திருப்புகழ்:-
தோரண கனக வாசலில் முழவு தோல்முர சதிர ...... முதிராத
தோகையர் கவரி வீசவ யிரியர் தோள்வலி புகழ ...... மதகோப
வாரண ரதப தாகினி துரக மாதிர நிறைய ...... அரசாகி
வாழினும் வறுமை கூரினு நினது வார்கழ லொழிய ...... மொழியேனே
பூரண புவன காரண சவரி பூதர புளக ...... தனபார
பூஷண நிருதர் தூஷண விபுதர் பூபதி நகரி ...... குடியேற
ஆரண வனச ஈரிரு குடுமி ஆரியன் வெருவ ...... மயிலேறு மாரிய பரம ஞானமு மழகு மாண்மையு முடைய ...... பெருமாளே.
தோரணங்கள் கட்டிய அழகிய அரண்மனை வாசலில், முழவு, தோல் முரசு முதலிய வாத்தியம் ஒலிக்க, இளம்பருவப் பெண்கள் சாமரம் வீச, புகழ்ந்து பாடும் பாடகர்கள் என் புஜ பராக்ரமத்தைப் புகழ, மதமும் கோபமும் கொண்ட யானைகள், தேர்கள், காலாட்படைகள், குதிரைகள் திசை நிரம்பி விளங்க, நான் ஓர் அரசனாகி வாழ்ந்தாலும் சரி, வறுமை நிலை மிகுந்து பாடுபட்டாலும் சரி, உனது திவ்யமான திருவடிகளைத் தவிர வேறு எதையும், வேறு யாரையும் புகழ மாட்டேன். முழு முதற் கடவுளே, உலகங்களுக்கு மூலாதார மூர்த்தியே, குறப்பெண் வள்ளியின் மலையைப் போன்ற பெரிய இனிய மார்பகங்களை அணிந்த மார்பனே, அசுரர்களை நிந்தித்துக் கண்டிப்பவனே, தேவர்களின் தலைவனான இந்திரன் அமரலோகத்தில் மீண்டும் குடியேறும்படியும், வேதம் ஓதுபவனும், தாமரையில் அமர்ந்தவனும், நான்கு குடுமிகளை உடையவனும் ஆகிய பெரியோனாம் பிரமன் அச்சம் கொள்ளும்படியாகவும், மயில் மீது ஏறிவரும் பெரியவனே, மேலான ஞானத்தையும், அழகையும், பராக்ரமத்தையும் உடைய பெருமாளே.
்...்....்....்
ஆறாம் திருமுறை -23
2321 மூரி முழங்கொலிநீ ரானான் கண்டாய்
முழுத்தழல்போல் மேனி முதல்வன் கண்டாய்
ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய்
இன்னடியார்க் கின்பம் விளைப்பான் கண்டாய்
ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்
அண்ணா மலையுறையெம் அண்ணல் கண்டாய்
வாரி மதகளிறே போல்வான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே.
6.023.5
மறைக்காட்டுள் உறையும் மணாளன் மிகவும் முழங்குகின்ற ஒலியை உடைய நீரின் வடிவினனாய், தழல் போன்ற சிவந்த மேனியை உடைய முதல்வனாய், ஏரி நீர் நிறைந்ததனை ஒத்த செல்வனாய்ச் சிறந்த அடியவர்களுக்கு இன்பம் விளைவிப்பவனாய், ஆரியனாய்த் தமிழனாய், அண்ணாமலையில் உகந்தருளியிருக்கும் தலைவனாய், வெள்ளம் போல மதத்தைப் பெருக்குகின்ற மதயானை போல்வானாய் உள்ளான்.
்...்....்....்
பத்தாம் திருமுறை - 2.
134 புரைஅற்ற பாலினுள் நெய்கலந் தாற்போல்
திரைஅற்ற சிந்தைநல் ஆரியன் செப்பும்
உரையற்று உணர்வோர் உடம்பிங்கு ஒழிந்தால்
கரையற்ற சோதி கலந்தசத் தாமே 22
்...்....்....்
சிவஞான சித்தியார்
காரிய கார ணங்கள் முதல்துணை நிமித்தம் கண்டாம் பாரின்மண் திரிகை பண்ணு மவன்முதல் துணைநி மித்தம் தேரின்மண் மாயை யாகத் திரிகைதன் சத்தி யாக #ஆரியன்_குலால_னாய்நின்_றாக்குவன்_அகில_மெல்லாம். 38
்...்....்....்
எக்காலக் கண்ணி
பாடல் -26.
தூரியில் மீனம்போல் கழன்றுமனம் வாடாமல்
ஆரியனைத் தேடி யடிபணிவ தெக்காலம் 26
சித்தர்கள் தமிழ் மரபில் வந்தவர்கள். நிறுவன மதங்களைக் கேலி பேசத் தயங்காதவர்கள். சித்தர்கள் பல்வேறு குலங்களிலிருந்து வருபவர்கள். அவர்கள் வாயிலிருந்து சிவனை 'ஆரியன்' என்னும் போது இச்சொல் மரியாதை நிமித்தம் பயன்படும் உயர்வு நவிற்சி என்று கொள்ளவேண்டுமே தவிர 'ஆரியன்' என்பது ஒரு மனித இனம் என்று கொள்ளலாகாது. அது ஒரு மொழிச் சொல்லாட்சி என்று பலர் விளக்கியம் இந்த ஆரிய-திராவிட சண்டை தமிழ் மண்ணில் ஓய்ந்த பாடில்லை!
்...்....்....்்
இதுபோக....
