வேட்டுவர் இனத்துக்கும் ,கொங்கு வெள்ளாளர் இனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை
வேட்டுவர் இனத்துக்கும் ,கொங்கு வெள்ளாளர் இனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை கல்வெட்டுகள் உறுதிபடுத்துகிறது .
வெள்ளாளர் (கொங்கு வெள்ளாளர் ) இனத்தை பற்றிய கல்வெட்டுகள் :
'வேளாண் மாந்தருக்கு உழுதூண் அல்லது இல்லென மொழிப் பிறவகை நிகழ்ச்சி '(மரபியல் 81)
வேளாண் மாந்தருக்கு(வெள்ளாளர் ) உழவு தொழில் தவிர மற்ற தொழில் எதுவும் இல்லை என சங்க இலக்கியம்கள் கூறுகிறது .
'கழகத்தால் வந்த பொருள்கள் முறாமை
பழகினும் பார்பாரை தீப்போல ஒழுகழ
உழவின்கட் காமுற்று வாழ்தலி மூன்றும்
அழகென்ப வேளாண் குடிக்கு 'திரி 42
'வேளாண் வாயில் கேட்ப கூறி (பொருந 75)
வேளாண் -உபகாரம்
வேளாண் என்ற சொல்லில் இருந்து 'வெள்ளாளர் 'வேளாளர்' என்று சொல் வந்தது .
'...பூவாணிய நாட்டு ஆவணி பேரூரில் வெள்ளாளன் பிள்ளர்களில் சொக்கன் ..'
(ஈரோடு,தொண்டீஸ்வரர் கோயில் ,கிபி 10)
'..கொற்றமங்கலத்தில் இருக்கும் வெள்ளாளன் பைய்யரில் பறையன் பறையனேன் ஆளுடையார் வில்லிஸ் வரமுடையருக்கு ..'
(கோவை ,இடிகரை ,வீர பாண்டியன் (கிபி 1261-1288)
'...காங்கேய நாட்டு கரை ஊரில் வெள்ளாளன் மனியர்களில் அல்லால பெருமாள் இட்ட தூண் ..'
(காங்கேயம் கல்வெட்டு ,கிபி 1448)
'...கவையன்புத்தூரில் இருக்கும் வெள்ளாளன் பிள்ளந்தை குலத்தில் பெரிய காளியப்பா கவுண்டர் ..'
(அவினாசி கல்வெட்டு ,கிபி 1648)
'...செம்பூத்த குல மானிக்கி தெய்வானை உபயம் '
(காங்கேயன் ,ஊதியூர் ,கிபி 1853)
செம்பூத்த குலம்- வெள்ளாளர்
மானிக்கி -தேவரடியாள் (புதுகோட்டை கல்வெட்டுகள் 817 'மானிக்கி' என்றால் 'தேவரடியாள்' என்று கூறுகிறது )
பெருங்குடி செப்பேடு,தூரன் குல செப்பேடு,பொட்டு கட்டி விட்ட செப்பேடு இந்த செப்பேடுகள் கொங்கு வெள்ளாளர் வெள்ளாள பெண்களை பொட்டு கட்டி விட்டதை பற்றி கூறுகிறது.பொட்டு கட்டி விடும் என்னும் தேவதாசி முறை சட்டம் இயற்றி இந்த முறையை ஒழித்தார்கள்.கொங்கு நாட்டில் தேவரடியாள் குறித்து பல கல்வெட்டுகள் இருக்கிறது.
'சேர குல வெள்ளாளர்கள் பிள்ளையென்ற பட்டங்கொண்டவர்களாக வாழ்ந்து இருக்கிறார்கள் .ஆனால் அவர்களின் தலைமையானவர்கள் கவுண்டன் என்னும் பெயர் புனைவது வழக்கமாம் .இப்பொழுதும் கவுண்டன் பிராமணபிள்ளை என்பது போல் வழக்கம் '
(கொங்கு நாடு அடைவு இயல் -தி அ முத்துசாமி கோனார் ) .
'..ஸ்வஸ்தி ஸ்ரீ வல்லாள தேவர் திரு ராச்சியம் பண்ணியருளா நின்ற நள வருசத்து வட பரிசார நாட்டு இடிகரையில் வெள்ளாளன் கொற்றந்தைகலில் பிள்ளையாண்டி கொக்கண்டன்தேவர் என் தன்மம் '
(,போசளர் ஆட்சி (வல்லாள தேவர்),கோவை இடிகரை,கிபி 13)
பிள்ளை( அந்தப்புறத்துக்கு பிறந்தவர்) என்ற பட்ட பெயர் இருந்ததை இக்கல்வெட்டு கூறுகிறது .
'கொங்கு வெள்ளாளர் முறையான கொங்கு வெள்ளாளர் ,தொண்டன் அல்லது இளகன்பன் கூட்டம் என்ற இரண்டு அகமண கட்டுப்பாடு உடைய பிரியுகளாக பிரிக்கபட்டு உள்ளது .பின்னவர் இச்சாதி பெண்களும் ,கைம்பெண்களும் வேறு சாதியோரோடு கொண்ட முறைஅற்ற உறவின் காரணமாக பிறந்தவர்கள் '
(தென்இந்தியா குடிகளும் குலங்களும் தொகுதி -3)
வெள்ளாளர்களின் (கொங்கு வெள்ளளாளர் ) வரலாற்று திருட்டு .
