என்ன ப்ரோ.. சின்னப்புள்ளத்தனமா காமடி பண்றீங்க..
0) ஈவேராவை பற்றி மட்டுமல்ல... உலகம் அழியுமா.. இல்லியா.. அழியப்போவது லாலினோவா? எல்லினோவா?... கடவுள் இருக்கா? இல்லியா?.. உயிரை லேப்ல நேரடியாக உருவாக்க முடியுமா? முடியாதா?.. இப்படி நீளம் நிறைய...
1) மணியம்மை, ஈவேரா மத்தியிலான வயசு என்னவென்றோ.. வயசு வித்தியாசம் என்னவென்றோ கேள்வி இல்லை...
மணியம்மை - ஈவேரா மத்தியிலான இயக்க உறவுகளும் , அந்தரங்க உறவுகளும் என்னமாதிரி இருந்திச்சு என்பதுதான்..
அந்த திருமணத்தை கழுவி ஊத்திதான்.. திமுகவே உருவானது..
திமுக கழுவி ஊத்தும்படி நடந்த திருமணம்தான் அது என்பதுதான் விசயம்..
2) மோடி கல்யாணம் சிறுபாலர் பாலியல் வன்கொடுமை இல்லை ப்ரோ..
அது பால்ய விவாகம்..
1955 ஹிந்து திருமண சட்டம் அப்படிதான் சொல்லுது...
அதாவது பாரதி கல்யாணம் பண்ணதுபோல...
எளிமையா சொல்லனும்னா... என் ஆசை மச்சான் படத்து கல்யாணம் போல...
👇👇
திருமணம் செய்யப்போகும் மணமகன் மற்றும் மணமகளுக்கு வாழ்க்கைத் துணை (கணவனோ, மனைவியோ) இருக்ககூடாது.
மணமகனும், மணமகளும் மனரீதியாக தெளிவாக இருக்க வேண்டும். அதாவது மனபிறழ்வு, மனநோய் போன்றவை இருக்க கூடாது.
காதல் திருமணமோ, பெற்றோர் உற்றோர் நடத்தும் திருமணமோ மணமக்களின் சம்மதத்துடனே நடக்க வேண்டும்.
மணமகனுக்கு 21 வயதும், மணமகளுக்கு 18 வயதும் முழுமையாக பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
மணமக்கள் பொருந்தாத உறவினர்களாக இருக்ககூடாது.
இதன்படி பார்த்தால்...
மோடி பிறந்தது 1950.
யசோதாபென் 1952.
திருமணம் 1968.. ஆக...
மோடிக்கு 18 வயசு..
யசோதாக்கு 16 வயசு..
அதாவது சைல்டு மேரேஜ்..
சைல்டு மேரேஜ்க்கும்... சிறுபாலர் பாலியல் வன்கொடுமைக்கும் வித்தியாசம் இருக்குன்னுகூட தெரியாதா ப்ரோ??
3) //சுதந்திரத்துக்கு போராடின வரலாறு இரிக்கி//
அதே வரல ஆறு.. சாவர்க்கர்கிட்டயும் இருக்கே ப்ரோ.. இன்னும் சொல்லப்போனால்... சுதந்திரத்துக்காக போராடி.. ஜெயிலுக்கு போன வரலாறே சாவர்க்கருக்கு இருக்கே..
ஈவேரா எப்போ ஜெயிலுக்கு போனாரு??
போனாரா??
4) //தன்னையேகூட விமர்சிக்க சொன்னார்..//
மானமுள்ள ஆயிரம் பேரோடு போராடலாம்.. மானம் இல்லாதவனிடம் பருப்பு வேகாதுன்னு சூட்சுமமாக சொன்னதும் அதே ஈவேராதான் ப்ரோ..
இன்னிக்கு ஈவேராவை தூக்கிப்போட்டு அடிக்க காரணம்.. ஈவேராங்கிற மனிதன் அல்ல..
ஈவேரான்னு ஒரு கேரக்டரை உயர்த்தி பிடிக்குறாங்களே... அப்படி பிடிக்கப்படும் கேரக்டர்தான்.. பேயடி படுது.. சாரி.. பேய்.. உணர்வு ரீதியானது.. ஈவேராயிஸ்டுகள் உணர்வை ஏத்துக்க மாட்டாக... அறிவுப்பூர்வ தரவுதான் ஏத்துப்பாங்க..
அதனால.. நாயடின்னு வச்சுக்கோங்க...
