாயர், நடேச முதலியார் போன்றவர்களால் தென்னிந்திய நல உரிமை சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.
இது அ-பார்ப்பணர்களின் சுதந்திர வணிக நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியில் பிரிட்டிஷ் அரசின் அரசியல் சீர்திருத்தங்கள் காரணமாக 1920 ஆம் ஆண்டு நடந்த சென்னை மாகாண தேர்தலில் தென்னிந்திய நல உரிமை சங்கம் நீதிக்கட்சியாக மாறி அதன் ஆட்சியை பிடித்தது. சுப்பராயன் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றார். நீதிக்கட்சியின் ஆட்சியில் பல்வேறு விதமான சீர்திருத்தங்களுக்கான முனைப்பு காட்டப்பட்டது.குறிப்பாக அ-பிராமணர்களுக்கான இட ஒதுக்கீடு முன்னெடுக்கப்பட்டது. அப்போது பெரியார் காங்கிரஸில் இருந்து கொண்டே நீதிக்கட்சியின் புற-கண்காணிப்பாளராக இருந்தார். இந்நிலையில் 1926 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் நீதிக்கட்சி தோல்வியுற்றது. நீதிக்கட்சியிலிருந்து கட்சி மாறி தனிக்கட்சி தொடங்கிய சுப்பராயன் தலைமையில் ஆட்சி அமைந்தது.
இந்தியாவில் முதன் முதலாக கட்சி தாவலுக்கு உட்பட்டவர் சுப்பராயனே. இது அக்கால நீதிக்கட்சி தலைவர்களின் வர்க்க நலன்களின் பிரதிபலிப்பே. இக்காலகட்டத்தில் காங்கிரஸின் வைதீக, பார்ப்பண சார்பு நிலையை எதிர்த்து பெரியார் காங்கிரஸிலிருந்து வெளியேறினார். 1925 ஆம் ஆண்டின் இறுதியில் காஞ்சிபுரத்தில் நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநாட்டில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக தான் கொண்டு வந்த தீர்மானங்கள் பிராமண ஆதரவு தலைவர்களால் தோற்கடிக்கப்பட்டதன் காரணமாக பெரியார் காங்கிரஸிலிருந்து விலகினார்.
அதற்கு சில மாதங்களுக்கு முன்னர் தான் பெரியார் குடி அரசு இதழை ஆரம்பித்தார். காங்கிரஸில் இருந்த போதும் கூட பிராமணர் அல்லாத மற்ற சமூக மக்கள் மற்றும் பெண்களின் நலனை முன்னெடுத்தார். பகுத்தறிவு சார்ந்த கருத்தியல் பிரச்சாரத்தை வலுப்படுத்தினார்.காங்கிரஸிலிருந்து வெளியேறுவதற்கு முந்தைய வருடத்தில் தான் கேரள மாநிலம் வைக்கத்தில் நடந்த கோவில் நுழைவு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைச்சென்றார். இதன் பின்னர் சுய மரியாதை இயக்கத்தை தொடங்கினார்.
அப்போது நீதிக்கட்சி பல்வேறு சிக்கல்களாலும், நிலைபாட்டு குளறுபடியாலும் , அதிகார போட்டியாலும் நெருக்கடிக்கு ஆளாகியிருந்தது. பெரியார் இதை கடுமையாக விமர்சனம் செய்து கொண்டே அதனை ஆதரித்தார். குறிப்பாக சுப்பராயனின் கட்சித்தாவலை கடுமையாக விமர்சித்து பத்திரிகையில் எழுதினார். அதன் பின்னர் 1937 ல் இராஜாஜி கொண்டு வந்த இந்திமொழி திட்டத்தை எதிர்த்து கடுமையாக போராடினார். அதில் தாளமுத்து மற்றும் நடராசன் ஆகியோர் இறந்தனர்.போராட்டம் அன்றைய சுதந்திர போராட்ட நீரோட்டத்திலிருந்து விலகியதாக இருந்தது.
அது தான் தமிழ் வரலாற்றில் முதல் இந்தி எதிர்ப்பு போராட்டம். அவரின் இந்த போராட்டம் ஆங்கிலத்தை முன்னெடுப்பதற்கானது என்று பின்னாளில் பெரியார் விளக்கினார். எதார்த்தமான முறையில் பெரியாரின் சுயமரியாதை இயக்கம் என்பது நீதிக்கட்சியிடமிருந்து விலகி தான் இருந்தது. இதன் தொடர்ச்சியில் சாதி எதிர்ப்பு மற்றும் பகுத்தறிவுக்கான பல்வேறு கட்ட செயல்பாடுகளுக்குப் பிறகு பெரியார் 1944 ல் திராவிடர் கழகத்தை ஆரம்பித்தார். தொடக்கத்தில் சமூக சீர்திருத்தத்திற்கான மிகுந்த முன்னெடுப்பை அது செலுத்தியது. ராமநாதன், அண்ணாதுரை, கருணாநிதி, சி.பி.சிற்றரசு, என்.வி நடராசன், நெடுஞ்செழியன், சம்பத்,மதியழகன்போன்றோர் அதன் தொடக்க கால உறுப்பினர்கள். இதன் பிந்தைய வருடங்களில் இந்தியா காலனியாதிக்கத்திலிருந்து சுதந்திரம் பெற்றது. சுதந்திரம் சார்ந்த விஷயங்களில் அண்ணாதுரைக்கும், பெரியாருக்குமிடையே பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டன.
அண்ணாதுரை சுதந்திர நாளை இன்ப நாள் என்றார். மாறாக பெரியார் அதை துக்க நாளாக கடைபிடிக்க வேண்டும் என்றார். காரணம் இந்திய சுதந்திரம் என்பது ஆங்கிலேயர்களின் கையிலிருந்து பார்ப்பண-பனியாக்களின் கைக்குள் வந்திருக்கிறது என்பது தான். மேலும் சீர்திருத்தம் , பெண்ணுரிமை பேசிய பெரியார் தன்னை விட அதிக வயது வித்தியாசமுள்ள மணியம்மையை இரண்டாவதாக திருமணம் செய்த விஷயத்திலும் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த விஷயத்தில் ராஜாஜியிடம் ஆலோசனை கேட்டார் என்று பெரியார் மீது அண்ணாத்துரை குற்றஞ்சாட்டினார்.