சேக்கிழார் பிள்ளைத்தமிழ் அப்படிங்கிறதுலயும்... ஆரியன் அப்படிங்கிறது வேற அர்த்தம்ல இருக்கு...
இதோ..
முத்தப் பருவம்
7. மேயபல ஆரியர் குழாத்தினுள் பூரியர்
விராயதென வாய தூய
வெள்ளோதி மக்குழாம் நிலைகுலைய மேதிகால்
விசைத்தெழீஇப் பாய ஆங்கண்
ஆயவெடி வாளையேர் பருகிலாங் கலிமோத
அதின்உதிர் பழத்தின் வெருவி
அம்மேதி கரையேற அதுகண்ட அவ்வாளை
ஆயவா லாமை தீரத்
தூயநெடு வான்நீர் துளைந்தாடி மீளின்
தொடக்குநீங் காமை யெண்ணிச்
சோதிமதி மண்டலங் கீண்டமுத தாரையொடூ
துனையக் கிழக்கி றங்கும்
பாயதடம் மலியும் திருத்தொண்டை நன்னாட
பவளவாய் முத்தம் அருளே
பரவுசீ ருலகெலாம் விரவுசே வையர்பிரான்
பவளவாய் முத்தம் அருளே.
விராயதென வாய தூய
வெள்ளோதி மக்குழாம் நிலைகுலைய மேதிகால்
விசைத்தெழீஇப் பாய ஆங்கண்
ஆயவெடி வாளையேர் பருகிலாங் கலிமோத
அதின்உதிர் பழத்தின் வெருவி
அம்மேதி கரையேற அதுகண்ட அவ்வாளை
ஆயவா லாமை தீரத்
தூயநெடு வான்நீர் துளைந்தாடி மீளின்
தொடக்குநீங் காமை யெண்ணிச்
சோதிமதி மண்டலங் கீண்டமுத தாரையொடூ
துனையக் கிழக்கி றங்கும்
பாயதடம் மலியும் திருத்தொண்டை நன்னாட
பவளவாய் முத்தம் அருளே
பரவுசீ ருலகெலாம் விரவுசே வையர்பிரான்
பவளவாய் முத்தம் அருளே.
[ அ. சொ. ] ஆரியர்-மேலோர், பூசிக்கத்தக்கவர், அறிவுடைய ஆசிரியர்கள், குழாத்தினுள்-கூட்டத்துள், பூரியர்-அற்பர் , அறிவீனர், விராயது-கலந்திருத்தல், தூய்-சுத்தமான், ஓதிமம்-அன்னம், குழாம்-கூட்டம், மேதி-எருமைகள். விசைத்து-வேகமாக நடந்து, அங்கண்-அவ்விடத்தில், ஆய-இருந்த, வெடி-அச்சமுற்ற, வாளை-வாளை மீன்கள், ஏர்பு-எழுந்து, இலாங்கலி-தென்னை மரத்தில், வெருவி-பயந்து, ஆய-உண்டான, வாலாமை-தீட்டு, வான்நீர்-கங்கையாற்று நீரில், துளைந்தாடி-படிந்து மூழ்கி, தொடக்கு-தட்டு, மதி-சந்திரன், கீண்டு-கிழத்து, தாரை-ஒழுக்கு, துனைய-விரைய, கிழக்கு-கீழே, பாய-பரந்த, தடம்-குளங்கள், மலியும்-மிகும்.
விளக்கம் : இப்பாடலும் திருத்தொண்டை நன்னாட்டின் நீர்வளத்தை மிகுதிப்படுத்திக் காட்டுவதாகும். குளங்களில் உள்ள அன்னங்கட்கு இடையே எருமைகள் இருத்தல்.
அறிஞர் பெருமக்களுக்கு இடையே அறிவீனர்களாம் அற்பர்கள் இருத்தலை உவமை காட்டியது பொருத்தமே. அன்னம் வெண்ணிறத்தது. வெண்ணிறம் தூய்மையானது. தூய்மை அறிவு ஒளிக்கு உகந்தது. எருமை கருமையானது. கருமை அஞ்ஞானத்துக்கு உவமையாவது. ஆகவே, உவமை அழகு உவத்தற்குரியது. மேலும், இப்பாடலில் வாளையின் அட்டகாசம் மிகுதியாகக் கூறப்பட்டுள்ளது. எருமை குளத்தில் பாய்ந்ததனால் வாளை தென்னையில் மோதியது. அப்படி மோதியதால் தென்னம் பழங்கள் குளத்தில் வீழ்ந்தனவாம். அங்ஙனம் வீழ்ந்த ஓசை கேட்டு மேதிகள் பயந்து கரை ஏறினவாம்.
வாளைகள் குளத்தில் தூய்மையுடன் இருக்கையில், அதை விடுத்துத் தென்னையினைத் தீண்ட வேண்டி ஆனமையின் தீட்டு உற்றனவாம். அத்தீட்டினைப் போக்க மேலும் துள்ளி ஆகாய கங்கையில் நீராடியும் தீட்டுப் போகாமையினால், சந்திரமண்டலத்தையும் ஊடுறுவிச் சென்று சந்திரனது அமுத தாரையுடன் கீழ் இறங்கினவாம். இத்துணையும் உயர்வு நவிற்சி அணியின்பால் பட்டதாகும். வாளை மீனின் வன்மை இங்ஙனம் புகழ்ந்து கூறப்பட்டது.