வேட்டுவர் இனத்துக்கும் , வெள்ளாளர் இனத்துக்கும்(கொங்கு வெள்ளாளர் ) கூட்ட பெயர்கள் ஒன்றாக இருப்தை பயன்படுத்தி வெள்ளாள சாதினர் ,வேட்டுவ இன வரலாறுகளை திருடி கொள்கிறார்கள் .
'...இப்படிக்கு பூந்துறையில் வெள்ளாளன் மேலைசாகாடைகளில் அப்பியன் எழுத்து..இப்படிக்கு எழுமாத்தூரில் வெள்ளாளன் பனகாடர்களில் பெரியன்ன காகுதார் எழுத்து..இப்படிக்கு குலவிளக்கில் பண்டி வேட்டுவரில் புலிகுத்தி தேவன் எழுத்து...இப்படிக்கு அறைச்சலூரில் கரைய வேட்டுவரில் குன்றிடர் எழுத்து..இப்படிக்கு குழாநிலையில் வெள்ளை வேட்டுவரில் நல்லண்ணன் எழுத்து ..,
(1967-68:231,கிபி 16,வீர நஞ்சராயர் ,பெருந்துறை கல்வெட்டு )
'..சோழியன் கரை ஒன்றுக்கும் அந்துவ வேட்டுவரில் சிறுவன் கரை ஒன்றுக்கும் மேற்படி நச்சுளி வேட்டுவரில் சிறுவன் கரை ஒன்றுக்கும் குறுங்காடை வேட்டுவரில் சின்னன் கரை ஒன்றுக்கும் வெள்ளாளன் தனிஞ்சிகளில் தயாண்டர் கரை ஒன்றுக்கும் ..'
(ARE No-226 of 1968, ஈரோடு கல்வெட்டு ,கிபி 1538,திருமலை நாயக்கர் )
இக்கல்வெட்டு
அந்துவ வேட்டுவர் -அந்துவ வேட்டுவ கூட்டம்
நச்சுளி வேட்டுவர் - நச்சுளி வேட்டுவ கூட்டம்
குறுங் காடை வேட்டுவர் -குறுங் காடை வேட்டுவ கூட்டம் (குறும்பூழ் -காடை)
தனிஞ்சி வெள்ளாளர் - தனிஞ்சி வெள்ளாள கூட்டம்
போன்ற கூட்ட பெயர்களை கூறுகிறது .
'...வெள்ளாளன் அந்துவரில் செய கரிவான்டரும் ..'
(காங்கேயம் கல்வெட்டு ,கிபி 1537,விஜய நகர் ஆட்சி )
இன்று காடை வேட்டுவவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் .காடை வேட்டுவர்களின் குல தெய்வம் கொங்கலம்மன் (பெரிய புலியூர் ,ஈரோடு ) இன்று காடை குல வேட்டுவர்கள் தன்னோட சாதி வேட்டுவ சாதி என்று தான் கூறுகிறார்கள் . இன்று காடை குல வெள்ளாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள் .இவர்கள் தன்னோட சாதி வெள்ளாள சாதி என்று தான் கூறி வருகிறார்கள் . இங்கு காடை வேட்டுவ குலமும் ,காடை வெள்ளாள குலமும் ஒரே சாதி கிடையாது .
இன்று அந்துவ வேட்டுவவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் .அந்துவ வேட்டுவர்களின் குல தெய்வம் பத்ரகாளியம்மன் (அந்தியூர் ,ஈரோடு ) இன்று அந்துவ குல வேட்டுவர்கள் தன்னோட சாதி வேட்டுவ சாதி என்று தான் கூறுகிறார்கள் . இன்று அந்துவ குல வெள்ளாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள் .இவர்கள் தன்னோட சாதி வெள்ளாள சாதி என்று தான் கூறி வருகிறார்கள் . இங்கு அந்துவ வேட்டுவ குலமும் ,அந்துவ வெள்ளாள குலமும் ஒரே சாதி கிடையாது . இது தான் உண்மை .
இது போலத்தான் மற்ற குலங்கள். இந்த உண்மையை வெள்ளாளர்கள் மறைத்து ஊரை ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள் .
வேட்டுவருக்கு பணிசெய்த மக்கள் வெள்ளாளர்கள்(கொங்கு வெள்ளாளர் ).
கச்சி(காஞ்சி) ஏகாம்பரர் கோயில் கல்வெட்டு ஓன்று வேட்டுவருக்கு பணிசெய்த மக்கள் பற்றி கூறுகிறது .
"தொண்டை மண்டல வரிசை மூவாறு குடிமக்கள் சுருதிநாள் முதலாகவே துங்கமிகு நாவிதன் குயவன் வண்ணான் ஓலை சொன்னபடி ஒச்சன் கண்தகம் மாலர்வகை ஐவர் வாணியர் மூவர் கந்தமலர் மாலைகாரர் கலைமீது சார் ஓட்டும் பாணன் தலைகாவல்புரி பள்ளி வலையன் பண்டுமுதல் ஊரன் மரிக்கும் இடையன் விருது பலகூறும் வீர முடையான் பதிநென்குடி மக்கள் அனைவரும் வேட்டுவர் பனிசெய்து பல முறைமையும் கொண்டு
பரிவட்டமும் கட்டியே வருவர் இக்குவலைய மதிக்கவேதான் கூறரிய கச்சிவாழ் ஏகாம்பரர் ஆலய குமததில் இத்த லிபியே"
பண்டுமுதல் ஊரன் - உழவர்(கொங்கு வெள்ளாளர் )...
No comments:
Post a Comment