மணியம்மை விஷயம் தான் அண்ணாதுரை பிரிந்ததற்கு முதன்மை காரணம் என்பாரும் உண்டு. ஆனால் முரண்பாடு குறித்த சரியான வரலாற்று தெளிவு இல்லை. மணியம்மையை பெரியார் திருமணம் செய்ததால் தான் அவரின் நீண்டகால இருப்பு சாத்தியமானது என்றொரு தகவலும் இருக்கிறது
இன்றைய தி.மு.க என்பது அண்ணாதுரை பெரியாரிடமிருந்து பிரிந்து 1949 ல் ஏற்படுத்திய இயக்கம். வட சென்னை ராயபுரம் ராபின்சன் பூங்காவில் அண்ணாதுரை திராவிட முன்னேற்ற கழகத்தை ஏற்படுத்திய போது கருணாநிதி அந்த இயக்கத்தில் இல்லை. அப்போது அவர் பெரியாரின் திராவிடர் கழகத்தில் இருந்தார். "ஆணையிடுகிறார் பெரியார். ஊளையிடுகிறார் அண்ணா என்று அன்று குடி அரசில் எழுதியவர் தான் கருணாநிதி.அதிகார பசியும், பொருளீட்டும் நிர்ப்பந்தமும் அவரை பின்னாளில் அண்ணாதுரை பக்கம் சாய்த்தது.
அண்ணாதுரையை (பல்கலைகழகம் காலாவதியாகிவிட்டதால் பேரரறிஞர் பட்டம் தவிர்க்கப்படுகிறது) பொறுத்தவரையில் அன்றைய கட்டத்தில் அவர் இயக்கத்தை அரசியல்மயப்படுத்த விரும்பினார். அவரின் இயக்கம் முழுவதும் கண்ணதாசன், ஈ.வெ.கி. சம்பத், ஆசைத்தம்பி, எஸ்.எஸ்.தென்னரசு,நெடுஞ்செழியன், கே.மதியழகன், என்.வி.நடராஜன்,சி.பி.சிற்றரசு, தில்லை மணாளன்,டி.கே வேலன் போன்ற பலவிதமான ஆளுமைகளால் நிரப்பப்பட்டிருந்தது. இவர்கள் பேச்சிலும் எழுத்திலும் கருணாநிதியை விட முன்வரிசையில் இருந்தனர். ஓரளவு ஜனநாயகபூர்வமாகவும், நாகரீகமாகவும் இருந்தது அன்றைய தி.மு.க. 1965 ல் தமிழ்நாட்டில் ஏற்பட்ட மாபெரும் இந்தி எதிர்ப்பு கிளர்ச்சியை தன் அரசியல் அதிகார தளத்திற்கான சாதக கருவியாக மாற்றியது தி.மு.க. அதன் நலன்கள் இந்த போராட்டத்தில் பிரதிபலித்தன. மாணவர்கள் பலர் தூண்டப்பட்டனர்.
கட்சித்தொண்டர்களும் போராட்ட களத்தில் இறக்கப்பட்டனர். பக்தவச்சலம் அரசின் மோசமான நிர்வாகத்தால் வெறுப்புற்றிருந்த மக்களிடம் இந்த எழுச்சியும் சேர்ந்து கொண்டதால் தி.மு.க அதிகாரத்தை எளிதில் கைப்பற்ற முடிந்தது. தமிழ்நாட்டு கம்யூனிஸ்ட் இயக்கங்கள் இந்த உணர்ச்சியை அன்று உள்வாங்க தவறி இருந்தன. அன்று அந்த விஷயத்தை மட்டும் கையில் எடுத்திருந்தால் இன்று தமிழ் அரசியலே திசை மாறியிருக்கும்.அதன் அரசியல் பற்றிய மாறுபட்ட கருத்துக்களும், நடைமுறை செயல்பாடுகளும், சோவியத் புராணமும், வழக்கமாக உச்சஸ்தமாக பாடும் நாம் - நாம் பாட்டுகளும்(நாம் இருந்தோம். நாம் கூட்டணி சேர்ந்தோம். நாம் தவறு செய்தோம். சரி. இரண்டு வடை, ஒரு சமோசா, ஒரு பிஸ்ஸா. முடிந்தது)அவற்றை தமிழ் அரசியல் களத்தில் இருந்து மாறுபட வைத்தன. இதன் விளைவாக திராவிட இயக்கங்கள் அவற்றை கடலின் உள்வாங்கல் போன்று உள்வாங்கின. வேறொரு வகையில் சொன்னால் தமிழ்நாட்டில் திராவிட கழகங்களின் பெரும் வெற்றியே இடதுசாரிகளின் இந்த தேங்கிய பலவீனம் தான்.
திமுகவில் கருணாநிதியின் (துணைவேந்தர் பதவியின் மூன்றாண்டு காலம் முடிந்து விட்டதால் கலைஞர் பட்டம் தவிர்க்கப்படுகிறது.)வருகை தற்செயலான விபத்தே. அண்ணாதுரையின் காலகட்டத்திலேயே அந்த விபத்திற்கான அறிகுறிகள் தென்பட்டன. உட்கட்சி குழப்பங்கள் அதிகரித்தன. குறிப்பாக அன்றைய திமுகவின் முக்கிய பேச்சாளர்களில் ஒருவரான ஈ.வே.கி சம்பத் பல விஷயங்களில் அண்ணாத்துரையுடன் முரண்பட்டார். இதற்கு கருணாநிதியின் அடிகுத்தல்களும் ஒரு காரணமாக இருந்தன என்பதை அக்காலத்திய கழக முன்னோடிகள் வெளிப்படுத்துகிறார்கள். இவரை பற்றிய பல புகார்கள் அண்ணாத்துரைக்கு சென்றன. ஆனால் அவற்றை அதிகம் பொருட்படுத்தாமல் ஒத்துபோகுமாறு கருணாநிதியிடம் சொன்னார் அண்ணாதுரை. (இத்தகைய உட்கட்சி குழப்பங்கள் பற்றி அண்ணாத்துரை தன் கடைசி காலத்தில் பி.ராமமூர்த்தியிடம் வருத்தத்துடன் சொன்னதாக தன் நூல் ஒன்றில் பி.ராமமூர்த்தி குறிப்பிடுகிறார்.) இது அன்றைய கட்டத்தில் கருணாநிதிக்கு பெரும் சாதக அம்சமாக மாறியது.