ஆரியர் குழாத்துள் பூரியர் உண்டு என்பதைத் திருவிளையாடற் புராணத்துள் அங்கம் வெட்டின படலத்துள் காணலாம். குலோத்துங்க பாண்டியன் அரசு செலுத்திவரும் நாளில், ஓர் வில்லாசிரியர் வில் வித்தை பயிற்றுவித்து வந்தார். அவரைப் பற்றிப் பரஞ்சோதியார் கூறும்போது,
வாள்வினைக் குரவன் அன்னான்
வல்அமண் விடுத்த வேழம்
தோள்வினை வலியால் அட்ட
சுந்தர விடங்கள் தன்னை
ஆள்வினை அன்பும் தானும்
வைகலும் அடைந்து தாழ்ந்து
மூள்வினை வலியை வெல்லும்
மூதறி வுடையன் அம்மா
வல்அமண் விடுத்த வேழம்
தோள்வினை வலியால் அட்ட
சுந்தர விடங்கள் தன்னை
ஆள்வினை அன்பும் தானும்
வைகலும் அடைந்து தாழ்ந்து
மூள்வினை வலியை வெல்லும்
மூதறி வுடையன் அம்மா
என்கிறார்.
ஆகவே, இவர் ஆரியர் அல்லரோ? இவரிடம் கற்ற மாணவர்களுள் ஒருவன் சித்தன் என்பவன். அவன் தன் ஆசிரியரது மனையாளை விரும்பிப் பலகால் அம்மாது தனித்து இருக்கும் சமயங்களில் சென்று சொல்லால் தொந்தரவு செய்து வந்தனன். ஒரு நாள் அவன் செயலாலும் தொந்தரவு செய்யலானான். அதனைப் பரஞ்சோதியார்,
பின்னொரு பகல்போய்ச் செங்கை
பிடித்தனன் வலிப்பத் தள்ளி
வன்னிலைக் கதவம் நூக்கித்
தாழக்கோல் வலித்து மாண்ட
தன்னிலைக் காப்புச் செய்தாள்
தனிமனக் காவல் பூண்டாள்
அந்நிலை பிழைத்த தீயோன்
அனங்கத்தீ வெதுப்பப் போனான்
பிடித்தனன் வலிப்பத் தள்ளி
வன்னிலைக் கதவம் நூக்கித்
தாழக்கோல் வலித்து மாண்ட
தன்னிலைக் காப்புச் செய்தாள்
தனிமனக் காவல் பூண்டாள்
அந்நிலை பிழைத்த தீயோன்
அனங்கத்தீ வெதுப்பப் போனான்
என்றனர்.
பின் ஒரு பகல் போய் செங்கை பிடித்தனன் வலிப்ப
பின்பு ஒரு நாள் சென்று அவள் சிவந்த கையைப் பிடித்து இழுக்க தனிமனக்
காவல் பூண்டாள் - ஒப்பில்லாத மனமாகிய காவலையுடைய அந்நங்கை,
தள்ளிவல் நிலைக்கதவம் நூக்கித் தாழக்கோல் வலித்து - அவனைப் புறம்பே
தள்ளி வலிய நிலையையுடைய கதவினைச் சாத்தித் தாழிட்டு, மாண்ட தன்
நிலை காப்புச் செய்தாள் - மாட்சிமைப்பட்ட தனது கற்பு நிலையைக்
காத்துக் கொண்டனள்; அந்நிலை பிழைத்த தீயோன் அனங்கத்தீ வெதுப்பப்
போனான் - அப்பொழுது தன் எண்ணம் தப்பிய அக்கொடியோன் காமத்
தீயானது சுடச் சென்றான்.
பின்பு ஒரு நாள் சென்று அவள் சிவந்த கையைப் பிடித்து இழுக்க தனிமனக்
காவல் பூண்டாள் - ஒப்பில்லாத மனமாகிய காவலையுடைய அந்நங்கை,
தள்ளிவல் நிலைக்கதவம் நூக்கித் தாழக்கோல் வலித்து - அவனைப் புறம்பே
தள்ளி வலிய நிலையையுடைய கதவினைச் சாத்தித் தாழிட்டு, மாண்ட தன்
நிலை காப்புச் செய்தாள் - மாட்சிமைப்பட்ட தனது கற்பு நிலையைக்
காத்துக் கொண்டனள்; அந்நிலை பிழைத்த தீயோன் அனங்கத்தீ வெதுப்பப்
போனான் - அப்பொழுது தன் எண்ணம் தப்பிய அக்கொடியோன் காமத்
தீயானது சுடச் சென்றான்.
பிடித்தனன் வலிப்ப - வலிதிற் பற்றியிழுக்க. தாழக்கோல் : தாழாகிய
கோல்; அக்குச் சாரியையென்று தொல்காப்பியரும், அகரம் சாரியையென்று
நன்னூலாரும் கூறுவர்;
கோல்; அக்குச் சாரியையென்று தொல்காப்பியரும், அகரம் சாரியையென்று
நன்னூலாரும் கூறுவர்;
"தாழென் கிளவி கோலொடு புணரின்
அக்கிடை வருத லுரித்து மாகும்"
என்பது தொல்காப்பியம். மனக்காவல் - மனத்தைக் கற்பு நெறியில் நிறுத்துங்காவல்; இது நிறையெனப்படும்;
அக்கிடை வருத லுரித்து மாகும்"
என்பது தொல்காப்பியம். மனக்காவல் - மனத்தைக் கற்பு நெறியில் நிறுத்துங்காவல்; இது நிறையெனப்படும்;
"சிறைகாக்குங் காப்பெவன் செய்யு மகளிர்
நிறைகாக்குங் காப்பே தலை"
என்பது திருக்குறள். பிழைத்த - தவறு செய்த என்றுமாம்.