பை தி பை..
மானமும் , அறிவும் மனிதர்க்கு அழகுன்னு ஈவேரா சொன்னாராம் ப்ரோ..
இதில் மானம் என்பது உணர்வு சம்பந்தமானது.. இந்த அறிவு ஈவேராவுக்கு இல்லியான்னு கேட்டு போராடலாம்தான்... ஆனால் என்ன செய்ய??
மானமில்லாதவனோடு போராடுவது வீண் என ஈவேராவுமே சொல்லிட்டாரு.. பின்ன ஈவேராயிஸ்ட்களுடன் இதுவிசயத்தில் கம்பு சுத்துவது மொட்டை பாறையில் முட்டை அடிப்பது போல... முட்டையும் நேரமும், உடல் உழைப்பும்தான் நஷ்டம்..
5) அந்தாளு கடவுள் மறுப்பாளர் இல்லை ப்ரோ..
மண்ணின் மைந்தர்களோட வாழ்வியல் சார் வழிபாடுகளின் வெறுப்பாளன்..
ஆனால்.. அந்நிய ஆதிக்க வழிபாடுகளை மூடநம்பிக்கைதான் அதுவும்னு ஒப்புக்கிட்டாலும் அதை ஆதரிக்கவே செய்தான்.. (அய்யோ ஒருமை பேச்சுன்னு குமுற வேண்டாம்.. ஈவேரா தூக்கிப்பிடிச்ச இங்கிலிபீச்சுப்படியும் யு - you என்பது நாகரிகமற்ற சொல்லோ.. அறிவுக்கு ஒவ்வாத சொல்லோ அல்ல...
அவன், இவன்னு பேசுவது ஏகவசனம்.. தரம் தாழ்ந்த வசனம்னும் வாரிக்கிட்டு வரவேண்டாம்.. ஈவேராயிஸப்படி.. தரம் தாழ்ந்த பேச்சு என்பது உணர்வு சம்பந்தப்பட்டது.. அறிவு சம்பந்தப்பட்டதல்ல... ஒருவேளை கிடையவே கிடையாது.. அது அறிவு சம்பந்தமானதுதான் என்றால்.. ஆதார தரவுகளோடு நிரூபித்தால்.. மன்னிப்பு கேட்க தயாராக உள்ளேன்..)
ரைட்...
ஸ்மார்த்த மதங்களான ஸ்ரீவைஷ்ணவம், ஸ்ரீசைவம், ஸ்ரீசாக்தம், ஸ்ரீசௌரம், கணாபத்தியம், கௌமாரம் ஆகிய மதங்களுக்கு (!?) எதிராக.. ஸ்ரமண மதங்களான.. ஆசிவகம், அருகம், சார்வாகம், சமணம், பௌத்தம்லாம் இருந்திச்சு... ஏன்.. மண்ணின் மக்கள் பின்பற்றிய ஸ்மார்த்த மதங்களை எதிர்க்கிறேன்னு கம்பு சுத்தின ஈவேரா.. மண்ணின் மக்களோட ஸ்ரமண மதங்களை ஆதரிக்காமல்...
மிலேச்ச இறக்குமதியான ஸ்மார்த்த மதங்களை ஆதரிச்சான்???
பை தி பை.. கிறிஸ்தவம், இஸ்லாத்தையும் விமர்ச்சித்து இருக்கான்னு தூக்கிட்டு வராதீங்க ப்ரோ...
அந்த விமர்சனங்களை கவனிச்சால் விசயம் புரியும்...
ஈவேரா விமர்சனம் பண்ணினது.. அந்த மதங்களை அல்ல.. அந்த மதங்களை பின்பற்ற... இங்கிருந்து மதம் மாறினவர்களை...
அதாவது.. இந்த மண்ணின் மதங்களில் இருந்து மிலேச்ச மதத்துக்கு மாறினால்.. சுயமரியாதை மீண்டுவிடும்னு ஈவேரா சொன்னதை பிடிச்சுக்கிட்டு.. இங்கே கஞ்சிக்கும், வாளுக்கும் பயந்து மதம் மாறின "தாழ்த்தப்பட்ட" (தாழ்ந்த சாதி அல்ல.. கிறிஸ்தவ பேரரசு காலத்தில் தாழ்த்தப்பட்ட சாதிகளாக அடையாளம் காணப்பட்ட சாதிகள்) சாதிகளை சேர்ந்தவர்கள்.. ஈவேராவுக்கு சமமாக தங்களை நினைச்சபடியால்... அவர்கள்மீது வைத்த விமர்சனம் அது...