இந்நிலையில் 1969 ஆம் ஆண்டு அண்ணாத்துரை இறக்கிறார். அப்போது தான் கருணாநிதியின் சுய ரூபம் வெளிப்பட்டது. தி.மு.க முன்னணியினர் எல்லோரும் தங்களின் தலைவர் இறந்த துக்கத்தில் இருக்க , கருணாநிதி மட்டுமே அன்றைய கட்டத்தில் எம்.எல்.ஏக்கள் எல்லோரையும் தனித்தனியாக சந்தித்து பேச தொடங்கினார். அண்ணாத்துரைக்கு பிறகு முதலமைச்சர் பதவிக்கு நெடுஞ்செழியன் முன் வரிசையில் இருந்தார். ஆனால் அன்றைய கட்டத்தில் தமிழ் இனத்தின் தேங்கி போன இயல்பான பலவீனமாக இருந்த திரைமோகம் காரணமாக நட்சத்திரமாக ஜொலித்த எம்.ஜி.ஆரின் வலுவான ஆதரவு கருணாநிதிக்கு இருந்தது. அவர் இவருக்காக பரிந்துரையில் இறங்கிய காரணத்தால் தான் கருணாநிதியால் முதலமைச்சர் பதவிக்கு வர முடிந்தது. இந்நிலையில் அண்ணாத்துரை பற்றியும் இங்கு குறிப்பிட வேண்டியதிருக்கிறது.
அண்ணாத்துரை போன்ற பண்பட்ட, நாகரீகமான அரசியல்வாதி 1967 ல் முதலமைச்சராக வந்த போது செய்த முதல் சீர்திருத்தமே அதுவரை சென்னை மாகாணமாக அறியப்பட்ட தமிழ்நாட்டை "தமிழ்நாடு" என்று பெயர் மாற்றம் செய்தது தான். ஆனால் அதற்கான குரல்கள் இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்திலேயே ஒலிக்க தொடங்கி விட்டன. அதற்காக காமராஜர் காலத்தில் சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்து இறந்து போனார். சில நிர்பந்தங்கள் காரணமாக காமராஜர் அதை தட்டிக் கழித்தார். அண்ணாதுரை ஆட்சிக்கு வந்த பிறகு தான் அது நிறைவேற தொடங்கியது. ஆனால் தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம் சுவரில் ஒட்டப்படும் காகித ஒட்டி மாதிரி உயிர்ப்பற்றது இருந்தது என்பதை அது ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து நாம் புரிந்து கொள்ள முடியும்.
மிக முக்கியமாக அண்ணாத்துரை சென்னை மாகாணம் என்பதிலிருந்து தமிழ் என்பதை பிரித்து பார்த்தார். பெயர் மாற்றத்தையும் தமிழ் மொழியையும் இணைத்து பார்க்கவில்லை. அதன் உயிரோட்டம் பற்றிய தொலைநோக்கு திறன் இல்லாமல் இருந்தார்.தமிழ் என்பது இன்றும் ஆங்கிலத்தில் Tamil என்றே அழைக்கப்படுகிறது. இதன் உளவியல் தாக்கம் ஒரு வர்க்கத்தை அப்படியே பாதிக்கிறது என்பதை திராவிட மடங்கள் புரிந்து கொள்ள தவறின. (இன்றைய மொழி அழிப்பின் தொடக்கமே இதில் தான் இருக்கிறது) விளைவாக இன்று தமிழ்நாட்டின் உயர்மத்தியதரவர்க்கமும், ஆங்கில படித்த மத்தியதரவர்க்கமும் தமிழை "றமில்" என்றே உச்சரிக்கின்றது.
இந்தியாவின் பெரும்பான்மையான மொழிகள் அனைத்துமே ஆங்கிலத்திலும் அதே உச்சரிப்பில் தான் உச்சரிக்கப்படுகின்றன. உதாரணமாக ஹிந்தி Hindi என்றும், மராத்தி maraathi என்றும், பஞ்சாபி panjabi என்றே அழைக்கப்படுகின்றன. இதை "thamizh" என்று மாற்றுவது ஒன்றும் மலையை புரட்டும் காரியமல்ல. தமிழ்நாடு என்ற பெயர் மாற்றிய கட்டத்தில் இதை செய்திருக்கலாம். அண்ணாத்துரை இதை செய்யத் தவறினார். இதில் வேடிக்கை என்னவென்றால் இன்றும் அரசின் உத்தரவுகள், ஆவணங்கள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே இருப்பதால் "றமில்நாடு" என்றே வழக்கில் இருக்கிறது. அண்ணாத்துரை செய்ய தவறிய மற்றொன்று தமிழ்நாட்டின் நகரங்களின் பெயர்கள் அனைத்தும் தமிழில் ஒன்றும், ஆங்கிலத்தில் மற்றொன்றுமாக வழங்கப்பட்டு வந்த நிலை.
உதாரணமாக சென்னை மெட்ராஸ், (இதில் சென்னை தற்போது ஒரே பெயராக மாற்றம் செய்யப்பட்டு விட்டது)வேலூர் - வெல்லூர் , தூத்துக்குடி - டியூடிகுரின், ஓசூர் - ஹோசூர், தஞ்சாவூர் - தஞ்சூர், திருச்சி - டிரிச்சி, உதகமண்டலம் -ஊட்டி, கன்னியாகுமரி -கேப்கமரின் என்பதாக வழங்கப்படுகின்ற நிலை. இதை தமிழ்நாடு என்று பெயர் மாற்றிய தருணத்தில் செய்திருந்தால் மிக புரட்சிகரமாக இருந்திருக்கும். தாங்கள் நடத்திய மொழிப்போராட்டங்கள் உயிர்ப்பான அர்த்தம் பெற்றிருக்கும். இவற்றை செய்யாமல் தமிழ் சீர்திருத்தம் என்ற மாயையை அவை ஏற்படுத்தின. இதில் விநோதம் என்னவென்றால் ''றமில்" நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் வர்க்கங்கள் கூட வெல்லூர் என்று சொன்னால் தான் புரிந்து கொள்கின்றன. அவ்வாறே உச்சரிக்கின்றன.