நிறைகாக்குங் காப்பே தலை"
என்பது திருக்குறள். பிழைத்த - தவறு செய்த என்றுமாம்.
இவன் ஆரியர் குழாத்தில் உள்ள பூரியன் அல்லனோ? ஆகவே, ஆரிய குழாத்தினுள் பூரியர் விராயது என” என்றனர்.
்...்....்....்
கம்ப இராமாயணம்
கிட்கிந்தா காண்டம்-மயேந்திரப் படலம் (இராமாயணத்துல நிறைய இடத்தில் உண்டு... சாம்பிளுக்காக இது...)
'ஆரியன் முன்னர்ப் போதுற உற்ற அதனாலும், காரியம் எண்ணிச் சோர்வு அற முற்றும் கடனாலும்,மாருதி ஒப்பார் வேறு இலை' என்னா, அயன் மைந்தன்சீரியன் மல் தோள் ஆண்மை விரிப்பான், இவை செப்பும்: 8
்...்....்....்
இராவணனும் ஆரியனே..
இராவணன் மந்திரப் படலம் 33
'ஆரியன் தன்மை ஈதுஆயின், ஆய்வுறு
காரியம் ஈதுஎனின், கண்ட ஆற்றினால்,
சீரியர் மனிதரே; சிறியம் யாம்' எனா,
சூரியன்பகைஞன் என்று ஒருவன், சொல்லினான்.
சூரியன் பகைஞன் என்று ஒருவன் - சூரிய சத்துரு
என்ற பெயர் கொண்ட அரக்கவீரன்; ஆரியன் தன்மை ஈது
ஆயின்- மேலோனாகிய நம் மன்னன் தன்மை இதுவென்றால்;
ஆய்வுறு காரியம் ஈது எனின் - நாம் எல்லாம் கூடி
ஆராய்ச்சி செய்யும் காரியம் இது என்றால்; கண்ட ஆற்றினால்
- இது கொண்டு ஆயும் நெறியினால்; சீரியர் மனிதரே -
சிறந்தவர்கள் மனிதரே ஆவர்; யாம் சிறியம்- அரக்கராகிய நாம்
சிறியவர்களே யாம்; எனச் சொல்லினான் - என்று வருந்திக்
கூறலானான்.
ஆரியன்-மேலோன்; இங்கு இராவணனை உணர்த்தும். அற்ப
மனிதர்களையும், குரங்கையும் அழிப்பதற்காக ஆராய்வது செயல்
எனின், மனிதரே உயர்ந்தவராய் விடுவர்; அரக்கர் சிறியர்
என்றாகிவிடுமே என்பது சூரியன் பகைஞனின் வருத்தம்..
்...்....்....்
லஷ்மணனும் ஆரியனே....
வீடணன் விடை
8029.
‘யார், இவன் வருபவன்? இயம்புவாய்!’ என,
வீர வெந் தொழிலினான் வினவ, வீடணன்,
‘ஆரிய! இவன் இகல் அமரர் வேந்தனைப்
போர் கடந்தவன்; இன்று வலிது போர்’ என்றான்.
வீரவெந்தொழிலினான் - வீரக் கொடுந்தொழிலை உடைய
(இலக்குவன்); இவன் வருபவன் யார்? - (இதோ இங்கு) வருகின்றவன்
யார் என்று; (வீடணனைப் பார்த்து) இயம்புவாய் - சொல்லுவாய்
என்று கேட்க; வீடணன் - (அதற்கு விடையாக) வீடணன்; ஆரிய -
ஆடவரில் சிறந்தவனே; இவன் - வருகின்ற இவன்; இகல் அமரர்
வேந்தனை - போர் ஆற்றல் மிக்க தேவர் தலைவனைப்; போர்
கடந்தவன் - போரில் வஞ்சியாது எதிர் நின்று வென்றவன்; இன்று
போர் வலிது என்றான்-இன்றைய போர் கடுமையானது என்று கூறினான்.
ஆரியன் - ஆடவர் திலகன், கடத்தல் - வஞ்சியாது எதிர் நின்று
வெல்லல். ஆரிய - அண்மை விளி.
(28)...
்...்....்....்
தொல்காப்பியத்தில் ஆரியர்கள், ஆரிய தெய்வங்கள், ஆரிய கலாச்சாரம் பற்றிய பதிவுகள் எப்படி வந்தது...?
அந்த குறிப்புகளை பார்க்கலாம்.
1.
தொல்காப்பியத்தில் தெய்வ வழிபாட்டை பற்றி தொல்காப்பியர் கூறியுள்ளார்.
"மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை, குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே"(தொல்காப்பியம், பொருள்-அகத்திணை-05)
இந்த பாடலில் வரும் மாயோன், சேயோன், வருணன் போன்ற வழிபாட்டு தெய்வங்கள் யார்...?
மாயோன் திருமால் எனவும், வருணன் வேதங்களில் குறிப்பிடும் வருணபகவான் எனவும் உறுதியாக எடுத்துக்கொள்ளலாம்.
சேயோன் என்பது தமிழ் கடவுள் முருகன், சிவன் இருவரில் யாரை குறிக்கிறது என்பதில் தமிழறிஞர்களிடையே இன்று வரை பலத்த சர்ச்சை நிலவுவதால் நாம் அதை விட்டு விடலாம்.
இந்த ஆரிய கடவுள் எல்லாம் எப்படி தொல்காப்பியத்திற்குள்ள வந்தாங்க...? தொல்காப்பியர் வண்டி கட்டி ஈரானுக்கு போய் திருமால், வருணனை பிடிச்சிக்கிட்டு வந்திருக்கார்னு வச்சிக்கிடலாம்.