எப்படி ஈ.வே.ரா..1.5% உள்ள பிராமணனை சாதியை சொல்லி திட்டினா ஒருத்தனும் தன்னை மதிக்க மாட்டான்னு... மதத்தை சொல்லி திட்டினானோ.. அதே வகைதான் இதுவும்.. மதம்மாறி மிலேச்ச மதம் போயிட்டவனுகளை சாதியை சொல்லி திட்ட முடியாதுன்னு.. மதம் சொல்லி திட்டினான்.. அவ்வளவுதான்...
6) //பெண் விடுதலை//
இதைப்பற்றி சொல்றவங்க எல்லாம் பேசினார்... பேசினார்னு சொல்றாங்களே தவிர.. என்ன பேசினார்னு சொல்லவே மாட்றாங்களே ஏன்??
ஆணுக்கு சமமாக பெண் இருப்பதுதான் பெண் விடுதலைன்னு ஈவேரா சொன்னார்னு ஒரு ஈவேராயிஸ்ட் சொன்னதுக்கு நான் கேட்ட கேள்வி கீழே... 👇👇
அது ஏன் ஆணுக்கு சமமாக பெண் இருக்கனும்??
ஆணைவிட மதிக்கப்படும் இடத்துக்கு பெண் போனால் தவறு?
சொந்த அம்மா கால்ல விழுந்தாங்களோ இல்லையோ.. ஜெ.ஜெ -- கோமளவள்ளி கால்ல விழுந்தாங்களே.. ஈவேரா அதை பெண்விடுதலைன்னு சொல்வானா? இல்லியா?..
சரி.. ஜெ.ஜெ வேண்டாம்... மாயாவதி, மம்தா, மெகபூபா என வரிசையாக வந்தார்களே.. அது பெண் விடுதலை இல்லையா??
ரைட்.. இப்போ மெய்ன் பாய்ன்ட்க்கு வருவோம்...
ஈவேராயிஸம் பேசும் எந்த இயக்கத்தில்... பெண்களுக்கு சம பங்கு இருக்கு தலைமையில்??
குறைஞ்சது.. நிர்வாகத்திலாவது சம பங்கு உள்ள ஈவேராயிஸ இயக்கம் ஏதாச்சும் இருக்கா??
ஏன் இல்லை??
அது சாத்தியமற்றது என்றால்.. அதை போதிக்கும் ஈவேரா முட்டாளாக இருக்கவேண்டும்..
அல்லது.. அதை செய்ய முடியாத ஈவேராயிஸ்டுகள் கையாலாகதவர்களாக இருக்கவேண்டும்.. இரண்டில் எது சரி??
7) சமூக திருத்தம் பேசினானா?? எப்போ??
சூத்திர சாதிகளை கீழ்சாதியோடு கலக்க கூடாதுன்னு அழுவது சமூக சீர்திருத்தமா??
”தீண்டாமை விலக்கு என்பதும் கோவில் பிரவேசம் என்பதும் சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதுதானா? பறையன் கீழ்சாதி என்பது மாற்றப்படவில்லையானால் அதற்காக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா? இந்த அனுமதியானது இதுவரை நடுசாதியாக இருந்த சூத்திரர் என்பவர்கள் இப்போது கீழ்சாதியாகவே ஆக்கப்பட்டுவிட்டார்கள். ஆனதால் இதை நாம் அனுமதிக்கக்கூடாது” என்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்.
(நூல்: வைக்கம் போராட்ட வரலாறு – வீரமணி)
8) //உடை விலையேற சாதிதான் காரணம்//..
ஆஹான்... ப்ரோ... இந்திய சுதந்திரத்துக்கு போராடின குறுநில, பாளைய மன்னர்கள் வரலாறுவரை... பெண்களுக்கு ஜாக்கெட் இல்லையே... அட அவ்வளவு ஏன்?? உங்க பாட்டிகிட்ட... அவங்களோட பாட்டி ஜாக்கெட்.. குறைஞ்சபட்சம் பிரேசியராவது யூஸ் பண்ணாகளான்னு கேட்டு பாருங்க...
உடுப்பு உடுத்துவது என்பது நாகரிக சமுதாய வளர்ச்சிதானே தவிர.. அது சாதி சமத்துவ புரட்சி அல்ல...