வேலூர் என்று உச்சரிப்பதை பேருந்து என்று உச்சரிப்பதை போன்ற மனோபாவமாக பார்க்கின்றன. மேலும் பெரிய கொடுமை என்னவென்றால் தமிழ்நாட்டில் பெரும்பாலானோருக்கு உதகமண்டலம் என்றால் தெரியாது. ஊட்டி என்றால் தான் தெரியும். ஒருவேளை அதையே தமிழ் பெயராக அறிவிக்கலாம். அரசனை புகழ்ந்து பாடி பரிசில் பெறும் புலவர்கள் கூட வெறும் அல்லக்கைகளாகவும், மொண்டுகூவிகளாகவும் மாறி போனது தமிழ்நாட்டின் பெரும் துயரம். அவர் இன்னும் உயிரோடு இருந்திருந்தால் இந்த மாற்றங்களை அமல்படுத்தி இருப்பார் என்பதாக சில அல்லக்கைகள் கூறலாம் என்பதை மீறியே அண்ணாதுரை மீதான என் விமர்சனம் இருக்கிறது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
முத்தமிழ் அறிஞர் என்று மொண்டு கூவிகளாலும், அல்லக்கை ஊடகங்களாலும், கவிதை என்று எதையோ எழுதி கிறுக்கும் சொம்புகளாலும் அழைக்கப்படுகின்ற (இடதுசாரி அறிவுஜீவிகள் சிலரிடத்திலும் இந்த நோய் உண்டு)கருணாநிதி முதலமைச்சராக பதவியேற்ற காலத்தில் தான் தமிழ்நாட்டு அரசியல் களம் கறை படியத்தொடங்கியது என்பதை அவரின் சீர்திருத்த மாயையை நன்கு அறிந்த வரலாற்றாளர்கள் எவருமே மறுக்க மாட்டார்கள். வரலாறு சிலசமயங்களில் நம் உள்ளங்கையிலிருந்து நழுவி விடுகிறது. அதை நம் கைவிரல்களின் கட்டுக்குள் வைப்பதில் தான் வெற்றியே அடங்கியிருக்கிறது. சில தருணங்களில் வளைந்தும், நெளிந்தும் செல்வதுண்டு. கருணாநிதி விஷயத்தில் இது தான் நடந்தேறியிருக்கிறது. நவீன காலத்தில், பிந்தைய முதலாளித்துவ காலகட்ட உலகில் தமிழ்நாடும் அதன் ஒரு பகுதியே.
அதன் எல்லா பாதிப்புகளும் இங்கும் உண்டு. இந்நிலையில் கணங்கள் தோறும் குவிந்து வரும் செய்திகள், தகவல்கள் வெகுஜன உளவியலை கட்டமைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. மின்சாரம் நின்று விட்டால் தகவல்கள் அழிந்து விடும் கணிப்பொறியின் முதன்மை நினைவகம் மாதிரி தமிழ் மனமும் செய்திகளையும், அது ஏற்படுத்தும் தாக்கங்களையும் உடனடியாக மறந்து விடுகின்றது. இன்னும் ஐந்து வருடம் கழித்து ஸ்பெக்ட்ரம் ஊழலைப்பற்றி கேட்டால் யாருக்கும் தெரியாது. தமிழ் சமூகத்தின் இந்த அதீத மறதியே கழகங்களை அரசியல் களத்தில் மாறி மாறி நிலைக்க வைக்கின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால் இவர்களோடு கூட்டணி சேரும் இடதுசாரிகளையும் இந்த மறதி நோய் பீடித்திருப்பது தான்.
கண்டுபிடிப்புகளுக்கு பெயர் போன அமெரிக்காவில் தற்போது மறதியை அடிப்படையாக வைத்து அல்ஸீமர் என்ற நோயை கண்டுபிடித்திருக்கிறார்கள். இது முக்கியமான விஷயங்களையும், சமீபத்தில் நடந்த விஷயத்தையும் மறந்து விடும் போக்கை அடிப்படையாக கொண்ட நோய். அமெரிக்காவை பீடித்திருக்கும் இந்நோய் விரைவில் தமிழ்நாட்டு இடதுசாரிகளையும் பீடிக்கலாம். அதற்கு சோசலிச அல்ஸீமர் என்று பெயர் கூட வைக்கலாம். 1969 ல் முதலமைச்சராக பதவியேற்ற கருணாநிதி செய்த முதல் வேலை தான் ஆட்சிக்கு வர காரணமாக இருந்த எம்.ஜி.ஆரின் முக்கியத்துவத்தை குறைக்கும் வேலையில் இறங்கியது தான். எம்.ஜி.ஆருக்கு இணையாக தன் மகன் மு.க. முத்துவை முன்னிறுத்தும் வேலையில் இறங்கினார்.(பின்னாளில் மு.க.முத்துவே இவரை விட்டு பிரிய நேர்ந்தது)கட்சித்தொண்டர்களை தூண்டி விட்டு அவருக்கு ரசிகர்மன்றங்கள் அமைக்கும் வேலையில் இறங்கினார். அது வெற்றி பெற முடியாமல் போனதால் கட்சியில் அவரில் முக்கியத்துவத்தை குறைக்கும் வேலையில் இறங்கினார். இதனால் இருவருக்குமிடையே உரசல்கள் அதிகமாயின. இந்த உரசல் பொதுக்குழுவில் எதிரொலித்தது.
தன்னையும் , குடும்பத்தையும் வளப்படுத்துவதற்காக கருணாநிதி தொடங்கி வைத்த சுரண்டலும், சுருட்டலும் கட்சியை கூட விட்டுவைக்கவில்லை. கட்சிக்கு நன்கொடையாக வந்த பணங்கள், மற்றும் செலவு செய்த பணம் போன்றவற்றிற்கு முறையான கணக்குகள் பராமரிக்கப்படவில்லை. இந்த பிரச்சினையோடு ஏற்கனவே இருந்த உரசல்கள் சேர்ந்து கொண்டு 1972 பொதுக்குழுவில் எதிரொலித்தது. அப்போது பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர் இதற்கு கணக்கு கேட்டார். விளைவாக கருணாநிதியால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அன்றைய சூழலில் கருணாநிதியின் நிர்ப்பந்தம் காரணமாக நெடுஞ்செழியன் இதற்கு ஒத்துக்கொண்டார்.(பின்னர் நெடுஞ்செழியனுக்கே கருணாநிதி துரோகம் செய்தார்)இதனால் தன்னை பின்தொடர்ந்த மிகப்பெரும் வினை முடிந்து விட்டது என்று கருணாநிதி நினைத்தார். ஆனால் சிறிது நாட்கள் கூட நீடிக்கவில்லை என்பதை அதே ஆண்டில் நடந்த திண்டுக்கல் இடைத்தேர்தல் நிரூபித்தது. அதில் எம்.ஜி.ஆரின் அதிமுக வெற்றிபெற்றது.