2.
இது தொல்காப்பியத்தில் கூறப்படும் திருமண வகைகள்.
“இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்
காமக்கூட்டம் காணுங்காலை
மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்
துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே”.
-தொல்.பொருளதிகாரம்—1038
தொல்காப்பியரின் இந்த சூத்திரத்துக்கு “உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர் நீண்ட விளக்க உரை எழுதி இருக்கிறார்.
எட்டுவகைத் திருமணங்களின் விவரம்:-
ஆ.சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணி என்னும் தமிழ் கலைக்களஞ்சியத்தில் இருந்து எடுக்கப்பட்ட விஷயங்கள்:–
1).பிராம்மம், 2).தெய்வம், 3).ஆருஷம், 4).பிராஜாபத்யம், 5).ஆசுரம், 6).காந்தர்வம், 7).இராக்ஷசம், 8 ).பைசாசம்
பிராம்மம் வகைத் திருமணங்கள்.
இந்த எட்டு வகை திருமணங்களில் நமக்கு தேவையானது முதலாவது வகை திருமணம் பற்றிய தகவல்கள் மட்டுமே. பதிவின் நீளத்தை கருதி மற்றவற்றை விட்டு விடலாம். முதல் வகையை மட்டும் பார்க்கலாம்.
வேதம் ஓதினனாகவும் நல்லொழுக்கனாகவும் இருக்கின்ற பிரம்மச்சாரியைத் தானாகவே அழைப்பித்து அவனை நூதன வஸ்திரத்தால் (புத்தாடைகளால்) அலங்கரித்து, கன்னிகையையும் அப்படியே நூதன பூஷண அலங்காரம் (பெண்ணையும் நகை, ஆடைகளால் ) செய்வித்து அவ்வரனுக்கு அவளைத் தானம் செய்வது பிராம்மம் ஆகும்.
ஆக பிரம்மம் முறையில் திருமணம் செய்ய பெண்ணை பெற்றவர்கள் இங்கிருந்து திராவிடன் ஏர்லைன்ஸ் விமானம் பிடித்து கைபர், போலன் கணவாய்களை தாண்டிச்சென்று வேதம் படித்த மாப்பிள்ளைகளை பிடித்து வந்துள்ளார்கள்.
3.
தொல்காப்பியம் மரபியல்:...
''நூலே கரகம் முக்கோல் மணையே ஆயும் காலை அந்தணர்க்கு உரிய'' (தொடர் எண்- 1570)
முப்புரிநூல், கமண்டலம், முக்கோல் எனக்கூடிய தவம் செய்யும் கைதாங்கி, அமரும் பலகை இவை நான்கும் அந்தணர்க்குரியவைகள். (வனத்திற்கு சென்று தவம் செய்யும் வனப்பிரஸ்தன்)
''அந்தணாளர்க் குரியவும் அரசர்க்கு ஒன்றிய வரூஉம் பொருளுமார் உளவே.'' (தொடர் எண்- 1572)
அந்தணர்க்குரிய முப்புரி நூல், கமண்டலம், முக்கோல், பலகை அரசர்க்கும் பொருந்தும். (அரசனும் தவம் செய்ய தகுதியானவன்)
முப்புரிநூல் என்கிற பூநூல், கமண்டலம், முக்கோலோடு தொல்காப்பியர் காலத்தில் இருந்த அந்தணர் யாருன்னு சொல்லுங்கப்பா...!
ஒண்ணு தொல்காப்பியமே தப்புன்னு சொல்லி முட்டு கொடுக்கனும். அப்படி முட்டு கொடுத்தா தொல்காப்பியம் வகுத்த இலக்கணப்படி எழுதப்பட்ட அத்தனை தமிழ் இலக்கியங்களையும் தூக்கி எறியனும். இதில் திருக்குறள் கூட தப்ப முடியாது.
இப்படி சொன்னா தமிழன் இந்த ஈவேராவாதிகளை செருப்பால் அடிச்சி கொளுத்திடுவான். அதனால் முடியாது.
தொல்காப்பியத்துக்கு முன்னாடியே ஆரியர் வந்தாங்கன்னு சொல்லவும் முடியாது. அப்படி பார்த்தா ஆரியர் வந்த பிறகு தான் தமிழனுக்கு மொழி அறிவு வந்தது. அது வரை தமிழன் காட்டுமிராண்டியா இருந்தான். ஆரியர்கள் தான் இங்கே பூர்வ குடிகளாக இருந்த காட்டுமிராண்டி திராவினுக்கு தமிழ் மொழியை கத்து கொடுத்து, தமிழன்கிற ஒரு நாகரிகமான இனத்தை உருவாக்கினான்னு ஒத்துக்கிடனும். இதை பன்னா தமிழன் ஈவேராவாதிகளை பிடிச்சி நடு ரோட்டில் தூக்கில் ஏத்திடுவான். அதனால் இதுவும் முடியாது.
தொல்காப்பிய காலத்துக்கு பிறகு தான் ஆரிய படையெடுப்புன்னு முட்டு கொடுக்கலாம். அப்படி பன்னா பிற்காலத்தில் வந்த ஆரியரை பத்தின குறிப்புகள் எப்படிடா வந்ததுன்னு கேட்டு, லூசுன்னு கன்பர்ம் பன்னி அவடை பிடிச்சி ஏர்வாடிக்கு பேக் அப் பன்னிடலாம்.