ஈ.வே.ரா திண்ணையை பிடிச்சு நடந்த காலத்துலயே.. ரெட்டைமலை சீனிவாசன் "பறையன்" என ஒரு அச்சு இதழே நடத்தியிருக்கார்...
ஆனால் "ஈவேரா" பத்தின படத்துல.. சீனிவாசனை ஈவேராவைவிட இளையவராக காட்டியிருப்பார்கள்... திருட்டு திராவிட கூட்டம்..
9) ஆதிக்க சாதிக்கு மட்டுமா ஈவேரான்னு எழுதினது இருக்கட்டும் ப்ரோ...
குற்றப்பரம்பரை சட்டம் ஏன்.. எதனால்னு கேளுங்களேன்.. திருமா ப்ரோ.. கிச்சுக்கிச்சு மூட்டி.. சிரிக்க வைப்பார்...
பாளைய ஆட்சியில்... எவன்லாம்.. கிறிஸ்தவ பேரரசு மற்றும் அதன் ஆதரவு படைகளை எதிர்த்து சண்டை போட்டார்க்களோ... அந்த சாதிகள் எல்லாம் குற்றப்பரம்பரை சாதியாச்சு...
இதில் மிகப்பெரிய காமடி...
வெறும் சொற்ப வருசத்துல.. அந்த லிஸ்ட்ல உள்ள சில சாதிகள் ஆதிக்க சாதியாகவும்.. மிச்சம் தாழ்த்தப்பட்ட சாதியாகவும் அடையாளம் ஆச்சு...
இதுக்கு பின்னாடி இருந்த சதிகாரன் கிறிஸ்தவன்னு எல்லோருக்கும் தெரியும்...
ஆனால்... கிறிஸ்தவ படையை எதிர்க்காமல் ஒதுங்கி வழிவிட்ட நடுநிலை சாதி.. (அதாவது ஆதிக்க சாதி..) எதுன்னு தேடுங்க... அந்த ஒதுங்கி வழிவிட்ட கூட்டம்தான்.. இங்கே போராடினவனுகளை இரண்டாக பிரிச்சு வச்சு அரசியல் பண்ணிட்டு இருக்கான்..
10) உங்க பேச்சுல நீங்களே சின்னப்புள்ளத்தனமா விளக்கம் சொன்னது ஒரு இடம் ப்ரோ..
/// சொத்தை காப்பாற்றதான் மணியம்மைகூட திருமணம் என.///
A) யாருக்காக பயன்பட அந்த சொத்தை பாதுகாத்தார் ஈவேரா??
B) சொத்தை எதுக்கு வாரிசு மாற்றம் பண்ணினார்??
பார்ப்பனர் அர்ச்சனை பண்ணாத தாழ்த்தப்பட்ட சாதி கோவில்கள் அனேகம் இருந்திச்சு.. அவற்றுக்கு பிரிச்சு எழுதிவச்சிருக்கலாம்...
அல்லது... வள்ளலார் மடம்போல... சமத்துவ இயக்கம்னு சொல்லி... ஆரம்பிச்சு... அதுக்கு அந்த சொத்து பயன்பட வழி பண்ணியிருக்கலாம்..
C) ஈவேராவோட நோக்கத்தின்படி அது தாழ்த்தப்பட்டோருக்கு பயன்படனும் என்றாலும்.. ஒப்பந்த குத்தகை முறையில் தலித்களுக்கு கொடுத்திருக்கலாம்..
இது எதையுமே பண்ணாமல்.. மொத்த சொத்தையும் சுருட்டி... மணியம்மை பெயர்ல வாரிசுரிமை மாற்றம் பண்ணினது ஏன்??
ஒருவேளை கோவிலுக்கு சொத்தை எழுதிவைக்க முடியும்.. வள்ளலார் மடத்துக்கு எழுதிவைக்க முடியும்... தனியாருக்கு அப்போது கொடுக்க முடியாதுன்னு.. திமுக சர்வாதிகாரி ஸ்டாலின்தனமாக உளறுவதானாலும்...
இப்போதைய சட்ட முறையில்... மாற்றி எழுத வாய்ப்பு , வசதி எல்லாம் இருக்கே..
ஏன் இவ்வளவு காலமாக... அதில் முதல் படியைகூட மிதிக்கவில்லை??
பதில் சொல்லுங்க.. ஈவேராயிஸ்ட்டுகளே.. தெரிஞ்சுக்க ஆவலாக உள்ளேன்...
No comments:
Post a Comment