எம்.ஜி.ஆரை பொறுத்தவரை நாடகங்கள், அதன் பின்னர் திரைப்படங்கள் என்ற பரிணாமத்தில் வளர்ந்தவர்.1936 ல் வெளிவந்த சதிலீலாவதி திரைப்படம் மூலம் திரைப்பட உலகிற்கு அறிமுகமான எம்.ஜி.ஆர் அதன் பின்னர் வெளிவந்த ராஜகுமாரி படத்தின் மூலம் பெரும் நடிகராக கவனம் பெற்றார். தமிழ் திரை ரசனை உலகம் ஏற்கனவே ஆகர்சிக்கும் மயக்க உணர்வை அளிக்கும் நடிப்பின் காரணமாக எதார்த்த, தீவிர நடிகரான சிவாஜிகணேசனை பின்தள்ளி விட்டு திரை உலகில் முன்னணி நடிகராக வந்தார். சமகாலத்தில் தமிழ் திரை உலகில் கமலஹாசனுக்கும், ரஜினிக்குமான வித்தியாசம் தான் அன்றைய எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி.திரைப்படங்கள் மற்றும் நாடகங்கள் மூலமாக அண்ணாத்துரையுடன் ஏற்பட்ட நட்பின் அடிப்படையில் தி.மு.க வில் இணைந்தார். அடிப்படையில் அவருக்கு பகுத்தறிவு கோட்பாடு மீதெல்லாம் அவ்வளவாக கரிசனம் இல்லை.
அண்ணாத்துரை மீதான தொடர்பே அவரை கரை வேட்டியாக அடையாளம் காண செய்தது. சுதந்திர போராட்டம் நடைபெற்ற காலத்தில் தமிழ்நாட்டில் பெரியார் தலைமையில் பகுத்தறிவு போராட்டங்கள் நடைபெற்றன. அன்றைய கட்டத்தில் தீவிர எழுத்தை விட ஆவேசமான மேடைப்பேச்சே திராவிடங்களுக்கு பிரதான புரட்சிகர ஊடகமாக இருந்தது. நல்ல குரல் வளத்தில் அதிக ஒலியுடன் அடுக்குமொழி, வார்த்தை ஜாலம், வர்ணிப்பு, சொல்விளையாட்டு போன்றவைகளுடன் மேடைகளில் அலறும் போது அதை கேட்பவர்கள் பூரித்து உணர்ச்சிவயப்பட்டனர். இதன் காரணமாக அக்கால பார்வையாளர்களுக்கு பேச்சாளரின் வாக்கே பிரதானமாக தென்பட்டது. இவை தொடர்ச்சியாக திராவிட கழகங்களுக்கு பலனளித்ததன் விளைவே தமிழ்நாட்டில் இன்று வரையிலான அவர்களின் ஆழமான வேர்பிடிப்பு. இன்றும் 0, 1 போன்று திமுக அல்லது அதிமுக என்று தமிழ் வாக்காளர்களின் தேர்ந்தெடுக்கும் கட்டாய மனநிலைக்கு மேற்கண்ட மேடைத்தந்திரங்களே காரணம் என்பதை திராவிடங்களின் ஐம்பதாண்டு கால வரலாற்றை பார்வையாளர்களாக கூர்ந்து கவனித்து வரும் எவருமே மறுக்க முடியாது.
அதற்கு இரு வித செயல்தந்திரங்கள் தான். ஒன்று மேடை தந்திரம் மற்றொன்று திரைத்தந்திரம். தற்போது வரை அது தொடர்கிறது. இதன் தொடர்ச்சியில் கருணாநிதி 1969 ல் ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு தான் அண்ணா கால தி.மு.க வின் ஜனநாயக அமைப்பு முறை சீர்குலைய தொடங்கியது. அதிகாரம் கையில் வந்தவுடன் ஆட்டம் போட ஆரம்பித்தார். அது ஜெயலலிதாவின் 1991-1996 மற்றும் 2001- 2004 கால ஆட்டத்தை ஒத்திருந்தது. குறிப்பான சம்பவம் ஒன்றை இங்கு குறிப்பிட வேண்டும்.
கருணாநிதியின் மூத்த மனைவி இறந்தவுடன் அவருக்கு தயாளு அம்மாளை இரண்டாவதாக திருமணம் செய்து வைப்பதில் கருணாநிதியின் அக்கால நண்பரான டி.கே .சுப்ரமணியம் பெரும் உதவி செய்தார். சிறந்த பத்திரிகையாளரான இவர் ஜவகரிஸ்ட் என்ற பத்திரிகையை அக்காலத்தில் நடத்தி வந்தார். இந்த பத்திரிகையில் 1969 ஆம் ஆண்டு கனிமொழி பிறப்பை பற்றி கீழ்கண்ட பெட்டி செய்தியை வெளியிட்டார்." குறிப்பிட்ட தேதியில் சென்னை அரசு பொதுமருத்துவமனையில் இராஜாத்தி அம்மாள் என்கிற தர்மாம்பாளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. மருத்துவமனை பதிவேடுகளில் அந்த குழந்தையின் தந்தை பெயர் கருணாநிதி என்றிருக்கிறது. யார் அந்த கருணாநிதி? " என்ற கேள்விக்குறியோடு முடிகிறது அந்த செய்தி. இதை பார்த்த கருணாநிதி பொங்கி எழுந்தார்.
அப்படி ஒரு குழந்தை பிறக்கவில்லை. இராஜாத்தி அம்மாள் யாரென்றே எனக்கு தெரியாது என்றார். பின்னர் சுப்ரமணியத்தை நீதிமன்றத்திற்கு இழுத்து அவரை சில காலம் சிறையில் வைத்தார். இதில் அவர் வெறும் யார் அந்த கருணாநிதி? என்று மட்டுமே எழுதியிருந்தார். இருந்தும் திராவிட மடத்து ஆச்சாரியரான கருணாநிதியின் மடியில் கனம் இருந்ததால் எழுந்த பயம் காரணமாக நண்பராக இருந்தும் அந்த பத்திரிகையாளரை அன்று தண்டித்தார். அதன் மூலம் அவரின் திராவிட பற்றுணர்வும், நேர்மையும் அன்று கேள்விக்குரியதாக இருந்தது. அவர் நேர்மையாளராக இருந்தால் "ஆம்.