்...்....்....்
குற்றாலக் குறவஞ்சி
ஒவ்வொரு பாடலிலும் கடைசி வரியில் பாருங்கள்... ஆரிய நாடு என்ற சொற்கள் கொண்டு தமிழ்நாட்டைப்பற்றி பாடியிருப்பார்...
அப்புறம் எப்படி இந்தப் பன்னாடைகள் ஆரிய என்பது ஒரு இனம் என்று கண்டு பிடித்தனர் என்பதை விளக்கினால் நன்றாக இருக்கும்...!
இந்த உண்மைகள் வெளித்தெரியக்கூடாது... இதெல்லாம் தெரிஞ்சால் தனது பிரிவினை சித்தாந்த திராவிட பிரச்சாரம் தோற்றுவிடும்.. போற இடத்துலயெல்லாம் செருப்பால அடிப்பானுகன்னுதான்...
ஈவேரா ...
தமிழர்களை தமிழ் படிக்காதீங்க... தமிழ் படிக்காதீங்க... என ... மூக்கால் ஒப்பாரி வச்சிட்டு இருந்தார்....
குறத்தி நாட்டுவளம் கூறுதல்:
(குறத்தி ஆரிய என்ற பதத்தின் பொருள் இனம் என்றா அறிந்திருப்பாள்...?)
(1) சூர மாங்குயிற் சின்னங்கள் காமத்
துரைவந் தான்றுரை வந்தானென் றூத
ஆர மாமுலை மின்னா ரவரவர்
அல்குல் தேர்க ளலங்காரஞ் செய்யப்
பார மாமதி வெண்குடை மிஞ்சப்
பறக்குங் கிள்ளைப் பரிகள்முன் கொஞ்சத்
தேரின் மாரன் வசந்தன் உலாவும்
திருக்குற் றாலர்தென் னாரிய நாடே.
(2) காரைச் சேர்ந்த குழலார்க்கு நாணிக்
கடலைச் சேர்ந்த கறுப்பான மேகம்
வாரைச் சேர்ந்த முலைக்கிணை யாகும்
மலையைச் சேர்ந்து சிலையொன்று வாங்கி
நீரைச் சேர்ந்த மழைத்தாரை யம்பொடு
நீளக் கொண்டலந் தேரேறி வெய்யவன்
தேரைச் சூழ்ந்திடக் கார்காலம் வெல்லுந்
திருக்குற் றாலர்தென் னாரிய நாடே.
(3) சூழ மேதி இறங்குந் துறையிற்
சொரியும் பாலைப் பருகிய வாளை
கூழை வாசப் பலாவினிற் பாயக்
கொழும் பலாக்கனி வாழையிற் சாய
வாழை சாய்ந்தொரு தாழையிற் றாக்க
வருவி ருந்துக் குபசரிப் பார்போல்
தாழை சோறிட வாழை குருத்திடுஞ்
சந்திர சூடர்தென் னாரிய நாடே.
(4) அந்ந லார்மொழி தன்னைப் பழித்ததென்
றாடவர் மண்ணில் மூடுங் கரும்பு
துன்னி மீள வளர்ந்து மடந்தையர்
தோளை வென்று சுடர்முத்த மீன்று
பின்னு மாங்கவர் மூரலை வென்று
பிரியுங் காலத்திற் பெண்மையை வெல்லக்
கன்னல் வேளுக்கு வில்லாக ஓங்குங்
கடவுளாரிய நாடெங்கள் நாடே.
(5) தக்க பூமிக்கு முன்புள்ள நாடு
சகல தேவர்க்கு மன்புள்ள நாடு
திக்கெ லாம்வளர்ந் தோங்கிய நாடு
சிவத்து ரோகமு நீங்கிய நாடு
முக்க ணான்விளை யாடிய நாடு
முதிய நான்மறை பாடிய நாடு
மைக்க ணாள்குழல் வாய்மொழி பாகர்
வசந்த ஆரிய நாடெங்கள் நாடே.
(6) அஞ்சு நூறு மகங்கொண்ட நாடு
அநேக கோடி யுகங்கண்ட நாடு
கஞ்ச யோனி உதிக்கின்ற நாடு
கமலை வாணி துதிக்கின்ற நாடு
செஞ்சொல் மாமுனி ஏகிய நாடு
செங்கண் மால்சிவ னாகிய நாடு
வஞ்சி பாகர் திரிகூட நாதர்
வசந்த ஆரிய நாடெங்கள் நாடே.
(7) மாத மூன்று மழையுள்ள நாடு
வருடம் மூன்று விளைவுள்ள நாடு
வேத மூன்றும் பலாவுள்ள நாடு
விசேஷ மூன்றுங் குலாவுள்ள நாடு
போத மூன்று நலஞ்செயு நாடு
புவனமூன்றும் வலஞ்செயு நாடு
நாத மூன்றுரு வானகுற் றால
நாத ராரிய நாடெங்கள் நாடே.
(8) நீங்கக் காண்பது சேர்ந்தவர் பாவம்
நெருங்கக் காண்பது கன்னலிற் செந்நெல்
தூங்கக் காண்பது மாம்பழக் கொத்து
சுழலக் காண்பது தீந்தயிர் மத்து
வீங்கக் காண்பது மங்கையர் கொங்கை
வெடிக்கக் காண்பது கொல்லையின் முல்லை
ஏங்கக் காண்பது மங்கல பேரிகை
ஈச ராரிய நாடெங்கள் நாடே.