அந்த பெண் குழந்தை என்னுடைய குழந்தை தான். இதில் ஒளிவும் இல்லை. மறைவும் இல்லை" என்பதாக துணிந்து சொல்லியிருக்கலாம். மாறாக சராசரியான சாதிய சமூக மனோநிலையில் இருந்தார். அதன் காரணமாக தான் அதை பலகாலம் அவரால் மறைக்க வேண்டியதிருந்தது. அதன் பிந்தைய கட்டத்தில் சட்டமன்றத்தில் இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மழுப்பலான பதிலையே தந்தார். பலதடவை பதில் சொல்வதை தவிர்த்தார்.
விபரங்கள் எல்லாம் வரலாற்றில் மறைக்கப்பட்டு விட்டன. சமீபத்தில் தான் வெளிவந்தது. இதை எல்லாம் மறைத்த மொண்டுகூவிகளும், அல்லக்கைகளும் மிக்க தந்திரமானவர்கள். காரணம் அவ்வாறு வெளிக்கொணர்ந்தால் தாங்கள் அவரை துதித்து, புகழ்ந்து பெறும் பரிசல்கள் நின்று விடும் என்ற எண்ணம் தான். தமிழ் வெகுஜன உளவியல் வெறும் வறட்டு ரசனையும், பிழைப்புவாதத்தையும் கொண்டதாக மாறி இருக்கும் நிலைக்கு இந்த மொண்டு கூவித்தனமே முக்கிய காரணம். இதில் தீவிர அறிவுஜீவிகள் என்பவர்கள் கூட பணம் மற்றும் பிற சலுகைகளுக்காக தங்களை முற்றிலும் சமரசப்படுத்திக்கொண்டது மிகப்பெரும் துயரம்.
Friday, 3 January 2020
மந்திரங்களும் -- விளக்கமும்...
“ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர:
த்ரூதீயோ அக்னிஷ்டேபதி: துரீயஸ்தே மனுஷ்யஜா:
Somah prathamo vivide Gandharvo vivida uttarah
Trtiyo Agnistepatih Turiyastemanusyajah.
Somo dadad gandharvaya Gandharvo dadadagna; ye
Rayincapputramscadad Agnirmahyamatho imam
– Rigveda, 10. 85, 40. 41.
இதன் பொருள்:
“முதலில் சோமன் (சந்திரன்) உன்னை பாதுகாத்தான்
பின் கந்தர்வன் உன்னை பாதுகாத்தான்
மூன்றாவதாக அக்னி உன்னை பாதுகாத்தான்
நான்காவதாக மூன்றுமாகிய நான் உன் பாதுகாவலன் ஆகிறேன்”
அல்லது
மூன்றுமானவனிடம் உன்னை ஒப்படைக்கிறேன்…
இதன் உட்பொருள்:
1. ஒரு பெண் குழந்தை பிறந்து தானாக ஆடைகளை அணியும் பருவம் (4 – 5 வயது) வரை சந்திர ஒளியின் மென்மை, குளிர்மையை ஒத்த குணங்களை பெற்று வளர்கிறது. ஆகவே இப்பருவம் சந்திரனின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் பருவம் எனப்படுகிறது
2. கந்தர்வன் என்பது இசைக்கும், கேளிக்கைக்கும் அழகியலுக்கும் அதிபதியாக சொல்லப்படும் தேவதை.
ஒரு பெண்குழந்தையின் 5 – 11 வயது காலம் என்பது குறும்பும், அழகும் நிரம்பி வழிய, கள்ளம் கபடம் இல்லாமல் துள்ளி திரியும் காலம். ஆகவே இது கந்தர்வனின் ஆதிக்கத்தில் (பாதுகாவலில்) இருக்கும் பருவம் எனப்படுகிறது
3. அதன் பின் 11 – 16 வயது பருவ காலம், உடலில் ஹோமோன்களின் மாற்றத்தால் உடலமைப்பு மெல்ல மாற உஷ்ண அழுத்த மாற்றங்கள் ஏற்பட்டு பூப்படையும் பருவம். காமவெப்பம் மெல்ல உடலில் தொற்றிக்கொள்ளும் மங்கை பருவம். ஆகவே இது அக்னி (வெப்பம்) யின் ஆதிக்கத்தின் கீழ் வரும் பருவம் எனப்படுகிறது
இப்படி ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு தேவதைகளின் அருளால் பெண்மைக்குரிய அம்சங்களை எல்லாம் பெற்று மங்கையாய் அமர்ந்திருக்கும் உனக்கு குறைவிலா நலமே தர இப்போது மானிடன் நான் உன் பாதுகாவலன் ஆகிறேன். இது தான் இந்த வேதமந்திரத்தின் உட்பொருள்.
பதி என்னும் சொல்லின் பொருள் பாதுகாவலன் என்பதாகும். அதற்கு பெண்ணை புணர்பவன் என்ற அர்த்தம் இல்லை. அப்படி என்றால் பெண்ணை வன்புணர்வு செய்பவனும் பதி ஆகிவிடுவான்.
ஒரு பெண் உருவாக 3 தேவதைகளின் அருள் தேவைப்படுகிறது. 3 தேவதைகளின் அம்சமாய் விளங்கும் பெண் மானிடனான உன்னை இன்று அடைகிறாள். அத்துணை உயர்வான அவளுக்கு நீ காலம் முழுவதும் துரோகம் செய்யாது கண் போல் காக்க வேண்டும் என்பது இங்கு வலியுறுத்தப்படுகிறது (மணமகன் எடுக்கும் சத்தியபிரமாண மந்திரங்களிலும் இந்த உறுதிமொழி உள்ளது)
பதி என்ற சொல்லுக்கு பெண்ணை புணர்பவன் என்ற ஒரு தவறான அர்த்தத்தை தோற்றுவித்துவிட்டு, ஒரு உயர்வான அர்த்தம் தரும் மந்திரத்தின் அர்த்த்த்தை அப்படியே தலை கீழாக மாற்றுபவர்களை பார்த்து பரிதாபப்படுவதை விட வேறென்ன செய்ய முடியும்.
தலைகீழாய் தொங்கும் வௌவாலுக்கு உலகமே தலைகீழாய் தான் தெரியும் என்று சொல்வது போல். வக்கிரமாய் பார்ப்போருக்கு நல்ல விடயங்களும் வக்கிரமாய் தான் தெரியும்.
வடமொழி தெரிந்தவர்களும் தங்கள் மகளின் திருமணத்தில் இந்த மந்திரம் தான் சொல்கிறார்கள். புனிதமான திருமண சடங்கில் சொல்லப்படும் மந்திரத்தில் வக்கிரத்தை கலக்க வேண்டிய அவசியம் தான் என்ன?
்….்…..்
“ஏக மாதா பகு பிதா சற்சூத்திராய நமக” என்றும் மந்திரம் இருக்கிறது.
இதற்கும் ஒரு தாய்க்கும் பல தந்தைகளுக்கும் பிறந்த சூத்திரன் என்றுதான் அர்த்தம்.
இதை உங்களுக்கு பார்ப்பணன் ஒருவன்தான் கருத்தோடு சொல்லி வைத்தானா..??? சூத்திரரும் ஆரியர்தானுங்கோ….!! அவர்களும் சமஸ்கிர்தம் படிப்பவர்கள்தான்…
“ஏக” என்றால் ஒன்று என்று மட்டும் தான் என்பது இல்லை.. அது முதலில் என்றும் அர்த்தம் வரும்…
“பகு” என்பது பின்னர்/அடுத்து என்று அர்த்தம் வரும்…
அதிலும் சத்சூத்திராய என்பது ” ஆசிரியர்”
அதாவது ” முதலில் தாய்... அடுத்து தந்தை.. அடுத்து குரு... அதன்பிறகு அவர்களோட வழிகாட்டலில்... மூவருக்கு அடுத்து தெய்வமான உன்னை ஆராதிக்கிறேன் என பொருள்...
சுருக்கமாக.. மாதா, பிதா, குரு, தெய்வம்னு.. குறிப்பிடலாம்…
்….்….்
மந்திரம் :
“என்மே மாதா ப்ரலுலோபசரதி
அனனவ் வ்ரதா தன்மேரேதஹாபிதா
வ்ருந்த்தாம் ஆபுரண்யஹா அவபத்யதாம்…”
பொருள் :
யன்மே: இதன் அர்த்தம் ஶ்ரீ வத்ஸ சோமதேவ சர்மா அவரதுஆபஸ்தம்ப பார்வண ச்ராத்த ப்ரயோகம் புத்தகத்தில் த்மிழ் அர்த்தம் கொடுத்து இருப்பது இவ்வாறு.: எனது தாயார் பதிவ்ரதா தர்மப்படி பதியின் தர்ம வ்ரதங்களை ப் பூர்ணமாக அனுஷ்டிக்காமலிருந்தாலும் என்னை உன்டு பண்ணின பிதாவே இந்த ஹவிஸ்ஸை பெறட்டும்.
விதி தவறி இருந்தால் ஹவிஸை பெற வரும் மற்ற அஸுராதிகள் இதை அடைய வேண்டாம். என் தந்தைக்கே தருகிறேன்.
ஆனால் இவையெல்லாம் இந்த மந்திரம் தொடர்பான வாதத்திற்கு நமக்குத் தேவையே இல்லை.
காரணம் இந்த மந்திரத்தில் அப்படிப்பட்ட பொருள் எதுவும் இல்லை.
எளிதாக சொல்வதானால்.. இப்போது பெண்கள் மறு திருமணம் செய்துகொள்வதென்பது ஆச்சரியமற்ற செயலாகிவிட்டது.. அதிலும் குழந்தையோடு உள்ள பெண்களும் இருப்பதும் சாதாரணமாகிவிட்டது..
இப்படிப்பட்ட நிலையில்… பெண்ணின் முந்தைய கணவனுக்கு பிறந்த குழந்தை.. அதே பெண்ணின் இரண்டாவது கணவனுக்கா தன் தந்தை என்று திதி கொடுக்க முடியும்?
அவன் தந்தை யாரோ.. அவருக்கு திதி கொடுத்தால்தானே பித்ரு கடன் தீரும்..
“என்மே மாதா” என்கிற ச்ராத்த
மந்திரத்திற்கு சரியான
பொருள்:
“…ப்ரலுலோப சரதி …”
சாஸ்த்ர’த்தில் ஐந்து பேரை அப்பாவாகச் சொல்லியிருக்கிறது.
யாரார் என்றால்
ஜநீதா சோபநீதா ச யச்ச வித்யாம்
ப்ரயச்சதி !
அந்நதாதா பயத்ராதா பஞ்சைதே
பிதர:ஸ்ம்ருதா:!!
1) பெற்ற தகப்பன்
2) ப்ரஹ்மஉபதேசம் செய்தவன்
3) குரு
4) அன்னமிட்டு காப்பாற்றியவன்
5) பயத்திலிருந்து / ஆபத்திலிருந்து காப்பாற்றியவன்
இந்த ஐவரும் தந்தையாகப் போற்றப்படவேண்டியவர்கள்
ஆயினும் யாருடைய சுக்லத்தினால் நான் பிறவி பெற்றேனோ... அந்த, என்னைப் பெற்ற தந்தைக்கு இந்த ஆஹுதி போகவேண்டும். என்பது பொருள்.
அதுபோல்..
என்மே பிதாமஹி – என்பது பாட்டியையும்
என்மே ப்ரபிதாமஹி – என்பது கொள்ளுபாட்டியையும் குறிக்கும்..
(பாட்டிக்கு – ரேத:பிதாமஹ: என்றும்
கொள்ளுப் பாட்டிக்கு – ரேத:ப்ரபிதாமஹ: என்றும்
மந்த்ரம் தெளிவாக உள்ளது).
இந்த காரணத்தினால்தான் பெண்களிடமிருந்து புல் வாங்கிப்பண்ணப்படும் ச்ராத்தங்களுக்கு இந்த மந்த்ரங்களை உபயோகித்து ஹோமம் செய்ய முடிவதில்லை.
எவ்வளவு அழகான, தெளிவான, குறிப்பான மந்த்ரம்? இதை கொச்சைப்படுத்துகிறார்களே?!! ஏனோ??
போகவும்... இப்பத்திய காலத்தில்தானே இரண்டாம் கணவன் முறை.. பிறகெப்படி இந்த மந்திரம் பொருந்தும் என நினைக்கவேண்டாம்... பாஞ்சாலிக்கு 5 கணவர்களும்.. அவர்கள் மூலம் குழந்தைகள் இருந்ததையும் கவனிக்க வேண்டும்..