(9) ஓடக் காண்பது பூம்புனல் வெள்ளம்
ஒடுங்கக் காண்பது யோகிய ருள்ளம்
வாடக் காண்பது மின்னார் மருங்குல்
வருந்தக் காண்பது சூலுளை சங்கு
போடக் காண்பது பூமியில் வித்து
புலம்பக் காண்பது கிண்கிணிக் கொத்து
தேடக் காண்பது நல்லறங் கீர்த்தி
திருக்குற் றாலர்தென் னாரிய நாடே..
்...்....்....்
திருமந்திரம்
ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமூலர் பயன்படுத்திய வார்த்தை ஆரியன்:-
ஆரியன் நல்லன் குதிரை இரண்டுள
வீசிப் பிடிக்கும் விரகுஅறி வார்இல்லை
கூறிய நாதன் குருவின் அருள்பெற்றால்
வாரிப் பிடிக்க வசப்படும் தானே.
(திருமந்திரம் 565 )
பறவையைவிட, வேகமாகச் செல்லக் கூடிய இந்த பிராணனாகிய குதிரையை நம் வசப்படுத்திக்கொண்டால்,
கள் உண்ணாமலேயே கள் உண்ட
ஆனந்த நிலையை உணரமுடியும், சுறுசுறுப்பும்,துள்ளலும் தானே ஏற்படும்.
்...்....்....்
233. மறையோர் அவரே மறையவர் ஆனால்
மறையோர்தம் வேதாந்த வாய்மையில் தூய்மை
குறையோர்தன் மற்றுள்ள கோலா கலமென்று
அறிவோர் மறைதெரிந்து அந்தணர் ஆமே.
பொருள் : வேதங்களைப் பொருளுணர்ந்து ஓதுபவரே அந்தணராவார். ஆனால் மறையவரது வேதாந்தம் உண்மையாகத் தூய்மையுடையது. வேதமல்லாத மற்றைய குறையுடைய நூல்களைக் கற்றல் ஆரவாரத்துக்கேயாம் என்று அறிந்து ஒதுக்குபவர். மறையோதிய அந்தணராவார். அந்தணர் பிற நூல்களைக் கல்லாது வேதத்தையே ஓதுவர்.
234. அந்தண்மை பூண்ட அருமறை அந்தத்துச்
சிந்தைசெய் அந்தணர் சேரும் செழும்புவி
நந்துதல் இல்லை நரபதி நன்றாகும்
அந்தியும் சந்தியும் ஆகுதி பண்ணுமே.
பொருள் : எல்லா உயிர்களிடத்தும் அருள் உள்ளங் கொண்ட அருமையான வேத முடிவாகிய சிவத்தை இடைவிடாது நினைக்கும் அந்தணர் அடைகின்ற வளமான பூமி வளமை குன்றுதல் இல்லை. அந்நாட்டு அரசனும் நல்லவனாவான். காலை மாலையாகிய இருவேளைகளிலும் ஆகுதி செய்வார்கள்.
்...்....்....்
பட்டினத்தார் வரலாறு: பாடல்கள்
பகுதி 53:
கோயில் நான்மணி மாலை
―――――――――――――――――――――――――――
"வாழ்வாகவும் தங்கள் வைப்பாகவும் மறையோர் வணங்க
ஆள்வாய் திருத்தில்லை அம்பலத்தாய் உன்னை அன்றிஒன்றைத்
தாழ்வார் அறியாச் சடிலநஞ்சு உண்டிலை ஆகிலன்றே
மால்வார் சிலரையன்றோதெய்வமாக வணங்குவதே"
பொருள்:
――――――
மறைகளைக் கற்றுணர்ந்தவர்கள் தம் வாழ்வின் முதற் பொருளாகவும், பேரின்பம் முதலியவற்றை அளிக்கும் தனமாகவும், வணங்கும்படி அடியார்களை அடிமையாய்க் கொண்டவனே! சிற்றம்பலத்தை இடமாகக் கொண்டவனே! உன்னை விட்டு பதித்தன்மை இல்லாத வேறொன்றை வணங்குபவர்கள், பாற்கடலைக் கடைந்த காலத்தில், அக்கடலின் தோன்றிய நஞ்சினை உண்டு காப்பாற்றாது போனால், அக்கணத்திலேயே உயிர் நீங்குபவராக, சிறுதேவரைத் தெய்வமாகக் கொண்டு வணங்குவதை தாங்கள் அறிந்திலர்.
்...்....்....்
ஈவேரா பிள்ளையார் சிலையை உடைச்ச பிறகுதான் தமிழகத்துல பிள்ளையார் பிரபலம்...
...பல்லி பாய்ஸ்...
பிள்ளையார் ஆரிய இறக்குமதி...
... டம்ளர் குரூப்ஸ்...
அடேய்களா...
ஈவேராவோட முந்நூறாவது தாத்தாவுக்கும் முந்தின சங்க கால நூல்களில் காப்பு செய்யுள்னு ஒன்னு வருமே...
அதை யாரை தலைவனாக வச்சு பாடினாங்கே...
அது பிற்கால இடைச்செருகல்...
யாரு சொருகினது... ??
வடநாட்டு ஆரிய கள்வர் கூட்டம்...
அவிகளுக்கு எப்படி தமிழ் தெரியும்... ???
அங்கேயும் தமிழ்தான் இருந்திச்சு...
பின்ன எப்படி வடநாட்டு ஆரியன்...???
அவன் கைபர் போலன் கணவாய் வழியா வந்தவன்...
எதற்கு வந்தான்...??
அவன் இங்கே மாடு மேய்க்க வந்தான்..
அவனுக்கு கூலியாக கிடைத்த மாடுகளை திண்ணுவதுதான் அவனுக உணவு பழக்கமே...