மேலும் இந்த மந்திரத்தைச் சொல்லி கோத்திரத்தையும், பெயரையும் சொல்கிறோம்,
பல இடங்களில் உபநயனத்தின்போது வைக்கப்பட்ட சர்மா யாரும் உபயோகிக்காமல்
போகுமானால் மறந்து போயிருக்கும். தாத்தா, கொள்ளுத் தாத்தா பெயர் பலருக்குத் தெரியவில்லை, இதனால் பெயரும், கோத்திரமும்கூட தவறாகப்
போவதற்கு வாய்பிருக்கிறது, ஆனால் நான் பிறப்பதற்கு யார் காரணமோ அவனுக்கு
இந்த ஆகுதி போய்ச் சேரவேண்டும் என்று கூறுவதில் என்ன தவறு இருக்கிறது?
அந்தக் குறிப்பிட்ட தன்னைப்பெற்ற தகப்பனுக்கு இந்த ஆகுதி பலிதமாகவேண்டும்
என்பதில் இந்த மந்திரம் காட்டும் அக்கறையை கண்டு வியக்கவேண்டாமா?
அப்படிச் சரியானவனுக்குப் போய்ச்சேர்ந்தால் அல்லவோ, இந்த மகனுக்கு பித்ரு கடன் தீரும்.
### திருமணத்தில் இறுதியாக சொல்லப்படும் மந்திரம் ###
“மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா
கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்”
“கெட்டி மேளம், கெட்டி மேளம்” என்று சொல்லுவதோடு, தவில் நாதஸ்வர கலைஞர்களுக்கு தெரியும் வண்ணம் கையை உயர்த்தி சைகையும் காட்டுகிறார் புரோகிதர். சமிக்ஞை சரியாக செல்ல வேண்டும் என்பதற்காக பலரும் அதே போல கையை உயர்த்தி விரலை ஆட்டி “கெட்டி மேளம் , கெட்டி மேளம்” என்கின்றனர். அதோடு இருக்கைகளை விட்டு எழுந்து பூவும் அட்சதையும் போடத் தயாராகின்றனர்.
இந்த மந்திரம் எந்த ஒரு தேவனையோ, கடவுளையோ புகழ்ந்தோ, அவர்களிடம் விண்ணப்பமாக அமைந்ததோ இல்லை. இந்த மந்திரம் மணமகன் தன்னுடைய வாழ்க்கையில் மனைவி எந்த அளவுக்கு இன்றியமையாதவள் என்பதை உணர்ந்த நிலையை வெளிப்படுத்தும் விதமாக, மனைவியின் மேன்மையை போற்றி அவள் பல்லாண்டு வாழ வாழ்த்தும் பாவாக அமைந்துள்ளது. இந்திய சமுதாயத்தின் அடிப்படை ஆதாரக் கோட்பாட்டை இந்த மந்திரம் சொல்கிறது.
திருமணத்தின் போது மணமகன், தன வாழ்வில் மனைவியின் முக்கியத்துவத்தை உணரந்தவனாக, இவ்வளவு சிறப்புகளுடைய என வாழ்க்கை துணைவியே நீ நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் என்பதை சொல்லும் மந்திரமே இந்த “மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா…. !”
மம ஜீவன ஹேதுனா – என்னுடைய வாழ்க்கையில் இன்றியமையாதவளாகி இருப்பவளே
(மம -என்னுடைய, ஜீவன – வாழ்க்கையில், ஹேதுனா- இன்றியமையாத(வளே)
மாங்கல்யம் தந்துனானே– இந்த மங்கல சாட்சியாக
கண்டே பத்னாமி – உன் கழுத்தை சுற்றி அணிவித்து ( நம் உறவை உறுதி செய்கிறேன் )
சுபாகே– மிகச் சிறந்த குண நலன்களை உடையவளே
த்வம் சஞ்சீவ சரத சதம்”– நீ நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்!
(த்வம் -நீ, சஞ்சீவ- வாழ்க , சரத – ஆண்டு , சதம் – நூறு)
இந்த மந்திரம் மனித வாழ்க்கையின் அடிப்படையை உணர்த்தும் பகுத்தறிவு கோட்பாடாகும் . இந்த மந்திரத்தை வெறுமனே சொல்வதோடு நில்லாமல், இந்த மந்திரத்தின் பொருளை தெரிந்து கொள்வதோடு நிறுத்தாமல், இந்த மந்திரத்தின் உண்மையை மனதில் உணர்ந்தவன், தன் மனைவி தன் வாழ்க்கையில் எந்தளவுக்கு இன்றியமையாதவள் என்பதை அறிந்து கொண்டவனின் வாழ்க்கை ஓடம் சிக்கி சிதறாமல் காப்பாற்றப் படும்.
Wednesday, 25 December 2019
ஈவேரா சொம்புவுக்கு மறுப்பு 1
Sunday, 22 December 2019
ஹிந்து 2
Pitribhu Punya Bhuschaiva Sa vai Hindu Riti Smritah.[1]
Tadvarsha Bharat Nama Bharati Tatra Santati. [3]
What unites us is our spiritual and cultural heritage and its inner and most powerful strength since beginning of our civilisation.
Narmade Sindhu Kaveri Jalesminsannidhim kuru.[ 5]
Hindusthanmati Gyatam Hii Antarakshar Ayogatah.[6]
ஸ்ரீமத் பாகவதம் (தமிழ்)
Srimad-Bhagavatam 1 Srimad-Bhagavatam 2 Srimad-Bhagavatam 3 Srimad-Bhagavatam 4 Srimad-Bhagavatam 5 Srimad-Bhagavatam 6 Srimad...
-
குர்ஆனின்படி விபச்சாரம் என்பது என்ன? // TUESDAY, JUNE 06, 2017 அடிமைப் பெண்கள்- இஸ்லாம் RAJENDRACHOLAN NARAYANASIVAM //விபச்சாரம் என...
-
ஈவேரா-வின் தோள்சீலை போராட்டமும் , அந்நிய ஆபிரகாமிய நச்சு சக்திகளின் மதமாற்ற செயல்திட்டமும் தன் முன்னோர்களை இழிவானர்கள்னு சொல்லி, மதம்மாத்த...
-
பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பார்ப்பானை அடி, பாம்பை விட்டுவிடு பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பார்ப்பானை அடி, பா...