ஓஹோ... அப்படி வந்தவன்... இங்கே சமஸ்கிருதம்னு ஒரு புது மொழியை உருவாக்கி... அவனோட சாமிகளை எல்லாம் தமிழுக்கு இறக்குமதி பண்ணி.. இலக்கியத்தில் இடைச்செருகல்களை உண்டாக்கிட்டான்... அப்படித்தானே...
ஆமா.. இப்போதான் சரியா புரிஞ்சு இருக்கீங்க...
சரி... இலங்கைல உள்ள நூல்கள்லயும் இதேபோல காப்பு செய்யுள் இருக்குதே...
கைபர் கணவாய் வழி இந்தியாவுக்கு மாடு மேய்க்க வந்தவன் இந்தியாவுல அவன் ஓட்டிவந்த மாடுக்கு புல் இல்லைன்னு இலங்கைக்கு போனானா??..
அது ... அது வந்து...
ரொம்ப ரோலிங் ஆச்சுன்னா... அடுத்த கேள்வின்னு சொல்லிடுங்க... நாம அங்கிட்டு போயிடுவோம்...
இராமாயண கதை இந்தோனேசியா, தாய்லாந்துலகூட இருக்குதே...
அவன் கைபர் வழியா இங்கே மாடு மேய்க்க வந்து , இங்கே இருந்து இந்தோனேசியா, தாய்லாந்துக்குலாம் போயிட்டானா...???
அது ... வந்து... அடுத்த கேள்வி...
வேதம் , வேத காலம் பற்றிய ஆரம்பமே... மனிதன் சிந்திக்க தொடங்கியபோது...
அவன் பயந்த விசயங்களை கும்பிட ஆரம்பிச்சான்னு தானே சொல்லுவீங்க...
ஆமா... உண்மைதான்... அவனுக பயந்த நெருப்பையும் , மழையையும் மக்கள் மேல கட்டிட்டாய்ங்க...
ஓஹோ ...
கைபர் கணவாய் வழி வந்தவன்... நெருப்பை பார்த்தும், மழையை பார்த்தும் பயக்க ஆரம்பிச்சது எந்த தேசத்துல??
அது கிழக்கு ஈரான் பகுதியில்...
எப்போ.. அதாவது எந்த காலக்கட்டத்தில்...??
5000 வருடங்களுக்கு முன்...
கைபர் வழியா ஒடி வந்தது எப்போ... ??
அது சுமார் 4000 வருடங்களுக்கு முன்...
4000 வருடங்களுக்கு முன்னாடி உலகில் இருந்தது எந்த மொழிகள்...??
தமிழ்... அப்பறம்... இல்லயில்ல.. தமிழ் இல்ல... தமிழி... இல்ல அதுவும் இல்ல.. தமிழ்-பிராமி... இல்ல... அது பிராகிருதம்... இல்ல... அதுவும் இல்ல... அது வந்து... வேணாம் ....
அடுத்த கேள்வி...??
5000 வருசத்துக்கு முன்னே கிழக்கு ஈரான்ல நெருப்பை பார்த்து பயந்தவன்... 4000 முன்னாடி இந்தியாவுக்கு மாடு மேய்க்க வந்து ...
அவன் பயந்து ஓடிவந்த நெருப்புக்கு என்ன மொழியில் இங்கே அக்னின்னு பேரு வச்சான்?...
அது... வந்து... அடுத்த கேள்வி..??
வேதத்தை எந்த காலகட்டத்துல உருவாக்கினான்?...
கிமு 1500களுக்கு பின்பு...
அப்படின்னா அவன் ஓடி வந்த 4000 வருசத்துல வேதம் உருவானது 1500வதுவருசம்னு கணக்கு வச்சாலும்...
2500 வருசமா... என்ன மொழி பேசினான்???
அது... வந்து... அடுத்த கேள்வி...??
அந்த காலத்துல தமிழ்மொழி இருந்திச்சா இல்லையா?...
இருந்திச்சு...
நெருப்பைக் கண்டு, மழையைக் கண்டு பயந்து ஓடின ஒரு கூட்டம்.... தேசம் விட்டு தேசம் போய் மாடு மேய்க்கிற அளவுக்கு புத்திசாலி ஆகியிருக்கானே...
அதுவரை அவனுக்கு சொந்தமா மொழியே இல்லையா????..
அது... வந்து... அடுத்த கேள்வி...??
உலகின் மூத்த மனித இனம் எது?...
இது தெரியாதா... தமிழினம்தான்.... வரலாற்று சான்றுலாம் இருக்கு தெரியும்ல...
இரு .. இரு .. பொங்காத..
மூத்த குடி தமிழன்தான் அப்படின்னா.. உலகின் மொத்த மனித இனமும் ஆரியன் உட்பட..... தமிழினத்தோட தொடர்ச்சியாகதானே இருக்கமுடியும்...
அவன் மட்டுமென்ன.... வியாழன் கிரகத்துல இருந்தா குதிச்சான்...??
அது... வந்து... அடுத்த கேள்வி...??
ஆரியர் எங்கிருந்தோ... வந்து... தமிழ் படிச்சு... புலமைபெற்று... பாட்டுலாம் எழுதி... அதிபுத்திசாலி ஆகியிருக்கான்... அப்படின்னா... இப்போ எழுத்தில் உள்ள எல்லா தமிழ்நூல்களும் ஆரியன் உருவாக்கினது...
தமிழின் எழுத்து முறைகூட ஆரியன் உருவாக்கியதுதான்...
நீங்கள் ஆரிய எதிர்ப்புன்னு கம்புசுத்த ஆரம்பிச்சால்... இழப்பு உங்களுக்குதான்....